வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...! - பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் முதல் புத்தகதிருவிழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "இந்த புத்தக திருவிழாவில் அறிவு சார்ந்தவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு அப்படி பேச தெரியாது. காட்டாற்று வெள்ளம் போல் பேசுவேன். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பான குரலில் பேசி நான் இன்னும் எத்தனை காலம் தான் உங்களை ஏமாற்றுவேன், எனினும் இந்த பாரதிராஜாவுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் நீங்கள். சமுதாயநோக்கம் - சமூக பார்வை நமக்கு இருக்க வேண்டும்.
நாம் எந்த செயலை செய்தாலும் அதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். கருத்தம்மா படத்துக்கு கிடைத்த விருது இந்த தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே... என்று கூறுகிறேன்.

நல்ல புத்தகங்களை படிப்பது போன்று மகிழச்சியான விஷயம் எதுவும் இல்லை. புத்தகங்களை படிப்பது குழந்தைகளை கொஞ்சுவது போன்றது. படைப்பாளிகள் எதிர்காலத்துக்கு வழி சொல்பவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். வீடுகளில் பூஜை அறைக்கு பதில் புத்தகங்களை வாங்கி நூலகமாக வையுங்கள்.

அதில் உள்ள புத்தகங்களை கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டுதானே இருந்தோம். மொழி-இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது," என்றார்.

Acid attacks on women are frighteningly common in Bangladesh


 

  Unofficially the figure is believed to be much higher than 200 a year.

Fozila was attacked because she refused a marriage proposal. Hasina was set upon after an argument over a bucket of water. Two women in the seething Bangladesh capital Dhaka whose lives changed in a blinding flash. They were attacked with acid.
Last year in Bangladesh there were 179 recorded cases of acid attacks. Hydrochloric and nitric acid are cheap and readily available – used by the gallon in the grimy jewellery workshops in the backstreets of the city. In the wrong hands though, it can be devastating. Eating quickly through skin and bone and doing irreparable damage. The victims are targeted usually over land disputes or spurned advances.

இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!

13 வயது  ஜன்னத் உறங்கிக் கொண்டிருக்கிறாள். தன் மேலிருந்த போர்வை உருவப்படுவதை உணர்ந்து கண் விழிக்கிறாள். சில நொடிகளில் என்ன நடக்கிறதென்று  உணர்வதற்குள்ளேயே, அவளது நெஞ்சும், முகமும் தாங்க முடியாத அளவுக்கு வலியும், எரிச்சலுமடைகிறது. அவளுக்கருகில் உறங்கிக் கொண்டிருந்த அவளது தம்பிக்கும் முதுகில் வலி.  ஜன்னல் வழியாக வீசப்பட்ட பாட்டரி ஆசிட் தாக்குதல்தான் இச்சிறுமியின், அவளது தம்பியின் வலிக்கும் எரிச்சலுக்கும் காரணம்.
ஜன்னத் மீது ஆசிட் வீசியவர் அவளது வீட்டுக்கருகில் வசிக்கும் 20 வயது இளைஞர். ஜன்னத்தின் முகத்தை ஆசிட் வீசி சிதைக்கக் காரணம்,  அவள் அவ்விளைஞரின் திருமண ஆசைக்குச் சம்மதிக்காததுதான். பெண்களின் மீதான ஆசிட் தாக்குதலைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருக்க மட்டுமே செய்திருந்த ஜன்னத்தின் குடும்பத்தினருக்கு அன்றுதான் அதன் உண்மையான வலியும், வேதனையும், சூழ்நிலையின் பதைபதைப்பும் புரிந்தது. சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தலைநகர் டாக்காவிற்கு ஜன்னத்தை உடனடியாக அழைத்துச் சென்றார்கள்.  ஆனாலும் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தால் ஆசிட் காயத்துடனே காத்திருந்த ஜன்னத் க்கு மறுநாள்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரூபாலிக்கு திருமண வாழ்வைப் பற்றி ஒரு அழகான கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு திருமணமான ஆறு மாதங்களிலேயே ஆட்டம் கண்டது.  வரதட்சணையாக ஒரு மோட்டார் பைக்கை வழங்கியிருந்தார் ரூபாலியின் தந்தை. ஆனாலும் இன்னும் பணத்தை வாங்கி வருமாறு அவளது கணவனும், மாமியாரும் வற்புறுத்தினர்.  ரூபாலியைக் கடுமையாக நடத்தியதோடு, நாள் முழுவதும் ஓய்வில்லாத வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் கட்டாயப்படுத்தினர்.
முடிவில் ரூபாலி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறியபோது, அவரது கணவனும் மாமியாரும்  அவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர். அதைத் தொடர்ந்து அடிக்கவும் முற்பட்டனர். திடீரென்று அவள் எதிர்பாராத தருணத்தில்,  ரூபாலியின் மாமியார்  அவரைப் பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள  கணவன் அவரது வாயில் ஆசிட்டை ஊற்றினான்.
அக்கம்பக்கத்து வீட்டினர் ரூபாலியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர்களால் முதலுதவி அளிக்க முடியவில்லை.  டாக்காவிற்கு அழைத்துச் சென்றாலும் ரூபாலிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ரூபாலியின் பெற்றோரால் மருந்துகளை விலை கொடுத்து வாங்க முடியாததே அதற்குக் காரணம்.
இந்த ஆசிட் வீச்சு ஜன்னத்துக்கோ அல்லது ரூபாலிக்கோ மட்டும் நடந்ததல்ல. பங்களாதேஷில்  ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 300 பெண்கள் ஜன்னத்தைப் போலவும், ரூபாலியைப் போலவும் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர்  18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
78 சதவீத ஆசிட் வீச்சுகளுக்குக் காரணம்  காதலை ஏற்க மறுத்தது மற்றும் திருமணத்துக்கு சம்மதம் அளிக்காதது அல்லது உடலுறவுக்குச் சம்மதிக்காதது போன்றவையே.  வரதட்சணை, குடும்பச் சண்டைகள், சொத்துப் பிரச்சினைகள்  முதல்  சமையல் செய்வதில் ஏற்படும் சிறு தாமதம் கூட இந்த ஆசிட் வீச்சுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றவர்கள் நிலத்தை விற்க வேண்டிவரும் என்பதற்காகவே  நிலத் தகராறுகளுக்காகவும் ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.
இந்த ஆசிட் வீச்சுகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கின்றன. அல்லது மிக அவசியமான வேலைகளுக்காகப் பெண்கள் வெளியே செல்லும் சமயங்களில் இந்த ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அருகிலிருப்பவர்களும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படுவதால், சுதாரித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதும் தாமதமாகின்றது.
ஆசிட் எனும் கொடூரமான ஆயுதம் ஏன் எனில்  கார் பாட்டரியின் ஆசிட் கிடைப்பது எளிது, அதே சமயத்தில் விலை மலிவான ஆயுதமும் கூட.   ஒரு சில நாணயங்களில் ஒரு முழுக் கிண்ணம் அளவுக்கு ஆசிட் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இந்த ஆசிட் வீச்சுகள் எல்லாம், முக்கியமாக முகத்தை நோக்கிக் குறிவைத்து வீசப்படுகின்றன.  பாதிக்கப்பட்டவரின் முகம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகிறது. ஒருவரது சொந்த அடையாளத்தையே சிதைப்பது குரூரத்தின் உச்சநிலையாக இருக்கிறது! அவர்களது வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகின்றது. பல்லாண்டு காலம் பெண்கள் முகத்தை மூடியிருந்த ஹிஜாப்,  பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டு அவர்கள்  தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.
மீதி இதன் தொடர்ச்சியை வாசிக்க வினவு இனைய தளத்திற்கு செல்லவும் www.vinavu.com

ராமதாஸ். திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம்.


இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். "திராவிடம்' என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
மயக்கமா கலக்கமா அரசியலில் குழப்பமா...நா ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்ல படிச்சவுங்க நாலு பேரு சொன்னாங்க நா ஒரு
வடிவேல் இல்லாத குறையை இந்த ராமதாஸ் நிறைவேற்றுகிறார்.சினிமாவில் ராமதாசுக்கு நல்ல எதிர்காலம்."வாழ்க டவுசர் தாஸ்
so.annamalai - chennai ,இந்தியா
அபிராமி...அபிராமி....அசிங்கம்.அசிங்கம்...எல்லாம்...அசிங்கம்..மனிதர் உணர்ந்துகொள்ள மனித பேச்சு அல்ல.
Vijay Anand - Singapore,சிங்கப்பூர்
யோவ் அறிக்கை விடவேண்டும் என்பதற்காக பேசாதே.... முதலில் உன்னை திருத்து அப்புறம் தமிழ்நாட்டை திருத்து.. இப்படி பேசிகிட்டு இருந்த எந்த திராவிடம் உள்ளம் கொண்டவரும் உன்னை மதிக்க மாட்டார்கள்....உனக்கு விளம்பரம் வேண்டுமின்ன மக்களுக்கு நல்லது செய்வதை யோசி.. அதை விட்டுட்டு இப்படி புலம்பாதே... உன் பேச்சு பக்குவப்பட்ட மனிதன் மாதிரி இல்லை.. இது எதோ பைத்தியக்காரன் புலம்பல் மாதிரி இருக்கு...
all india radio உல " இன்று ஒரு தகவல் " னு ஒன்று வருமல்லவா ? அதுபோல இது . " இன்று ஒரு காமெடி "
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
இருந்தா...உங்கள மாதிரி எல்லாம் மரத்தை வெட்டவும், உன்ன மாதிரி தினமும் 'பிளேடு' போடவும் தான் முடியும். நீ அரசியல் நடத்த இவ்ளோ நாள் திராவிடதிடம் மானம் இல்லாமல் மாற்றி மாற்றி கால் கழுவி விட்டதை மறந்துவிட்டு பேசுவது நாதாரித்தனம்! உன் பருப்பு இதுக்கு மேல வேகாது தமிழ்நாட்டின் No 1 . துரோக பயலே...! கெட்டவங்கள கூட மன்னிச்சிடலாம், உன்ன மாதிரி SELFISH துரோகிகள மன்னிக்கவே கூடாது...!
ஏர்வாடி போய் வந்தாதான் கண்ட்ரோல் பண்ண முடியும் போல ப்ளீஸ் அதுவரை வெளியே வுடாம பூட்டி வைக்க சொல்லுங்க 
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
வன்னியன் என்ற வார்த்தையை தவிர தமிழில் மற்ற எல்லா வார்த்தையும் கெட்ட வார்த்தை என்று நீங்கள் சொன்னாலும் தமிழனுக்கு கோபம் வராது. காரணம் மலையாளி கன்னட தெலுங்கு இவர்களை ஆளவிட்டு அடிமையாக இருப்பது தான் தமிழனின் தலை எழுத்து .

நடிகை குட்டி பத்மினியின் நிலம் அபகரிப்பு :முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீது புகார்



முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீது புகார்பிரபல நடிகை குட்டி பத்மினி சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வருகிறார். இவர், நேற்று தனது மகள் கீர்த்தனாவுடன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் என்ற கிராமத்தில் எனது பெயரிலும், எனது மகள்கள் 3 பேர் பெயரிலும் 5 ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு மாந்தோட்டமும் உள்ளது.

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜியிடம் ரூ.31/2 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு வட்டி கொடுத்து வந்தேன். ஆனால் திடீரென்று வட்டியோடு சேர்த்து ரூ.61/4 லட்சம் தரவேண்டும் என்று சிவாஜி அவசரப்படுத்தினார்.

என்னால் அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை. அந்த பணத்துக்கு பதிலாக எனது பெயரில் இருந்த நிலத்தை சிவாஜி எழுதி வாங்கிக்கொண்டார்.
அந்த நிலத்தோடு, கடந்த 2006-ம் ஆண்டு எனது மகள்களின் பெயரில் இருந்த மேலும் 4 ஏக்கர் நிலத்தையும் வேலி போட்டு சிவாஜி அபகரித்துக்கொண்டார்.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளேன். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், பள்ளியில் படிக்கும் எனது மகள்களை கடத்திச் சென்றுவிடுவோம் என்று எனது வீட்டுக்கு வந்தே மிரட்டினார்கள்.

இதனால் நான் அப்போது போலீசில் புகார் கொடுக்க முடியவில்லை. அபகரிக்கப்பட்டுள்ள எனது மகள்களின் நிலம் ரூ.5 கோடி மதிப்புடையதாகும். அதை மீட்டுத்தர வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி மத்திய சென்னை இணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

London வன்முறையாளர்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர், பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை

இங்கிலாந்தில் வன்முறை பரவும் முறைகள் தரும் திடுக்கிடும் தகவல்
இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு முதல் அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேஸ்புக் சமூகவலையமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மார்க் டகனுக்கென தனியாக பக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.facebook.com/pages/RIP-Mark-Duggan/200659976657547. பேஸ்புக், டுவிட்டர் சேவைகளை விட பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலமே தகவல்கள் அதி வேகமாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய இளைஞர்களில் 37% பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இக் கையடக்கத்தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர் ஆகும். இதன்மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும். மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது. மேலும் பிளக்பெரி மெசஞ்சர் பாவனையாளர்கள் பின்(இரகசிய) இலக்கமொன்றினை பரிமாறிக் கொள்ள வேண்டும் .இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது.

இதனை நன்கு அறிந்துவைத்துள்ள கலகக்காரர்கள் இவற்றைப் பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது. இது அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான கனடா நாட்டைச் சேர்ந்த 'ரிசேர்ச் இன் மோசன்' பொலிஸாருக்கு வன்முறையைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட அளவு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

soodram.com

சீமானின் புண்யம் இலங்கை யாத்திரிகள் தமிழக பொலிஸ் நிலையங்களில் பதிய வேண்டுமாம்

இலங்கையில் இருந்து இந்திய தமிழகத்துக்கு செல்லும் யாத்திரிகள் தாம் தங்கிமிடத்துக்கு அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் தமது விபரங்களை வழங்க வேண்டும் என தமிழக பொலிஸ் கட்டுப்பாட்டறையாளர்கள் தகவலறிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள மக்கள் நிம்மதியாக  வாழ்ந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் சீமான் வைகோ நெடுமாறன் போன்ற ஜென்மங்களின் செயல்பாடுகளை மதிய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. தமிழக அரசியலில் தங்களை தக்க வைத்துகொள்ள இலங்கை மக்களை இனியும் பகடை கைய்களாக இவர்கள் பயன் படுத்துவதை அனுமதிக்க கூடாது.

அரச பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு


2010 ஆண்டில் 17 சதவீதமான மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை காணப்பட்டதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக 250 மில்லியன் ரூபாவினை ஒதுக்கவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை

கொடிய குற்றச் செயல்கள் புரிந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை, நிதி மோசடி மற்றும் பாலியல் வல்லுறவு முதலான குற்றங்கள் இழைத்தவர்கள் சுமார் 2000 பேர் வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக இலங்கைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரை கைது செய்ய சர்வதேசப் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு விமான சேவைக்கு தயாராகிறது மதுரை விமான நிலையம்

விரிவாக்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையமாக மாற, மதுரை விமான நிலையம் தயாராகிறது.
தென்மாவட்டங்களின் முக்கிய நகரமாக மதுரை விளங்குகிறது. கடந்த 1957ம் ஆண்டு, மதுரையில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. தொழில் ரீதியாக நாட்டின் மற்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் துவக்கப்பட்டன. முதற்கட்டமாக, 7,500 அடி நீளம் கொண்டிருந்த ரன்வேயை, பெரிய விமானங்களும் இறங்கும் வகையில் 12,500 சதுர அடி கொண்ட ரன்வேயாக விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, அதிநவீனமான டெர்மினல்கள் உருவாக்கப்பட்டன.
தென்மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்வோர் அதிகம். இவர்கள் அனைவரும் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, வெளிநாட்டு விமானச் சேவையைத் துவக்கினால் பெரும் பயன் கிடைக்கும்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவை துவக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் சென்னையில் பேட்டியளித்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அகர்வால், "மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அடுத்த கட்டமாக, கஸ்டம்ஸ் கவுன்டர்கள் அமைக்கும் பணி துவக்கப்படும். சர்வதேச விமானங்கள் மதுரையிலிருந்து இயக்கப்படும் போது, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் பிரிவுகள் அவசியம். கஸ்டம்ஸ் பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இமிகிரேஷன் பிரிவைத் துவக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்' என்றார்.
மதுரை விமான நிலையத்திற்கான கஸ்டம்ஸ் பிரிவு குறித்து, கஸ்டம்ஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, "மதுரையில் இருந்து எத்தனை விமானங்கள் வெளிநாடு சேவை நடத்தப் போகின்றன என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அங்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், நிரந்தரமாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் செயல்படுவர். குறைவாக இருந்தால், வெளிநாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டின் போது மட்டும் பணியாற்றுவர். மதுரை விமான நிலையத்திற்கு திருச்சியில் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளை அனுப்புவதா அல்லது மதுரையில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளையே பயன்படுத்தலாமா என்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது' என்றார்.
விமான நிறுவனங்கள் ரெடி: மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுச் சேவையைத் துவக்க, பல விமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கான பயணிகள் மற்றும் கார்கோ போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளது. ஏர் ஆசியா நிறுவனமும் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. கஸ்டம்ஸ், இமிகிரேஷன் பிரிவுகள் துவக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே வெளிநாட்டு விமானச் சேவையை துவக்க, மதுரை விமான நிலையம் தயாராக உள்ளது.

தமிழகம் வழியாக இலங்கைக்கு மின் வினியோகம் நிறுத்தம்.ஆந்திரா வழியாக பணி

மண்டபம்: தமிழகம் வழியாக இலங்கைக்கு, கடல் மார்க்கமாக மின் வினியோகப் பணி, ஆட்சி மாறியதால் ரத்து செய்யப்பட்டு, ஆந்திரா வழியாக பணி துவங்க உள்ளது. மத்திய அரசின் "பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம், பாக் ஜலசந்தி கடல்பகுதியில், மின் வினியோகத்திற்காக மண் ஆய்வுப் பணியை 16.12.2010ல், மண்டபம் பகுதியில் துவக்கியது. ஆய்வு முடிந்த பின், திட்ட மதிப்பீடு ஒதுக்கப்பட்ட உடன், இந்தியாவிலிருந்து தமிழகம் வழியாக, இலங்கைக்கு மின்சார வினியோகம் மேற்கொள்ளப்பட இருந்தது. இதை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் எதிர்த்தனர். இருப்பினும், ஆற்றாங்கரை ஊராட்சி பகுதியில் துவங்கி, இலங்கை தலைமன்னார் வரை கடலில் மண் ஆய்வுப்பணி தொடர்ந்து நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின், ஆட்சி மாறியதால், தற்போது இலங்கைக்கு, மின் வினியோகிக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மண் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கு செல்ல உள்ளனர். இதுகுறித்து, மண் ஆய்வுப்பணியை டெண்டர் எடுத்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

வீடுகளுக்குள் புகுந்து கலகக்காரர்களை தேடும் இங்கிலாந்து பொலிஸார்!

இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸார் கலகக்காரர்களைத் தேடும் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். பலரது வீடுகளுக்குள் புகுந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது அங்கு இடம்பெற்று வருகின்றன. கடந்த ஞாயிறு முதல் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களால் சுமார் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு

சென்னை: சமீப காலமாக எழுந்து நின்று ஆடிய நில மோசடி தொடர்பான விஷயங்கள் பழமையாகிப்போச்சு. தற்போது தமிழகத்தில் மறைமுகமாக நடந்து வந்த சூதாட்டம் குற்றம் வெளி வரத்துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக பலர் பல லட்சங்களை இழந்ததுடன், தங்களுடைய நகைகள் மற்றும் கார்களை இழந்த சோக கதையும் நடந்திருக்கிறது.


பழங்காலத்தில் நடந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் மனைவியை இழந்த கதை கூட உண்டு. இதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளால் குறையத்துவங்கினாலும், வயல்வெளிகளிலும், கோயில் பிரகாரங்களிலும், வேலைவெட்டி இல்லாதவர்கள், பணத்தை என்ன செய்வது என அறியாதவர்கள் இது போன்று சீட்டாட்டம், சொக்கட்டான் விளையாட்டு, வை ராஜா வை, ரம்மி, என பல வழிகளில் சூதாடி பணத்தை இழந்தனர். பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆட்டம் கிளப் என்ற போர்வையில் சூதாட்டம் நடக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தென் சென்னையில் 21 கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது.


திருமங்கலம் கோயில் மரத்தடியில் சூதாட்டம்: திருமங்கலம் ராஜபாளையம் சங்கையன் கோயில் மரத்தடியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு: குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து சென்ற போது மரத்தடியில் விளையாடுவது தெரிந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் கையில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில். முரளி கிருஷ்ணன்(29), ராஜா (40) , மோகன்ராஜ் ( 20 ) , ஜெயச்சந்திரன் ( 47 ) என்றும் நால்வரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் ரொக்கப்பணமும், 76 பவுன் தங்கநகையும், பொலிரோ என்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


முதலில் போனில் அழைப்பு வரும்: நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசையா என்று மனம் குளிர, நெகிழ பேசும் குரல் வரும். பின்னர் எங்கு வரவேண்டும் என்ன சட்ட திட்டம் என்று விளக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஆட்டம் துவங்கும். இதில் மயங்கி பலர் பல லட்சம் , நகை, நிலப்பத்திரம் என இழந்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரத்தை போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் இது போன்ற சோதனை நடக்கவிருக்கிறது. மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடும்வரை ஆடட்டும் கைது செய்துவிட்டு புகாரைத்தேடி போலீசார்


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்வுடன் போடப்பட்ட வழக்கு என்று நீதிபதியே கூறியுள்ளார். ஜாமீனில் வெளியே வந்த கலைவாணன் மீது 7 பிரிவுகளில் அவசரம் அவசரமாக அதிமுக அரசு மற்றொரு வழக்கைப் பதிவு செய்தது.
போலி ஆவணங்கள் மூலம் 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவினர் மீது நிலஅபகரிப்பு புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் சமாதானம் பேசி அனுப்புகின்றனர். ஆனால் நிலத்தை விற்றவர்கள் திமுகவினர் மீது புகார் கூறினால், அதனை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துகைது செய்யப்படுகின்றனர்.
கைது செய்துவிட்டு புகாரைத்தேடி போலீசார் அலைகின்றனர். ஜாமீன் கிடைத்துவிட்டால் இன்னொரு புகாரைத் தயார் செய்கின்றனர். நீதிமன்றங்களின் மீது உள்ள கோபத்தின் காரணமாக குண்டர் சட்டம் என்னும் கொடுமையான அஸ்திரம் ஏவி விடப்படுகிறது.
நிலஅபகரிப்பு என்று சொல்லி அதற்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், ஆக்கமும் எதிர்காலத்தில் சிவில் பிரச்சனைகளில் காவல்துறையினரின் தலையீடு, கட்டப் பஞ்சாயத்து போன்ற
விரும்பத் தகாத விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திவிடும்.
காவல்துறையின் துணையோடு திமுகவை நிலை குலையச் செய்து விடலாம் என்கிற அதிமுக ஆட்சியாளர்களின் கனவு நிறைவேறப்போவதில்லை. இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்காக சிந்தித்து செயலாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு அழகு.
மோசமான முன்மாதிரிகளை உருவாக்குவதில் நேரத்தையும் நினைப்பையும் வீணாக்குவது நல்லதல்ல, பரவாயில்லை, ஆடும்வரை ஆடட்டும். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

ராஜரத்தினத்தைப் போல சட்டத்தை மீறி யவர்கள் கிடையாது. அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள்

இராஜரத்தினத்திற்கு அதிகபட்ச சிறை தண்டனை அளிக்க வேண்டும்
இராஜ் இராஜரத்தினத்தின் பரவலான குற்ற நடவடிக்கைகளுக்காக அதிகபட்ச சிறைத்தண்டனையான 24 வருடம் 6மாத சிறைத்தண்டனை அளிக் கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக் கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். நிதிநிறுவன மேலாளரான இராஜ் ராஜரத்தினத்தின் வழக்கறிஞர்கள், நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படுமா னால் அவரது உடல் நலம் பாதிக்கப்படும். ஒரு வேளை அது மரண தண்டனையாகக் கூட மாறிவிடும் என்று தெரிவித்துள் ளனர். இராஜ் இராஜரத்தினம் பல்வேறு வகை யான நோய்களினால் பாதிக்கப்பட்டுள் ளார் என அவரது வழக்கறிஞர்கள் குறிப் பிட்டனர். இலங்கையில் பிறந்தவரான இராஜ் ராஜரத்தினம் உள்நாட்டில் சட்டவிரோ தமான வர்த்தகத்தின் நவீன முகமாவார். இதுவரை பிடிபட்டவர்களுள் இராஜ் ராஜரத்தினத்தைப் போல சட்டத்தை மீறி யவர்கள் கிடையாது என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தேவை இல்லாமல் அழகிரியைத் திட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம்!''

''தன்னுடைய குடும்பத்தைச் சுற்றி​லும்... குறிப்பாக, மனைவி காந்தியை மையம்கொண்டு சுழல ஆரம்பித்து இருக்கும் சூறாவளிகள் அழகிரியை வருத்தம் அடைய வைத்துள்ளன. 'எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. என் குடும்பத்துக்கு எதுவும் ஆகி​விடக் கூடாது!’ என்று திரும்பத் திரும்ப அவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாடாளுமன்றக் கூட்டத் தொ​டருக்காக டெல்லி சென்ற அழகிரி, தன்னுடன் காந்தியையும் அழைத்துச் சென்றுவிட்டார். டெல்லி சென்றாலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரைக்கோ சென்னைக்கோ வந்துவிடுவது அழகிரியின் வழக்கம். ஆனால், இம்முறை டெல்லி​யைவிட்டு வர மனம் இல்லாமல் இருவரும் அங்கேயே தங்கிவிட்டார்களாம்.''

''மகன், மகள்கள்..?''
''அவர்களை அரசியல் வெப்பம் படாமல், வெளிநாட்டில் செட்டில் பண்ணவும் அழகிரி நினைக்கிறாராம். கடைசி மகள் அஞ்சுகச் செல்வி, அமெரிக்காவில் போய் செட்டில் ஆக இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் சொல்லி இருந்தேன். அந்தக் குடும்பம் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டது. சினிமா தயாரிப்பில் மும்முரமாக இருந்த துரை தயாநிதி, இப்போது லண்டனில் இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து, மூத்த மகள் கயல்விழியும் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். அவர்களின் மகனுக்கு பாஸ்போர்ட் எடுத்ததில் ஏற்பட்ட சிறு தவறைத் திருத்துவதற்காக, கடந்த வாரத்தில் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் தன்னுடைய அரசியல் சூழல், தனது வாரிசுகளுக்கு பரவக் கூடாது என்பதில் அழகிரி தெளிவாக இருக்கிறார்.''

''கருணாநிதியின் கட்டளை என்னவாம்?''
''அழகிரி டெல்லியில் இருந்து தனது அமைச்​சரவை வேலைகளைப் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார் கருணாநிதி. 'மதுரைக்குச் சென்று, அவன் அமைதியாக ஏதாவது தொழிலை நடத்தி நிம்மதியாக இருப்பான் என்று அனுப்பிவைத்தேன். ஆனால், அங்கு சில மனிதர்கள் அவனை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்​கிறார்கள்!’ என்று வருந்தினாராம். அதனால்தான், திருவாரூரில் நடந்த கண்டனக் கூட்டத்தில் வீரபாண்டியார், ஜெ.அன்பழகன் கைதுகளைப்பற்றி பேசியவர், மதுரையில் கைதான நபர்களைப்பற்றி பேசவில்லையாம். இதைச் சொல்லும் மதுரைப் பிரமுகர் ஒருவர், 'அழகிரி இனிமேல் மதுரைக்கே அபூர்வமாகத்தான் வருவார்...’ என்கிறார்.''

''இது என்ன புதுக் கதை?''

''மதுரைத் தி.மு.க-வில் பரவி இருக்கும் சமாசாரத்தைத்தான் சொல்கிறேன். அழகிரியின் சத்யசாய் நகர் வீடு கடந்த ஒரு வாரமாக அமைதியாய் இருக்கிறது. தனது முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் நம்பிக்கைக்குரிய சென்னைப் பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டாராம் அழகிரி. இரண்டு உதவியாளர்கள் மட்டும் காலையும் மாலையும் வந்து சில மணி நேரங்கள் இருந்து, போன் வந்தால் பேசிவிட்டு... கடிதங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்களாம். மற்றபடி இயல்பாய் வரும் மனிதர் கூட்டம் மொத்தமாய் குறைந்துவிட்டதாம். 'அழகிரியை ஆதரித்துப் பேசினால், தங்களை போலீஸ் வளைத்துவிடுமோ?’ எனப் பயந்து, சிலர் தேவை இல்லாமல் அழகிரியைத் திட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம்!'' என்று சொல்லிவிட்டு

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்மக்களை அவநம்பிக்கை கொள்ளவேண்டாம் என்கிறார் பசில்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் அரசின் செயற்பாட்டில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக வெகுவிரைவில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச­ இன்று அவரது அமைச்சில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றும்போது கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ 2005 இல் ஜனாதிபதியானதும் புலிகளுடன் பேச்சைத் தொடங்கினார். ஆனால் பேச்சுக்கு ஒஸ்லோ சென்ற புலிகள் அங்கு பேச்சில் இருந்து விலகினர். இருந்தும் ஜனாதிபதி பேச்சின் ஊடாகத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் உறுதியாக நின்றார். அனைத்துத் தரப்பினருடனும் பேசினார். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேசினார். அப்போதைய நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கருத்துகளை உள்ளடக்கி தீர்வு யோசனை தயாரிப்பதே இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமானதாக அமையும்.
நிறைவேற்று அதிகாரம்கொண்ட நாடாளுமன்றத்தில் இருந்து அரசியல் தீர்வு வெளிவருவதே பொருத்தமானதாகவும் ஜனநாயகமானதாகவும் அமையும்.
அந்த அடிப்படையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது. ஆறு மாதங்களுக்குள் இந்தத் தெரிவுக்குழு தீர்வு யோசனையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
30வருடங்கள் கொண்ட பிரச்சினைக்கு ஆறு மாதங்களுக்குள் தீர்வு காண்பதானது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக நாம் இந்தத் தெரிவுக்குழுவை அமைக்கவில்லை. உருப்படியான தீர்வை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே இதை அமைக்கின்றோம்.
அரசு மேற்கொள்ளும் அரசியல் தீர்வு முயற்சியானது காலத்தை இழுத்தடிப்பதையோ அல்லது தீர்வு யோசனையை இல்லாமல் செய்வதையோ நோக்கமாகக் கொண்டதல்ல. உண்மையான தீர்வை வழங்குவதே எமது நோக்கம். அரசின் இந்தத் தீர்வு யோசனை முயற்சி தொடர்பாகத் தமிழ் மக்கள் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை.
நிச்சயம் அவர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும். புலிகளைத் தோற்கடிக்கவே முடியாது என்று பலர் கூறினர். ஆனால் அவர்களைத் தோற்கடித்தோம். அதேபோலத்தான் அரசியல் தீர்வும் முன்வைக்கப்பட மாட்டாது என்று இப்போது கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்று நிச்சயம் பொய்யாக்கப்படும். அரசியல் தீர்வை எழுத்துமூலம் மாத்திரம் வழங்கிப் பிரயோசனமில்லை. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதன் நன்மைகளை மக்களால் எட்டமுடியும் என்றார்.

மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்க மாட்டோம்- மெட்ரிக் பள்ளிகள் பிடிவாதம்

சென்னை: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டன் என்ற பெயர்களை விட்டுத் தர மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடருவோம் என்று தமிழ்நாடு நர்சரி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தரமற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தைத்தான் நாங்கள் எதிர்த்து வந்தோம். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம்.

அதேசமயம், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தனியாரிடமே சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்குவோம். இதுதொடர்பாக ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது. தமிழ் புத்தகங்களை மட்டும் அரசிடமிருந்து பெறுவோம்.

எங்களது பள்ளிகளில் மெட்ரிகுலேஷன், ஓரியண்டன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற பெயர்களை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அவைதான் எங்களது உயிர்நாடி. அவற்றை விட மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நாங்கள் வழக்கு தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனாவில் கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

சீனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமே இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது. இதற்கென இன்று அங்கு ஒரு விழா எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

Noel Nadesan முள்ளிவாய்காலில் முடிக்காமல் விடுவதை விட சிறிய விடயத்தை

வானவில் திட்டம்- நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா

தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன்.

 எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது  திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்காலில்,; “ நீங்;கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள்.

 கடந்த வைகாசி மாதம் நான் இலங்கை சென்று திரும்பிய பின்னர்;, பெண்கள் அதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இளம் பெண்களைப் பற்றிய கட்டுரை எழுதினேன்.  அதனைப்படித்த பலர் என்னைத் தொடர்பு கொண்டு தமது கவலையைத் தெரிவித்தார்கள். வெளிநாடுகளில் இருக்கும் நாம் கவலை அடைவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தின் மூலவேர் பெண்கள்தான். பலருக்கு இதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

ஈழ விடுதலைப் போரை நான் தொடர்ச்;சியாக விமர்சித்ததற்குக் காரணம் இப்படியான அழிவுகளை எதிர்பாரத்;ததால்தான். நான் மிகவும் வெறுத்த சிங்கள அரசியல்வாதி ஜே ஆர் ஜெயவர்த்தனா.  அந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளை விமர்சித்தேன்  ஏனைய இயக்கங்களையும் ஆதரிக்கவில்லை. ஆனாலும் இந்த இயக்கங்களில் நல்ல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். அவர்களாலும்  தழிழ் சமூகத்துக்கு நன்மை ஏற்படவில்லை

 வெளிநாட்டில்; வாழும் எம்மைப்போன்றவர்கள் நடைமுறையில் என்ன செய்யலாம் என்பது முக்கியம். அதுவும் எம்மளவில் செய்ய முடிந்ததாக இருக்கவேண்டும் . பெரிய திட்டங்களை எடுத்து முள்ளிவாய்காலில் முடிக்காமல் விடுவதை விட சிறிய விடயத்தை எடுத்து முடிப்பது மனநிறைவைத் தரும். என்னைப் பொறுத்தவரையில் நான் போரின் பின் சில விடயங்களை  எடுத்தேன். அவற்றை  முடித்துவிட்டு அதனால் மக்கள் பயன் அடைவதைப்பார்த்;து சந்தோசப்படுகிறேன்.

 எமது வாழ்க்கை என்பதும்  நிரந்தரமானதல்ல.  தொடர்ச்;சியனதுமல்ல. நல்லவன் வல்லவன் கெட்டவன் என்று வரலாற்றை வென்றவர்கள் இல்லை. இருக்கும் காலத்தில் எவ்வளவு பணம் சேர்த்;தாலும்,  அதிகாரத்தை மற்றவர் மேல் செலுத்த முடிந்தாலும் கடைசியில் எஞ்சுவது ஒரு பிடிசாம்பல்தான். இருக்கும் காலத்தில் செய்த நன்மைகள் மட்டுமே நினைவு கூரப்படும்.

 சமீபத்தில் இலங்கைக்கு பல முறை சென்றுவந்ததால்  விடுதலைப்புலிகளோடு நெருக்கமாக இருந்த பல நல்ல மனிதர்கள் எனக்கு நண்பர்களானார்கள். அவர்களின் தொடர்பு மூலம் குழந்தைகள் உள்ள நான்கு விதவைகளையும் கணவன் காணாமல் போய் தற்பொழுது குழந்தைகளுடன் வாழ அல்லல்படும் ஒரு பெண்ணுமாக ஐந்து குடும்பங்களைப் பற்றிய தகவல்  மற்றும் வங்கி இலக்கங்களை பெற்றேன். எனது நண்பர்கள் மூவர் அந்த குடும்பங்களுக்கு மாதாந்தம் இலங்கை நாணயத்தில் 2500 ரூபா வீதம் வழங்க முன்வந்து மூன்று வருடங்களுக்குரிய பணத்தை  வழங்கிவி;ட்டார்கள்.  இவர்களைப்பொறுத்தவரையில்  மூன்று வருடங்களில் நிரந்தரமான ஜீவனோபாயத்துக்:கு வழி பிறக்க அவர்கள் உதவி செய்யமுன்வந்தனர். இவர்களை நிரந்தரப் பிச்சைக்காரர்களாக்குவது எமது நோக்கமல்ல .

 இந்த நிவாரண நிதிக்கொடுப்பனவில் நான் தொடர்பாளன் மாத்திரமே. எனவே நிதியை கையாளவேண்டிய பிரச்சினைகள் இல்லை.  அதே வேளையில் எந்த நிர்வாக வேலைப்; பளுவும் இல்லை.  உதவி செய்ய முன்வருபவர்கள் தாங்களே நேரடியாக குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட விதவைப்பெண்ணின் குடும்பத்திற்கு நிதிக ;கொடுப்பனவை வழங்குகிறார்கள். இந்தத்திட்டத்தில் வெளிநாடுகளில் வதியும் உதவும் மனப்பான்மையுள்ள பெண்கள் ஈடுபடுவதையும் பெரிதும் வரவேற்கின்றேன்.

 இது  வானத்தை வில்லாக வளைக்கும் திட்டம் . எவ்வளவு நடைமுறை சிக்கல் ஏற்படும் என்பது தற்போதைக்குத் தெரியாது. அதேபோன்று எத்தனை பேர் இத்திட்டத்தினால் பயன்பெறுவார்கள் என்பதும் தெரியாத நிலையில,; தற்பொழுது ஐந்து பேர் பயன் பெறுவதும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மேலும் பலரை இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

 சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். சிறுகச்சிறுக இரக்கமுள்ள அன்பர்கள் இத்திட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.

  முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய துயரம் பற்றியும் இங்கு குறிப்பிடுகின்றேன்.  காணாமல் போனவர்களின் மனைவியாகவும் பிள்ளைகளாகவும் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை சிறிது நேரம் கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள். நீடித்த போரில் விதவைகளானவர்களின் எண்ணிக்கை அதிகம்.  கணவன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதும் தெரியாமல் குழந்தைகளுடன் அல்லல்படும் அபலைகள் அதிகம்.

 எனது வேண்டுகோளை ஏற்ற   எனது நண்பனின் மனைவி ஒருவர் உடனடியாக பத்தாயிரம் ரூபாவை ஒரு பாதிப்புற்ற பெண்ணுக்கு அனுப்பிவிட்டு,  எதிர்வரும்  மார்கழி மாதம் இலங்கை சென்று  கிளிநொச்சியில் வசிக்கும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் வந்து பார்ப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

 போரில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் தனது ஒரு காலையும் இழந்தவர் என்ற தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றேன். இப்படி எத்தனையோ பெண்கள். அவர்களின் வாழ்வுக்கு முடிந்தவரையில் நீங்களே நேரடிhக கைகொடுக்கும் இந்தத்திட்டம் குறித்து மேலதிக தகவல் தேவைப்படுவோர் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.

uthayam@optusnet.com.au

00 61 41160 6767

முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு ராஜிவ் கொலையாளிகள்


Rajiv Ghandi Assasination
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு 1999ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன்பேரும் ஆகிய 3 ஜனாதிபதியிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஆனால், இவர்களது கருணை மனுக்களை ஜனாதிரதி பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

ஸ்பெக்ட்ரம் ஊழல் :  ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !
அலைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல; இது தனியார்மயதாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை; இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எனினும், 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச வருவாய் இழப்பு என்று கணக்குத் தணிக்கையாளர் குழு அளித்த மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடி என்ற தொகை முழுவதையும் ஊடகங்கள் ‘ஊழல்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இம்மாபெரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் பின்புலமாக அமைந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்னும் மையமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஊழல்தான் நாட்டின் மையமான பிரச்சினை என்று சித்தரிப்பதற்கும், இன்னும் ஒரு படி மேலே போய் தனியார்மயதாரளமயக் கொள்கைகள் மூலம் நாடு அடையக்கூடிய முன்னேற்றத்தைத் தடுப்பதே ஊழல்தான் என்று சித்தரிப்பதற்கும் இது பயன்பட்டது.
‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ‘உத்தமர்’ மன்மோகன் சிங்கும் டாடா, அம்பானி, மித்தல், ரூயா, ராடியா, பவார், சிதம்பரம், மாறன், ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. தி.மு.க.ராஜாகனிமொழி என்று இந்த இலக்கை குறுக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர். இந்த மாபெரும் கொள்ளையின் முழுப்பரிமாணமும் வெளிவருவதை யாரும் விரும்பவில்லை என்பதனாலும், இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.
இப்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் (Framing of Charges) தன் மீது பல்வேறு கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது வாதங்களை ராஜா முன்வைத்திருக்கிறார். குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவர் முன்வைத்துள்ள இந்த வாதங்கள் எந்த அளவிற்கு அவருக்குப் பயன்படும் என்பது குற்றவியல் வழக்கு விசாரணை சார்ந்த விசயம். ஆனால், இப்பிரச்சினையில் இதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் இந்தப் பகற்கொள்ளையின் அரசியல் பின்புலத்தை அம்பலமாக்குவதற்கும் அவரது வாதங்கள் நமக்குப் பயன்படுகின்றன.
“1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான். ஆனால், 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூக்குரலிட்ட சு.சாமி, ஜெயா, பா.ஜ.க. முதல் ஊடகங்கள் வரை யாரும், “இழப்புத் தொகையை சி.பி.ஐ. குறைத்துக் காட்டியுள்ளது ஏன்?சு என்ற கேள்வியை எழுப்பவில்லை.
“இழப்பு இத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பிடுவதற்கு சி.பி.ஐ. யார்? அது அரசாங்கத்தின் வேலை. இழப்பு எவ்வளவு என்பதை அரசு சொல்லட்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.
அரசு என்ன சொல்கிறது? முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி. ராசா நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்த அன்றைக்கு இரவு என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில்கூட, “இழப்பு இல்லைசு என்ற கருத்தையே கபில் சிபல் வலியுறுத்தினார். அதாவது, சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ராசா மட்டும் மறுக்கவில்லை, இந்த அரசே அதனை மறுக்கிறது என்பதுதான் வேடிக்கை!
“டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.
“2001இல் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் அலைக்கற்றை வழங்கப்படவேண்டும் என்பதில் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் உறுதியாக இருந்தது. நிதி அமைச்சகம் டெண்டர் விடவேண்டும் என்று கூறியதுசு என்று கூறினார் சிதம்பரம் (பிசினெஸ் லைன், ஜூலை 26, 2011). இரு அமைச்சகங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவும்போது கொள்கை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியவர் பிரதமர். இப்பிரச்சினையை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்யாததுதான் குற்றம் என்றால், அந்தச் சதிக் குற்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர் பிரதமர். அமைச்சர்கள் குழுவைக் கூட்டும் அதிகாரம் அவருடையதுதான் என்பதே ராசா முன்வைக்கும் வாதத்தின் சாரம்.
அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்குத் தெரியாமலும் பிரதமரை ஏமாற்றியும் ராசா பயங்கரமான ஊழலைச் செய்துவிட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை சு.சாமி, ஜெயலலிதா, சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணி துவக்க முதலே உருவாக்கியிருக்கிறது. இது ஒரு இமாலயப் பொய் என்ற போதிலும், மன்மோகன் சிங் என்ற நபருடைய பிம்பம் நொறுங்கினால், அது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் மீதே விழுந்த கறையாகிவிடும் என்பதனாலும், மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்.
ஆனால், விசயங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல் மேம்புல் மேய்பவர்களை மட்டுமே இவ்வாறு ஏமாற்ற இயலும். இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது. அரசாங்க இரகசியம் என்று கருதப்படும் இக்கடிதங்களை ராசாதான் கொடுத்து வெளியிடச் செய்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் இருட்டிலிருந்தார் என்ற கூற்றை அக்கடிதங்கள் பொய்ப்பிக்கின்றன. அதன் பின்னர் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்ட அறிக்கை இப்பிரச்சினையில் மன்மோகன் சிங்கிற்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்ததுடன், மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரைகளிலிருந்தே அவரது தொடர்பை நிரூபித்துக் காட்டியது. ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக காங்கிரசு கலகம் செய்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.
யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அலைக்கற்றையை வாங்கின. அதன் பின்னர் தமது நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியைப் பன்மடங்கு அதிக விலைக்கு அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றனர். இவ்வாறு அலைக்கற்றை உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள், தமது பங்குகளை உடனே அதிக விலைக்கு விற்றிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் ஈட்டிய தொகை மட்டும் 22,000 கோடி ரூபாய் என்கிறது சி.பி.ஐ. இவர்களது பங்குகளின் விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.
ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !  “இந்தியாவில் போடப்படும் எல்லா வெளிநாட்டு முதலீடுகளும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்புக் குழுமத்தின் ஒப்புதலைப் பெறுகின்றன எனும்போது, அமைச்சரவை இந்த முதலீடுகளையெல்லாம் அங்கீகரித்திருக்கும்போது, இதில் நான் எந்த சட்டத்தை மீறியிருக்கிறேன்? இவற்றுக்கு பிரதமரின் முன்னிலையில் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். பிரதமரை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்சு என்று கூறியிருக்கிறார் ராசா.
“ஆ, பிரதமரையே இழுக்கிறார்!சு என்று சில ஊடகங்கள் குதிக்கின்றன. உண்மையை சொன்னால், இவ்விசயம் குறித்து மன்மோகன் சிங் ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பதும், தனது பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுவதும் (dilution of equity) நியாயமான வணிக நடவடிக்கைகள். ஸ்வான், யூனிடெக் விவகாரங்களில் நடந்திருப்பதும் அதுதான் என்பதே அவரது கருத்து. “விற்கப்பட்டவை பங்குகள்தானே தவிர, அலைக்கற்றைகளை அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. எனவே, அந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையேசு (ஜூலை 26, பிசினெஸ் லைன்) என்று ராசாவின் கூற்றை மீண்டும் ஒருமுறை வழிமொழிந்திருக்கிறார் சிதம்பரம். “அலைக்கற்றை உரிமத்தை அரசிடம் விலைக்கு வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு அந்த உரிமத்தை வேறொருவருக்கு விற்கக்கூடாது என்ற விதியை ரத்து செய்து, வாங்கிய மறுகணமே விற்கலாம் என்று 2003ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கி விட்டதுசு என்று குட்டை உடைத்திருக்கிறார் கபில் சிபல் (ஜூலை 27, தி இந்து). இதன்படி பார்த்தால், அவர்கள் அலைக்கற்றையையே கைமாற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றிருந்தாலும் அது குற்றமில்லை என்றாகிறது.
மொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.
ராசா நீதிமன்றத்தில் கிளறாத இரகசியங்களும் எழுப்பாத கேள்விகளும் இவ்வழக்கில் நூற்றுக்கணக்கில் புதைந்து கிடக்கின்றன. இந்தக் கொள்ளையில் பங்கு பெற்றிருக்கும் பெரும் தரகு முதலாளிகள் யாரையும் சி.பி.ஐ. இதுவரை நெருங்கவே இல்லை. ஒரு உரிமத்தை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரு தொழில்நுட்பங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக 8448.95 கோடி ரூபாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ இன் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இதில் ரூ.4930 கோடியை டாடா டெலிசர்வீசஸ் சுருட்டியிருக்கிறது. ஆனால், டாடாவின் மீது குற்றப்பத்திரிகையும் இல்லை, கைதும் இல்லை.
டாடா மட்டுமல்ல, ஐடியா செல்லுலார் (ஆதித்ய பிர்லா குழுமம்), ஏர்டெல் (சுனில் பாரதி மிட்டல்), டேடா காம் சொல்யூஷன்ஸ் (ராஜ் குமார் தூத், ராஜ்யசபா எம்.பி, வீடியோகான் முதலாளி), ஏர்செல், எஸ் டெல், வோடஃபோன் (எஸ்ஸார், ரூயா) ஆகிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் அலைக்கற்றை கொள்ளையில் பங்கு பெற்றிருக்கின்றனர்.
ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல, மொரீசியஸில் போடப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதை அறிந்த ரூயா குழுமத்தை சேர்ந்த பிரசாந்த் ரூயா, ஐ.பி.கேய்தான் ஆகிய தரகு முதலாளிகள், சி.பி.ஐ. விசாரணை குறித்த விவரங்களைத் தருமாறு மொரீசியஸில் உள்ள இந்திய ஹை கமிசனர் மதுசூதன் கணபதியிடம் பேரம் பேசியிருக்கின்றனர். இது குறித்து எழுத்துபூர்வமான புகாரை அவர் அரசுக்கு கொடுத்த பின்னரும், இவர்கள் மீது சி.பி.ஐ. எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.
இது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. இந்த அளவுகோல் அனில் அம்பானி விசயத்தில் பின்பற்றப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமங்களைப் பெற்றதற்காக அனில் அம்பானி குரூப்பின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.1000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் ஸ்வான் டெலிகாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரூ.10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள தொகை எதையும் அனில் அம்பானி அல்லது அவரது மனைவியின் ஒப்புதலின்றி கொடுக்கக் கூடாது என்பது வங்கிகளுக்கு அம்பானி நிறுவனம் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல். ஸ்வான் டெலிகாமின் 50% பங்குகளை உரிமையாக வைத்திருக்கும் அனில் அம்பானியும் அவரது மனைவியும்தான், இந்த மோசடியின் முழுப்பயனையும் அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அம்பானி நிறுவனத்தின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்களேயன்றி, அனில் அம்பானியை சி.பி.ஐ கைது செய்யவில்லை.
அதேபோல, கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி ரூபாய் கொடுத்த டி.பி.ரியால்டீஸ் நிறுவனத்தின் முதலாளி ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 250 கோடி ரூபாய் நிலத்தை 25 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தும், அமைச்சர் ராசாவைப் பாராட்டி டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதமே ஒரு ஆதாரமாக இருந்தும், பெரம்பலூர் மருத்துவமனைக்கு டாடா அறக்கட்டளையிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்குவது தொடர்பான உரையாடல்கள் ஆதாரமாக இருந்தும் டாடா கைது செய்யப்படவில்லை.
“டி.பி ரியால்டீஸ் நிறுவனம் சரத் பவார் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது மும்பையில் ஊரறிந்த இரகசியம்சு என்று கூறினார் நீரா ராடியா. புனேவைச் சேர்ந்த பர்ஹாதே என்பவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு டி.பி.ரியால்டிஸ் நிறுவனத்தில் உள்ள தொடர்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !  ராசாவும் தொடர்ந்து கனிமொழியும் கைது செய்யப்பட்டவுடனேயே, அத்வானியை சந்தித்த பவார், தனது அரசியல் நண்பர்களான மம்தா, சவுதாலா, முலாயம், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவுடன் மாற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பற்றியும், அதற்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வெளியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் ஆலோசித்தார் என்று கடந்த மே மாதத்தில் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது. எத்தனை தரவுகள் இருந்தாலென்ன, கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.
குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராசா, தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியோர் மீது தவிர்க்கவியலாமல் குற்றம் சுமத்துகிறார். அவரது வாதங்கள் இந்த கிரிமினல் வழக்கு தொடர்பான வாதங்களாக மட்டும் இல்லாமல், இந்தக் கிரிமினல் அரசமைப்பு முழுவதையும் குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. “டாடாவை ஏன் கைது செய்யவில்லை?சு என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்வி ஊடகங்களின் தலைப்பு செய்திக்குரிய தகுதியுள்ள கேள்வி என்ற போதிலும், அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கட்சிகளையும், அதிகார வர்க்கத்தையும், தனியார்மயக் கொள்கைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் ராசாவின் வாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் அம்பலப்படுத்துமாயின், அவை ஊடகங்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்படும்; அல்லது இருட்டடிப்பு செய்யப்படும்.
தனியார்மயம்தாராளமயம் என்ற பெயரில் சுரங்கங்கள், காடுகள், நிலங்கள், நகர்ப்புற மனைகள், துறைமுகங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் பகற்கொள்ளை. தொலைபேசித் துறையில் நடைபெற்ற ஒரு கொள்ளை மட்டும், சீப்பில் சிக்கிய முடியைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ஊழல், ஊழல் என்று அரசியல் பரபரப்புக்கு மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அதன் பின்புலத்தை சாத்தியமான அளவுக்கு மூடிமறைக்கவே முயற்சிக்கின்றன ஆளும் வர்க்கங்கள். அந்த முயற்சியை முறியடிப்பதே நமது பணியாக இருக்கவேண்டும்.
நன்றி வினவு இணையம் www.vinavu.com

ரிசானாவை அனுப்பிய முகவர் கைதுசெய்யப்படுவார்

ரிசானாவின் வயதைக் குறைத்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிய முகவர் கைதுசெய்ய ப்படவுள்ளார். தலைமறை வாகியிருந்த இவர்கள் நாட்டுக்குள் வந்துவிட்டனர். எனவே அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரிசானாவை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்கள் ஆறரை வருடங்களாகக் கைதுசெய்யப்படவில்லை. வயதைக் குறைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையமும் தடைசெய்யப்படவில்லை. அவரை மீட்பதற்கான நடவடிக்கை எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரிசானாவின் தந்தை வரவழைக்கப்பட்டு ரகசியப் பொலிஸாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விரைவில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

தி.மு.க., - பா.ம.க., உரசல் ஆரம்பம்,என்னடா இன்னும் ஆரம்பிக்கவில்லையே

சென்னை: "தி.மு.க.,வின் தோல்விக்கு குடும்ப ஆதிக்கமே காரணம்' என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் விமர்சனத்திற்கு, தி.மு.க., தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. "தேர்தலில் நிற்காத அன்புமணி குடும்ப அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: "சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியடைவோம் என எதிர்பார்க்கவில்லை. பல துறைகளில் அன்றைய ஆளுங்கட்சி தலைமையின் குடும்ப ஆதிக்கமே இதற்கு ஒரு காரணம்' என்று, அன்புமணி சொல்லியிருக்கிறார். தி.மு.க.,வின் தயவால் மத்தியில் ராஜ்யசபா எம்.பி.,யாகி, அமைச்சராகவும் பதவி வகித்த அன்புமணிக்கு நன்றி வேண்டாம். ஆனால், கடந்த காலத்தை மறந்து விட்டு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. குடும்ப ஆதிக்கத்தைப் பற்றி அன்புமணி பேசலாமா? அன்புமணி முன்னாள் மத்திய அமைச்சர். ராமதாசின் அக்காள் மருமகன் தங்கராஜ் முன்னாள் எம்.பி., அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி இந்நாள் எம்.பி., அன்புமணியின் தாயார் சரஸ்வதி பெயரில் வன்னியர் சங்க டிரஸ்ட். அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்.எல்.ஏ., அன்புமணியின் சித்தப்பா சீனுவாசன் சமீப காலம் வரை பா.ம.க.,வில் தூண். இன்று காங்கிரஸ். அன்புமணிக்கு கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து லோக்சபா தேர்தலில் ஏழு இடங்களில் நின்றீர்களே, எத்தனை இடத்தில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்து பேசுங்கள். இனி வருங்காலமும் அதேபோல்தான். மல்லாந்து படுத்துக் கொண்டு காரி உமிழ்ந்தால் தன் மார்பில் தான் விழும் என்ற பழமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன். பா.ம.க.,வில் பலர் காலி செய்து விட்டு சென்றதே தங்களால் தான் என பேசிக் கொள்வதை சிந்தித்து அரசியல் செய்யுங்கள். தேர்தலிலேயே நிற்காத அன்புமணி, இனிமேலாவது குடும்ப அரசியல் என்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறிய பின் தி.மு.க.,வை பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் செய்த விமர்சனம் தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அன்புமணியை விமர்சித்து பொன்முடிவெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து, தி.மு.க., - பா.ம.க., இடையே மோதலை உருவாக்கியுள்ளது.
Raja Mohamed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
ஏனுங்க// பொன்முடி// சாக்கடையில் கல் விட்டால் அது நம்ம மேல் தான் படும்// இவனுங்க அரை கிறுக்கனுங்க// இவனுங்களுக்கு போய் பதில் சொல்லிக்கிட்டு/// போங்க போங்க சார்/
Baskaran Subramanian - chennai,இந்தியா
அடிச்சிகாதீங்கப்பா!! நீங்க சண்ட போடுறத பாத்தா தெருவுல ஏதோ சண்ட போட்டுக்குமே அது தான் நியாபகம் வருது!!!!
Baskaran Subramanian - chennai,இந்தியா
உங்க தலைவரு அன்னிக்கி என்ன சொன்னாரு ??? நானும் ராமதாசும் husband , wife மாதிரின்னு சொன்னாரே!!! அட புருஷம் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பிரச்சின வரத்தான் செய்யும் அதுக்கு இந்த ஆளு ஏன் கூவுறாரு??? ராமதாசோட சக்களத்தியா இந்த பொன் முடி ?? அப்போ மு.க வுக்கு என்ன வேணும் இவரு???
vennai govindan - nochikuppam,யூ.எஸ்.ஏ
அன்புமணி அண்ணே பொன்முடியும் அவர் குடும்பமும் விழுப்புரம் முழவதும் அட்டய போட்ட அணைத்து சொத்துகளின் விபரத்தை எடுத்து விடவும். இல்லையென்றால் இவர் மீது ஒரு நில அபகரிப்பு புகார் உடனடியாக குடுக்கவும். இவரை உள்ள தள்ள இது செரியான வாய்ப்பு. விடாதீங்க.
vadivelu - chennai,இந்தியா
ஆஹா!! இப்போ அன்புமணி உங்க முறை . பொன்முடி பத்தி எடுத்து விடுங்க. எப்படியும் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்.சரியான போட்டி.யார் வெல்கிரீகள் என்று பார்ப்போம்
gnanavel - chennai,இந்தியா
எதுக்கு கிருஷ்ணசமிய இழுகிரிங்க அவர் காங்கரஸ் ... அவர் ஏன் எம்.பினு காங்கரஸ் கிட்ட கேளுங்கடா..

Sundar - Bangalore,இந்தியா
எதிர்ப்பார்த்த ஒன்று தான் ... என்னடா இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று பார்த்தேன்.. சபாஷ்.. நீங்கள் இரு கட்சிகளும் அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர்கள் .. அடித்துக்கொண்டு சாகுங்கள் .
 

யாழ். சோனகத் தெருவில் அபிவிருத்தித் திட்டங்கள்

யாழ். சோனகத் தெருவில் ஜனாதிபதி செயலகத்தின் அங்கீகாரத்துடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு கலாச்சாரத்துக்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.