வெள்ளி, 22 ஜூலை, 2011

பாரிய பிளவை நோக்கி திமுக. அழகிரி ஸ்டாலின் மோதல் வெடிக்கப்போகிறது

மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில் முடிவு?

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வளிக்கும் வகையில், தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினை, செயல் தலைவர் பதவியில் அமர்த்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பும் நிலவுகிறது.

திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தி்ல் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாள் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.

ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
தலைமைக்கு இணையான தென்மண்டல குழுவின் தலைவராக அழகிரி இருப்பதால் அதை கலைத்து விட வேண்டும் என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பதொடங்கியுள்ளனர்.
கோவையில் கூடப்போகும் பொதுக்குழுவுக்கு சமுகம் அளிக்க மாட்டோம் என்று அழகிரி தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது.

இதுபோக கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
மோதல்

ஐந்து சிறுவர்கள் ஒரு சிறுவனை பலாத்காரம் கொலை எங்கே போகிறது தமிழ்நாடு தமிழர் கலாச்சாரம்?

மதுரை மாவட்டம் கிழவேனரி கிராமத்தில் 8 வயது சிறுமின் பள்ளிக்கூடத்தில் இருந்த மரப்பெட்டிக்குள் பிணமாக கிடந்த சம்பவத்தில் அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி, மிரட்டி ஐந்து சிறுவர்கள் ஓரினச்சேர்க்கை உறவை மேற்கொண்டு பின்னர் சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து பெட்டிக்குள் போட்டது தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிழவனேரியில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்திற்குள் இருந்த பெட்டிக்குள் சிறுவன் ஜெயசூரியா பிணமாக கண்டெடுக்கப்பட்டது அந்தக் கிராமத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. முதலில் சிறுவன் சக நண்பர்களோடு ஒளிந்து விளையாடியிருக்க வேண்டும். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்டி மூடிக் கொண்டதால் அவன் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் தற்போது பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். அதற்கு முன்பாக அவனை ஐந்து பேர் சேர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐந்து பேர் செய்து இந்தக் கொடுமையை செய்துள்ளனர். அனைவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்திற்குப் பின்பு கூடி குடிப்பது, புகை பிடிப்பது என பொழுதைப் போக்குவது வழக்கம். இந்த ஐந்து பேரும் 19 வயதைக் கூட தாண்டாதவர்கள்.

ஜூலை 16ம் தேதி மாலை நாலரை மணியளவில் ஜெயசூர்யா தனது நண்பர்களோடு கண்ணாமூச்சி விளையாடுவதை இந்தக் கும்பல் பார்த்துள்ளது. அப்போது ஜெயசூர்யாவை அவர்கள் பிடித்துப் பள்ளி பாத்ரூமுக்குக் கொண்டு போய் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். ஐந்து பேரும் தங்களது வெறித்தனத்தைத் தணித்துக் கொண்ட பின்னர் சிறுவனைப் பார்த்தபோது அவன் நினைவிழந்து கிடந்தான்.

அவனை அப்படியே விட்டுச் சென்றால் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவான் என்பதால் ஐந்து பேரும் சேர்ந்து அவனது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் மரப் பெட்டியல் போட்டு விட்டுத் தப்பி விட்டனர் என்றார்.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த ஐந்து பேரும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செய்த குற்றத்தை ஐவரும் ஒத்துக் கொண்டனர்.

இவர்கள் குறித்து கிராம மக்களிடமும், பள்ளிக்கூட அதிகாரிகளிடமும் போலீஸார் விசாரித்தபோது இவர்கள் இதுவரை யாரிடமும் செக்ஸ் குற்றம் புரிந்ததாக தெரியவில்லை என்று கூறினர். அதேசமயம், இவர்கள் ஐந்து பேரும் தங்களுக்குள் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபடுவது வழக்கம்தான் என்று கூறியுள்ளனர்.

ஐந்து பேரையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்டர்கள் போராட்டம்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அவரது உயிரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக அவரது மகனும், நடிகருமான அம்சவிர்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. இருப்பினும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் பிரச்சினை வந்து அது செயலிழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் என்றார்.

71 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், இரு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அருகில் இருந்து கவனித்தபடி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் ஸ்டைல் நடிப்பை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ. காதலிக்க நேரமில்லை படத்திலேயே அந்தக் காலத்து இளைய தலைமுறையைக் கவர்ந்தவர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். ஊமை விழிகள் படத்தில் வில்லனாக கலக்கிய அவர், அருணாச்சல் படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் கண்டேன் காதலைப் படத்தில் அவர் நடித்திருந்தார்.

பழம்பெருமையும் சவடாலும் பேசி கடைசியில் போயஸ் கார்டனில் போய்

வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?
வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!
“வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?
சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?
தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.
“பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?
வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.
 அவர்களுடைய இந்து தேசியம் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.
தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?
இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?
ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.
இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.
மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.
வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கும் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.

இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஹுஸ்டன், ஜூலை. 21-


இந்தியரான வாசுதேவ் பட்டேல் (45) என்பவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். இந்த நிறுவனம் அரேபியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதே நிறுவனத்தில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வந்தனர். 2001-ம் ஆண்டு, அந்த நிறுவனத்துக்குள், மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான். வெறித்தனமாக அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் வாசுதேவ் பட்டேல், பாகிஸ்தானைச் சேர்ந்த வாக்கர் ஹசன் உயிர் இழந்தனர். வங்காள தேசத்தைச் சேர்ந்த ரியாஸ் டிய்யான் குண்டு காயத்துடன் தப்பினார். இவர்களை துப்பாக்கியால் சுட்டவனை ஹுஸ்டன் போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் மார்க்ஸ்ட் ரோமேன் (40). இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்கு பழி வாங்கவே, அரேபியருக்கு சொந்தமான கடை ஊழியர்களை சுட்டதாக அவன் வாக்கு மூலம் அளித்தான்.

டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் மார்க் ஸ்ட்ரோ மேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். ஆனால், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவனுக்கு நேற்று டெக்சாஸ் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விச ஊசிபோட்டு கொல்லப்பட்டான்.



Mark Stroman, due to be executed for going on a killing spree, now describes hate as "pure ignorance"

In the nine years Mark Stroman has been on death row in Texas, he says he has watched 208 people walk past him on the way to be executed.

This week it is his turn.
But fighting to save his life is the man he shot in the face and blinded in one eye.
In the days following 11 September, 2001, Stroman attacked three people, killing two of them. He was targeting anyone he considered an "Arab", calling it revenge for 9/11.
"What Mark Stroman did was a hate crime, and hate crimes come from ignorance," said Rais Bhuiyan, 37, the only man to survive the shooting.
"His execution will not eradicate hate crimes from this world, we will just simply lose another human life."
'Uneducated idiot'
It was a Friday lunchtime when a gunman walked into the petrol station shop and pointed a double-barrelled shotgun at Rais.
He had been robbed before and knew what to do. He offered the money from the cash register, but that didn't appear to be what Mark Stroman had come for.
"He asked me 'where are you from?' and that's a strange question to ask in a robbery. As soon as I said 'excuse me?' I heard an explosion and felt the sensation of a million bees stinging my face."
Rais Bhuyian, a Bangladeshi-born naturalised US citizen, played dead until his attacker left.He needed many operations, has lost the sight in his right eye and still carries shotgun pellets in his face, but is now campaigning hard to prevent his attacker from being put to death.
Mark Stroman killed two other men in a similar way - Vasudev Patel, an Indian immigrant who was Hindu, and Waqar Hasan, a Muslim born in Pakistan. They were both shot as they stood behind a counter.
"I was an uneducated idiot back then and now I'm a more understanding human being," Stroman said through the black telephone handset, from behind a thick pane of glass in the death row visiting room at the Polunsky Unit, Livingston, Texas.
It was a week before the death sentence was due to be carried out, and his last opportunity to speak publicly about what he did, why he did it, and what he thought about the man he shot who was now fighting for his life.

"At that time here in America everybody was saying 'let's get them' - we didn't know who to get, we were just stereotyping. I stereotyped all Muslims as terrorists and that was wrong."
Stroman is shaven-headed and covered in tattoos. He made a point of putting up a small American flag on the counter behind the thick glass as the camera started rolling for the interview.At 41, he has lost some of the muscle he had when he appeared in court nine years ago, when he proudly held up an American flag and gave the thumbs up to the courtroom cameras.
"I had some poor upbringing and I grabbed a hold of some ideas which was ignorance, you know, and hate is pure ignorance. I no longer want to be like hate, I want to be like me," he said.
"No matter what I do or say is going to change the fact that even you are going to view the Muslims as suspect," he told me.
"If you get on the airplane and you see one, you might not be wanting to, but you are going to watch that person - we live in different times now, but it's not right to stereotype them and I'm the first to admit I did that."
Offering forgiveness
Rais Bhuyian is a Muslim, and on what he feared was his deathbed, he promised Allah he would make a pilgrimage to the Hajj in Mecca. There he thought more deeply about what had happened and what he wanted to do.
"This campaign is all about passion, forgiveness, tolerance and healing. We should not stay in the past, we must move forward," he said.
"If I can forgive my offender who tried to take my life, we can all work together to forgive each other and move forward and take a new narrative on the 10th anniversary of 11 September."

He had been in touch with Stroman, who he would like to see as "a spokesperson, an educator, teaching a lot of people as ignorant as him what is wrong".
Stroman says he has asked himself the question a thousand times - would he be able to forgive the man who shot him in the face? He said he would find it very hard.
"I tried to kill this man, and this man is now trying to save my life. This man is inspiring to me.Rais Bhuiyan says Stroman could have a role as an 'educator'
"Here it is, the attacker and the attackee, you know, pulling together. The hate has to stop - one second of hate will cause a lifetime of misery. I've done that - it's wrong, and if me and Rais can reach one person, mission accomplished.
"If this is what my purpose in life is, let's do it - rock on, saddle up it's rodeo time as we say in Texas."

It seems very unlikely that the governor of Texas will issue a stay of execution - the state is known for its regular use of the death penalty - but Stroman seems resigned to it.
"To be honest, the closer I get to death the more at peace I am," he said.
Rais Bhuiyan's desire to forgive and to stop this execution is a small step towards bringing communities together.
"He did what he did, but now he is a different person, and can talk to the people - those who are as ignorant as him - so there is a chance we can live in a better society. Execution is not a solution in this case."
Mark Stroman is due to be put to death by lethal injection on Wednesday 20 July at 1800 Texas time (0000 GMT on Thursday).

ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கு முதல்வரும் ஜே சொல்லியாக வேண்டும்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.  வரும் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 26-ம் தேதிதான் என்றாலும் கிட்டத்தட்ட இந்தக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி விட வேண்டும் என்று தான் தீர்ப்பு இருக்கும் என்று தெரிகிறது!
பரவாயில்லை.. இதனை அரசுத் தரப்புக்கு ஏற்ற தோல்வியாகக் கருதாமல் சமச்சீர் பாடங்களை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்று அரசு யோசிக்க வேண்டும். ஏற்கனவே உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்டுள்ள மன பாதிப்பை சரி செய்வதற்கான நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப் பட வேண்டும். விடுபட்ட இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய பாடங்களை இப்போது சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் திறந்து சமாளித்து விடலாம் என்று பள்ளி நிர்வாகிகள் யோசிக்காமல் இருப்பதற்கு வசதியாக இந்த ஆண்டு மட்டும் பாடத்திட்டத்தில் இரண்டு மாதங்களுக்குரிய பகுதிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களுக்கு இன்னமும் அதிக வெறுப்பு கல்வி மேல் வந்து விடும்!
சமச்சீர் கல்வித் திட்டத்தை வலியுறுத்தியவர்களும் இது ஏதோ தங்களுக்கு ஏற்பட்ட வெற்றி என்று சுய தம்பட்டம் அடித்து அரசின் கோபத்தை கிளறாமல் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் இரண்டு தரப்பினருமே இதில் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது!

பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு : அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற நிலையை மாற்றி, 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பெண்கள் என்று வருகின்ற இடத்தில் எல்லாம், கிராமப்புற பெண்கள் என வரும் வகையில், அரசியல் சட்டத்தை 110வது முறையாக திருத்தம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு தற்போது மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இதை மாற்றி, பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பாதிக்கு பாதி இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, பெண்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் மசோதா, பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2009 நவம்பர் 26ம் தேதியன்று, லோக்சபாவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்பின் பார்லிமென்ட் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பார்லிமென்ட் நிலைக்குழு, மசோதாவை அப்படியே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தது. ஆனாலும், ஒரே ஒரு திருத்தத்தை பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்தது. அதாவது, மசோதாவில் எந்த இடத்தில் எல்லாம் பெண்கள் என்று மட்டும் வருகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் கிராமப்புற பெண்கள் என்று மாற்ற வேண்டுமென யோசனை தெரிவித்தது. இந்த மாற்றத்தை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொள்வதாக நேற்று அறிவித்தது. இந்த தகவலை மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், நிருபர்களை சந்தித்த அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
அதன்படி, 2009ம் ஆண்டு மசோதாவிற்காக அரசியல் சட்டத்தின் 110வது திருத்தத்தை செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு என்பது பஞ்சாயத்து அமைப்புகளின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகளிலும் பொருந்தும். நாகாலாந்து,மேகாலயா மறறும் மிசோரம் மாநிலங்களுக்கு பொருந்தாது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக மொத்தம் 28.17 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில், 36.87 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சட்டம் அமலுக்கு வந்தால், கூடுதலாக 14 லட்சம் பெண்கள், பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பினாமி நில பரிமாற்றங்களை தடுக்க புதிய சட்டம் : பினாமி நில பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. பினாமி ஆள் என்றால் என்ன? பினாமி சொத்துக்களை அடையாளம் காண்பது எப்படி? என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆராய்ந்து, அதன்பிறகு இதற்கான சட்டம் இறுதி பெறும். இந்த சட்டம், சிவில் கோர்ட் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும்.
இருப்பினும், பரம்பரை சொத்துக்களை அவரவர் தலைமுறைகளில் மாற்றிக் கொள்வதற்கு இந்த சட்டம் எந்த தடையும் செய்யாது. தற்போதுள்ள பினாமி பரிமாற்றங்கள் தடைச் சட்டம் -1988க்கு பதிலாக, இனி புதிய பினாமி பரிமாற்றங்கள் தடைச் சட்டம் -2011 கொண்டு வரப்படும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், அதிலுள்ள விதிமுறைகளை மீறுவோர்க்கு ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அத்துடன் அபராதமும் விதிக்கலாம். நிருபர்கள் சந்திப்பின் போது, கர்நாடக முதல்வர் எடியூரப்பா குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அம்பிகா சோனி, "ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்கள் மிகவும் வெளிப்படையாக இருந்தாக வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா கோர்ட், அம்மாநில முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு எடியூரப்பா தன் முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும். அவர் இவ்விஷயத்தில் மனச்சாட்சியுடன் நடந்து கொள்வார் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது' என்றார்.

பெண்கள் போராட்டம் நித்தி, ரஞ்சிதா படத்தை செருப்பு துடைப்பத்தால் அடித்து,



சேலம் : சேலத்தில் நேற்று, நித்தி, ரஞ்சிதா படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர். சாமியார் நித்யானந்தா படுக்கை அறையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கடந்த குரு பூர்ணிமா தினத்தன்று பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா, ஆண், பெண் பக்தர்களை தனது குண்டலினி சக்தியால் ஆகாயத்தில் மிதக்க வைக்கிறேன் என ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றினார்.

இந்த காட்சி டிவிக்களில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த பல்வேறு பெண்கள் அமைப்பினரும், சமூக அமைப்பினரும் நித்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாவட்ட பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் நேற்று, நித்தி, ரஞ்சிதாவை கண்டித்து போராட்டம் நடத்தினர். அமைப்பின் மாவட்ட செயலாளர் கந்தம்மாள் தலைமையில் பெண்கள் ஒன்றிணைந்து சேலம் பெரியார் சிலை முன்பு நித்தி, ரஞ்சிதா படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர். அவர்கள், ‘‘மக்களை ஏய்த்து வரும் போலி சாமியார் நித்தியை கைது செய், பெண் பித்தன் நித்தியை சிறையில் தள்ளு, மத்திய, மாநில அரசே, நித்தி ஆசிரமங்களை இழுத்து மூடு, போலி சாமியார் நித்தியின் சொத்துகளை பறிமுதல் செய்’’ என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதையறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம், ஏன் அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்டனர். பின்னர் அவர்களை டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நித்திக்கு எதிராக பெண்கள் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை எவரும் தட்டிப்பறிக்க முடியாது-ஜனாதிபதி!

தமிழ் மக்களின் உரிமைகள் அவர்களிடமே இருக்க வேண்டும். அதனை எவரும் தட்டிப்பறித்துக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடகாலம் அவர்கள் இழந்த ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் நாம் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம். தொடர்ந்தும் அதனைப் பாதுகாப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முப்பது வருடகாலம் தமிழ் மக்கள் பட்ட கஷ்டத்திற்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. இனி அத்தகைய நிலை வராது. இனி அம்மக்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
325 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி நகரில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கிற்கான அடிக் கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்ட பின் அங்கு நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, மஹிந்தானந்த அலுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கம் ஏனைய மாகாணங்களைவிட வடக்கிற்கே அதிக நிதியினை செலவிட்டு வருகிறது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகள் முன் னெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள் ளவர்கள் காருண்யம் பெறுவார்கள். அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களை நியமித்துள்ள நாம் வடக்கிற்கு பல ஆசிரியர் நியமனங்களை நாம் வழங்கியுள்ளோம்.
மேலும் பல ஆசிரியர் நியமனங்களை வழங்கவும் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முப்பது வருடமாக பாழடைந்து போய் கிடந்து விவசாய நிலங்களை நாம் அரச செலவில் சுத்திகரிப்புச் செய்து வழங்கியுள்ளோம். அது விவசாயிகளுக்குப் பெரும் நன்மையாக அமைந்துள்ளது.
முப்பது வருட பின்னடைவைச் சரி செய்யும் வகையில் பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் கொக்காவில் கோபுரத்தை நாம் அமைத்ததன் மூலம் இப்பகுதி மக்கள் சர்வதேசத்துடனான தொடர்புகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப ஆய்வு கூட வசதிகளும் இப்பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பிரதேசத்தின் 16 பாடசாலைகளுக்கு கணனிகளை நாம் வழங்கியுள்ளோம்.
இப்பகுதி மக்கள் முகங்கொடுக்கும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும். அது தொடர்பில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும். இனி இந்தப் பிரதேசங்கள் கஷ்டப் பிரதேசங்களாக இருக்காது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஹிலாரி ஜெயா சந்திப்பு புலன்பெயர்களின் துள்ளுவதோ இளமை

மற்றுமொரு முறை துள்ளுவதற்கு சந்தர்ப்பம்: அவ்வளவுதான்!
-சுகுனா
தமிழகத்திற்கு விஜயம்செய்திருந்த அமெரி;க்க ராஜாங்க செயலாளர் ஹில்லரி கிளின்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது தொடர்பாக புலம்பெயர் இணையத்தளங்கள் துள்ளிக்குதிக்கின்றன. ஒருமணிநேரம் இருவரும் பேசிய விடங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாக வேறு தெரிவித்திருக்கின்றன.
இவையெல்லாம் நிச்சயம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உற்சாகமூட்டி உரமேற்றப்போவது என்னவோ உண்மைதான். ஆனால்- ஜெயலலிதா- ஹில்லரியின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இலங்கை விவகாரம் பற்றி வாய்திறக்கப்படவில்லை.
யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் மீள்குடியேறற்றம் குறித்து ஜெயலலிதா வலியுறுத்தியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், ஹில்லரி சந்தித்த சில மணிநேரங்களில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கத்தின் சாதனையை பாராட்டியிருக்கிறார்.
ஆக, ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா தனது கொழும்பு தூதுவர் மூலம் பதிலளித்திருக்கின்றது.
ஜே-ஹில்லரி சந்திப்பு தொடர்பாக தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமணி வெளியிட்ட செய்தியில் இருவரும் பேசிய விடயங்கள் என்ன என்பதுகுறித்து விபரித்திருக்கின்றது.
அந்தச் செய்தியை அப்படியே கீழே தருகின்றோம்.
வாகன உற்பத்தித் தொழிலில் தமிழகம் முன்னிலை பெற்று விளங்குவதாகவும், இந்தத் தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் முதல்வர் விளக்கினார். அந்த வாய்ப்புகளை மேலும் பெருக்கிட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நடுத்தர நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை அழைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது என்று அவர் எடுத்துரைத்தார்.
மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகிறது எனவும், வாகன உற்பத்தித் துறையில் உலகளாவிய நிறுவனங்களைப் பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் அந்தத் துறையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஹிலாரியிடம் விளக்கிக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் குறித்த தனது கருத்தை முதல்வரிடம் பகிர்ந்து கொண்டார் ஹிலாரி.
சூரிய மின் சக்தித் திட்டம்: தமிழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
மாநிலத்தில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 10 பூங்காக்களை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2011 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே 10 முதல் 12 மில்லியன் அளவுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிய ஜெயலலிதா, தரமான கல்வி நிறுவனங்களும், வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கும் அமைப்புகளும் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழக அரசும், அமெரிக்காவும் இணைந்தால் சிறந்த தொழில் பயிற்சியை அளிக்கலாம் என்றார் முதல்வர். இதற்கு பதிலளித்த ஹிலாரி, பயிற்சித் திட்டங்களை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
சாலை மேம்பாட்டு வசதி: சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.1 லட்சம் கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த வேண்டும் எனவும், இதற்கு 15 முதல் 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் எனவும், ஏராளமான தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களிலும் அதன் உட்புறப் பகுதிகளிலும் தொடங்க அரசு ஆர்வத்துடன் இருப்பதாகவும், இதற்கு சரியான சாலை கட்டமைப்பு வசதி தேவை எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் ஏராளமான முதலீடுகளைச் செய்ய வாய்ப்பு இருப்பதாக ஹிலாரி தெரிவித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.
அதுதான் தினமணிச் செய்தி.
புலம்பெயர் தமிழர்களெ, ஜெ- ஹில்லரி சந்திப்பை நினைத்து இன்னும் கொஞ:ச நாட்களுக்கு துள்ளிக் குதியுங்கள்.
இன்னுமொரு இதுnபுhன்ற செய்தி கிடைக்கும் வரை….

முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி _

எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ் போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். அதுவே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இங்குள்ள இளைஞர்கள் 2018ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள பொதுநல வாய விளையாட்டுப்போட்டிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட்களை அணிந்திருப்பதை காணமுடிகின்றது. இவற்றை பார்க்கும்போது எமக்கு நிச்சயமாக தங்கம், மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி இந்த நிகழ்வில் தமிழ்மொழியிலும் உரையாற்றினார். அதன்போது அவர் குறிப்பிடுகையில்,

உங்கள் மொழியில் பேசும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். 30வருட காலமாக காணப்பட்ட இருண்டயுகம் இதன் பின்னர் இல்லை. நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகள் என்பவை எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது நீங்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம். பாதுகாப்பாகவும் வாழலாம். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் உங்கள் பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மென்மேலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாம் உங்கள் மாகாணத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளோம். உங்கள் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விதவை பெண்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும்.

உங்கள் பிள்ளைகளில் சிலர் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் நீதியை பெற்றுக்கொடுப்போம். மீள்குடியேற்ற செயற்பாடுகளை அதிகளவில் முடித்துவிட்டோம். உங்கள் பிரதேசம் 30 வருடங்கள் பின்னடைவை கண்ட பிரதேசமாகும். கடந்த இரண்டு வருடகாலத்துக்குள் நாங்கள் அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். அதனை யாராலும் இல்லையென்று கூற முடியாது. கடந்த மாதம் கொக்காவில் கோபுரத்தை திறந்துவைத்தோம்.

உங்கள் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை வேகமாக முன்னேற்றமடைய வேண்டும். எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன்போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ், போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். நாகலிங்கம், எதிர்வீரசிங்கம் போன்றோர் மீண்டும் உங்கள் பகுதிகளிலிருந்து வரவேண்டும். அதுவே எனது நோக்கமாகும்.

உறுதிகள் இல்லாத காணிகள் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் திறக்கப்படும். சிலர் உங்களை தவறான பாதையில் அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றனர். அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக கோடிக்கணக்கில் நிதியை பெற்றுக்கொள்கின்றனர். அவற்றின் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள். அவர்களின் வீடுகள் வெளிநாடுகளில் உள்ளன. அனைத்து வசதிகளும் வெளிநாடுகளில் உள்ளன என்றா

வியாழன், 21 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி.வீரமணி: கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!

கல்வியாளர்களின் வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது: கி.வீரமணி
உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, பிள்ளைகளின் - பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாழாக்காமல், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் விடுத்த வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது.
மீறிச் சென்று தடை ஆணை கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு காலதாமதம் இனியும் செய்யாமல், பள்ளிக்கூடங்களை, பாடங்கள் நடத்தும் கூடங்களாகச் செய்து, உடனடியாக ஏற்கெனவே அச்சிடப்பட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கவலையைப் போக்கிப் பொறுப்புணர்ச்சியோடு தமிழக அரசு கடமையாற்ற முன்வரவேண்டும். இனிமேலும் இதை கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்! நியாயம் கிட்டியுள்ளது.
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மாணவர் சண்டையில் மாணவனொருவன் மரணம்,மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவிற்கு உட்பட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அடங்கும் கல்லடி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் வைத்து மாணவனொருவனை சக மாணவவன் தாக்கிய போது கீழே விழுந்து ஒன்பதாம் ஆண்டு மாணவனொருவன் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரித்தனர்.

இச்சம்பவத்தின் போது பாடசாலை மாணவனான ஆர்.டலீமா என்ற மாணவனே மரணமானவராவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சகமாணவன் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மரணமானவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களிடேயே வன்முறை கலாசாரம் மிக ஆழமாக வேருன்றி இருப்பதை இச்சம்பவம் நன்கு எடுத்துகாட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழர் குடியேறிய நாடுகளிலும் காணக்கூடியதாக உள்ளது.
பிரான்சில் பல ஆண்டுகளாக வசிக்கும் ஒரு தமிழ் பெண்மணி தனது மகளை தமிழர்கள் அதிகம் கடை வைத்திருக்கும்   லா சப்பல் என்ற பகுதிக்கு கூட்டிக்கொண்டு செல்லவே முடியாது தமிழ் கிழக்காலிகளின் இது அடாவடித்தனம் தாங்க முடியாதுள்ளது என்றார்.
புலன்பெயர் நாடுகள் எல்லாம் நம் வங்குரோத்து  வாலிபர்களின் சண்டித்தனம் பேர்பெற்றது. இந்த வாலிபர்களை கொம்பு சீவி தமது பயமுறுத்தல் காசு பறித்தல் போன்ற இழிசெயல்களுக்கு பயன்படுத்திய புலிகளின் மற்று மொரு பயங்கர வாத படைப்புக்கள்தான் இது போன்ற வன்முறை மாணவர்கள்.

குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா?

கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?
தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,
ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?
பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.
எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!
இந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.
இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.
பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?

அரசியல் விபச்சாரம் நடத்தும் கூத்தமைப்பு எமது சாபக்கேடுகளில் ஒன்றாகும்.

மாவையின் கூச்சலை கேளுங்கள்,
தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதியே அப்பட்டமாக மீறியுள்ளார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆட்திரட்டல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையாளரோ நலத்திட்டங்கள், வேலைத்திட்டங்கள், வேலைவாய்ப்புக்கள் நிதிஒதுக்கீடுகள் என்பவை தேர்தல் விதிமுறைகளை மீறுபவை என அறிவித்துள்ளார். ஆனால் அவை அனைத்தையும் ஜனாதிபதியே மீறியுள்ளார் என  சேனாதி குற்றம் சாட்டியுள்ளார்.

புலிகளின் தேர்தல்கள் மூலம் பல்லாண்டுகாலம் பதவி சுகத்தை அனுபவித்த இந்த மாவையும் இவரது குழுவினரும் எந்தக்காலத்திலும் புலிகளின் ஜனநாயக மேம்பாடுகளை பற்றி கேள்வி எழுப்பாமல் கை நடுங்கி கால் வெடவெடத்து ஏதாவது போட்டுத்தாருங்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை காலை தொடர்ந்து நக்குவோம். தப்பிதவறியும் எமது தலையில் போடாவிட்டால் போதும் என்று நாயிலும் கீழான அரசியல் நாடாத்திவிட்டு இன்று எத்தனையோ கூப்பாடுகள் கூச்சல்கள் போடுகிறார்கள். இந்த சுதந்திரம் யாரால் வந்தது?

மக்களுக்கு தெரியும் ஆனால்  சிலருக்கு என்றுமே எதுவும் புரியாது உதைப்பவனின் கால்களை முத்தமிடும் அடிமைத்தனம் ஆழமாக வேருன்றி இருக்கும். அப்படிப்பட்ட  பேதைகளை  வைத்து அரசியல் விபச்சாரம் நடத்தும் கூத்தமைப்பு எமது சாபக்கேடுகளில் ஒன்றாகும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா தனது பிள்ளைகளின் புலமைப்பரிசில் குறித்து அரசாங்கத்தின் பின் கதவு தட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களிடம் சலுகை பெற்றுக் கொண்டதாக அண்மையில் உண்மையான தகவல் ஒன்று வெளி வந்தது. அது ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது போலவே சப்ரா சரவணபவனும் தனது வாரிசு ஒன்றை அரசாங்கத்தின் பின் கதவு தட்டி ஐக்கிய அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜெயாவின் தலைகனத்திற்கு சரியான மருந்து...ச‌மச்சீர்

ச‌பாஸ் ச‌ரியான‌ தீர்ப்பு. அந்த‌ இத்து போன‌ பாட‌புத்த‌க‌த்தில் இருந்து விடுத‌லை. ச‌மச்சீர் பாட‌திட்ட‌ம் த‌ர‌மான‌தாக‌ இருக்க‌ற‌துனால‌ தான‌ போன‌ இட‌த்துல‌ எல்லாம் மூக்க‌றுப‌ட‌ வேண்டி இருக்கு. வேணூம்னே ச‌ம‌ச்சீர் பாட‌ம் த‌யாரிக்கும் போது எதாவ‌து குறைக‌ளை இவ‌ங்க‌ளே சேர்த்து இருப்பாங்க‌.அப்ப‌ற‌ம் அத‌ கார‌ண‌ம் காட்டி இப்ப‌ த‌டுத்து நிறுத்த‌ப் பார்த்தாங்க‌. முடிய‌ல‌. உண்மை வெட்ட‌ வெளிச்ச‌த்துக்கு வ‌ந்துடுச்சு.அதெப்ப‌டி இவ‌ங்க‌ க‌ண்ணுக்கு ந‌ல்ல‌ விஸ‌ய‌ம் எல்லாம் தெரியாம‌ அதுல‌ இருந்த‌ ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ம‌ட்டும் தெரிஞ்ச‌து, அது தான் ஆச்ச‌ர்ய‌ம்? அந்த‌ பாட‌ திட்ட‌ம் மெட்ரிக் க‌ல்வியை விட‌ சிற‌ந்த‌தாக‌ த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌துனால‌ தான் இந்த‌ வெற்றி பெற‌ முடிஞ்ச‌து.

ஜெ.வுடன் இலங்கை தூதர் சந்திப்பு


முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் சென்னை கோட்டையில் 21.07.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.
இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கைவிடுமாறு ஜெயலலிதா வலியுறுத்தினார். இலங்கையில் தமிழர்களை மீள்குடியமர்த்துவது குறித்து இலங்கை தூதர் கரியவாசம் விளக்கம் அளித்தார்.

சமச்சீர் கல்விக்கு தடை இல்லை : சுப்ரீம் கோர்ட்

டெல்லி: சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் வரும் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலேயே அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தது.

அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது. சமச்சீர் கல்வி நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படுமா என்று அன்று தான் உறுதியாகத் தெரியும்.

ஓஷோ அவர்கள் இலங்கையை பற்றி கூறியது,முப்பது ஆண்டுகளுக்கு முனனால்


சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முனனால் ஓஷோ அவர்கள் இலங்கையை பற்றி கூறியது மிகவும் சுவாரசியமாக உள்ளது. அவர் கூறியது எவ்வளவு தீர்க்க தரிசனமானவை என்பதை நாம் எல்லோரும் சற்று மீட்டிப்பார்க்க வேண்டும்.

நடிகை அமலா தெருநாய்கள் கருத்தடைyoutube



தெருநாய்கள் கருத்தடை திட்டம் பற்றி வெள்ளை அறிக்கை
:நடிகை அமலா வலியுறுத்தல்பெங்களூரில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நடிகை அமலா கூறினார்.

பிராணிகள் நலச்சங்கம் நிறுவனரும், நடிகையுமான அமலா நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம்,

பிராணிகளில் நாய்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறது. அவை நமது வீட்டின் செல்ல பிராணியாகவும், பாதுகாவலனாகவும் விளங்குகிறது.

தெருநாய்கள் உருவாவதற்கு நாமே காரணம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தெருநாய்களே இல்லை. அங்குள்ள மக்களின் சிறந்த அணுகுமுறையால் தெருநாய்கள் இல்லை.

ஐதராபாத்தில் பல குடிசைப்பகுதிகள் உள்ளன. அங்கும் தெரு நாய்கள் உள்ளன. அந்த நாய்கள் குடிசைப்பகுதி மக்களுக்கு பாதுகாவலனாக விளங்குகிறது. இதனால் குடிசைப்பகுதி மக்கள் தெருநாய்களை விரும்புகிறார்கள்.

தெரு நாய்கள் மீது அன்பு காட்ட வேண்டும். அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். குப்பையில் கிடக்கும் உணவுகளை தின்பதால் தான் நாய்களுக்கு வெறி பிடிக்கிறது. நாய்கள் வெறிபிடித்து கடிப்பதற்கு நாமே காரணம். இதனால் அவைகளை நமது குடும்பத்தில் ஒன்றாக வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

பெங்களூர் மாநகராட்சியில் சமீபத்தில் நாய் கடித்து 2 வயது குழந்தை இறந்ததை அறிந்தேன். இது வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது நமது கடமை. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்யும் வழிமுறை உள்ளது.

ஆனால் அதை செய்யாமல் நாய்களை மறைமுகமாக கொல்லும் கொடூரம் நடக்கிறது. தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி கருத்தடை செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால் அதன் மூலம் பெரிய அளவில் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இது திட்டத்தின் தோல்வியை காட்டுகிறது. இதில் உண்மை நிலவரம் வெளிவர வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்று கூறினார்.

அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : பண்ருட்டி ராமச்சந்திரன்


நில அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல், மோசடி ஆகிய புகார்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளிகளான என்.சுரேஷ்பாபு என்கிற பொட்டு சுரேஷ், ஜி.தளபதி, கிருஷ்ணபாண்டி, கொடி சந்திரசேகரன், கொடைக்கானல் நகராட்சி தலைவரான எஸ்.முகமது இப்ராகிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங் கோட்டை மற்றும் மதுரை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று இந்த இரு சிறைகளுக்கும் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "அவர்கள் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அப்பாவிகள் என்பதால் அவர்களை சந்தித்ததாக' கூறினார்.

இந்த சந்திப்பின் போது அழகிரியுடன் திமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

மு.க.அழகிரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர்,‘’சிறையில் உள்ள  தனது

கூட்டாளிகளை சந்தித்திருக்கும் அழகிரியின் செயல், அந்த கிரிமினல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் குறுக்கிடுவதற்கு சமமாகும். இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
எனவே நியாயமான மற்றும் சுதந்திரமான  விசாரணையை உறுதி செய்வதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அழகிரிடமிருந்து விளக்கம் கோரி பெற்று அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்

சித்ரவதை செய்கின்றனர் : சக்சேனா உருக்கம்!பொய் புகார் அளிக்கும் படி என்னை


சென்னை: மாஜிஸ்திரேட்டுக்கு, சக்சேனா எழுதியுள்ள கடிதத்தில், ‘கலாநிதி மாறன் மீது பொய் புகார் அளிக்கும் படி என்னை சித்ரவதை செய் கின்றனர். அதற்கு உடன்பட மறுப்பதால் என்னை போலீஸ் காவலில் எடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்’ என்று கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா மீது சென்னை போலீஸ் அடுத்தடுத்து பல  வழக்குகளை போட்டு வருகிறது. நீதிமன்றம் ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கினால் இன்னொரு வழக்கில் சிறையில் அடைக்க வசதியாக இந்த அனுகுமுறை கையாளப்படுகிறது. அவற்றில் ஒரு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சக்சேனா ஆஜர் செய்யப்பட்டார்.

சக்சேனாவை மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். சக்சேனா தரப்பில் கே.எஸ்.தினகரன், பாட்ஷா ஆகியோர் ஆஜராகினர். ‘திரைப்பட வினியோகம் மற்றும் விற்பனை என்பது முற்றிலும் வர்த்தக பரிவர்த்தனை. அதில் கிரிமினல் குற்றத்துக்கே இடமில்லை. செல்போனில் அசிங்கமாக பேசி மிரட்டியதாக புகார் கூறுபவர்கள் என்ன பேசினார் என்பதை தெரிவிக்கவில்லை. மிரட்டப்பட்டதாக கூறும் நிகழ்ச்சிக்கு பின்னர் பல மாதங்கள் கழித்து புகார் கொடுத்துள்ளனர். அதனால், சக்சேனாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என தினகரன் வாதிட்டார். எனினும், சக்சேனா, அய்யப்பன் ஆகியோரை 27மணி நேரம் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். முன்னதாக, போலீஸ் காவலில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும், உயிருக்கு பாதுகாப்பு கோரியும் மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ஒரு கடிதம் அளித்தார்.

நான் சொன்னதாக பத்திரிகைகள் மூலம் போலீசார் பொய் பிரசாரம்!

சக்சேனா எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகள்: நான் போலீசிடம் சொன்னதாக கதைகளை இட்டுக்கட்டி அதை பத்திரிகைகள் மூலம் வெளியிட வைக்கிறார்கள். நான் போலீசிடம் சொன்னதாக பத்திரிகைகளில் வெளியான அனைத்தும் பொய். அவ்வாறு நான் எதுவும் கூறவில்லை. போலீசார் அவ்வாறு பொய் பிரசாரம் செய்கிறார்கள். தலையணை, படுக்கை இல்லாமல் தரையில் படுக்க கட்டாயப்படுத்துகின்றனர். அதிகாலை 3 மணி வரை தூங்க விடாமல் தொல்லைபடுத்துகின்றனர். தூங்கியதும் 4 மணிக்கு எழுப்பி விடுகிறார்கள். போலீஸ் காவலில் நான் பெரும் சித்ரவதை அனுபவிக்கிறேன். ஒரு பொய்யான வழக்கில் நான் ஜாமீன் பெற்றால் உடனே புதிய பொய்யான வழக்கு போடுகின்றனர். போலீஸ் காவலுக்கு என்னை அனுப்பினால்
உயிருக்கு ஆபத்து நேரும் என அஞ்சுகிறேன். எனவே நீதிமன்றம் தலையிட்டு என்னை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிந்துபாத் கதை மாதிரி வழக்கு போட்டு கொண்டே இருக்கிறீர்கள் இதுதான் போலீசாருக்கு வேலையா?-போலீசாருக்கு மாஜிஸ்திரேட் கண்டனம்

வல்லக்கோட்டை படம் தொடர்பான புகாரில் சக்சேனாவை கைது செய்த போலீஸ், அதில் அய்யப்பனையும் கைது செய்ய நீதிமன்ற அனுமதி கேட்டனர். அதற்கான கோப்பை அரசு வக்கீலிடம் பெற்றுக் கொண்ட நீதிபதி, ‘சிந்துபாத் கதை மாதிரி வழக்கு போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இதுதான் போலீசாருக்கு வேலையா? நீதிமன்றத்துக்கு எவ்வளவு வேலைகள் இருக்கிறது, தெரியுமா?’ என்று போலீஸ் தரப்பை கண்டித்தார்.

நடிகர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி,ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை



சென்னை: சினிமா நடிகர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள்,இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.  ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார். ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

நில மோசடி: 2 அதிமுகவினருக்கு கல்தா- ஜெயலலிதா அதிரடி

நில மோசடி புகாரில் சிக்கிய 2 அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நில மோசடியில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், நில மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காகவே மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏராளமானவர்கள் நில மோசடி வழக்கில் கைதாகி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு புகாரில் சேலம் 24-வது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜ் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் சித்தானந்தம் தலைமறைவாகிவிட்டார், கனகராஜுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல் பட்ட காரணத்தினாலும் சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 24-வது வட்ட அதிமுக செயலாளர் சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திடீர் என்று மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டு்ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ப. மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் அரசு தலைமைக் கொறடா மோகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியில் 400 கிலோ மீனை பிடித்த நாகை மீனவர்

நாகப்பட்டிணம்: நாகை துறைமுகத்திற்கு மீன்பிடித்து திரும்பிய மீனவர் ஒருவர், 400 கிலோ எடையுடைய அரிய வகை மயில் மீன் உடன் கரையேறினார்.

நாகப்பட்டிணம், அக்கரைப்பேட்டையச் சேர்ந்த மாதழகன். மீனவரான அவரது விசைப் படகில், நேற்று 400 கிலோ எடையுடைய மயில் மீன் சிக்கியது. இந்த மீனை கிலோவிற்கு 90 ரூபாய் என்ற விலையில், நாகை வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.

இந்த மீன்னின் சிறப்பு என்ன?

அட்லாண்டிக் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், 75 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் இந்த மயில் மீன்கள் வசிக்கின்றன. "ஹண்ப் சண்ட்" என்று அழைக்கப்படும் இவ்வகை மீன்களுக்கு, மயில்களை போன்ற தோகைகள் இருக்கும்.

கடலில் வாழும் சிறிய வகை மீன்களை உட்கொண்டு வாழும் இவை, பல லட்சம் கி.மீ., தூரம் கடலில் பயணம் செய்து 16 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இவற்றின் அலகுகள் பறவைகளுக்கு உள்ளது போல் நீண்டு காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அடிக்கடி சிக்கும், இந்த மீன்கள் 100 கி.மீ., வேகத்தில் நீந்திச் செல்லும் திறன் படைத்தவை. இம்மீன்களில் புரோட்டின் மற்றும் "ஓமேகா-3' என்ற ஆசிட் சத்து அதிகம் உள்ளதால், கிலோ 70 ரூபாயில் இருந்து 100 ரூபாய் விலை நிர்ணயித்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.