செவ்வாய், 26 ஏப்ரல், 2011
இந்த ஊடகங்கள் பல ஒரு பக்கச் செய்தியை மட்டும் பிரசுரிக்கின்றனவே
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு ஒரு திறந்த மடல் !
ஓ ! நில்லுங்கள் ராஜாக்களே ! (சுஜாதாவுக்கு நன்றி)
இப்போது, யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் ‘உதயன்’ பத்திரிகையை யாழ் மாநகர எல்லைக்குள் தடைசெய்யும் அறிவிப்பைக் கண்டித்து, ‘உதயனுக்குத் தடையா ? ஊடக ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடி’ என ஒப்பாரிவைத்து, ஊடகங்களின் உரிமையுடன் மட்டும் நிற்காது, ஒருபடி மேலே போய், ஊடக நிறுவனங்களின் உரிமைகளையும் உயர்த்திப் பிடித்து நீங்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை எனது கவனத்திற்கு வந்து, இந்த முறை, இந்தக் கடித ஆசை கைகூடியிருக்கிறது. அத்துடன் எல்லோரும் எப்போதும் காதில் பூவுடனேயே அலைவதாக நீங்கள் கருதக்கூடாது என்பதும் இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு இன்னொரு காரணம். இதனைவிட, உதயனைத் தடைசெய்யும் முதல்வரின் முடிவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து இரண்டையும் முடிச்சுப்போட்டு ‘இது ஈபிடிபி காரற்ரை வேலை’ என புலி எதிர்ப்பு முத்திரை குத்தி இந்தக் கடிதத்தையும் குப்பையில் போட்டு எல்லோரையும் ஏமாற்ற முயலாதீர்கள். இனி, உங்களுடைய இஸ்டம்.
முதல்வரின் இந்த உதயன் பத்திரிகைத் தடை முடிவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், ‘உதயன்’ பத்திரிகையை முதல்வர் தடைசெய்ய எடுத்திருந்த முடிவில் எனக்கும் உடன்பாடே. ஒரு ஊடகம், அரசியல் ஆதாயம் ஒன்றிற்காக, ‘ஊடக உரிமை’ என்ற போர்வையில் ஒரு நிறுவனத்தின் சகல செயற்பாடுகளுக்கும் தொடர்ந்து தடைக்கல்லாக இருந்து உருப்படியாக எதனையும் செய்து முடிப்பதை திரும்பத் திரும்பத் தடுக்க முயலும்போது, அந்த ஊடகத்தை அந்த நிறுவனம் தடைசெய்வதில் தவறென்ன ?. இதை ஒரு ஜனநாயக வழிமுறை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும் ?. இதற்கு ‘ஈழத்தில்’கூட ஒரு முன் உதாரணம் உண்டே, உங்களுக்குத் தெரியாதா ?
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி பூரண அமைதி நிலவி வந்திருந்த ஜனவரி 2003ல், யாழ் பல்கலைக்கழக சகல வளாகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றுகூடி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடாக பல்கலைக் கழக வளாகத்திற்குள் உதயன் பத்திரிகையைத் தடைசெய்து தீர்மானம் நிறைவேற்றி பல்கலைக் கழகத்தையே இயங்காமல் செய்திருந்ததை உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது. அத்துடன் அவர்கள் இன்னுமொருபடி மேலேபோய் உதயன் ஊடக நிறுவனத் தலைவர் திருவாளர் சரவணபவானையும் பல்கலைக்கழக செனற்றிலிருந்து பதவி நீக்கம் செய்யவேண்டுமென பகிரங்க கோரிக்கை வைத்திருந்தார்களே ?. நினைவிருக்கிறதா ?. அப்போது இந்த ‘ஊடக ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடி’ பற்றி நீங்கள் ஒரு பத்திரிகை அறிக்கைகளும் விடவில்லையே ?. ஏன் ?. அப்போதெல்லாம் ‘கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தி நியாயத்தைக் கோருவதற்கு ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உரிமையுண்டு. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நியாயத்தை எழுத்து மூலமாக வெளிப்படுத்தி நிலைமையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்’ என ஏன் நீங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை ?. அல்லது ஏன் ‘சர்வாதிகார முடிவுகள் எடுக்கப்பட்டு ஊடக சுதந்திரத்திற்குக் குழிபறிக்கப்பட்டிருப்பதை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது’ எனக் காட்டமாக அறிக்கை வெளியிடவில்லை ?.
உதயன் பத்திரிகையை பல்கலைக்கழக வளாகத்திற்குள் தடைசெய்ய எடுத்த முடிவு ஊடக ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடி அல்ல என்றால், மாநகர முதல்வர் உதயனை தனது வளாகத்திற்குள் தடைசெய்ய எடுத்த முடிவு மட்டும் எப்படி ஜனநாயக விரோதமாகும் நண்பர்களே ?.
ஹோட்டல் கட்ட வெளிக்கிட்டால் தடுப்பீங்க றோட்டை அகலமாக்க போனா எதிர்ப்பீங்க தென்னிலங்கை வியாபாரிகளை வியாபாரம் செய்யவிட்டா திட்டுவீங்க உல்லாசப் பயணியள் வந்தா, அய்யோ எங்கட ஊர் எல்லாம் ஊத்தையாகிப் போகுது எண்ணுவீங்க பொது நூல்நிலையத்தைப் பார்வையிட வந்தா, ஜயோ எரிக்கப் போறாங்க எண்டு ஊரைக் கூட்டுவீங்க கட்டடத் தொகுதி கட்டப்போனா அய்யய்யோ ஊழல் என்று அலறுவீங்க சிங்கள மக்கள் வந்தால் ஜயோ எங்கட காணியளை எல்லாம் தூக்கிக்கொண்டு போகப் போறான் எண்டு கத்துவீங்க ஏன் இப்படியெல்லாம் எழுதுறீங்க என்று கேட்டா, ‘இது பிறெஸ் பிரீடம். எழுத்து மூலமா வெளிப்படுத்தி நிலைமையை தெளிவுபடுத்துங்க’ என்று வேட்டியை மடிச்சுக்கட்டி ரெண்டு விரலைக் காட்டுறீங்க. என்ன வெளையாடுறீங்களா ?.
ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘உதயன்’ பத்திரிகையைத் தடைசெய்ய முடிவெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடோ, அல்லது ‘உதயன்’ பத்திரிகையைத் தடை செய்யும் யாழ் முதல்வரின் மேற்சொன்ன முடிவோ ஒரு ஜனநாயகபூர்வமான எதிர்ப்புமுறையேயன்றி வேறல்ல. மற்றும்படி இதில் நீங்கள் குளறுவதுபோல கருத்துச் சுதந்திர மறுப்புமில்லை ஒரு கத்தரிக்காயுமில்லை.
ஆனால், உங்களுடைய இந்த ஊடகங்கள் பல ஒரு பக்கச் செய்தியை மட்டும் பிரசுரிக்கின்றனவே@ அரசியல் ஆதாயங்களுக்காக உண்மையைச்சொல்ல தயங்குகின்றனவே@ கவனம் கொள்ளவேண்டிய கருத்துக்கள் பலதுக்கு களம் அமைத்துக் கொடுக்க மறுக்கின்றனவே@ சில செய்திகள் பொது மக்களைச் சென்று சேரக்கூடாது என்று திட்டம்போட்டுச் செயற்படுகின்றனவே@ அதுதான் அப்பட்டமான கருத்துச் சுதந்திர மறுப்பு. உங்களுடைய ஊடக நிறுவனங்களுக்கு அந்தச் சுதந்திரமுமில்லை, அதற்குப் பெயர் ஊடக சுதந்திரமுமல்ல. அத்துடன், பொது மக்களைக் குசிப்படுத்த பொய்களையும், புனைவுகளையும் பிரசுரம் செய்கின்றனவே@ ஊடக உரிமையைப் பயன்படுத்தி இனவெறியையும், மத வெறியையும் ஊட்டிச் செய்திகளைத் திரித்துப் பிரசுரம் செய்கின்றனவே, இதுதான் ஊடக ஜனநாயகத்திற்கு விழும் பேரிடி. தயவுசெய்து இவற்றை உங்கள் ஊடக நிறுவன உறுப்பினர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி வையுங்கள்.
உங்களுடைய நிறுவக உறுப்பினர்கள் கடைப்பிடிக்கும் ஊடக தர்மங்கள்பற்றி அவர்களின் ஓராயிரம் செய்திகளை என்னால் உதாரணம் காட்டி எழுத முடியும். இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன ?. சரி, இவைபற்றியெல்லாம் உங்களுடைய ஊடகங்களுக்குத்தான் அக்கறையில்லை, ஆனால் உங்களுக்கு உண்டா ?.
ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் ஊடக நெறிமுறைகளை மீறிய செயற்பாட்டை வெளிப்படுத்தி நெறிப்படுத்துவதும் ஊடகவியலாளர் ஒன்றியமொன்றின் நோக்கங்களுள் ஒன்றாக அமையவேண்டியது அவசியம்;. ஆனால் பணம் பண்ணவும், பாராளுமன்ற கதிரைகளைப் பெறவும் பத்திரிகைகளை நடாத்துகின்ற ஊடக நிறுவனங்களது உரிமைகளையும் உயர்த்திப்பிடிக்க முனையும் உங்களால் இது எப்படி முடியும் ?. இவைபற்றியெல்லாம் இப்போதும் உங்களுக்கு இன்னொரு கருத்து இருக்குமானால், பத்திரிகை ஒன்றில் பகிரங்கப்படுத்துங்கள்.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களையும், பத்திரிகைகளையும் மட்டும் உள்ளடக்கும் ஒரு உரிமையென்று பலர் எண்ணுவது எனக்குத் தெரியும். நீங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பணம் பண்ணுவதற்காக பத்திரிகைகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்களுக்கும் இந்தப் ‘பத்திரிகைச் சுதந்திரத்தின்’ பாதுகாப்பு உண்டு என்று பாடம் படிப்பிக்க வருகிறீர்கள். இது தவறு என்பதை முதலில் நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பத்திரிகைச் சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் சம்பந்தமானது மட்டுமன்றி பத்திரிகைகளின் பாவனையாளர்களான சகல வாசகர்களையும், இதர பொது மக்களையும் மற்றும் பொது நிறுவனங்களையும் உள்ளடக்கியதொன்று என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள். அத்துடன், இதர சுதந்திரங்கள்போல இந்தப் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்கே ஊடகவியலாளர்களுக்கு ஒரு ஒழுக்கக் கோவை அவசியமாகிறது என்பது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது. பொதுவாக உலகளாவிய ஊடகவியலாளர்களின் ஒழுக்கக் கோவைகள் அனைத்துமே, உண்மைச் செய்திகளைப் பிரசுரித்தல், செய்திகளைச் சரிபார்த்துப் பிரசுரித்தல், தெரிவிக்கப்படும் செய்திகளின் இலக்குகளில் தெளிவாக இருத்தல், பக்கச் சார்பின்றி செய்திகளைப் பிரசுரித்தல், நேர்மையாகச் செய்திகளைப் பிரசுரித்தல் மற்றும் பொதுமக்களுக்குப் பொறுப்பாகச் செய்திகளைப் பிரசுரித்தல் ஆகிய விடயங்களில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. ஆனால் உங்களுடைய ஊடக நிறுவன உறுப்பினர்கள் பலரிடம் இந்த ஒழுக்கம் இல்லையென்பதுடன், உங்களுடைய நிறுவனம் இதுவரையில் இதைப்பற்றி அலட்டிக் கொண்டதே இல்லையென்பதும் அப்பட்டமானதொரு உண்மை.
சில வருடங்களுக்கு முன்னர் உங்களுடைய நிறுவன உறுப்பினர் ஒருவரிடம் உங்களுடைய நிறுவனத்தின் ஒழுக்கக்கோவையின் பிரதியொன்றைப் பார்க்க முடியுமா எனக் கேட்டிருந்தபோது, “ஒழுக்கக் கோவையா ? அப்படியெண்டால் என்ன ?” என அவர் அப்பாவித்தனமாகக் கேட்டது இன்னும் என் நினைவிலிருக்கிறது. இப்போதாவது உங்களுடைய நிறுவன உறுப்பினர்களுக்கு ஒரு ஒழுக்கக் கோவை இருக்குமானால் தயவுசெய்து அதன் பிரதியொன்றை பத்திரிகைகளில் பிரசுரியுங்கள்.
உங்களுடைய உறுப்பினர்களுக்கு ஒரு ஒழுக்கக்கோவை இருக்கிறதோ இல்லையோ, உங்களுடைய நிறுவனத்திற்கு நோக்கங்கள் உண்டென்பது எனக்குத் தெரியும். உங்களுடைய முன்னாள் தலைவர் திருவாளர் துரைரட்ணம் அவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையில் உங்களுடைய நிறுவனத்தின் நோக்கங்களென நாலு விடயங்களைப் பட்டியலிட்டு, முதலாவதாக ‘பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்’ எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பத்திரிகைச் சுதந்திரம் என்றால் என்ன, அது பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமென்ன என்பதுபற்றியெல்லாம் உங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என உங்களுடைய அறிக்கைகள் சத்தியம் செய்து சொல்லும்போது, இன்னொருவர் என்ன செய்ய முடியும் ?.
ஒரு ஜனநாயகச் செயன்முறைக்கு பத்திரிகைச் சுதந்திரம் மிகவும் அவசியம் என்ற வகையிலேயே பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்று பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஒரு நீதியான ஜனநாயக அரசொன்று அமைவதற்கு பொது மக்கள் விளிப்படைதல் ஒரு முன்னோடிச் செயற்பாடாக அமைதல் வேண்டும். இங்கு ஒரு ஊடகவியலாளனின் கடமை ஒரு சமூகத்தைச் சுற்றிச்சூழ நிகழும் சகல நிகழ்வுகளையும் விடயங்களையும்பற்றி ஒரு உண்மையான, பூரணமான செய்திகளையும் அறிக்கைகளையும் அளிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு ஊடகவியலாளனும் நேர்மையாகவும், தூரநோக்குடனும் செய்திகளை வெளியிடும் ஒரு பொது சன ஊழியனாவான் என்றால், உங்களது நிறுவன உறுப்பினர்கள் எத்தனைபேர் இப்படி உள்ளனர் ?
சகல விடங்களையும் சரியாகத் தெரிந்துவைத்துள்ள, சகல தேசிய சர்வதேசிய விடயங்களைப்பற்றிய தெளிவும் விளக்கமும் உள்ள ஒரு சமூகமே ஒரு ஜனநாயக அமைப்பிற்கு அத்திவாரமாக அமையும். இதைத் தருவதற்குத்தான் பத்திரிகைச் சுதந்திரம் தேவையேயன்றி, வெறும் பிரச்சாரங்களை செய்திகளாகத் தருவதற்கும், பொழுது போக்குக்குத் தீனி போடுவதற்கும், அல்லது, உங்கள் ஊடக நிறுவன உறுப்பினர்கள் நினைக்கின்ற ‘இதர காரணிகளுக்கும்’ அல்ல.
ஊடக நிறுவன பெருச்சாளிகளின் அரசியல் அபிலாசைகளுக்குப் பலியாகி, ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு பக்கச் செய்திகளைப் பிரசுரித்து, விற்பனைக்காக கற்பனைக்கதைகளை கட்டுவித்து, அரசியல் ஆதாயங்களுக்காக இளைஞர்களை உருவேற்றி, இன்னொரு தலைமுறையையும் பலிகொடுக்க உங்களுடைய ஊடக நிறுவன உறுப்பினர்களை தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கடிதத்தை இயலுமானால் படியுங்கள். அதைவிட, இதற்குப் பதில் தர உங்களைக் கோருவது கொஞ்சம் ‘ஓவர்’ என்பது எனக்குத் தெரியும். முடியுமானால் தாருங்கள். இது ஆக்க பூர்வமான ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டுமென்பதே எனது அவா.
இல்லையென்று அடம் பிடிப்பீர்களானால் நான் என்ன செய்ய முடியும் ?. இப்போதைக்கு, மனச்சாட்சி இருக்குமானால் ஒரு முறை தட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே கேட்டு வைக்கிறேன்.
வணக்கம்.
-ஒரு ஊடகவியலாளன்
திங்கள், 25 ஏப்ரல், 2011
Bollywood சாய்பாபா மறைவால் சோகத்தில் மூழ்கிய பாலிவுட்
மும்பை: சத்ய சாய்பாபா மறைவையொட்டி பாலிவுட் நட்சத்திரங்கள், இயக்குனர்கள், டிசைனர்கள் என அனைவருமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சத்ய சாய்பாபா உடல் நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினர்.
சாய்பாபா பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர்கள் மாதவனும், ராணா டக்குபட்டியும் தங்களது டுவிட்டரில் கூறியுள்ளனர்.
பாபா தனது பூவுடலை துறந்துவிட்டார் என்று தற்போதுதான் கேள்விப்பட்டேன். அவரது பக்தர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று இயக்குனர் ராம் கேபால் வர்மா கூறியுள்ளார்.
அவர் போதனைகள் வாழட்டும். என்றும் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும் என்று டிசைனர் வர்ஜா பஜாஜ் தெரிவித்துள்ளார்.
டிசைனர் சோனால் சவான் கூறுகையில், "நான் சாய்பாபாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று விரதம் இருக்கிறேன். நான் சாய்பாபாவின் தீவிர பக்தை. அவர் இறந்துவிட்டார் என்றே என்னால் நம்பமுடியவில்லை. இன்று உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சினின் பிறந்தநாள். ஆனால் இதே நாளில் உலகின் சிறந்த மனிதரான சாய்பாபா மறைந்துவிட்டார். அவரது மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்", என்றார்.
நடிகர் விவேக் ஓபராய் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
"சத்ய சாய்பாபா இன்று காலை தனது மனித உடலைவிட்டுச் சென்றுவிட்டார். உடல் என்பது வெறும் வாகனம்தான். அவரது ஆத்மா தொடர்ந்து நமக்கு வழிகாட்டும்", என்று கூறியுள்ளார்.
சாய்பாபாவின் உடல் புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் மக்கள் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்படுகிறது.

English summary
Bollywood mourns the death of Sathya Sai Baba who passed way today at 7.40 am. Bollywood stars, directors and designers post condolence messages in their tweeter accounts.
சென்னையின் தாகம் தீர்த்த சத்யசாய் பாபா
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கவும், ஆந்திராவின் வறட்சி மாவட்டங்களில் விவசாயத்தை பெருக்கும் வகையில் தெலுங்கு கங்கை திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, கிருஷ்ணா நதி நீரை கால்வாய் மூலம் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்ல ஆந்திர அரசு முடிவு செய்தது.கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டின் ஒரு பகுதியில் உள்ள போத்திரெட்டுபாடு என்ற இடமும், கடப்பா அருகில் உள்ள சோமசீலா அணையும் பிரமாண்ட கால்வாய் மூலம் இணைக்கப் பட்டன. ஆந்திர மாநிலத்துடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., என்ற அளவில் கிருஷ்ணா நீர் பெற முடிவானது.இதற்காக, சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு வரும் கிருஷ்ணா நீரை, அங்கிருந்து 164 கி.மீ., தூரத்தில் உள்ள ஊத்துக் கோட்டையில் உள்ள "ஜீரோ பாயின்ட்' வரை கால்வாய் அமைத்து கொண்டு வந்து, பின், 17 கி.மீ., தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
கண்டலேறு அணையில் இருந்து ஊத்துக் கோட்டை வரை அமைக்கப்பட்ட கால்வாயின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப் பட்ட கிருஷ்ணா நீரில் பல லட்சம் லிட்டர் வீணானது.கிருஷ்ணா நீர் வரும் கால்வாய் பராமரிக்கப் பட்டால் மட்டுமே சென்னைக்கு சீரான குடிநீர் பெற முடியும் என்ற நிலையில், பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் உதவியால், ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை மூலம் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. கண்டலேறு முதல் ஊத்துக்கோட்டை வரையிலான கால்வாயை 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.மண் அரிப்பு காரணமாக நீர் ஒழுக்கு ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் கான்கிரீட் பக்கவாட்டு சுவர்களும், அடித்தளமும் அமைக்கப்பட்டது. பாறைகள் உள்ள பகுதிகள் மட்டும் விடப்பட்டன.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பிரமாண்டமான இப்பணியை, இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை செய்து முடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு இறுதி முதல் புதுப்பிக்கப்பட்ட சத்யசாய் கால்வாய் மூலம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.கால்வாய் புனரமைக்காததற்கு முன், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் 10 நாட்கள் பயணம் செய்து ஊத்துக்கோட்டை "ஜீரோ பாயின்ட்'டை வந்தடையும். மேலும், நீர் ஒழுக்கு காரணமாக ஆயிரம் கன அடி என்ற அளவில் திறந்துவிடப்படும் நீர், ஊத்துக் கோட்டைக்கு வரும் போது 450 முதல் 500 கன அடியாக குறைந்திருக்கும். ஆனால், சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பின், திறந்துவிடப் பட்ட ஐந்து நாட்களில் கிருஷ்ணா நீர் ஊத்துக்கோட்டை வந்துவிடுகிறது. மேலும், ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டால், 900 கன அடி நீர் வந்து சேர்கிறது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் இந்த பிரமாண்ட திட்டத்தால், இன்றைக்கு சென்னை நகர மக்கள் தங்கு தடையின்றி குடிநீர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணா நதி கால்வாய் புனரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டமாக "ஜீரோ பாயின்ட்'டான ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரையிலான 17 கி.மீ., தூர கால்வாயும் 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர், தங்கு தடையின்றி அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஏரி வந்தடைகிறது. ஸ்ரீசத்யசாய் கால்வாயின் பயனாக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தரும் கிருஷ்ணா நீர் இன்றைக்கு சிந்தாமல், சிதறாமல் சென்னை வந்து சேர்கிறது.சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.
சோலை வனமானபாலைவனம் :இருபது ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் வறட்சியால் பாதித்த மாவட்டங் களில் உள்ள தொலைதூர கிராமங்களில், முக்கிய குடிநீர் ஆதாரமாக கிணறுகளே இருந்தன. அந்தக் கிணறுகளில் கிடைத்த தண்ணீரும் சுத்தமான குடிநீராக இல்லாதது மட்டுமின்றி, அதிக அளவில் புளோரைடு கலந்ததாக இருந்தது. இதனால், எலும்புகள் தொடர்பான பல குறைபாடுகள் மக்களை பாதித்தன.ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்கள் பல, கோதாவரி நதி ஓடும் பகுதியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் இருந்தும் கடும் குடிநீர் பற்றாக்குறையைச் சந்தித்து வந்தன. இதேபோல் தான் மேடக் மற்றும் மெகபூப் நகர் மாவட்டங்களில் உள்ள 320 கிராமங்களும் குடிநீர் பற்றாக்குறையைச் சந்தித்து வந்தன. இந்த மாவட்ட மக்களின், அதாவது ராயலசீமா பிராந்திய மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் தான் ஸ்ரீ சத்ய சாய் குடிதண்ணீர் திட்டம் துவக்கப்பட்டது.
ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை, முதல்கட்டமாக அனந்தப்பூர் மாவட்டத்தில் 731 கிராமங்கள் பயனடையும் வகையிலான குடி தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றியது. 18 மாதங்களில் ரூ.300 கோடி செலவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பல நகரங்களும் இதனால் பயனடைகின்றன.அனந்தப்பூர் மாவட்ட குடி தண்ணீர் திட்டத்தை தொடர்ந்து, கோதாவரி, மேடக் மற்றும் மெகபூர் நகர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின், சென்னைக்கு குடி தண்ணீர் தரும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை, நான்கு பெரிய குடி தண்ணீர் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 5,020 கி.மீ., தூரத்திற்கு பைப் லைன்களை அமைத் துள்ளது. இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள தூரமான 3,496 கி.மீட்டரை விட அதிகம்.இதுமட்டுமின்றி, பல கிராமங்களில் பெரிய அளவில் டேங்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றையும் அமைத்துள்ளது. 1994 முதல் 2006ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்ட இந்த குடி தண்ணீர் திட்டங்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சுத்தமான குடி தண்ணீரைப் பெற்று வருகின்றனர். இது காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு சமமானது.சுத்தமான குடி தண்ணீர் கிடைக்கச் செய்வது ஆடம்பரமான விஷயமல்ல, தர்மமும் அல்ல. உலக சமூகத்திற்கு செய்யும் கடமை என, நினைத்து இந்த குடி தண்ணீர் திட்டங்களை ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிறைவேற்றியுள்ளது.
சிறப்பான மருத்துவ சேவையில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவமனைகள் :ஸ்ரீசத்யசாய் பாபாவுக்கு 20 வயது இருக்கும் போது, அவரின் தாயார் ஈஸ்வரம்மா, உள்ளூர் கிராம மக்களின் நிலைமை குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். புறக்கணிக்கப்பட்ட, தொலை தூர கிராமமான புட்டபர்த்தியில் வசிக்கும் மக்கள், ஏழைகளாக இருப்பதோடு, எளிதில் நோய் வாய்ப்படுகின்றனர் என்றும் கூறினார். ""எப்போதும் மற்றவர்களுக்கு உதவு, யாரையும் ஒரு போதும் புண்படுத்தாதே' என்ற உறுதி மொழியை தொடர்ந்து பின்பற்றி வந்த ஸ்ரீ சாய்பாபா, "தன்னலமின்றி, பிறர் நலனுக்காக வாழ வேண்டும்' என்ற தனது தாயாரின் அழைப்பையும் மறுக்காமல் ஏற்றார்.கடந்த 1954ம் ஆண்டில், ஸ்ரீசத்ய சாய் பொது மருத்துவமனையை துவக்கினார். இப்படித் துவங்கிய சத்யசாய் உடல் நல பராமரிப்பு முறையானது, இன்று பொது மருத்துவமனைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மொபைல் மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் என, பெரிய நெட்வொர்க்காக விரிவடைந்தது. மதம், பொருளாதாரம் அல்லது சமூக பின்னணி என்ற பாகுபாடு காட்டப்படாமல் இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், பல நவீன வசதிகளும் இந்த மருத்துவமனைகளில் உள்ளன.மருத்துவ ஆலோசனை, ஸ்கேன்கள், எக்ஸ்ரேக்கள், சிகிச்சை மற்றும் மருந்துகள் என, அனைத்துமே இந்த மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. யாரும் சிகிச்சைக்காக பணம் செலுத்த வேண்டியதில்லை. சாய் மருத்துவமனைகளில் இறப்பு நிகழ்வது, உலக அளவில் மிகமிகக் குறைவே.ஸ்ரீ சத்ய சாய் அமைப்பு மூலம் பல பொது மருத்துவமனைகள் நடத்தப்படுவதோடு, அவ்வப்போது மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. 1990 நவம்பர் 23ம் தேதி, சத்யசாயியின் 65வது பிறந்த தினத்தன்று, நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்று புட்டபர்த்தியில் ஒரு ஆண்டிற்குள் அமைக்கப்படும் என, அறிவித்தார். அவரின் வார்த்தையை உண்மையாக்கும் வகையில், ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் மெடிக்கல் சயின்சஸ் என்ற எஸ்.எஸ்.எஸ். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 1991ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கப்பட்டது.
இதன்பின், பத்து ஆண்டுகள் கழித்து, 2001 ஜனவரியில் பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டில், இதேபோன்ற மற்றொரு மருத்துவமனை துவக்கப்பட்டது. "உண்மையான உடல் நல பராமரிப்புக்கு அன்பும், தன்னலமற்ற சேவையும் அவசியம்' என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில், இந்த மருத்துவமனை துவக்கப்பட்டது.நவீன வசதிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுடன் கூடிய இரண்டு பொது மருத்துவமனைகள் புட்டபர்த்தி மற்றும் ஒயிட்பீல்டில் தொடர்ந்து செயல்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மருத்துவ சேவைகள் அளித்து வருகின்றன. அத்துடன் மொபைல் வேன்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் மூலமும் கிராமப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.சத்யசாய் உடல் நல பராமரிப்பு திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சேவைகளால், சாய் மருத்துவமனைகளை எல்லாம் நோய் தீர்க்கும் கோவிலாக நோயாளிகளால் பார்க்கப்படுகின்றன.
ஆந்திராவை சேர்ந்த சுனில் வர்மா என்ற மாணவர் ஒரு காலை இழக்கும் நிலையில் இருந்தார். எஸ்.எஸ்.எஸ். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப் பட்ட ஆபரேஷனால், அவர் தற்போது நன்றாக நடக்கும் நிலையில் உள்ளார். "நான் மீண்டும் நடப்பேன் என, நினைக்கவே இல்லை. ஆனால், இப்போது என் இரண்டு கால்களால் நடக்கிறேன்' என, வர்மா கூறியுள்ளார்.
வர்மாவின் தாயார் கூறுகையில், ""என் மகனுக்கு சிகிச்சை அளித்த சாய் மருத்துவமனையில் நான் ஒரு பைசா கூட செலவிடவில்லை. நம்பிக்கை இழந்த எங்களுக்கு தைரியம் கொடுத்ததோடு, என் மகனுக்கும் டாக்டர்கள் புது வாழ்வு அளித்துள்ளனர். அதற்கு சத்யசாய்பாபாவும், அவரின் சிறப்பான சேவையுமே காரணம்,'' என, தெரிவித்துள்ளார்.ஸ்ரீசத்யசாய் உடல் நல பராமரிப்பு முறையானது இன்று, பல நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக ஆதிக்கம் படைத்தவர்களால் கூட, அனைத்து மக்களுக்கும் இலவசமான மருத்துவ சேவைகளை வழங்குவது என்பது இயலாத காரியம். அதை சத்ய சாய் மருத்துவமனைகள் செய்து வருகின்றன. இந்த மருத்துவமனைகள் பல பிரிவினரைக் கொண்ட இந்த பன்முக சமுதாயத்தில், ஒரு மாதிரி மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன.

81 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்ட படகு கொக்கோஸ் தீவில் வழிமறிக்கப்பட்டது!
அகதி அந்தஸ்து கோரும் 81 பேரைக்கொண்ட படகொன்று அவுஸ்திரேலிய கடல் எல்லையை நேற்று வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கோஸ் தீவை இவர்கள் அடைந்துள்ளதாக “ஸ்கை நியூஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
படகு செலுத்துநர்கள் மற்றும் 81 பயணிகளைக் கொண்ட குழுவில் அதிகமானவர்கள் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் விசாரணைகளின் பொருட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சட்டவிரோத முறையில் அகதி அந்தஸ்து கோரும் நோக்கில் வருபவர்களைத் தடுத்து வைக்கும் இடமாகக் கருதப்படும் கொக்கோஸ் தீவில் 600 க்கும் அதிகமான அகதிகள் தங்கியுள்ளனர். கொக்கோஸ் தீவின் நிர்வாகிகளுக்கு சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினை பெரும் இடையூறுகளை தோற்றுவித்துள்ளமை தெரிந்ததே. கடந்த 48 மணித்தியாலங்களில் அந்தப் பிரதேசத்தில் இரண்டு படகுகள் காணப்பட்டன. அதில் மற்றொன்று கிறிஸ்மஸ் தீவின் வடமேற்கில் நேற்றுக் காலை வழிமறிக்கப்பட்டது.
உள்ளுர் அதிகாரிகளால் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் சமஷ்டிப் பொலிஸார் கொக்கோஸ் தீவில் அந்தப் படகை வழிமறித்ததாக உள்விவகார அமைச்சர் பிறெண்டன் ஓ கொன்னர் கூறியுள்ளார். புகலிடம் கோருவோர் கொக்கோஸ் தீவுக்கு வந்து சேர்ந்துள்ளமை இதுவே முதல் முறையாகும் என்று எதிர்தரப்பின் எல்லைப் பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய தீவான கொக்கோஸ் தீவில் உள்ள அதிகாரிகளால் சட்டவிரோத குடியேறிகளை சமாளிக்க முடியுமா என்பது குறித்து தாம் கவலை கொண்டுள்ளோம். அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபடுவோர் புது வழிமுறையொன்றினை ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது என்றார்கள்.

காணி, பிறப்பு, இறப்பு பதிவுகள் முல்லை மாவட்டத்தில் முற்றாக அழிவு: உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
சுனாமி, யுத்தம் என்பனவற்றின் விளைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி, பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் பெருமளவில் அழிந்தும், தொலைந்தும் போய்விட்டன. ஆகையால் அவற்றை உரியவர்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், முல்லைத்தீவு புதிய நீதிமன்றத்தின் நிர்மாணப் பணிகளை நேரில் கண்காணிப்பதற்காக வியாழக்கிழமை (21.04.2011) மாலை அங்கு சென்றிருந்தார். முன்னதாக அன்று முற்பகல் மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அவர் விஜயம் செய்ததோடு நீதிபதி, சட்டத்தரணிகள் மத்தியில் உரையாற்றினார்.
முல்லைத்தீவுக்கு முதல் முறையாக விஜயம் செய்த நீதியமைச்சர் அங்குள்ள மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் நிலைமைகளை ஆராய்ந்தார்.
அங்கு கருத்துரைக்கும் போது அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது :-
கொடூர யுத்தத்தின் இறுதிக் கட்டம் இங்குதான் நடந்து முடிந்தது. சுனாமிப் பேரலை அனர்த்தமும் இங்கு நடந்திருக்கின்றது. அவற்றின் விளைவாக இங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதனால் அவர்கள் தமது காணி உறுதிகளையும், பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களையும், திருமணப் பதிவுச் சான்றிதழ்களையும் ஏனைய முக்கிய ஆவணங்களையும் இழந்துவிட்டார்கள். அதன் காரணமாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு அவ்வாறான ஆவணங்களை அவற்றிற்கு உரிய மக்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடமாடும் சேவையொன்றை முல்லைத்தீவில் நடாத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அழிந்துபோன அல்லது தொலைந்து போன காணி உறுதிகள், பேர்மிட் என்பனவவற்றைப் பெற காணிப் பதிவகம், நில அளவைத் திணைக்களம் என்பன முறையாக செயல்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக நடமாடும் சேவையொன்றின் அவசியம் உள்ளது.
வன்னிப் பெருநிலப் பரப்பில் ஏனைய பிரதேசங்களின் குறுக்கு வெட்டு முகத் தோற்றத்தை முல்லைத்தீவில் காணலாம்.
இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இருபதாயிரம் வீடுகளுக்கான தேவையிருந்த போதிலும் இரண்டாயிரத்து ஐநூறு வீடுகளுக்கான பெயர்ப் பட்டியல் மட்டுமே உள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். பீ. பாரூக், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பத்திநாதன், பிரதேச செயலாளர் தயானந்தன் ஆகியோரும் மாவட்டச் செயலகத்தில் நடந்த இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
நீதியமைச்சர் ஹக்கீம் நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று, வட்ராப்பளை, ஹிஜ்ராபுரம் ஆகிய ஊருகளுக்கும் விஜயம் செய்து மீளக்குடியேறிய மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். நீதியமைச்சரின் முல்லைத்தீவு இணைப்பாளர் எம். எச். எம். நஜாத் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
Sai Baba மன்மோகன் சிங், சோனியா பிரதீபா பாட்டீல் இரங்கல்
டெல்லி: கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட ஆன்மீக குரு சாய்பாபா இயற்கை எய்தியதையொட்டி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்
, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது இரங்கல் செய்தியில், "உலகின் மிகச் சிறந்த ஆன்மீகத் தலைவர், சமூக சேவகரை இழந்தது இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு," என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் கடிதத்தில், "மறைந்த சத்ய சாய்பாபாவின் ஆன்மீக அறிவை ஆழமாக புரிந்துகொண்டவன் நான். சத்ய சாய் பாபா, ஒரு உலகில் இருக்கும் பல கோடி மக்களின் ஆன்மீக தலைவர்.
ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர். அவருடைய போதனைகள் உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்றவற்றை வலியுறுத்துவதாக இருந்தன.
பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்வி, மற்றும் பொது சுகாதாரத்திற்கும் பல்வேறூ நிறுவனங்கள் மூலமு பல உதவிகளை செய்து வந்தார்.
ஒவ்வொரு மனிதருடைய கடமையானது அனைவரின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை நிறைவு செய்வதாகும் என்று நம்பினார். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி...
சாய்பாபா மறைவுக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், தேசம் ஒரு சிறந்த ஆன்மீக குருவை இழந்துவிட்டதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சாய்பாபா மறைவுக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் எல் கே அத்வானி. தனது இரங்கல் செய்தியில், "சாய்பாபாவைப் போன்ற சிறந்த ஆன்மீகத் தலைவர்கள் இந்தியாவில் மிகச் சிலரே இருந்தனர். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதுதான் எனக்கு பாபாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அவரை பல முறை சந்தித்தேன். பாபா ஒரு மிகச் சிறந்த குரு மட்டுமல்ல, சமூக சேவகரும் கூட. அவரது மறைவு இந்தியாவை இருளில் மூழ்கடித்துள்ளது. அவரது இறுதி நிகழ்வில் நான் பங்கேற்பேன்," என்று கூறியுள்ளார்.
நரேந்திரமோடி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
கூறுகையில், "உலகில் உள்ள ஆன்மீகத் தலைவர்களில் சாய்பாபா தன்னிகரற்றவர். மனித உலகத்துக்கு மருத்துவ சேவைகளையும், ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் கல்வி வழங்கியும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர் ஒரு சிறந்த மனிதர். தனிப்பட்ட முறையில் அவரது அன்பு மற்றும் தெய்வகிருபையால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். அவரது பூத உடலுக்கு என்னுடைய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி:
அன்பையும், மனித நேயத்தையும் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்த புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
எண்ணற்ற இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும், இன்னபிற மக்கள் நலப்பணியாற்றும் அமைப்புகளையும் உருவாக்கி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ஏழை, எளியோர்க்கும் அரும் பணியாற்றியவர் புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா.
அவருடைய மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு. புட்டபர்த்தி ஸ்ரீசாய் பாபாவை இழந்து வாடும் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:
சாய்பாபா தனக்கென மட்டும் வாழாமல் இந்த நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். அவர் பெயரால் இயங்கும் அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகமே பயன்பெறும் அளவிற்கு அவர் சேவை செய்துள்ளார்.
சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீருக்கு பெரும் செலவில் சாய்பாபா கால்வாய் அமைத்து தந்தார் என்பதை தமிழ்நாடு என்றும் மறக்காது. அந்த அளவுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் அவர் ஆர்வம் கொண்டவர்.
இவரது இழப்பு நமக்கும், நம்முடைய நாட்டிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது மறைவால் துயருரும் அவர் மீது பற்று கொண்டோர் அனைவரும் ஆறுதல் அடையவும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன்:
ஆன்மீக துறையில் இருந்தாலும் ஏழை எளிய மக்களின் நலன் குறித்து மிக அதிக அக்கறைகாட்டி மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் பெரிய அளவில் நிதி
உதவி செய்துள்ளவர் சாய்பாபா.
அவரது மறைவால் துயரப்படும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அவரது நிர்வாகிகளுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடுமுழுவதிலுமிருந்து மேலும் பல தலைவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் சாய்பாபா மறைவுக்கு அஞ்சலியும் இரங்கலும் செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது இரங்கல் செய்தியில், "உலகின் மிகச் சிறந்த ஆன்மீகத் தலைவர், சமூக சேவகரை இழந்தது இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு," என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் கடிதத்தில், "மறைந்த சத்ய சாய்பாபாவின் ஆன்மீக அறிவை ஆழமாக புரிந்துகொண்டவன் நான். சத்ய சாய் பாபா, ஒரு உலகில் இருக்கும் பல கோடி மக்களின் ஆன்மீக தலைவர்.
ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர். அவருடைய போதனைகள் உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்றவற்றை வலியுறுத்துவதாக இருந்தன.
பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்வி, மற்றும் பொது சுகாதாரத்திற்கும் பல்வேறூ நிறுவனங்கள் மூலமு பல உதவிகளை செய்து வந்தார்.
ஒவ்வொரு மனிதருடைய கடமையானது அனைவரின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை நிறைவு செய்வதாகும் என்று நம்பினார். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி...
சாய்பாபா மறைவுக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், தேசம் ஒரு சிறந்த ஆன்மீக குருவை இழந்துவிட்டதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சாய்பாபா மறைவுக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் எல் கே அத்வானி. தனது இரங்கல் செய்தியில், "சாய்பாபாவைப் போன்ற சிறந்த ஆன்மீகத் தலைவர்கள் இந்தியாவில் மிகச் சிலரே இருந்தனர். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதுதான் எனக்கு பாபாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அவரை பல முறை சந்தித்தேன். பாபா ஒரு மிகச் சிறந்த குரு மட்டுமல்ல, சமூக சேவகரும் கூட. அவரது மறைவு இந்தியாவை இருளில் மூழ்கடித்துள்ளது. அவரது இறுதி நிகழ்வில் நான் பங்கேற்பேன்," என்று கூறியுள்ளார்.
நரேந்திரமோடி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி:
அன்பையும், மனித நேயத்தையும் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்த புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
எண்ணற்ற இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும், இன்னபிற மக்கள் நலப்பணியாற்றும் அமைப்புகளையும் உருவாக்கி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ஏழை, எளியோர்க்கும் அரும் பணியாற்றியவர் புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா.
அவருடைய மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு. புட்டபர்த்தி ஸ்ரீசாய் பாபாவை இழந்து வாடும் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:
சாய்பாபா தனக்கென மட்டும் வாழாமல் இந்த நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். அவர் பெயரால் இயங்கும் அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகமே பயன்பெறும் அளவிற்கு அவர் சேவை செய்துள்ளார்.
சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீருக்கு பெரும் செலவில் சாய்பாபா கால்வாய் அமைத்து தந்தார் என்பதை தமிழ்நாடு என்றும் மறக்காது. அந்த அளவுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் அவர் ஆர்வம் கொண்டவர்.
இவரது இழப்பு நமக்கும், நம்முடைய நாட்டிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது மறைவால் துயருரும் அவர் மீது பற்று கொண்டோர் அனைவரும் ஆறுதல் அடையவும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன்:
ஆன்மீக துறையில் இருந்தாலும் ஏழை எளிய மக்களின் நலன் குறித்து மிக அதிக அக்கறைகாட்டி மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் பெரிய அளவில் நிதி
அவரது மறைவால் துயரப்படும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அவரது நிர்வாகிகளுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடுமுழுவதிலுமிருந்து மேலும் பல தலைவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் சாய்பாபா மறைவுக்கு அஞ்சலியும் இரங்கலும் செலுத்தி வருகின்றனர்.
English summary
Prime Minister Manmohan Singh, Congress President Sonia Gandhi and Senior Bharatiya Janata Party leader LK Advani joined millions of people in offering their condolences on the passing away of Sri Sathya Sai Baba. Gujarat Chief Minister Narendra Modi, All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) chief J Jayalalitha, Former Union home minister and Punjab Governor Shivraj Patil have paid their homage to the great spiritual leader Sai Baba.
தமிழக மக்கள் மீது அன்பு கொண்டவர் சாய்பாபா: முதல்வர் கருணாநிதி இரங்கல்
சென்னை: தமிழக மக்கள் மீது அன்பு கொண்டவர் சத்யசாயி பாபா; சென்னை மக்களின் தாகம் தணிக்க தாமாக முன்வந்து ரூ 200 கோடி கொடுத்தவர், என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சாய்பாபா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தி:
நமது அன்புக்கும் பாசத்துக்கும் உரிய புட்டபர்த்தி அருள்திரு சத்ய சாய்பாபா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் துன்புறுகிறேன்.
இறுதி அஞ்சலி செலுத்திட நமது துணை முதலமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின் இன்று சென்றுள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிட சில மாநில அரசுகளே மறுத்த நிலையிலே கூட நான் கேட்காமலே தானாகவே என் இல்லத்துக்கே வருகை தந்து சென்னைக்குக் குடிநீர் கிடைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் உதவி செய்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் தக்கதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள்.
நான் ஒரு நாத்திகவாதி என்ற போதிலும், சிறந்த ஆத்திக வாதியான பாபா அவர்கள் என்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். 2007-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையிலே நடைபெற்ற போது, அவரைப் பற்றி நான் பேசும்போது, மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்றும் அதாவது மக்கள் நலப் பணிக்காக அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஒன்று சேர்வதில் தவறில்லை என்றும் கூறினேன்.
இவ்வளவு விரைவில் அவர் நம்மையெல்லாம் விட்டு மறைந்து விடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. அவரது மறைவால் வருந்தும் எண்ணற்ற அவருடைய சீடர்களின் துயரத்தில் நானும் பங்கேற்பதோடு, என்னுடைய தனிப்பட்ட ஆழ்ந்த இரங்கலையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..", என்று கூறியுள்ளார்.

Chief minister Karunanidhi condoles for the demise of Godman Puttabarthi Saibaba.
சத்ய சாய் பாபா மரணம்
புட்டபர்த்தி: உலகின் மிக அதிக மக்களால் குருவாக வழிபடப்பட்ட, ஆன்மீகத் தலைவர், சமூக சேவகர் புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா இன்று காலை 7.40 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 85.
கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நோய்களாய் அவர் அவதிப்பட்டு வந்தார் பாபா. கடந்த மார்ச் 28-ம் தேதி அவர் புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவரது உடல் உறுப்புகள் முற்றாக செயலிழந்த நிலையில் புட்டபர்த்தி சத்யசாய் ட்ரஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவரது உறுப்புகள் எந்த மருந்தையும் ஏற்கவில்லை. எனவே அவரது உடல்நிலை மிக மோசமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிறகு, அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாபாவின் மரணம் குறித்த செய்திகள் முன்கூட்டியே பரவ ஆரம்பித்ததால், புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 6,000க்கும் அதிகமான போலீசார் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் யாரும் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்ட்ரஸ்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அனுமதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனை அருகில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிரசாந்தி நிலையத்தில் மரியாதை செலுத்த...
'பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா இந்த மக்களிடையேதான் உள்ளது', பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது.
சாய்பாபாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் பிரசாந்தி நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.
பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான விவிஐபிக்கள் புட்டபர்த்திக்கு வரவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு லட்சம் பக்தர்கள்
சாய் பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

Read: In English
உலகம் முழுவதிலுமிருந்து 4 லட்சம் பக்தர்கள் பாபாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.சாய் பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.
English summary
Spiritual leader Sathya Sai Baba, who was hospitalized on March 28 following problems related to heart and respiration, passed away on Sunday morning. According to sources, Sai Baba breathed his last at 6.25am. Baba's body for darshan will be kept at Sai Kulwant Hall on Monday and Tuesday, Sathya Sai Central Trust announced officially. Preparations for last rites are under way. Four lakh devotees from India and abroad are expected to arrive.
U.G.Krishnamurti இது வரை நீங்கள் சந்தித்திராத எதிரி
புனிதம்,பவித்ரம்,தர்மம்,ஆன்மீகம்,ஆத்மா,கலை,கடவுள்,குரு,ஞானிகள்,பண்பாடு,மதம் என்று வாழ்க்கையில் எதைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை உயர்வான அல்லது தாழ்வான கருத்துக்களை வைத்திருந்தீர்களோ அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, உங்களை நீங்களாகவே தரிசிக்க உதவுதற்குத் தோன்றிய அபூர்வமான மனிதர் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி.
தன்னை ரிஷி என்று அறவே ஒத்துக் கொள்ள மறுத்த இன்றைய ரிஷி.
உண்மையைத் தேடத் தொடங்கினாலேயே,தவறான திசையில் பயணமாக ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொல்லிய இந்த நூற்றாண்டின் இணையற்ற மாற்றுச் சிந்தனையாளர்.
இனி அவரது வார்த்தைகளிலேயே……
‘உண்மையைத் தேடிச் செல்லும் எந்த முயற்சியுமே நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உங்களது இயற்கையான நிலையிலிருந்து உங்களை விலக்கி விடுகிறது.
உண்மை என்பது உங்களது முயற்சியினால் அடைவதோ,பெறுவதோ அல்லது நிறைவேறுவதோ கூடிய பொருள் அல்ல.அது தன்னைத் தானே வெளிப்படுத்த முடியாதபடிக்குச் செய்கின்ற தடைகளே நீங்கள் செய்கின்ற முயற்சிகள் எல்லாம்.
எப்போதும் நீங்கள் உங்கள் இயற்கையான நிலையில்தான் இருக்கிறீர்கள்.உண்மை தனக்கே உரித்தான வழியில் தன்னிச்சையாக வெளிப்படத் தடையாக இருப்பதே உங்களது தேடல்கள்தான்.அதனால்தான் தேடுதல் என்பதே தவறான திசையில்தான் இருக்க முடியும்!
நீங்கள் புனிதம்,பவித்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே உங்கள் உணர்வில் படிந்திருக்கும் அசுத்தங்கள்.
அசுத்தம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்,இருந்தாலும் சொல்கிறேன் அவை அசுத்தங்களே.
உங்களால் எதுவுமே செய்ய முடியாது.உங்கள் கைகளில் எதுவுமே இல்லை.
இதை நான் உங்களுக்கு தர முடியாது.ஏனெனில் அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.
உங்களிடம் உள்ள பொருளையே நீங்கள் தானம் கேட்பது தமாஷாக இருக்கிறது.
எவரிடமும் கேட்டுப் பெறுவதற்கு எந்தப் பொருளும் இல்லை.
என்னிடம் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது.
நான் இருக்கும் இடத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.
என்னைப் பற்றிச் சொல்வதானால்,
மத சம்பிரதாயங்கள்,அனுஷ்டானங்களுடன் நிரம்பிய ஒரு சூழ்நிலையிலேயே நான் வளர்க்கப் பட்டேன்.எனது தாத்தா நல்ல பண்பாடுடைய மனிதர்.நிறையப் படித்த, பண்டிதர்களை அவர் சம்பளம் கொடுத்து ஊழியத்துக்கு வைத்திருந்தார்.நான் தரமான கல்வியும்,அதற்கானஆழ்ந்த சூழ்நிலையும் பெறவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
தினமும் காலை நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அந்தப் படித்த பேர்வழிகள் வந்து புனித நூல்களையும்,அதன் விளக்க உரைகளையும்,இன்னும் எல்லா சாஸ்திரங்களையும் படிப்பார்கள்.ஐந்து வயதோ,ஆறு வயதோ,ஏழு வயதோ சிறு பிள்ளையான நான் அந்தக் கருமத்தையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டும்!
நிறையப் புனித மஹான்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.எந்தப் புண்ணிய ஆத்மாவுக்கும் எங்கள் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.ஆனால் அந்தச் சிறிய வயதிலேயே ஒன்றை மட்டும் நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன்.
வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள்.அவர்கள் எல்லாருமே பொய்யர்கள் என்றுதான் சொல்லுவேன்.
எப்படியோ எதுவெல்லாம் புனிதம் என்று சொல்லப் பட்டதோ,தெய்வீகம் என்று கூறப் பட்டதோ அவற்றின் மீதெல்லாம் எனது சிஸ்டத்துக்குள்ளேயே ஒரு வெறுப்பு ஊர்ந்து வந்து,அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டது.
அதற்குப் பிறகுதான் எனது தேடல் தொடங்கியது.சொல்லப் பட்ட அனைத்து அனுஷ்டானங்களையும் முறைப்படி செய்தேன்.எனக்கு இளைய வயதுதான்.ஆனால் வீடுபேறு,மோட்சம்,விடுதலை,நிர்வாணம் என்று சொல்லப் பட்டதை யெல்லாம் அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் செயல் பட்டேன்.அது எனக்கு அவ்வளவு தேவைப் பட்டது.இல்லையெனில் இப்படி ஒரு முழு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்திருக்க மாட்டேன்.பிறகு எனது இன்னும் தீவிரமான தேடல் ஆரம்பித்தது.எனக்கு ஆழமான மதப் பின்னணி இருந்தது.எனது வழியிலேயே நான் அனைத்தையும் ஆராய ஆரம்பித்தேன். உளவியல்,தத்துவ இயல்,மேற்கத்திய,கிழக்கத்திய தந்திர சாஸ்திரங்கள்,இன்றைய அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பல வருடங்கள் கற்றேன்.பரந்து பட்ட மனித அறிவினை நானே ஆராயத் துவங்கினேன்.
எனக்குப் பல சக்திகள் கிடைத்தன. பல அனுபவங்கள் நிகழ்ந்தன.ஆனால் அவை எதனிடமும் எனது கவனம் போகவில்லை.
ஒருவரைப் பார்த்தவுடன் அவரது இறந்த காலம்,நிகழ் காலம்,எதிர் காலம் எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது.ஆனால் எனக்கு மட்டும் எப்படி, ஏன் இந்த ஆற்றல் என்று வியந்தும்,குழம்பியும் இருந்திருக்கிறேனே தவிர அந்த ஆற்றலை நான் ஒரு போதும் பயன் படுத்த வில்லை.
பல சமயங்களில் நான் ஏதோ சொல்லுவேன்.அது அப்படியே நடக்கும். அதனுடைய சூட்சுமம் என்னவென்று நான் எவ்வளவு முயன்றும் எனக்குத் தெரியவே இல்லை.இது பல முறை நடந்த போதும் அந்த எனது ஆற்றலுடன் நான் விளையாட வில்லை.
அதற்கான ஆர்வமும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. அது மட்டுமல்ல எனக்குள் அனைத்துத் தேடலுமே நின்று போனது.அதற்குப் பிறகுதான் எனக்குப் பல விந்தையான நிகழ்ச்சிகள் நடந்தன.
இப்போது
எனது உடலைத் தேய்த்தால் ஒளிப் பொறிகள், பாஸ்பரஸைப் போல சிதறின.
http://pandiyan74.wordpress.com/

The Hindu ஹிந்து குடும்பச் சண்டை
நான் ஆங்கிலம் கற்றுக்கொண்ட நாளிலிருந்து ஹிந்து செய்தித்தாள் படிக்கிறேன். இன்றும் அந்தச் செய்தித்தாளைத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இடையில் வெளிநாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்தபோதும் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு வாரம் கழித்துக் கிடைக்கும் இந்தப் பத்திரிகையை விடாமல் வாசித்துவந்திருக்கிறேன்.இந்தப் பத்திரிகைமீது குறைகள் இல்லாமல் இல்லை. எதோ ஒரு மாதிரியான ஆங்கிலத்தில் எழுதுவது இவர்கள் வழக்கம். ஆனால் அதன்மூலம்தான் நான் பல adjective-களைக் கற்றுக்கொண்டேன். சமீப காலங்களில் மொழியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்.ராம் எடிட்டர்-இன்-சீஃப் ஆவதற்குமுன் பெரும்பாலும் எஸ்டாபிளிஷ்மெண்ட் வழியைப் பின்பற்றும் கன்சர்வேடிவ் பத்திரிகை என்றே பெயர்பெற்றிருந்தது. ஆனால் என்.ராம் palace coup மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதும் எடிட்டோரியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைப் பிரச்னையில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக, முதலில் சந்திரிகா குமரதுங்கவுக்கும் பின்னர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் குரலாகவும், விடுதலைப் புலிகள் தரப்புக்கு முற்றிலும் எதிராக, பொய்க் கதைகளைப் பரப்பும் அளவுக்குச் சென்றது, முற்றிலும் சீன ஆதரவு நிலைப்பாடு, பொதுவான கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடு என்று தொடங்கி மேலும் பலவற்றைச் சொல்லலாம்.
அதனால் என்ன? பத்திரிகைகள் பக்கச் சார்புநிலை எடுப்பதில் என்ன தவறு என்று பலரும் கேட்கலாம். ஒன்றுமில்லை. என் பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்பது ஒரு பக்கம். சார்புநிலை தாண்டி பத்திரிகா தர்மம் என்பதிலிருந்து வழுவும் அளவுக்கு ஒரு செய்தித்தாள் போனால் அதைக் கண்டிக்கவேண்டிய தார்மிக நியாயம் ஒன்று மறுபக்கம்.
உதாரணமாக சமீபமாக நடக்கும் விக்கிலீக்ஸ் இந்தியா செய்திகளை எடுத்துக்கொள்வோம். ஏதோ, உலகையே உலுக்கும் செய்திகள் என்பதாக ஹிந்து வெளியிடும் இவற்றை இந்தியாவில் யாருமே கண்டுகொள்வதில்லை. ஆனால் அதில் எந்த அளவுக்கு உள்நோக்கத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்பது ஆத்திரத்தை வரவழைக்கிறது.
மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதையே அமெரிக்கா விரும்புகிறது என்று விக்கிலீக்ஸ் ஆவணங்களைக் காட்டி தி ஹிந்து செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க என்ன வேண்டுமானாலும் விரும்பிக்கொள்ளட்டும். ஆனால் மமதாவும் அமெரிக்காவும் உள்கை; மமதா அமெரிக்காவிடமிருந்து பணத்தை பெட்டி பெட்டியாகப் பெற்றார் என்று ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்றால் அப்படி ஏதும் இல்லை. இன்று ஹிந்துவில் வந்திருக்கும் கார்ட்டூனில் திரிணாமுலின் மூன்று இலைகள்மீது அமெரிக்கா ஸ்டார்ஸும் ஸ்டிரைப்ஸுமாக நீர் ஊற்றுவதுபோல உள்ளது. இதன் மறைபொருள் என்ன? திரிணாமுல் வளர அமெரிக்கா நீர் ஊற்றுகிறது என்கிறது தி ஹிந்து. இது அபாண்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. சரியாக இரண்டு பக்கங்கள் தள்ளி பிரகாஷ் காரத் குய்யோ முறையோ என்று குதிக்கிறார். ‘அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, பார்த்தீங்களா, மமதாதான் ஜெயிக்கணும்னு இந்த அமெரிக்கா அசிங்கப்பய சொல்லுறான்’ என்று புலம்புகிறார். இப்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. இதைவிட அசிங்கமாக ஒரு பத்திரிகை நடந்துகொள்ளமுடியாது.
இது ஓர் உதாரணம் மட்டுமே. இன்றும் நேற்றும் நடந்ததால் இதனைப் பற்றி எழுதுகிறேன். ஈழப் பிரச்னையில் எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். ராஜபக்ஷே கூட அப்படி தன்னை டிஃபெண்ட் செய்திருக்க மாட்டார். என். ராம் தானே முன்னின்று பேட்டி எடுத்து அவரைக் காப்பாற்றுகிறாராம்!
***
இது இப்படி இருக்க, திடீரென என். ராம் கனவில் கார்ல் மார்க்ஸ் வந்து குடும்பத்தையும் பிசினஸையும் கலக்காதே என்று வழிகாட்டினாராம்! உடனே அவர் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வேலையிலிருந்து விலகி, professional எடிட்டர்களைக் கொண்டு பிசினஸை நடத்தவேண்டும் என்று போர்ட் மீட்டிங்கில் சாதித்துவிட்டார். விஷயம் வேறு என்று புலம்புகிறார் என். ராமின் சகோதரர் என். ரவி. அவர்கள் பிரச்னை எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் ரவி, தன் கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ராஜா விஷயம் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதையே சற்றே நீட்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி விவகாரத்தில் எந்த அளவுக்கு தன் செய்தித்தாளைத் தவறாகப் பயன்படுத்துகிறார் ராம் என்ற கேள்வியையும் நாம் கேட்கவேண்டும்.
***
நான் தொடர்ந்து ஹிந்து வாங்கப்போகிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் ஹிந்துவை தொடர்ந்து 132 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; இந்தியாவின் தேசியச் சொத்து என்று ராம் குறிப்பிடுவதுபோல நாமும் தொடர்ந்து குறிப்பிடவேண்டுமா என்பதுதான் கேள்வி.
கேரளாவில் இரண்டே நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன்: விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரவச தேதிகளுக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளாவில் ஆழப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரவச அறுவை சிகி்ச்சை வசதியும் உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளில் 30 பேருக்கு வரும் 24-ம் தேதி வரை பிரவச தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 29 கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.
இதனால் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல் அறுவை சிகி்ச்சை செய்யப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தரையில் படுக்க வைக்கப்பட்டது பற்றி அவர்களின் உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார்
தெரிவித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நேற்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அத்துடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. வியாழக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
இதனால் டாக்டர்கள் விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் அவசர அவசரமாக பிரவச தேதிக்கு முன்பாகவே கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் 5 டாக்டர்களில் 4 பேர் 21-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு விடுமுறையில் சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த சுகாதார துறை இயக்குனருக்கு அமைச்சர் ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

5 doctors of a government hospital in Cherthala in Kerala performed cesarean operation for 29 pregnant women days before their delivery date. The doctors did so to take four days holiday. Minister Srimathi has ordered for a probe.
Tata Nano நானோவுக்கு வெளிநாட்டில் தொழிற்சாலை அமைக்க டாடா தீவிரம்
டெல்லி: நானோ உற்பத்திக்காக வெளிநாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ள டாடா மோட்டார்ஸ், தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நானோவை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சிகளை டாடா தீவிரப்படுத்தியுள்ளது. பிக்செல் என்ற பெயரில் ஐரோப்பிய சந்தையில் வரவுள்ள நானோ பிக்செல், கடந்த மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏர்பேக்ஸ், சென்ட்ரல் லாக்கிங், யூரோ-4 மாசுக் கட்டுபாட்டு விதிகளின் தரத்துடன் வரவுள்ள நானோ பிக்செல், ரூ.3 லட்சம் விலையில் அங்கு அறிமுகப்படுத்தப்படலாம் என, பிரிட்டனை சேர்ந்த டிவி சேனல்கள் யூக செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நானோ பிக்செல் உற்பத்திக்காக வெளிநாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏதேனும் ஒரு நாட்டில் தொழிற்சாலை அமைப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து டாடா குழுமத்தை சேர்ந்த மூத்த அதிகாரி கிஷோர் சவுகார் கூறியதாவது:
"நானோவுக்கு வெளிநாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் முடிவு விரைவில் எடுக்கப்படும். தரமான உதிரிபாகங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், உதிரிபாக தொழிற்சாலைகள் நிறைந்த இடத்தில், நானோ தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் தி்ட்டமிட்டுள்ளது.
மேலும், டீலர்கள் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் நானோ அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக இருக்கும். அதேவேளை, விலை குறைந்த கார் என்ற பெருமையையும் தக்கவைக்கும்," என்று கூறினார்.

Tata Motors finalising a production site for its Nano car at anoverseas location, which could be either in Latin America, South East Asia or Africa, a senior Tata group official said.
இதுவும் வேணும்... இன்னமும் வேணும்...' ம.தி.மு.க., தொண்டர்கள் விரக்தி
முற்பகல் செய்ததற்கான பலன், பிற்பகல் விளைந்து விட்டது. எங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்' என, நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ம.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., "சீட்' பிரச்னையால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், ம.தி.மு.க.,வினர் பெருத்த ஏமாற்றமடைந்தனர். அவர்கள் வசூலித்து கொடுத்த தேர்தல் நிதியும் வீணானது. சும்மா இருந்த ம.தி.மு.க.,வினரை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட கருணாநிதி, வைகோவை பாராட்டும் வகையில், "எதிர் வரிசையில், இந்திரஜித்தை காணவில்லை. நாம் எல்லாரும் ஓர் இனம் என்ற அடிப்படையில் வரிப்புலி வரிசையே வருக' என, அறிக்கை வெளியிட்டார். இதற்கு கை மேல் பலனும் கிடைக்க துவங்கியது. முதல்வர் அழைப்பிற்கு, வைகோ நேரிடையாக பதில் அளிக்காவிட்டாலும், நாஞ்சில் சம்பத் போன்ற கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள், தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசத் துவங்கினர். இது தான் சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த தி.மு.க.,வினர், தத்தமது பகுதிகளில் உள்ள ம.தி.மு.க.,வின் உள்ளூர் நிர்வாகிகளை வளைத்து போட்டு தங்களுக்கு ஆதரவாக களம் இறக்கினர். நீண்ட நாட்களாக, "காய்ந்து' போயிருந்த ம.தி.மு.க.,வினருக்கு, தி.மு.க.,வின், "அரவணைப்பு' கிடைத்ததும், அப்படியே உச்சி குளிர்ந்தனர். பல மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு ஆதரவாக தீர்மானமே போட்டனர்.
இப்படி கொஞ்சம், கொஞ்சமாக தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து விடுபட்டு, தி.மு.க., கூட்டணியில், "சீட்' வாங்காமலேயே, அவர்களுக்கு பாடுபடுவது என்ற அவல நிலைக்கு ம.தி.மு.க., தன்னை அறியாமலே தள்ளப்பட்டது. எந்த தி.மு.க.,வால் தங்களுக்கு கடந்த தேர்தலில், 35 இடங்கள் கிடைத்தது போய், 12 இடம் தான் அதிகபட்சம் கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதோ, எந்த தி.மு.க., தங்களின் ஆறு எம்.எல்.ஏ.,க் களை, மூன்று எம்.எல். ஏ.,க்களாக குறைத்ததோ, பெரும்பாலான முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கவர்ந்து, கட்சியை கரைத்ததோ, அந்த கட்சியுடன் தோழமையோடு இருந்து செயல்படுங்கள் என்ற தலைமையின் கட்டளையை ஏற்க பெரும்பாலான, ம.தி.மு.க., தொண்டர்களின் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி, பலரும் தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபட்டனர்.
இத்தகைய அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டது குறித்து, ம.தி.மு.க., தொண்டர்கள் சிலர், விரக்தியுடன் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியில் இருந்தபோது, ம.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதில், ஒழுங்காக இருந்தோமா; இல்லை. "வாஜ்பாய், எனது தந்தையைப் போன்றவர். எந்த துறை வேண்டும் கேளுங்கள் தருகிறோம் என்றார். நான் தான் மறுத்துவிட்டேன்' எனக்கூறிய வைகோ, எவ்வித காரணமும் இன்றி, இதே, தி.மு.க., அழைத்ததற்காக, 2004ம் ஆண்டு, பா.ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.,வை வெளியே கொண்டு வந்தார். அந்த தேர்தலில், எங்களுக்கான பார்லிமென்ட் தொகுதிகளை, தி.மு.க., நான்காக குறைத்தது. அதையும் வைகோ ஏற்றுக் கொண்டார். எங்களின் நிலைப்பாட்டால், பா.ஜ., ஆட்சியை கவிழ்த்த, அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர நேரிட்டது. தமிழகத்தில், 40 சீட்டும் காங்கிரஸ் வசம் போனது. தமிழர்களால் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், தமிழர்களையே அழித்தது. அதற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணம். எந்த காங்கிரசை மூச்சுக்கு முன்னூறு தரம் எதிர்க்கிறாரோ, இன்று அதே கட்சி இடம்பெற்றுள்ள தி.மு.க., அணிக்கு, தன் மறைமுக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். பா.ஜ.,விற்கு நாங்கள் இழைத்த துரோகம் தான், எங்களை திட்டமிட்டு அழித்த கட்சிக்கு இன்று பணி செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதாவது, நாங்கள் முற்பகல் செய்தது, பிற்பகல் விளைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
அரசியல்வாதிக்கு தீர்க்கதரிசனம் என்பது வேண்டும்,அது வைகோவிடம் மருந்துக்குகூட கிடையாது.தமிழ் வார்த்தை ஜாலமும் அதை உணர்ச்சி கொப்பளிக்க வெளிபடுத்துவதும் தான் வைகோவின் பலம்.இவர் ஏதோ அந்த தீப்பொறி ஆறுமுகம் மற்றும் வெற்றிகொண்டான் போல மேடை பேச்சாளராக இருந்திருக்கவேண்டியவர்,ஒரு அரசியல் தலைவர் லெவெலுக்கு வைத்து அழகு பார்க்கப்பட்டார்.ஏதோ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல தலைவனாக,வழி காட்டியாக உருவெடுக்க இவரால் முடியவில்லை.அரசியலில் முடிவெடுப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்று,அப்படி எடுத்த முடிவை தன்னை பின்பற்றுபவர்களை ஏற்க வைப்பது அதனிலும் முக்கியமானது.இது போன்ற விசயங்களில் வைகோ தடுமாற்றம் உள்ளவர் திறமையற்றவர்.இவரை நம்பி இனியும் பின் செல்வது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதைபோல
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., "சீட்' பிரச்னையால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், ம.தி.மு.க.,வினர் பெருத்த ஏமாற்றமடைந்தனர். அவர்கள் வசூலித்து கொடுத்த தேர்தல் நிதியும் வீணானது. சும்மா இருந்த ம.தி.மு.க.,வினரை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட கருணாநிதி, வைகோவை பாராட்டும் வகையில், "எதிர் வரிசையில், இந்திரஜித்தை காணவில்லை. நாம் எல்லாரும் ஓர் இனம் என்ற அடிப்படையில் வரிப்புலி வரிசையே வருக' என, அறிக்கை வெளியிட்டார். இதற்கு கை மேல் பலனும் கிடைக்க துவங்கியது. முதல்வர் அழைப்பிற்கு, வைகோ நேரிடையாக பதில் அளிக்காவிட்டாலும், நாஞ்சில் சம்பத் போன்ற கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள், தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசத் துவங்கினர். இது தான் சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த தி.மு.க.,வினர், தத்தமது பகுதிகளில் உள்ள ம.தி.மு.க.,வின் உள்ளூர் நிர்வாகிகளை வளைத்து போட்டு தங்களுக்கு ஆதரவாக களம் இறக்கினர். நீண்ட நாட்களாக, "காய்ந்து' போயிருந்த ம.தி.மு.க.,வினருக்கு, தி.மு.க.,வின், "அரவணைப்பு' கிடைத்ததும், அப்படியே உச்சி குளிர்ந்தனர். பல மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு ஆதரவாக தீர்மானமே போட்டனர்.
இப்படி கொஞ்சம், கொஞ்சமாக தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து விடுபட்டு, தி.மு.க., கூட்டணியில், "சீட்' வாங்காமலேயே, அவர்களுக்கு பாடுபடுவது என்ற அவல நிலைக்கு ம.தி.மு.க., தன்னை அறியாமலே தள்ளப்பட்டது. எந்த தி.மு.க.,வால் தங்களுக்கு கடந்த தேர்தலில், 35 இடங்கள் கிடைத்தது போய், 12 இடம் தான் அதிகபட்சம் கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதோ, எந்த தி.மு.க., தங்களின் ஆறு எம்.எல்.ஏ.,க் களை, மூன்று எம்.எல். ஏ.,க்களாக குறைத்ததோ, பெரும்பாலான முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கவர்ந்து, கட்சியை கரைத்ததோ, அந்த கட்சியுடன் தோழமையோடு இருந்து செயல்படுங்கள் என்ற தலைமையின் கட்டளையை ஏற்க பெரும்பாலான, ம.தி.மு.க., தொண்டர்களின் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி, பலரும் தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபட்டனர்.
இத்தகைய அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டது குறித்து, ம.தி.மு.க., தொண்டர்கள் சிலர், விரக்தியுடன் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியில் இருந்தபோது, ம.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதில், ஒழுங்காக இருந்தோமா; இல்லை. "வாஜ்பாய், எனது தந்தையைப் போன்றவர். எந்த துறை வேண்டும் கேளுங்கள் தருகிறோம் என்றார். நான் தான் மறுத்துவிட்டேன்' எனக்கூறிய வைகோ, எவ்வித காரணமும் இன்றி, இதே, தி.மு.க., அழைத்ததற்காக, 2004ம் ஆண்டு, பா.ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.,வை வெளியே கொண்டு வந்தார். அந்த தேர்தலில், எங்களுக்கான பார்லிமென்ட் தொகுதிகளை, தி.மு.க., நான்காக குறைத்தது. அதையும் வைகோ ஏற்றுக் கொண்டார். எங்களின் நிலைப்பாட்டால், பா.ஜ., ஆட்சியை கவிழ்த்த, அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர நேரிட்டது. தமிழகத்தில், 40 சீட்டும் காங்கிரஸ் வசம் போனது. தமிழர்களால் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், தமிழர்களையே அழித்தது. அதற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணம். எந்த காங்கிரசை மூச்சுக்கு முன்னூறு தரம் எதிர்க்கிறாரோ, இன்று அதே கட்சி இடம்பெற்றுள்ள தி.மு.க., அணிக்கு, தன் மறைமுக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். பா.ஜ.,விற்கு நாங்கள் இழைத்த துரோகம் தான், எங்களை திட்டமிட்டு அழித்த கட்சிக்கு இன்று பணி செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதாவது, நாங்கள் முற்பகல் செய்தது, பிற்பகல் விளைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
s.m.sajahan - nottingham,யுனைடெட் கிங்டம்
2011-04-24 02:52:09 IST Report Abuse
சனி, 23 ஏப்ரல், 2011
2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள்-கனிமொழி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர்
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.
குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.
இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்
ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர்
வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம்
சாட்டியிருந்தது.
இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.
குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.
இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்
இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
English summary
The second chargesheet in the 2G spectrum scam will be filed on Monday by the Central Bureau of Investigation. Sources in the CBI say that M Karunanidhi's daughter, Kanimozhi, and his wife, Dayaluammal, will both be accused of benefiting from the scam. Sources claimed that the second chargesheet will focus on Rs214 crore transaction involving Kalaignar TV and the alleged payoff routed through Dynamix Realty, Kusegaon Realty and Cineyug Films.
இந்தியாவின் விசாரணையையடுத்து வடக்கு விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள் மீளக் கிடைத்தன
பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், அறக்கட்டளை முழுவதையும் தன்னுடை
ஆர்.ஜே. ரத்னாகர், பகவதி இந்துலால் ஷா கிரி வேணு சீனிவாசன் பிரசாந்தி நிலையம்
பாகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவுக்கு 166 நாடுகளில் 3 கோடியே 70 லட்சம் பக்தர்கள் இருக்கின்றனர். பகவானுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு குறைந்தபட்சம் 35,000 கோடி ரூபாய் முதல் 40,000 கோடி ரூபாய் வரை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது மட்டும் அன்றி கோடிக்கணக்கான ரூபாய்கள் அறக்கட்டளையின் வெவ்வேறு அமைப்புகளிடம் ரொக்கமாகவே கையிருப்பில் இருக்கின்றன. பாபாவுக்குப் பிறகு தங்களுக்கு நல்ல வழிகாட்ட யார், அவர் தொடங்கி நடத்திவரும் அறப் பணிகளின் நிலை என்னவாகும் என்ற கவலையெல்லாம் அவருடைய பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புட்டபர்த்தியிலேயே பாபாவின் உறவினர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களுக்கும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பரஸ்பரம் அவநம்பிக்கையே நிலவுகிறது. 1964-ல் சத்யசாய் மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவர். இதன் நிர்வாகக்குழு 2010-ல் தான் திருத்தியமைக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் பாபாவின் உறவினர்களுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இல்லை. எனவே இந்த மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அறக்கட்டளையின் தலைவர் பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா. ஏனைய உறுப்பினர்கள்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, மும்பைத் தொழிலதிபர் இந்துலால் ஷா, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி. கிரி, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர் (39). இவர்களைத் தவிர வேறு 4 பேரும் பாபாவிடம் நெருங்கி அவருக்குப் பணிவிடை செய்யும் இடத்தில் இருப்பதால் நிறைய உள்விவகாரங்களைத் தெரிந்துகொண்டு செல்வாக்குமிக்கவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சத்யஜித். எம்.பி.ஏ. படித்துள்ள நிர்வாகி. அடுத்தவர் சக்ரவர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. மூன்றாமவர் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் வெங்கட்ராமன், மற்றொருவர் எஸ்.வி. கிரி. ஆஸ்ரம நிர்வாகத்தில் இந்த 4 பேருக்கும் இருக்கும் செல்வாக்கு குறித்து பாபாவின் உறவினர்களுக்கு தாள முடியாத கோபம்தான். இதை வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்காவிட்டாலும் தனிப்பட்ட முறையில் பேசும்போது கோபத்தை அடக்காமலேயே பேசிவிடுகின்றனர். ""2 மாதங்களாக பாபா சாப்பிடுவதே இல்லையாம்; இது உறவினர்களான எங்களுக்கே தெரியாது'' என்று கோபம் கொப்பளிக்க ஒருவர் தெரிவித்தார். தலைசுற்றுகிறது, இதயத்துடிப்பு குறைந்துவருகிறது என்று மார்ச் 28-ம் தேதி பாபா கூறியபிறகே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போதுதான் பாபாவின் உறவினர்கள் அந்த 4 பேரிடம் வாக்குவாதம் செய்தனர். ""இப்போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம், பாபாவுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் தயங்கமாட்டோம்'' என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். ""இப்போதே பிரச்னை கிளப்பினால் பாபாவின் சொத்துகளுக்காகத்தான் நாங்கள் பூசலை ஏற்படுத்துகிறோம் என்று குற்றம் சுமத்திவிடுவார்கள்'' என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், அறக்கட்டளை முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பார்க்கிறார் என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. ரத்னாகரின் தந்தை ஜானகிராமன் 2005-ல் இறக்கும்வரை அறக்கட்டளையை முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு நிர்வாகம் மற்றவர்களின் கைகளுக்குப்போனது. ரத்னாகர் ஓராண்டுக்கு முன்னர்தான் அறக்கட்டளை நிர்வாகியானார். உள்ளூர் தொலைக்காட்சி கேபிள் அவர் வசம்தான் இருக்கிறது. இவர் இப்போதுள்ள ஆந்திரத் தொழில்துறை அமைச்சர் ஜே. கீதா ரெட்டியின் நண்பர். அறக்கட்டளையின் மற்றொரு நிர்வாகியான சக்ரவர்த்தியும் சக்திவாய்ந்தவர். அவர் சாய் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் அறக்கட்டளை செயலராகவும் இதற்கு முன்னர் பொறுப்பு வகித்திருக்கிறார். நிலைமை மோசமாகப் போனால் சத்ய சாய் அறக்கட்டளையை அரசே ஏற்றுக்கொண்டுவிடும் என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ஆந்திர அரசு மறுத்துள்ளது. புட்டபர்த்தி என்ற எவருமே கேள்விப்படாத சிறு குக்கிராமத்தை இன்று உலக அளவில் முக்கியமான ஆன்மிகத் தலமாக மாற்றிய பெருமை பாபாவையை சேரும். புட்டபர்த்தி கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்து இன்று மிகப்பெரிய நகரங்களே பொறாமைப்படும் அளவுக்கு நவீன வசதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது. அதி நவீன மருத்துவமனை, கல்வி நிலையங்கள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், தியான மண்டபம், விருந்தினர் இல்லம் ஆகியவற்றுடன் நவீன ரயில் நிலையம், விமான நிலையம் என்று எல்லா வசதிகளும் கொண்டுதிகழ்கிறது. ஒரு காலத்தில் புட்டபர்த்திக்கு வர வேண்டும் என்றால் பிரமுகர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் வந்து பிறகு புட்டபர்த்திக்குக் காரில் வருவார்கள். இப்போது விமானம் நேரடியாக புட்டபர்த்திக்கே வர முடிகிறது. பாபா ஏற்படுத்திய சொத்துகள்: சென்னையில் சுந்தரம் என்ற பெயரில் அழகிய வழிபாட்டிடம், தர்ம úக்ஷத்திரம் என்ற பெயரில் மும்பையில் வழிபாட்டிடம், பெங்களூரை அடுத்த ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் பிருந்தாவனம் (அங்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை), கொடைக்கானலில் சாய் ஸ்மிருதி, கர்நாடகத்தின் சிக்கமகளூரில் கல்லூரி, ராஜஸ்தானின் ராஜ்கோட் என்ற இடத்தில் நவீன மருத்துவமனை ஆகியவை புட்டபர்த்திக்கு வெளியே உள்ளன. இவை போக 150 நாடுகளில் எண்ணிலடங்கா சொத்துகள் உள்ளன. ஆரம்பகாலத்தில் பாபாவை அவமதித்தவர்கள் பலர். அவருடைய சித்துகளைக் குறைகூறியும் நம்பமறுத்தும் கடுமையாக நிந்தனை செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் செவிமடுக்காமல் பாபா மீது பக்தி கொண்டவர்களே அனேகம். பாபா வெறும் ஆன்மிக போதனைகளோடு நிறுத்தாமல் மக்களுக்காக செய்துள்ள மருத்துவ, கல்வி, சாலை, சுகாதார வசதிகளும் குடிநீர் வசதிகளும் ஈடு இணையற்றவை என்பதால் தனிச்சிறப்போடு திகழ்கிறார். எனவேதான் பாபாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி அனைவரின் நெஞ்சங்களிலும் பிறக்கிறது.

சாய்பாபா மிகவும் கவலைக்கிடம்
புட்டபர்த்தி, ஏப்.22: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை வெள்ளிக்கிழமை மிகவும் கவலைக்கிடமானது. 86 வயதாகும் சத்ய சாய்பாபா உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் காரணமாக சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர அரசின் மருத்துவக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ரவிராய் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று கணித்துக் கூற முடியாத நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளித்தாலும் அது இயல்பான இயக்கத்துக்கு ஈடாகாது. உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு கூடுதல் ஆதரவாக இருக்கும் அவ்வளவுதான். உடல்உறுப்புக்கள் முழுமையாக செயல் இழந்தால், மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். முன்னதாக சாய்பாபாவின் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாபாவின் உடல்நிலையில் வியாழக்கிழமை முதல் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கல்லீரல் முற்றிலும் செயல் இழந்துவிட்டது. செயற்கை சுவாசமே அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மற்ற உடல் உறுப்புக்களும் வழக்கம்போல செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை இயக்குநர் ஏ.என். சஃபயா கூறியதாவது: பாபாவுக்கு அளிக்கும் சிகிச்சைக்கு அவரது உடல் உறுப்புகள் ஒத்துழைப்பது மிகவும் குறைவு. டயாலிஸிஸ் முறையிலேயே அவரது சிறுநீரகம் செயல்பட்டு வருகிறது, அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது என்றார். புட்டபர்த்தியில் தடை உத்தரவு தொடர்கிறது: இதற்கிடையே புட்டபர்த்தியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை 2-வது நாளாக கடைகள், ஹோட்டகள் மற்ற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆந்திர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கூடுதல் போலீஸ் படை புட்டபர்த்திக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற மாவட்டங்களில் இருந்து போலீஸ் படைகள் புட்டபர்த்திக்கு விரைந்துள்ளன. புட்டபர்த்திக்கு வரும் முக்கியப்பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க அனந்தபூர் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம்: அனந்தபூர் மாவட்டத்திலுள்ள 26 தாசில்தார்களையும் புட்டபர்த்திக்கு வரும்படி அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் முக்கியப் பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். ராட்சத ஜெனரேட்டர்கள், எல்சிடி திரைகள் ஆகியவை ஹைதராபாதிலிருந்து புட்டபர்த்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. பக்தர்களால் நிறைந்துள்ள பிரசாந்தி நிலையத்தில் முழு அமைதி நிலவுகிறது. உணர்ச்சி வசப்பட்ட சில பக்தர்கள், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பாதுகாப்பு வளையத்தை மீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்து நிறுத்தினர். மருத்துவமனை அருகே வெளிநாட்டு பக்தர்கள் உள்பட சிலரை மட்டும் நிற்க போலீஸôர் அனுமதித்தனர். எந்த நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பது குறித்து சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். பாபா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை மற்றும் பிரசாந்தி நிலையத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீஸôர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வள்ளியை சமாதானப்படுத்த முயற்சி: மொய்க்கும் பத்திரிக்கையாளர்கள்
ஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், "ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.
ஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார். இவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வழக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.
எந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், "இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார். "ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா?' என, வள்ளியிடம் கேட்டதற்கு, ""நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.

KRISHNAMOORTHY Somangili Perumal - MADURAI,இந்தியா
2011-04-23 01:32:46 IST Report Abuse
போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் பெண்களின் கற்புக்கு உத்தரவாதம் இல்லாத இந்த நாட்டில் ,போலீஸ் துறையில் பணி புரியும் இளம் பெண்களின் கற்புக்கு அரசு உத்தரவாதம் தர முடியுமா ? எனவே போலீஸ் நிலையத்திலோ அல்லது காவல்துறை மகளிரோ கற்புக்கு களங்கம் ஏற்படின் ,அதற்க்கு காரணமான காவல் துறை அதிகாரிகளிடமிருந்து ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து ,பாதிக்கப்பட்ட மகளிர்க்கு வழங்கவேண்டும்
போனில் வளர்த்த காதல்..காதலி அழகாக இல்லை..வாலிபர் தற்கொலை
கோவை: ஒருவரை ஒருவர் பார்க்காமல் போன் மூலம் வளர்ந்த காதல், நேரில் கண்டதும் கசந்து போனது. காதலி அழகாக இல்லை என்பதால் காதலன் ரயில் முன் குத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் கோவையில் நடந்தது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டுகளான நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நடராஜன் (24), கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு நேதாஜி நகர் முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரின் மகன் என்று தெரியவந்தது.
தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கிடைத்த விவரம்:
பல் சிகிச்சைக்கான பரிசோதனை ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நடராஜனுக்கு சில மாதங்களுக்கு முன் அவரது செல்போனில் ஒரு போன் வந்தது. எதிர்முனையில் பெண் பேசினார். அது ராங் கால் என்று தெரிந்து அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசியுள்ளார் நடராஜன். இருவரும் தங்களது பேச்சை தொடர்ந்தனர்.
இவ்வாறு தொடங்கிய பேச்சு தினமும் தொடர ஆரம்பித்தது. தினமும் மணிக்கணக்கில் பேசி நேரில் பார்க்காமலேயே காதலை வளர்த்துள்ளனர்.
இந் நிலையில் சமீபத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து ஒரு இடத்தில் சந்தித்தனர். அப்போது நடராஜனை அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போக, அந்தப் பெண் அழகாக இல்லாததால் நடராஜனுக்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணிடம் பேசுவதை நடராஜன் தவிர்த்துள்ளார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து பேச முயலவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவத்தன்று அவர் அலுவலகத்தில் நண்பர்களுடன் இரவு பத்தரை மணி வரை பேசிக் கொண்டு இருந்த நடராஜன் தனது வீட்டின் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அந்த வழியே வந்த ரயில் ஏறி இறந்துள்ளார்.
நடராஜனின் நண்பர்கள் வட்டாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும் நடராஜனின் டைரியை போலீசார் கைப்பற்றினர். அதில், `நான் காதல் விவகாரத்தில் இந்த முடிவை தேடிக்கொள்கிறேன். நான் இறந்ததை என்னை காதலித்த பெண்ணுக்கும் தெரிவிக்க வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.

A 24 year old youth commits suicide in Coimbatore, after meeting his lover. The reason: She is not looking good.
புலம் பெயர்ந்தவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா – அமெரிக்க சஞ்சிகை தகவல்!
உலகில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா என்றும் அதே சமயம் நெதர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் மிகக் குறைந்த அளவு நட்புடைய நாடுகள் என்றும் போபஸ் என்ற பிரபல அமெரிக்க சஞ்சிகையின் சமீபத்திய இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவானது கனடா, பேர்முடா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் இருப்பதாக எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு தெரிவித்திருப்பதாக இந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மக்களுடன் நட்பாகி, மொழியைக் கற்று புதிய கலாசாரத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இந்த நான்கு நாடுகள் மிகவும் இலகுவாகவுள்ளன என்று குறிப்பிட்டள்ள இந்த அறிக்கையில் இந்தியா எந்த இடத்திலிருக்கின்றது என்று குறிப்பிடப்படவில்லை.

வெளிநாடு சென்றோரின் காணிகள் போலி உறுதி முடித்து விற்பனை!
யுத்த காலத்தில் வெளிநாடுகளில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக குடி பெயர்ந்து சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் காணிகளுக்குப் போலி உறுதிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அந்தக் காணிகளை விற்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகத் தகவல் கிடைத்து வருவதாக மாகாண காணி நிர்வாகத்திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது சம்பந்தமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து பெருமளவு தகவல்கள் கிடைப்பதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திலும் இது குறித்த தகவல்கள் கிட்டுவதாகவும் மாகாண காணி ஆணையாளர் டீ.சி.அனுரதர்மதாச தெரிவித்துள்ளார்.இவ்விதம் போலி உறுதிகளைத் தயாரித்து அந்தக் காணிகளை விற்கும் செயற்பாட்டுக்கு சில சட்டத்தரணிகளும் ஒரு சில அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் கடனட்டை மோசடி: இரு இலங்கைத் தமிழர் கைது
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு நபரொருவரின் கடனட்டைத் தகவல்களை களவாடி குறித்த இரு இலங்கையர்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆந்திராவின் மங்களகிரி பிரதேசத்தில் வைத்தே கடனட்டை மோசடி சம்பவம் தொடர்பில் இலங்கையர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ்நாட்டின் வசித்து வருபவர்களாவர். ஹைதராபாத்தைச் சோ்ந்த நபரொருவரின் கடனட்டைத் தகவல்களை தொழில்நுட்பம் ஊடாக களவாடி அதனைக் கொண்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 160000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்களான அந்தோனிப்பிள்ளை நிமல்ராஜ், கனிட்சன் டினோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றையவர்களின் கடனட்டை தகவல்களைக் களவாடும் தொழிநுட்ப முறையை இவர்களுக்கு கற்பித்த மலேசிய தமிழர் ஒருவரை கைது செய்யவும் ஆந்திர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
தாயின் கள்ளக்காதலனைக் குத்திக் கொன்ற தனயன்! பூனகரி
தாயின் கள்ளக்காதலனைக் கத்தியால் தனயனே குத்திக் கொன்ற சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, பதினேழு வயதுடைய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். மகனுடன் தனிமையில் வசித்து வந்த நடுத்தர வயதுடைய தாயாருக்கும் அடுத்த வீட்டில் மனைவியின்றி மகளுடன் வசித்து வந்த தந்தைக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உறவே இந்த அனர்த்தத்தில் போய் முடிந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தனது தாயாரும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் அடுத்த வீட்டில் இருந்த வேளை, அங்கு சென்ற மகன் காதலன் மீது சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அவரது தாயாரும் காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடலின் பின்பகத்திலும் முதுகிலும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதனால், பொன்னம்பலம் விஜயரத்தினம் என்ற அடுத்த வீட்டுக்காரர் உயிரிழந்துள்ளார். அவரைக் குத்திக் கொன்ற இளைஞனை கிளிநொச்சி நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு பூனகரி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை 19 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Written By ilankainet

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)