சனி, 19 பிப்ரவரி, 2011

வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை! இந்திய மீனவர்களினால் கடத்தப்பட்டார்களா என்ற சந்தேகம்

கடற்தொழிலுக்கு சென்ற வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு புறப்பட்டு சென்ற ஆறுபேர் கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேறறு காலை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு என புறப்பட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று படகுகளில் சென்ற ஆறுபேரும் கரை திரும்பாதமையினால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் முதல் இவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்திய கடற்தொழிலாளர்கள் 136பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை மாதகல் பகுதிகளில் வைத்து யாழ் கடற்தொழிலாளர்களினால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக இவர்கள் இந்திய கடற்தொழிலாளர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

50 சோமாலிய அகதிகள் பலி!

மொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி!

தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெட்ரோ கோசா தெரிவித்ததாவது,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து 129 எத்தியோப்பிய மற்றும் சோமாலிய அகதிகள் சட்டவிரோதமாக தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த 9-ம் தேதி கப்பலில் புறப்பட்டனர். ஆனால் அந்த கப்பல் கடந்த 13-ம் தேதி தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே தண்ணீருக்குள் மூழ்கியது. இதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தானாசானிய கேப்டனும் கடலுக்குள் மூழ்கி இறந்தனர்.

இதில் காப்பாற்றப்பட்ட 89 பேரையும் மொசாம்பிக் கடற்படையினர் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அதில் ஏற்கனவே 3 ஆயிரம் அகதிகள் உள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.

ஆப்பிரிக்காவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்பவர்களில் ஏராளமானோர் வழியில் ஏற்படும் விபததுகளில் பலியாகின்றனர்.

கலைஞர் டிவி' அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்!

அண்ணா அறிவாலயத்தில் உள்ள 'கலைஞர் டிவி' அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்!

சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஐஞர் டிவி அலுவலத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை நடத்தினர். மேலும் இந்த சேனலின் நிர்வாகி சரத்குமாரின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சரக்குமாரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மிகக் குறைந்த விலையிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலி்காம்-டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் தரப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், சினியுக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே ரூ. 214 கோடியை முதலீடு செய்ததாகவும், பங்கு விலைகள நிர்ணயிப்பதில் சிக்கல் எழுந்ததால் அந்தப் பணத்தை திருப்பி ரூ. 31 கோடி வட்டியோடு சேர்த்து சினியுக் நிறுவனத்திடம் தந்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது.

மேலும் சினியுக்-டி.பி.ரியாலிட்டி நிறுவனங்களின் தொடர்பு குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால், இதை சிபிஐ நம்பவில்லை. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் தரப்பட்டதற்காக லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் ஒரு பகுதி தான் இந்த ரூ. 214 கோடி என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வெடிக்கும் முன் இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி.ரியாலிட்டி தந்ததாகவும், பின்னர் பிரச்சனை பெரிதான பின் அதை கலைஞர் தொலைக்காட்சி திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐ கருதுகிறது.

இது தொடர்பான ஆவணங்களைத் தேடியே இன்று ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12.10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது.

அப்போது கலைஞர் டி.வி. அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?-கேள்வி பட்டியலை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரிடன் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடமும் சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டது.

கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், சரத்குமாருக்கு கொஞ்சம் பங்குகளும் உள்ளன.

சன் டிவியின் பங்குகளை தயாளு அம்மாள் திருப்பித் தந்தபோது கிடைத்த பணத்தை வைத்து கலைஞர் டிவியில் பங்குகளை வாங்கியுள்ளார் தயாளு அம்மாள். அதே போ ல சன் டிவியின் பங்குகள் மூலம் முதல்வர் கருணாநிதி தனக்குக் கிடைத்த பணத்தில் பிரித்துக் கொடுத்த ரூ. 2 கோடியை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி பங்குகளை வாங்கியுள்ளார்.

ஆனால், பங்குதாரர் என்ற அளவோடு தயாளு அம்மாள் நின்று கொண்டார். அதே போல பெயரளவுக்கே கனிமொழியும் கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்துள்ளார். மற்றபநிர்வாகத்திலோ அதன் பண பரிவர்த்தனைகளிலோ இருவருமே தலையிடுவதில்லை என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

முக்கிய முடிவுகளை சரத்குமார் தலைமையிலான அதிகாரிகளே எடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பலனடைந்த ஸ்வான் டெலிகாமின் தாய் நிறுவனமான டி.பி.ரியாலிட்டி தனது இன்னொரு துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியைத் தந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பணத்தை கலைஞர் டிவி திருப்பித் தந்துவிட்டாலும் கூட, எதற்காக இந்த நிறுவனம் பணத்தை டிவியில் முதலீடு செய்ய முன் வந்தது என்று சிபிஐ கேள்வி எழுப்புகிறது.

இதனால் இது தொடர்பாக கலைஞர் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் என்ற முறையில் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருந்தது.

இந் நிலைசில் சரத்குமாரின் வீட்டில் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தியதோடு அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்த கட்டமாக கனிமொழியிடம் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பே சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் கலைஞர் டி.வியின் வெறும் முதலீட்டாரான இன்னொரு இயக்குநர் தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. அவர் தொலைக்காட்சி விவகாரங்களில் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர் என்று சிபிஐ கூறியுள்ளது.

சம்மன் வரவில்லை-கனிமொழி:

இந் நிலையில் சிபிஐயிடமிருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கனிமொழி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிபிஐயிடமிருந்து எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. கலைஞர் டி.வியில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சிபிஐயின் இந்த நடவடிக்கைகள் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாதிக்குமா என்று கேட்டதற்கு பதிலளிக்க கனிமொழி மறுத்துவிட்டார்.

கோகோ கோலாவின் இரகசியம் அமெரிக்க வானொலியில் ஒலிபரப்பு

125 ஆண்டுகளுக்கு பிறகு
125 ஆண்டுகளுக்குப் பிறகு இரகசியமாக வைக்கப்பட்ட கோகோ கோலாவின் சூத்திரம் வெளியாகியுள்ளது. கடந்த 1886ம் ஆண்டு தான் கோகோ கோலா முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. கோகோ - கோலா விற்பனையாகத் தொடங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்தியேக சுவை அளிக்கும் சூத்திரத்தை தெரிந்துகொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் சூத்திரம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட சூத்திரத்தை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன். இந்த சூத்திர இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரே ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையத்தளத்திலும் வெளியாகி உள்ளது. கோகோ - கோலாவின் அதிகார பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும்தான் அந்த சூத்திரம் தெரியும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலமும்தான் இரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஆயுத காண்டம்


மோகன் தாஸ்
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய மோகன்தாஸ் ஒரு சுவாரசியமான மனிதர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்; இவரை ஆலோசனை செய்யாமல் எம்.ஜி.ஆர். முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டார்; எம்.ஜி.ஆருக்கு கண்ணும், காதும் மோகன்தாஸ்தான் என்றெல்லாம் சொல்வார்கள். அவர் ரிடையர் ஆனவுடன், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் அவர் வசித்த உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த அவரது பிரத்யேக அறையில் (அதற்கு செல்லமாக “டென்” என்று பெயரிட்டிருந்தார்) கல்கிக்காக அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அதற்கு முன்பும், பின்னரும் கூட சில தடவைகள் அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும், சொன்ன விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், ரிடையர் ஆனதும் அளித்த பேட்டி முக்கியமானது.
அவர் உத்தியோகத்தில் இருந்தபோது விவரமாகப் பேச முடியாமல் போன விஷயங்கள் உட்பட சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பழைய போட்டோக்கள் சிலவற்றை தன் சொந்த புகைப்பட ஆல்பத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். “நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானீர்கள்? மலையாளி என்பதால்தானா?” என்று கேட்டபோது, ” அவர் என்னை தமிழ்நாடு போலிசின் இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைவராக்கினார். 24 மணி நேரமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு அது. மாநிலம் முழுவதும் என்ன நடக்கிறது? என்பதை மட்டுமின்றி, பக்காவான இன்டலிஜென்ஸ் நெட் ஒர்க் மூலமாக அடுத்து எங்கே என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட அறிந்து முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப் பட்ட பதவி அது. எம்.ஜி.ஆரும், நானும் என்று இல்லை, ஒரு மாநில முதலமைச்சருக்கும், ஐ.பி. தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கவே செய்யும்” என்று விளக்கியவர், தனது பதவிக்காலத்தில் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சில சங்கடங்களையும் கூட தயங்காமல் பகிர்ந்துகொண்டார்.
“ஐ.பி. தலைவராக நான் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தது, பலருடைய பொறாமையை சம்பாதித்துக் கொடுத்தது. நான் என் மகள் திருமணத்துக்காக ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு கேரளாவுக்குப் போயிருந்த சமயம், மரியாதை நிமித்தம் அப்போதைய கேரள முதலமைச்சர் கருணாகரனை சந்தித்தேன். இரண்டே நிமிட சந்திப்புதான் அது என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை அரை மணி நேர உரையாடல் என்று செய்தியாக்கிவிட்டது.
என்னை எப்படியாவது சங்கடத்தில் மாட்டிவிடவேண்டும் என்று காத்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் போய், ” நான் எம்.ஜி.ஆர்.பற்றிய ரகசியங்களை கருணாகரன் மூலமாக ராஜிவ் காந்திக்குச் சொல்லி அனுப்பி, எம்.ஜி.ஆர். மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக கதை கட்டிவிட, எம்.ஜி.ஆரும் அதை நம்பிவிட்டார். மகள் திருமணத்துக்கு பத்தே நாட்கள் இருந்த நிலையில், என் லீவை ரத்து செய்து, பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். பணிக்குத் திரும்பிய என்னை, பழைய பதவியில் தொடர விடாமல், ஒரு டம்மியாக ஓரிடத்தில் உட்காரவைத்தார்கள்.  இந்த உதாசீனம் என்னை ரொம்ப பாதிக்கவே, ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்புறம் நிலைமை சீரடைய, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்” என்றும் விளக்கினார்.
ஓய்வு பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர் பற்றி மோகன்தாஸ் ஒரு புத்தகம் கூட எழுதினார். “எம்.ஜி.ஆர்: தி மேன் அண்ட் தி மித் ” என்று தலைப்பு. அந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
ராஜிவ் காந்தி படுகொலை நடந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழு ராஜிவ் படுகொலையைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்ற கோணத்திலேயே புலனாய்வினை மேற்கொள்வது சரியல்ல என்ற அவரது கருத்து கூட சலசலப்பை ஏற்படுத்தியது. இதே கருத்தை அடிப்படையாக வைத்து மோகன்தாஸ்,  ஆங்கிலத்தில் ஒரு நாவல் கூட எழுதினார்.  ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், சந்திரா சுவாமி என்று எந்தப் பெயர்களையுமே நேரிடையாகக் குறிப்பிடாமல் நாவலில் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அந்த நாவலின் மூலமாக அவர் சொல்ல வந்தது, நம் ஊரில் இருக்கும் அந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்கள் தலைவரது ஊழல் காரணமாக கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்கி, மீண்டும் ஆட்சிக்கு வர அந்த தலைவரையே பலியாக்கி, அனுதாப அலையை வீசச் செய்யும் வியூகத்தை வகுக்கிறார்கள். அந்தப் படுகொலையை, அந்தத் தலைவரின் மீது கோபம் கொண்ட அயல்நாட்டு போராளிக்குழுவின் மூலமாகச் செயல் படுத்துகிறார்கள். அயல் மண்ணின் போராளிக் குழு, தலைவரது படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிதான் என்பது அந்த நாவலின் ஹைலைட். அந்த நாவல் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
மோகன்தாஸ் சி.பி.ஐ. யில் இருந்த நாட்களில் அவர் துப்பு துலக்கிய கேஸ்கள் பல. உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரது தம்பி தன் 60 வது பிறந்த நாளைக்கொண்டாடியதன் அடிப்படியில், விசாரணை நடத்தியதில் அந்த நீதிபதி பொய்யான வயது கொடுத்து வேலைக்குச் சேர்ந்தது அம்பலமானது.  அதன் பிறகு, அந்த நீதிபதி தானாகவே முன் வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதாகச் சொன்னார் மோகன்தாஸ்.
தன் சர்வீசின் ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொன்னார் மோகன்தாஸ். அப்போது தூத்துக்குடி ரௌடியிசத்துக்குப் பேர் போன ஊராம். அங்கே, இவர் கையாண்ட ரௌடி தூத்துக்குடி கொம்பன் கேஸ் மிகப் பிரபலம். அந்தக் கொம்பன், மேலே ஏழெட்டு கொலை கேஸ்கள் இருந்தன. ஆனால் அவன் மீது போலிஸ் கை வைத்தது இல்லை. அவனைப் பிடிக்க சரியான ஒரு தருணத்துக்கு பொறுமையோடு காத்திருந்து, சாமர்த்தியமாகப் பிடித்து, கோர்ட்டில் நிறுத்தி, அவனுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தார் மோகன்தாஸ்.
அவர் சொன்ன இன்னொரு சுவாரசியமான கொலை வழக்கில் நான்கு பேர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றாவது, நான்காவது நபர்கள் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த கேஸின் முதல் தகவல் அறிக்கையில் அந்த நான்கு பேருடைய பெயர்களுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மோகன்தாஸ் தீவிர புலன் விசாரணை நடத்தினார். துப்பு துலங்கியது. முதல் இருவரும்தான் கொலையோடு சம்மந்தப்பட்டவர்கள். பர்சனல் விரோதம் காரணமாகப் பழி வாங்கும் நோக்கத்துடன் மற்ற இரண்டு பேர்களின் பெயர்களும் கேஸில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட நாலு பேர்களில் தக்க ஆதாரங்களைத் திரட்டி முதல் இருவருக்குத்தான் கொலையில் சம்மந்தமுண்டு; மற்ற இருவரும் சம்மந்தமில்லாத அப்பாவிகளென்று நிரூபித்து, அந்த இருவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தார்.  இதை நீதிபதிகள கூட பாராட்டினார்கள்.
மனைவியுடன்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இந்தியா விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்துவந்த ஆதரவு நிலைபாடு அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் மற்றும் இதர போராளிக் குழுக்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் மோகன்தாஸ். காக்கிச் சீருடைப் பணிக்காலத்தில் அவரது மாபெரும் சாதனை என்று நான் நினைப்பது அவர் விடுதலைப் புலிகளிடம்  நடத்திய ஆயுதப் பறிப்புதான். அது நடந்தபோது கூட அந்த ராஜ தந்திர வியூகம் பற்றி பற்றி விரிவாகப் பேசாத மோகன்தாஸ் ரிடைர்மென்ட்டுக்குப் பிறகு என்னிடம் விரிவாகப் பேசினார்.
மோகன் தாஸ் என்னிடம் விவரித்ததை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதமேந்தித் திரிந்து வந்த காலம் அது. வேதாரண்யம், சென்னை போன்ற ஒரு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் காரணமாக மத்திய அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என நினைத்தது. ஆனால் அதைச் செய்கிற பணியை எம்.ஜி.ஆரிடம் விட்டுவிட்டது. இது பற்றிப் பேச என்னை அழைத்தார் முதலமைச்சர்”
“விடுதலைப்புலிங்க கிட்டேயிருந்து ஆயுதங்களைப் பிடுங்கிடுங்க” என்றார் எம்.ஜி.ஆர். நான்,” அது இயலாத காரியம்”என்றேன். அவரோ,” எப்படியாவது செய்தே ஆகணும்” என்றார். “நிறைய உயிர்ச் சேதம் ஆகுமே?” என்று நான் சொல்ல,” மத்திய அரசுக்கு நான் வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்.
மத்திய, மாநில அரசுகள், உள்நாட்டுப் பாதுகாப்பு, அயலுறவு விவகாரம், உள்ளூர் அரசியல் என பல பரிமாணங்கள் கொண்ட மிகவும் சிக்கலான ஆயுதப் பறிப்பை எப்படிச் செய்வது என்று தீவிரமாக யோசித்தேன். நான் ஸ்பெஷலாக உருவாக்கிய கமாண்டோ படையினரைக் கொண்டு இதனைச் செயல்படுத்த ஒரு திட்டம் வகுத்தேன். இது ரொம்பவும் ரகசியமாகச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், முதலமைச்சருக்குக் கூட நீங்கள் உத்தரவிட்டபடி ஆயுதப் பறிப்பை செய்யப்போகிறேன்” என்று மட்டும் சொன்னேனே ஒழிய எப்போது என்று தேதியைச் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் போராளிகளின் முகாம்கள் எங்கெங்கே உள்ளன? அவற்றில் உள்ள முக்கிய போராளிகள், அவர்களிடமிருக்கும் ஆயுதங்கள் என எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு போராளி முகாமிற்கும் ஒரு கமாண்டோ சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “சமீபகாலமாக போராளிகள் ஆயுதங்களோடு திரிவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்னும் ஒரு வார காலத்துக்காவது நீங்கள் ஆயுதங்களை கையிலெடுக்காமல் இருக்கவேண்டும் என அரசாங்கம் நினைக்கிறது.” என்று சொன்னதும் அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள்.
“எல்லா ஆயுதங்களையும் உங்கள் முகாமிலேயே ஒரு அறையில் போட்டுப் பூட்டி, சாவியை நீங்களே வைத்துக் கொண்டால்போதும்” என்றதும் உடனடியாக அப்படியே செய்தார்கள். இப்படியாக தமிழகத்தின் ஒவ்வொரு முகாமிலும் ஆயுதங்கள் ஒரு பூட்டிய அறையில் முடக்கப்பட்டன; போராளிகள் நிராயுதபாணிகளானார்கள். கமாண்டோக்கள் நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பிய அரை மணிநேரத்தில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஸ்பெஷல் கமாண்டோ படையினர் போராளிகளின் பல்வேறு முகாம்களுக்கும் அதிரடியாகச் சென்று சுற்றி வளைத்தார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த அறைகளின் பூட்டைத் தகர்த்து அனைத்து ஆயுதங்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, என்ன நடக்கிறது என்று போராளிகள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நவீன ஆயுதங்களுடன் வந்த கமாண்டோ படையினரை நிராயுதபாணிகளான போராளிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அன்றைக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றிருந்தார். டெலிபோனில், விவரம் சொன்னபோது,” சாவு ரொம்பவுமா? என்றார். “ஒரு கேஷுவாலிடி கூட இல்லை” என்றதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்” என்று அந்த  அத்தியாயத்தைச் சொல்லி முடித்தார் மோகன்தாஸ். இதில் ஆன்டி-கிளைமாக்ஸ் என்னவென்றால், ஆயுதப் பறிப்பு அமைதியாக நடந்து முடிந்துவிட்டாலும், அடுத்த சில நாட்களில் பிரபாகரன் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க, எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார்.
அரசியல்!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

கதையை விட்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி ரீலிஸ் ஆகும் படங்கள்!

கதை மற்றும் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… கவர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ரீலிஸ் ஆகும் சில படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்ததாலோ என்னவோ தமிழ்   திரையுலகிற்கு டப்பிங்  கவர்ச்சி படங்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை.
அந்த வரிசையில் காரசாரமான ஆந்திர மசாலா படங்கள் இரண்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி திரையிடப்படவிருக்கின்றன. நம்மூரில் காட்டாத கவர்ச்சியை‌யெல்லாம் தெலுங்கு‌ தேசத்திற்கு சென்று காட்டும் நம்மூர் நாயகிகள் நடித்த படங்கள்தான் அவை.
நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும், அனுஷ்காவும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம் வம்பு என்ற பெயரில் ரீலிஸ் ஆகிறது.
இதேபோல நடிகர் மகேஷ்பாபுவும்- அனுஷ்காவும் நடித்த படம் ஒன்றும் ரீலிஸ் ஆகவிருக்கிறது.
இந்த 2 படங்களுமே செய்தியின் ஆரம்பத்தி்ல் சொன்னபடி நாயகியரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழக தியேட்டர்களை அலங்கரிக்கவுள்ளன. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பிரத்யேக கவர்ச்சி போஸ்டர்களும் தயாராகி விட்டன. அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சியை தமிழ் ரசிகர்கள் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

ஆனந்தகீதம்

Automatic Writing என்பது நிரூபணம் செய்ய இயலாத ஒன்று (பிறப்பு இறப்புச் சுழற்சி போல). ஒரு குழந்தையைப் பார்த்து அது ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்ததென்று தெரிந்து கொள்கிறோம் . அதேபோல ஒரு இறப்பின்போது உயிர்ச்சக்தி போய்விட்டது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அதே போல தன்னிச்சையான எழுத்தென்பதைப் பார்க்கவும் வாசிக்கவும் இயலும். ஆனால் அதை எழுதவோ டைப் பண்ணவோ இயக்கும் அந்த விசை எமது எந்த ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஒன்று. பல புத்தகங்கள் இந்த மாதிரி எழுதப்படிருக்கின்றன. அவற்றுள் ஒன்று Patience Worth Series Received by a Midwestern Housewife என்பதும் இன்னொன்று The Fascinating New Testament Stories Dictated through Geraldine Cummins என்பதுவும் அடங்கும்.
பொதுவாக இப்படிப்பட்ட உந்துசக்தி நம்மைப்போலப் பிறந்து வாழ்ந்து இறந்து போன ஒருவரிடமிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை மறுப்பவர்கள் பொதுவாக இது எமது அடிமனத்திலிருந்துதான் வருவதாகச் சொல்வார்கள். அடிமனத்தில் தான் எல்லா நினைவுகளும் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். இப்படியாகக் கருத்து வேறுபாடுகள் பல விதமாக உள்ளன.
என்னால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமென்று சொல்லவரவில்லை. என்னால் ஒன்று மட்டுமே சொல்ல இயலும். அதாவது இப்புத்தகத்தில் வரும் மறுவாழ்வைப் பற்றிய விளக்கங்களெல்லாம் எனது கற்பனையோ இயற்றியதோ இல்லை. அவை எனது டைப்ரைட்டரில் டைப்பண்ண முன் எனக்குத் தெரியாதவை.
உதாரணத்துக்கு இந்தியாவிலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உதய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ.சி.சர்மா என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் உதய்பூர் பல்கலைக்கழகத்தின் தத்துவவியற் பீடத்துக்குத் தலைவராவார் (head of the department). அக்கடிதத்தில் அவர் தனது மாமியார் இறந்ததை முன்னிட்டு உடனடியாக 'ஹிஸார்' என்ற இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும், உதய்பூர் வந்ததன் பிற்பாடு எனக்குத் தன்னிச்சை எழுதுகை (automatic writing) வருவதையறிந்ததாகவும் தனது மனைவி பாக் (Bhag) க்கு ஆறுதல் தரும் விதமாக ஏதாவது செய்ய இயலுமா ஏனெனில் அவரது மாமியார் 'சீதா தேவி மனுஜா' அகால மரணமடைந்ததாகவும் எழுதியிருந்தார்.
அடுத்த நாள் காலை ஆர்தர் போர்ட் (Arthur Ford) இடம் இறந்த 'சீதா தேவி'யைப் பற்றி ஏதாவது தெரியுமாவெனக் கேட்டதற்கு ஆர்தர் சொன்ன (எழுத்து மூலமான) பதில் "நாம் அவரைச் சந்தித்தோம். அவர் சந்தோஷமான ஆத்மா. இங்கு வந்ததில் அவர் வெகு சந்தோஷமாகவும் சக்தியுடனும் இருப்பதாகவும் அவரது பூவுலகத்திலிருக்கும் குடும்பத்தினரைப் பிரியவில்லை என்றும் கூடிய நேரம் அவர்களுடன் தான் இருப்பதாகவும், அவர்கள் மனத்தைத் தேற்றுமளவும் தான் அப்படியிருப்பேன் என்று சொன்னதாகவும் அதனுடன் வேறு பல பிரத்தியேகச் சமாச்சாரங்கள் எழுதப்பட்டதுடன் ஒரு குறிப்பிட்ட நீல மலரொன்றைச் சொல்லித் தனக்கு விருப்பமான அந்த மலரைப் பார்க்கும் போது தன்னை நினைக்கும் படியும் அந்த நேரத்தில் அங்கு தானும் இருப்பேனென்று சொன்னதாகவும் எழுதப்பட்டது.
இந்த சீதா என்பவரைப் பற்றி எனக்கு ஒரு நாளும் தெரியாது. அவர் இருக்கும் இடத்தில் அந்த நீலப்பூப் பூப்பது பற்றியும் எனக்குத் தெரியாது. எனவே இதை டாக்டர் சர்மாக்கு எழுதுவதற்குத் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் எதற்கும் எழுதுவோமெனத் தீர்மானித்து எழுதினேன். ஏப்பிரல் 20 ஆம் திகதி 1971 ஆம் ஆண்டு டாக்டர் சர்மா ஜோட்பூரிலிருந்து அதற்குப் பதில் எழுதினார். ஆர்தருடைய ஒவ்வொரு சொல்லும் உண்மையென்றும் அந்த நீலப்பூவைப் பற்றித் தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும் ஆனால் மாமனார் சொன்னதாக ஒரு விஷயம் அதில் எழுதியிருந்தார். கடந்த ஆறு மாதங்களாக சீதா பூக்களில் அதிகம் விருப்பமடையவராக இருந்ததாகவும் அதிலும் குறிப்பாக அந்த நீலப்பூவை அவர் உண்டாக்கி அதை வீட்டை அழகுபடுத்த அவர் உபயோகித்ததாகவும் மாமனார் சொன்னதாக எழுதியிருந்தார்.
சர்மாவுக்கோ அவரது மனைவிக்கோ கூட சீதாவின் இந்தக் கடந்த ஆறுமாதமாக நீலப்பூவிலிருந்த ஈடுபாடு தெரிந்திருக்கவில்லை. எனக்கோ திருமதி சர்மாவின் பெற்றார் உயிருடனிருக்கிறார்களா என்பதே அவரது (மாமியாரின் இறப்பைப் பற்றிய) கடிதம் வருமளவும் தெரியாது. எனவே இந்த விஷயம் சாதாரணமான வழிகளில் எனக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. நிச்சயமாக இது ஆர்தர் சீதாவை மேலுலகில் சந்தித்தை உறுதிப்படுத்துகிறது.
இப்புத்தகம் மேலுலகைப் பற்றிய சந்தேகங்களை ஆர்தரின் சொந்த அனுபவங்களின் மூலமாக நிவர்த்திக்கும்
http://ananthageetham.blogspot.com/

பயணம்

ஹரன் பிரசன்னா

மீட்பரின் புதிய சீடர் வருகை
முதல்நாள் முதல் காட்சியில் ‘பயணம்’ திரைப்படத்தைப் பார்ப்பேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கெனவே ‘மொழி’, ‘அபியும் நானும்’ தந்த கடும் மனச்சிக்கலில் இருந்து, ராதா மோகனின் இன்னொரு செண்டிமெண்ட் இண்டெலெக்‌சுவல் காமெடிக் கொடுமையைக் காணத் துணியவில்லை. அலுவலகத்தில் நண்பர்களோடு சேர்ந்து போகலாம் என்று முடிவானதும் ஒரு சின்ன நப்பாசை ஒட்டிக்கொண்டது. ராதா மோகன் மட்டுமே தற்காலத் தமிழ் நாட்டின் தலைசிறந்த இயக்குநர் என்ற முடிவுக்கு, ராதா மோகனின் முதல் படம் வருவதற்கு முன்பே வந்துவிட்ட பாராவும் உடன் வருகிறார் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். வேலை இருக்கிறது என்ற ஒரு வரியில் பாரா ஒதுங்கிக்கொண்டார் இன்று. நான் படத்துக்குப் போனேன். அங்கே கடவுளும் சைத்தானும் ஒன்று சேர்ந்து டிக்கெட் கிழித்தார்கள்.
பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுப் படத்துக்குச் செல்லும்போது யுனிஃபார்முடன் செல்வதுபோல, நான் கிழக்கு டி ஷர்ட்டுடனும் உள் நெஞ்சில் ‘வேலையை விட்டுட்டு படம் பார்க்க வந்திருக்கமே’ என்னும் குறுகுறுப்புடனும், ராதா மோகனின் மொக்கை மீது முன்முடிவுடனும் உட்கார்ந்துகொண்டிருந்தபோது, நாகார்ஜூனா என்று திரையில் ஓடியது. அடுத்து பிரம்மானந்தம் என்று வந்தது. இது தமிழ்ப்படமா டப்பிங் படமா என்ற சந்தேகமும் என் குறுகுறுப்புடன் சேர்ந்துகொண்டது. கூடவே நாகார்ஜூன் நம்மைக் காப்பாற்றுவார் என்னும் சிறிய சந்தோஷமும் சேர்ந்துகொண்டது.
படத்தை அதன் பாராட்டுப் பத்திரத்திலிருந்து துவங்கிவிடலாம். இடைவேளை வரை மிக பலவீனமான திரைக்கதை எளிதில் ஊகிக்கக்கூடிய மொக்கை காட்சிகள், நாலாந்தர செண்டிமெண்ட் காட்சிகள், நேரத்தை வீணடிப்பதற்காகவே அநாவசியமாகச் சேர்க்கப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சி, தீவிரவாதிக்கு உதவியனைப் பிடிக்கும் காட்சி என நீண்டு சலிக்கும் காட்சிகள், இந்தப் படம் எப்ப முடியும் என்கிற டென்ஷனை எகிற வைத்தன. இதில் போதாக்குறைக்கு இது டப்பிங் படம்தான் என்ற முடிவுக்கு வரவைக்கும் வாயசைப்புப் பிரச்சினை. ஒரே ஆறுதல் காந்த நடிகரும், பாலாஜியும் வரும் காட்சிகள்தான். இப்படிப் போய்கொண்டிருந்த படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் நாகார்ஜுனாவும் பிரம்மானந்தமும். இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் வேகம் பெறுகின்றன. வழக்கம்போல ஆனந்தவிடகன் ஜோக் போன்ற வசனங்கள்தான் என்றாலும், சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. ஓர் ஆக்‌ஷன் படத்துக்குத் தேவையான நிமிடப்பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. சுகர் வந்து இளைத்துப் போகாத கவுண்டமணியான பிரம்மானந்தத்தின் அனாயசமான யதார்த்தமான ரீயாக்‌ஷனும், நாகார்ஜுனாவின் அடக்கமான நடிப்பும், திகைக்க வைக்கும் சில காமெடி காட்சிகளும் (குறிப்பாக ‘என்ன கதகளியா ஆடற’ என்று பிரம்மானந்தம் கேட்கும் காட்சி) நம்மை வசீகரிக்கின்றன. சாதாரண மனிதர்களை உச் கொட்ட வைக்கும் க்ளிஷே காட்சிகள் அமைக்கும் களன்கள் கூர்மை பெறுகின்றன. கடைசியில் எப்படி நாகார்ஜுனா பயங்கரவாதிகளை முறியடிக்கிறார் என்பது கதை.
பாராட்டவேண்டிய இன்னொரு விஷயம் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ் என்றாலே ஓவர் ஆக்டிங் என்கிறது என் அகராதி! அவர் நடித்து நான் ரசித்த ஒரே ஒரு திரைப்படம் காஞ்சிவரம் மட்டுமே.  இப்போது இந்தப் படம். எந்த இடத்திலும் கொணட்டல்கள் இல்லை. அதீத முகபாவம் இல்லை. அதிலும் குறிப்பாக, அவர் கோபம் கொண்டு கத்தும் காட்சி, அவரது நடிப்பின் உச்சம். தான் தயாரிக்கும் படம் என்பதால் தன் காட்சிகளை அதிகம் வைத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் சேர்த்துப் பாராட்டலாம். (பிரகாஷ் ராஜை நான் பாராட்டுவேன் என நான் நினைத்ததே இல்லை.)
பிறகு என்னதான் இந்தப் படத்தில் பிரச்னை? அரசியல். ராதா மோகனின் அரசியல். கமலை மிஞ்சுகிறார். ராதா மோகனின் படங்களில் கிறித்துவ சார்பு உண்டு என்பதும், ஃபீல் குட் என்ற பெயரில் வரும் செண்டிமெண்ட் மொக்கைகளும், ஆனந்தவிகடனில் இருந்து பொறுக்கி எடுத்தாரோ என்று ஐயம் கொள்ள வைக்கும் சொறி விட்டுகளைத்தான் காமெடியாகத் தருகிறார் என்பதும், ராதா மோகன் மீது எனக்கு ஏற்பட்டிருந்த முன் தீர்மானத்துக்கு அடிப்படைகள். இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பட்டமான கிறித்துவப் படம். சார்பு என்ற சொல்கூட அநாவசியம். முதல் காட்சியிலிருந்து பாதிரியார் தொடங்கும் அன்புப் புராணஅதிதீவிர காவியம், என்ட் கார்டு வரையில் நம்மைத் துரத்து துரத்து என்று துரத்துகிறது. மொழி திரைப்படத்தில் வரும் பாஸ்கர்தான் பாதிரியாராக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அக்கதாபாத்திரத்தின் தொடர்ச்சிதான் இக்கதாபாத்திரமோ என்ற சந்தேகமே நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. பாதிரியார் இப்படத்தில் ராதா மோகன் வழியே செய்திருக்கும் சாதனை, காண்டம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியதுதான். மலையாளப் படங்களில் இப்படிப் பேசும் தோழமையான பாதிரிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் இது தொடக்கமாக இருக்கலாம். இந்தப் பாதிரிப் புராணத்தில் மூச்சு முட்டி ஓடுபவர்களுக்கு எதிரில் காத்திருக்கிறது ஹிந்து மத அரசியல் நிந்தனை. நேரடியாகவே பாஜகவைத் திட்டியிருக்கலாம் ராதா மோகன். பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியா ‘பால் வரும் தேன் வரும் பூமியாக’ இருந்ததை எல்லோருமே அறிந்திருந்தார்கள். ஆதியில் இந்தியா அப்படித்தான் இருந்தது. ராதா மோகன் இந்தப் படத்தில் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார். அவரே ஒரு கதாபாத்திரமாக வருகிறார் என்னும்போது அவர் பேசும் வசனங்கள் இன்னும் ‘அர்த்தம்’ பெறுகின்றன. அவர் பெயரையே அதாவது ‘இயக்குநர் ராதா மோகன்’ என்றே இப்படத்தில் காட்டியிருக்கலாம். இப்படி எதிரே நளினமாக ஆடும் ஹிந்துத் தாக்குதலில் மேலும் மூச்சு முட்டும்போது ‘இருவாசல் மூடி ஒரு வாசல் வைப்பான் இறைவன்’ என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார் ராதா மோகன். ஆம், இதுவரை தமிழ்த் திரை காணாத அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தின் காட்சிகளை நெடுகிலும் காட்டிச் செல்கிறார்.
அதிலும், ஒரு பயங்கரவாதி தான் அன்பாகப் பேசிய குழந்தையிடம் வெடிகுண்டை மறைப்பது அதன் உச்சம். ராதா மோகன் இப்படி எல்லாம் எடுக்கமாட்டாரே என்று இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்வைத்து ஹிந்துத்துவாதிகளும், அதே இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பை முன்வைத்து முற்போக்காளர்களும் குழம்பும்போது, கிறித்துவர்கள் மட்டும்தான், மீட்பர் அனுப்பியிருக்கும் புதிய சீடரின் வருகையை நினைத்து மயிர்க்கூச்செறிதலுடன் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் படத்தின் கடைசி சட்டகத்தில் உறையும் காட்சி முக்கியமானது. அதுவரை நமக்கு இருந்துவரும் சந்தேகங்களை எல்லாம் அறவே நீக்குவது. படத்தில் வரும் ஹிந்து நிந்தனைக் காட்சிகள்கூட சப்பைக்கட்டுத்தானோ என்று சந்தேகம் கொள்ள வைப்பது. ஐந்து பயங்கரவாதிகளின் பிணங்கள் மீதும் அவரது பெயர்கள் நிலைபெறுகின்றன. ஐந்தும் இஸ்லாமியப் பெயர்கள். (இனி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கிருந்து தொடங்கிக் கொள்ளவேண்டும்!)
கமலாவது ‘உன்னைப் போல் ஒருவனில்’ ஒரு கடத்தல் தாதாவையாவது ஹிந்து எனக் காட்டினார். அந்த ‘இரக்கம்’கூட ராதாமோகனுக்கு இல்லை. அத்தனையும் இஸ்லாமியப் பெயர்கள். வெடிகுண்டை விமானத்தினுள்ளே கடத்திப் போக உதவியரும் இஸ்லாமியராம். என்ன அநியாயம் பாருங்கள். தீவிரவாதிகளின் புனிதப் போர்ப் பெயர்க்காரணமாக ஒரு வசனம் வருகிறது. எந்தப் பொண்ணையாவது நாங்க கை வெச்சோமா என்று. இதற்கு இஸ்லாமியர்கள் வருத்தப்படவேண்டுமா, சந்தோஷப்படவேண்டுமா என்று திகைக்க வைக்கிறார் இயக்குநர். இன்னொரு விஷயம், நாகார்ஜுனாவின் உதவியாளராக வருவது ஓர் இஸ்லாமியர். எங்கே அவரும் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்று காட்டி ராதாமோகப் பூனைக்குட்டி வெளியே வந்துவிடுமோ என்று பயந்தேன். அல்லது அவர்தான் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளைக் கொன்றார் என்று காட்டி செக்யூலர் பூனை வெளிவருமோ என்று ஆர்வத்துடன், ஆம், மீண்டும் பயந்தேன். இரண்டுமே நடக்கவில்லை. இப்படி நிகழாததில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. என்ன அந்த நுண்ணரசியல்? குழப்பமும் உள்ளது. என்ன அந்தக் குழப்பம்?
ரஜினிகாந்த் போன்ற பஞ்ச் டயலாக் கமர்சியல் உச்ச நடிகர்களை ஆதி முதல் அந்தம் வரை போட்டுத் தாக்குகிறார் ராதா மோகன். ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதத் தொய்வும் இல்லாமல் வந்துகொண்டே இருக்கும் ஒரே விஷயம் இது மட்டுமே. இடையிடையே வரும் இரண்டு நிமிட செண்ட்டிமெண்ட் அறுவைக் காட்சிகள்கூட இதைப் போலத் தொடர்ந்து வருவதில்லை. ஆனால் கடைசி காட்சியில், அதுவரை வந்த அத்தனை விமர்சனங்களையும் போட்டு நொறுக்கும் வகையில், அந்த நடிகர் வீரராகிறார். இப்படி ஒரு மாற்றம் இஸ்லாமியர்களின் வாயிலாக நடப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை ராதா மோகன் செய்யவில்லை. இது நுண்ணரசியலா அல்லது ஸ்கிரிப்டா?
பொதுவாக ஹிந்துத்துவச் சார்பு உள்ள எனக்கு இந்தப் படத்தின் மூலம் வந்த சந்தோஷங்கள் என்ன என்ன?
01. எல்லாப் படத்திலும் மெல்லிய கிறித்துவச் சார்பை பின்னணியில் வைத்து பார்வையாளர்களை, அவர்கள் அறியாமலே தன்னரசியலுக்குப் பயன்படுத்தும் அல்லது தான் நம்பும் சூடோ செக்யூலரிசத்துக்கும் பயன்படுத்தும் ராதா மோகனின் முகமூடி கிழிகிறது. அவர் இனி நேரடியாகவே கிறித்துவ ஆதரவுத் திரைப்படம் எடுக்கலாம்.
02. ஹிந்து அரசியல் தவறுகளைச் சொல்லும் ராதா மோகன் என்னும் முற்போக்காளர், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்த தீரர், இனி கிறித்துவத்தின் மதமாற்ற அரசியலைப் பற்றி எடுப்பாரா? எடுத்தால் நிச்சயம் அவருக்கு ஒரு சலாம் உண்டு. எல்லா மதங்களையும் உண்மையிலேயே ஒரே மாதிரியாகப் புறக்கணிப்பவர்கள் வணங்கத் தக்கவர்களே. படமாக எடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒன்றிரண்டு காட்சிகளாவது…?
03. சாரு நிவேதிதாவும் எத்தனை நாள்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்காக கமலைத் திட்டிக்கொண்டிருப்பது? அது என்னவோ சாருவின் ராசி, அவர் யாரையாவது பாராட்டினால், இப்படி நடந்துவிடுகிறது. ‘மொழி’யைப் பாராட்டினார். இனி ராதா மோகன் பெயரையும் பாராட்டு என்னும் வார்த்தையையும் ஒரே வரியில் அவர் எழுத வாய்ப்பே இல்லாத அளவுக்கு இப்படி நடந்துவிட்டது. அதிலும் இப்படம் இஸ்லாமியர்களுக்கான எதிர்க்குரல். சாருவின் அறச்சீற்றத்தை இனி யாரால் தடுக்க இயலும்? இனி தொடங்கப் போகும் சாருவின் எழுத்து ரகளையை ரசிக்கலாம்!
04. ஒரு திரைப்படத்தில் ஒருவர் ஓர் எதிரியைத்தான் உருவாக்கிக்கொள்வார். இதில் ராதா மோகன் ஹிந்துத்துவ இஸ்லாமிய எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்னும் ஆர்வம்.
05.ஹிந்துக்களை நிந்திப்பதும், அரசியல் ஹிந்துக்களை விமர்சிப்பதும் மட்டுமே எளிது என்பது இனி ராதா மோகனுக்கு உறைக்கத் தொடங்கும்.
06.நாட்டில் நிலவும் உண்மை ஒன்று,  ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே தைரியமாக அதை நீங்கள் சொல்லமுடியும் என்பதும் ராதா மோகனுக்குப் புரியும்.
07.முற்போக்காளர் பட்டம் பெற முப்பது வருஷம், அதைப் போட்டு உடைக்க முப்பது நிமிடம் என்பதும் புரியும்.
அரசியலை ஆழப் பார்க்கப் பழகாத மக்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாடுவார்கள். பெரும்பாலான நம் மக்கள் இவ்வகையினர்தான் என்பதால் இதுவே நிகழும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். கூடவே பாடல் இல்லாத, காதல் இல்லாத, சண்டை இல்லாத, தனிப்பட்ட ஹீரோயிஸ க்ளிஷே இல்லாத படம் என்று பத்திரிகைகள் எழுதும். அதோடு, சூடோ செக்யூலரிசக் காட்சிகளின் பாராட்டும் சேர்ந்துகொள்ளும். இதுவும் நிகழ்ந்தே தீரும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். ஆனால் இணைய வாசகர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், டிவிட்டர்கள்? இந்த வகையினரை ஏமாற்றுவதில்தான் ராதா மோகன் தோற்றுவிட்டார். அவர்கள் இந்தப் படத்தைக் கைமா செய்யாமல் விடமாட்டார்கள் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். என்னிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள்.
சரி, ராதா மோகனின் இத்தனை குழப்பங்களுக்கு என்ன காரணம்? அவரே இப்படத்தில் சொல்கிறார், காந்தியையும், கார்ல் மார்க்ஸையும் படிச்சு இப்படி ஆயிட்டேன் என்கிறார். குழப்பம் எந்த ‘இடத்திலிருந்து’ துவங்குகிறது பார்த்தீர்களா?!

சனி, 8 ஜனவரி, 2011

அப்பனைப் போல் பிள்ளை; தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி

சர்வாதிகார வம்சம்

13. கிம் குடும்பம்
ஒரு குடும்பத்தில் அப்பாவைப் போலவே பிள்ளையும் வந்தால் அக்குடும்பத்தில் எல்லோருக்கும் கொண்டாட்டம். ஆனால் அதுவே சர்வாதிகாரி குடும்பத்தில் நடந்தால் நாட்டு மக்களுக்கெல்லாம் திண்டாட்டம் தான்.  அப்பனைப் போல் பிள்ளை; தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதெல்லாம்  கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கும்; நாட்டை ஆளும் அதிகார வம்சத்தில் நிகழும் போது மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு ஓட வேண்டியது தான். வரலாற்றில் பல நாடுகளில் இப்படி கொடுமைக்காரத் தந்தையும் பிள்ளைகளும் தம் நாட்டு மக்களை இம்சித்த சம்பவங்கள் நிறைய. ஆனால் இதே நிலை இன்று உலகில் மிச்சமிருக்கும் சொற்ப கம்யூனிச நாடுகளில் ஒன்றான வட கொரியாவில் நிலவுகிறது.  அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வட கொரியாவைப் பீடித்த சாபக்கேடாக விளங்கும் கிம் குடும்பமே இந்த வார வில்லன்(கள்).
கொரிய நாட்டின் முதல் சாபக்கேடே அது அமைந்துள்ள இடம் தான்.  ஒரு பக்கம் சீனா இன்னொரு பக்கம் ஜப்பான்.  இரு மத யானைகளுக்கு இடையே மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சின் நிலை தான் கொரியாவுக்கும். . வரலாற்றில் கொரியா சுதந்திரமாக இருந்த காலத்தை விட இவ்விரு நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த காலம் தான் அதிகம் எனலாம்.  நேரடியான ஆக்கிரமிப்பு நடந்தது குறைவான காலமே என்றாலும்,  சீனா மற்றும் ஜப்பானைப் பகைத்துக் கொண்டு கொரியா சின்ன விஷயத்தைக் கூட செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனியப் பேரரசுகளுக்குப் போட்டியாகத் தனக்கும் காலனிகளைத் தேடிக் கொண்டிருந்த ஜப்பான் கொரியா மீது படையெடுத்து அதனைத் தன் காலனியாக்கிக் கொண்டது.  முந்தைய ஆக்கிரமிப்புகளைப் போல அல்லாமல் இது விரைவில் முடியவில்லை. மாறாக பல பத்தாண்டுகள் தொடர்ந்து நீடித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பினாலும் உலகில் அப்போது வேகமாகப் பரவி வந்த புதிய அரசியல் கருத்துகளாலும்  கொரியாவின் பழைய அரச அமைப்புகளும் பாரம்பரிய ஆட்சி முறைகளும் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டன.  பாரம்பரிய கருத்தாக்கங்களின் இடத்தைத் தேசியவாதம், சமதர்மம், கம்யூனிசம் போன்ற புதிய சித்தாந்தங்கள் பிடித்துக் கொண்டன. ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கொரியாவில் தேசியவாத மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அமைப்புகள் போராடத் துவங்கின.
அப்படி உருவான எதிர்ப்பு இயக்கங்களில் தான் கிம் இல்-சங் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  அப்போது கொரிய கம்யூனிசக் கட்சி அனைத்துலக கம்யூனிச கட்சிகளின் அமைப்பிலிருந்து (comintern) ”தள்ளி வைக்கப்”  பட்டிருந்தது. .  இதனால் அதில் சேராமல் சீன கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார் கிம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொரியாவையும் தைவானையும் முழுங்கி ஏப்பம் விட்டிருந்த ஜப்பான் 1930களில் சீனா மீது படையெடுத்திருந்தது.  சீனாவின் மஞ்சூரியா பகுதியில் சீனாவின் பல கோஷ்டிப் படைகளுக்கும் ஜப்பானிய இராணுவத்துக்கும் கடும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டு வந்த கம்யூனிச படைப்பிரிவு ஒன்றில் அரசியல் அதிகாரி ஆனார். அங்கிருந்து படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி உயர்வு பெற்றார். இதற்கு அவருடைய அரசியல் திறமையும் ஜப்பானுடனான போரில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடிக்கடி மரணமடைந்ததும் துணையாக இருந்தன.  1940களில் எஞ்சியிருந்த ஒரு சில கொரிய கம்யூனிச படைத்தளபதிகளில் கிம்மும் ஒருவர்.  இக்காலகட்டத்தில் தான் கிம் சோவியத் யூனியனின் செஞ்சேனை அதிகாரிகளின் கண்ணில் பட்டார். அப்போது செஞ்சேனை  உலகெங்கும் இருந்த கம்யூனிச போராளிக் குழுக்களுக்குப் போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்து வந்தது.  செஞ்சேனையில் சேர்ந்து பயிற்சி பெற்ற கிம் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை சோவியத் யூனியனிலேயே தங்கி விட்டார்.
ஐரோப்பாவில் நாசி ஜெர்மனியை வீழ்த்திய பிறகு செஞ்சேனை கிழக்கு நோக்கித் திரும்பியது. ஜப்பானியப் பேரரசின் ஆசியப் பிரதேசங்களை 1945ல் தாக்கியது. ஏற்கனவே நான்கு ஆண்டுகள் போரில் அமெரிக்காவிடம் நன்றாக அடிவாங்கியிருந்த ஜப்பானியப் படைகள் சோவியத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கொரிய தீபகற்பத்தை விட்டு வெளியேறின.  கொரியாவில் தனக்கு ஆமாம் போடும் ஒரு புதிய அரசை உருவாக்க நினைத்த ஸ்டாலினுக்கு அதற்கு உகந்த ஒரு ஜால்ராத் தலைவர் தேவைப்பட்டது. . செஞ்சேனையில் கொஞ்சம் பிரபலமாகியிருந்த கிம்முக்கு அதிர்ஷ்டம் அடித்து அவரை புதிய வட கொரிய நாட்டின் அதிபாராக்கினார் ஸ்டாலின். (கொரியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் வசமாகவில்லை, தென்பகுதி அமெரிககாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.  கிம்முக்கு வழி செய்யும் வகையில் சோவியத் உளவுத்துறை கொரியாவில் செல்வாக்குடன் இருந்த உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களையெல்லாம்  தீர்த்துக் கட்டியது.  அடுத்த ஐந்தாண்டுகளில் கிம் தனது நிலையைப் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். சோவியத் யூனியனின் கையாளாக மட்டும் இருந்தால் என்றும் அவர்களது தயவை நாடியே இருக்க வேண்டும் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இதனால் தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கினார். நெடுங்காலமாக அந்நியர் ஆதிக்கத்தில் கஷ்டப்பட்டிருந்த வட கொரிய மக்களும்.. ஆகா நம்மில் ஒருவர் இப்படி சக்தி வாய்ந்த தலைவராக உருவாகிறாரே என்று சந்தோஷப்பட்டனர், கிம்முக்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தனர். .பாவம், சொந்த செலவில் சூனியம் வைக்கிறோம் என்று அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
மகன் கிம்
1950க்குள் வட கொரியா மீதான கிம்மின் பிடி நன்றாக இறுகி விட்டது. தனக்கு எதிராக வளரக்கூடியவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஒழித்துக் கட்டினார் கிம்.  அனைத்து அரசியல் கட்சிகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்தார். 1948ல் அதிகாரப்பூர்வமாக இரு கொரிய நாடுகளும் உருவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பனிப்போர் அரசியலின் காரணமாக, தென்கொரியாவை சோவியத் யூனியனும், வட கொரியாவை அமெரிக்காவும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் ஆதரவு பெற்ற கொரியா தான் ஒரே அதிகாரப்பூர்வ கொரியா என்று சொல்லி வந்தன.  இந்த சச்சரவைப் பயன்படுத்திக் கொண்டு தனது நிலையை இன்னும் பலப்படுத்தினார் கிம்.  கொரிய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபடுவது போல மக்களிடம் காட்டிக் கொண்டார். 1950ல் தென் கொரியாவைக் கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைப்பதற்காகக் கொரியப் போரை ஆரம்பித்து வைத்தார்.  இதுவரை சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவின் கைப்பாவையாக இருந்து வந்த கிம், திடீரென்று தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு நிலையைத் தலைகீழாக மாற்றியது. பனிப்போர் அரசியல் காரணமாக ஸ்டாலினும் மாவோவும் வட கொரியாவுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க வேண்டியதானது.  போரின் ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய கொரியப் படைகள் தென்கொரியா முழுவதையும் கிட்டத்தட்ட கைப்பற்றி விட்டன. ஆனால் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் படை அவற்றை விரட்டியடித்து வட கொரியா மீது படையெடுத்தன.  கம்யூனிசத்தின் மானத்தைக் காப்பாற்ற சீனா நேரடியாக போரில் ஈடுபட வேண்டியதானது.  மூன்று வருடங்கள் கடும் சண்டைக்குப் பின்னர் போர் நிறுத்தம் கையெழுத்தானது.  கிம் போரை ஆரம்பிப்பதற்கு முன் என்ன நிலை இருந்ததோ அதே நிலைக்கு எல்லைகள் திரும்பின. கிம்மின் பேரரசு ஆசை லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது தான் மிச்சம். மேலும் இரு கொரிய நாடுகளும் நாசமாகிப் போயிருந்தன.
போரினால் ஏற்படுத்திய நாசம் பத்தாதென்று, நிர்வாகத்தால் நாட்டினை சீர் குலைக்கும் முயற்சியில் இறங்கினார் கிம்.  இந்த காலகட்டத்தில் வட கொரியாவில் ஒரு பெரும் தனி மனித துதி இயக்கம் தொடங்கியிருந்தது. அரசு எந்திரமே கிம்முக்கான ஒரு ஜால்ரா எந்திரமாக மாறியிருந்தது. அவரது பெயரைப் பயன்படுத்தாமல் அனைவரும் அவரைப் “பெருந் தலைவர்”  (Great Leader”) என்றே அழைக்கவேண்டும் என்பது எழுதப் படாத விதியானது.  கிம் தான் நாட்டிற்குச் சந்திரகுப்தர், சாணக்கியர் எல்லாமே. அரசியல், பொருளாதாரம், இராணுவம் என்று எல்லா விஷயங்களிலும் கிம்மே முடிவெடுத்தார்.  அவருக்குத் தான் ஒரு பெரிய தத்துவ ஞானியென்ற நினைப்பு வேறு இருந்தது. எப்படி ஸ்டாலினசமும் மாவோவிசமும் உருவானதா அது போலவே தானும் ஒரு கொள்கையை உருவாக்க முயன்றார். ஜூச்சே (Juche) என்ற அந்த கொள்கை அடுத்த முப்பது ஆண்டுகளில் வட கொரியாவை முழுவதும் நாசபடுத்தி விட்டது.  கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் கொரிய தேசிய வாதம், நிறைய தனி மனித துதி ஆகியவற்றின் அரைவேக்காட்டுக் கலவை தான் ஜூச்சே.   எந்த நாட்டை நம்பியும் வட கொரியா இருக்கக் கூடாதென்று நாட்டைத் தனிமைப்படுத்தினார் கிம்.  எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு என்பது தான் ஜூச்சேவின் அதிகாரப்பூர்வ இலக்கு. ஆனால் நடந்து என்னமோ தலைகீழ்.  அனைத்து நாடுகளிடமிருந்து வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொண்டதால் பொருளாதாரம் நாசமானது.  சரியான உள்கட்டமைப்பு வசதிகளும் திட்டமிடுதலுமில்லாத அரைகுறை கம்யூனிசத்தைப் பின்பற்றியதால் உள்நாட்டு உற்பத்தியும் காலியானது. முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தென்கொரிய உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து அரசியல் செய்து வந்ததால் இராணுவத்துக்குச் செய்யும் செலவு மீதமிருந்த பொருளாதாரத்தையும்  குலைத்து விட்டது.
எந்த நாட்டு தயவுமில்லாமல் வட கொரியா வாழும் என்று கிம் பிரசாரம் செய்து வந்தாலும்,  சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் தயவில்லாமல் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலை உருவானது. இடையில் சோவியத்-சீன மோதல்களில் கிம் சீனாவுக்கு ஆதரவளித்தார். அதற்குப் பின்னர் சீனா வடகொரியாவைக் கிட்டத்தட்ட தத்து எடுத்துக் கொண்டது.  ஏறக்குறைய திவாலாகிப் போயிருந்த வடகொரியாவை இருபது ஆண்டுகளுக்குச் சீனாவின் நிதி மற்றும் உணவு நிவாரணங்களே தூக்கி நிறுத்தின. நாடு நாசமாகிக் கொண்டிருந்த போது கிம் மட்டும் சொகுசாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.  மக்களுக்கு சாப்பிட சோறு இருக்கிறதோ இல்லையோ “பெருந்தலைவருக்கு” நாடெங்கும் பிரமாண்ட சிலைகளும், நினைவு மண்டபங்களும் மட்டும் தவறாமல் கட்டப்பட்டன.  வட கொரிய குழந்தைகள் கல்வி கற்றார்களோ இல்லையோ பெருந்தலைவருக்குத் துதி பாட கற்றுக் கொண்டார்கள்.  வட கொரியா அழிவை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது தென் கொரியா அமெரிக்க உதவியுடன் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. வடகொரியா சீனாவிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க  தென்கொரியா ஆசியாவில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்து விட்டது. இரு நாடுகளுக்கும் இடையே விழுந்த இந்த இடைவெளி கிம்மின் தென் கொரியப் படையெடுப்பு கனவைத் தகர்த்து விட்டது.
1990களில் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு வட கொரியாவின் நிலை இன்னும் மோசமானது. பொருளாதாரம் என்பதே மருந்தளவுக்குக் கூட இல்லை என்றானது.  தவறான உற்பத்திக் கொள்கைகளால் விவசாயம் நொடித்துப் போய் நாட்டில் பஞ்சம் உருவானது. சீனா தானம் கொடுக்கும் அரிசியை வைத்து மக்கள் உயிர் பிழைத்து வந்தனர்.  1994ல் கிம் தன்னுடைய 82வது வயதில் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அதற்கு முன்னரே அவர் தனது மகன் கிம் ஜோங்-இல் ஐ தனக்கு வாரிசாகத் தயார் படுத்தியிருந்தார். இரண்டாவது கிம் தந்தை விட்ட இடத்திலிருந்து வட கொரியாவைப் பாழாக்கும் வேலையைத் தொடங்கினார்.  மக்களுக்குச் சோறு கூட போட முடியாத நிலையில் ராணுவத்தை மட்டும் நல்ல பலமாக வைத்துக் கொண்டார். அணு ஆயுதங்களையும் உருவாக்கத் தொடங்கினார். பஞ்சத்தினால் ஒரு புறம் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க,  இன்னொரு புறம் தந்தையைப் போலவே மகனும் ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்.  தனது தந்தைக்கும் நாடெங்கும் சிலைகளை நிறுவினார்.  தந்தையைப் போலவே தனக்கும் ஒரு தனி மனித துதி இயக்கத்தை நிறுவிக்கொண்டார். அப்பா கிம் பெருந்தலைவர் என்றால் மகன் கிம் “அன்பான தலைவர்” (dear leader).  வட கொரியாவுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்த சீனாவும் ஆப்பசைத்த குரங்கு போல மாட்டிக் கொண்டது.  ஆதரவை நிறுத்தி விட்டால் வட கொரியா சீர் குலைந்து விடும், பின்னர் வட கொரிய மக்கள் அனைவரும் சீனாவுக்கு அகதிகளாக ஓடி வந்து விடுவார்கள்.  இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் வேறு வழியின்றி வட கொரியாவுக்கு ஆதரவளித்து இரண்டாவது கிம்மின் ஆட்சியைத் தூக்கி நிறுத்தி வருகிறது.
சீனாவின் கதி இப்படியென்றால்,  வட கொரியாவின் எதிரிகளான தென் கொரியாவும், அமெரிக்காவும் இன்னும் பரிதாபமான நிலையில் இருக்கின்றன. வட கொரியாவிடம் சில அணுகுண்டுகளும் அவற்றை நெடுந்தூரம் வீசக் கூடிய ஏவுகணைகளும் உள்ளதே காரணம். வட கொரியாவை அடிக்கவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.  இப்போது இரண்டாம் கிம்முக்கு உடம்பு சரியில்லை என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் தனக்கு வாரிசாக தனது மகன் கிம் ஜோங் உன் ஐ நியமித்திருக்கிறார். வட கொரியாவுக்கும் உலகுக்கும் கிம் குடும்பத்திலிருந்து விமோசனம் கிடைப்பது போலத் தெரியவில்லை.

ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது

உறக்கமற்றவன்

”அத்தியாயம் 13
ஒரு சீரியல் ஐநூறு எபிசோடுகளைக் கடந்துவிட்டால் அதன் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அது தன்னாலே ஓடி பணத்தைக் கொட்டும் என்கிறார்கள் சின்னத்திரை ஏரியாவில்.
இந்தச் சீரியல்களில் வேலை செய்கிற உதவி இயக்குனர்களுக்குத் தினக்கூலியாக (அதாவது ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவே ஒன்றரை கால்ஷீட் (12 மணி நேரம் – காலை 9 லிருந்து இரவு 9 வரை) என்றால் அறுநூறு ரூபாய் சம்பளம். மாதத்தில் இருபது நாள்கள் வேலை இருக்கும் என்பதுதான் இந்தத் தொழிலில் கிடைக்கிற உத்தரவாதம். மாதம் முழுக்க வேலை செய்கிற உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள். தினசரி சம்பளத்தைக் கணக்கிடுகிற ஒரு சில கம்பெனிகள் இப்போது அதைவிடக் குறைவாக ஒரு சம்பளத்தை நிர்ணயித்து மாதச் சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்களாம்.
அசோசியேட் டைரக்டர்களுக்குத் தினசரிச் சம்பளத்துடன் சேர்த்து தனி மாதச் சம்பளமும் வழங்கப்படும். தினந்தோறும் ஒரு கால்ஷீட்டுக்கு 750 ரூபாயும், ஒன்றரை கால்ஷீட்டுக்கு ஆயிரம் ரூபாயும் வாங்குகிறார்கள் இவர்கள். இந்த அசோசியேட் இயக்குனர்கள் படப்பிடிப்பில் கவனிக்கிற முக்கியமான வேலை பிராம்ப்ட்டிங். அதாவது நடிகர்களின் டயலாகை எங்காவது ஓரமாக நின்றுகொண்டு உரக்கச் சொல்லிக்கொடுப்பது. இவர்கள் சொல்லச் சொல்ல நடிகர் நடிகைகள் கிளிப்பிள்ளைபோலப் பேசுவார்கள். இங்கு ரீ-டேக் அதிகம் இல்லை என்பதால்தான் இப்படி ஒரு முறை. பின்பு தனியாக டப்பிங் இருக்கும் இவர்களுக்கு.
வசனகர்த்தாவோடு தொடர்பில் இருக்கும் உதவி இயக்குனருக்குதான் வீடு வாசல் தெரியாத அளவுக்கு வேலை இருக்குமாம். பல நேரங்களில் வசனகர்த்தா வீட்டிலேயே பழியாகக் கிடந்து நள்ளிரவில் வசனங்களை வாங்கிக்கொண்டுபோய் ஒப்படைப்பதும் நடக்கும். இவர்கள்மட்டுமல்ல, படப்பிடிப்பில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் மறுநாளைக்குத் தேவையான பிராப்பர்டிகளைத் தயார் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்ப் படுக்கவே இரவு 12 ஆகிவிடும். இந்தச் சிரமத்தை குறைப்பதற்காகவே மறுநாள் காலையில் பத்து மணிக்குதான் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.
தினந்தோறும் சீரியல் ஒளிபரப்பப்படுவதால் தினமும் ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவேண்டும் இந்த உதவி இயக்குனர்கள். இதில் முன்கதைச் சுருக்கத்தையும் சொல்ல வேண்டும். மார்க்கெட்டிங் டீமுடன் கலந்து பேசி விளம்பரங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பதைக் கேட்டு அதற்கு ஏற்றதுபோல சீரியலின் நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ எடிட்டிங் செய்யவேண்டும்.
அதுகூடப் பரவாயில்லை. திடீரென்று மார்க்கெட்டிங் எக்சியூட்டிவ் ஃபோன் செய்து ”ஒரு விளம்பரத்தைச் சேர்க்கணும். அறுபது செகன்ட் எடிட் பண்ணிக் கொடுங்க” என்பார். ஆனால் அதற்குமுன்பே முக்கியமான ஒரு காட்சியில் நிறுத்தி சீரியலுக்குத் ’தொடரும்…’ போட்டிருப்பார் இயக்குனர். அந்த பெப் குறையாத அளவுக்கு எடிட் செய்து இந்த 60 வினாடி விளம்பரத்தை இணைக்கிற பொறுப்பும் இந்த உதவி இயக்குனருக்குதான்!
சின்னத்திரை, பெரிய திரை இவ்விரு பிரிவுகளில் பணியாற்றும் உதவி இயக்குனர்களில் யாருக்குப் பெரிய எதிர்காலம் என்றால், நிச்சயமாகப் பெரிய திரையாளருக்குதான். சின்னத்திரையில் பணியாற்றுகிறவர்கள் அன்றாடச் சம்பளம் வருகிறதே என்று வாழ்க்கையை தொலைப்பவர்கள். குடும்பம், வாழ்க்கை என்று எதையும் அனுபவிக்கமுடியாமல் திணறும் இவர்களால்தான் நாம் தினந்தோறும் குடும்பக் கதைகளைக் காணமுடிகிறது, முரண் சுவை!
ஓர் உதவி இயக்குனருக்குத் தீராத வயிற்றுவலி. தானாகச் சரியாகிவிடும் என்று பொறுத்திருந்தவர் வலியின் உச்சகட்டத்தில் மருத்துவரிடம் போனார். அவர் சில மாத்திரைகளை எழுதி, ”இதை ரெண்டு நாள் தொடர்ந்து சாப்பிடுங்க. சரியாகிவிடும்” என்றார்.
இரண்டு நாட்கள் கழிந்தது. ம்ஹும். மறுபடியும் டாக்டரிடம் ஓடோடி வந்தார் உதவி இயக்குனர். அவர் ஏதேதோ டெஸ்ட்களை எழுதிக் கொடுத்தார். எப்படியோ, யார் புண்ணியத்திலோ அந்த டெஸ்ட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ரிசல்டுக்காக மறுபடியும் டாக்டரிடம் வந்தார் உதவி இயக்குனர். எல்லாவற்றையும் ஆராய்ந்த மருத்துவர், “தம்பி நீங்க என்ன தொழில் செய்யறீங்க?” என்றார்.
“சார் நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன்” என்றார் உதவி.
“என்ன தம்பி. இதை முன்னாடியே சொல்லக் கூடாதா? இந்தாங்க. இதுல நூறு ரூபா இருக்கு. போயி சரவணபவன்ல வயிறாரச் சாப்பிட்டுட்டு வாங்க. எல்லாம் சரியாயிரும்” என்றார் மருத்துவர்.
செரிக்கவே செரிக்காத எத்தனையோ நிஜங்களில் இதுவும் ஒன்று. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடர்கிறது இந்த அவலம். படப்பிடிப்பு தினங்களில் மட்டும் வயிறார சாப்பிடும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் படுகிற பாடு பெரும் பாடு. உதவி இயக்குனராகச் சேர்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும் சிலருக்கு. ஊரிலிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னைக்கு வந்திருப்பார்கள். முதலில் வேறு வேலை பார்க்கப் பிடிக்காமல் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சுற்றி வரும் இவர்களைப் பார்த்தவுடனே அறிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இப்படி வந்த நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் காலம் தந்த படிப்பினையால் வீடு புரோக்கர்களாகவும், கல்யாண வீட்டில் பந்தி பரிமாறுகிறவர்களாகவும் மாறிவிட்டார்கள். இத்தனைக்கும் நடுவிலே சினிமா கனவுமட்டும் அவர்களை இன்னும் துரத்திவருவது பரிதாபமான உண்மை.

புதன், 22 டிசம்பர், 2010

குளிரினால் இத்தாலியில் இலங்கையர் மரணம் _

இத்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.
மிலான் பிரதேசத்தில் வியாபரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.

சின்னத் தீர்மானங்கள்

சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.
கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.
படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.
நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.
அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.
அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.
0000
கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.
இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
0000
இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.
தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.
இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.
00000
வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.
ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.
இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.
இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.
ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்.

மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவே

அத்தியாயம் 11
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அன்புவின் அனுபவம் ஒரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.
டைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தைச் சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.
பிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்தப் பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ம்ம்ம்.. சரிய்யா என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையைக் கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்தத் தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.
இப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஒரு காட்சி தேறும் என்பதால் அடுத்தப் பகுதிக்குப் போவோமோ?
நடிகர் நடிகைகளைக் கையாளும் விதம் :
செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்துக் காட்டியதைப் போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.
உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தைச் சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா?
ஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கிப் போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய விஷயமாகத் தெரியாது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் கிரேட்! அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா?
இன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கிப் பழகிய நடிகர் என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் முதுகைத் தட்டிப் பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டிக் கூடப் புதைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
அஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் நித்யா. படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தார் நித்யா. இந்தப் பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், நித்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.
விதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய்ப் போன விதி, நித்யாவுக்கு அவர் சொன்ன ஒரு ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்குப் போயிருந்தார் நித்யா.
சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். இவர்கள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான தூரத்தில் நின்று அதை ரசிக்கப் பழகியிருப்பார்கள் சக தோழர்கள். நித்யாவும் அப்படி ஒரு ஜோக்காளிதான்.
திருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு அப்படியே எழுந்து ஓடிப்போய் அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார் நித்யா. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றாற்போன்ற முரட்டுக் குத்து அது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்குப் போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் நித்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தைப் பார்க்க முடியவில்லை அவரால். நித்யா அஜீத்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்குப் பின் அவர் எடுத்த ‘வேதா’ என்ற படமும் ஓடவில்லை. நித்யாவுக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.
நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.
மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ஷாட் ரெடி சார். வாங்கன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம்? பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.
டைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார்.
அது அடுத்தவாரம்.

புதன், 8 டிசம்பர், 2010

ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா.'ரத்தசரித்திரம்' Part 2

இதன் பின்பு அனந்தப்பூர் மாவட்டத்தின் நிலைமை தலைகீழானது. மாவட்ட நிர்வாகமே பரிதலா ரவியின் கீழ் மண்டியிட்டுவிட்டது. அண்ணன் கண் அசைவில்லாமல் தொகுதியில் எதுவும் நடக்காது என்ற நிலைமையானது. இந்தச் சமயத்தில்தான் பரிதலா ரவியின் துப்பாக்கிச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கத் துவங்கியது என்கிறது மீடியா.

சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களும், ரமணா ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டியின் அல்லக்கைகளும் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். பலரும் கர்நாடகாவுக்குத் தப்பியோடினார்கள். உள்ளூரில் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்ற பரிதலா ரவியின் உத்தரவை அவருடைய அடிப்பொடிகள் சிரமமேற்கொண்டு செய்து வந்த தருணத்தில் எதிர்பாராத ஒரு சிக்கல் முளைத்தது. இது அவரது சொந்தக் கட்சியிலேயே..

பொதுவாகவே ஆந்திர அரசியலை நிர்மாணிப்பது ரெட்டிகளும், நாயுடுக்களும்தான். பண முதலைகளான இவர்கள்தான் ஆந்திராவின் ஆட்சியையே தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள். இப்படியொரு ரெட்டியாக அனந்தப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திகழ்ந்து வந்த ஜே.சி.பிரபாகர் ரெட்டி என்பவர் தெலுங்கு தேசக் கட்சியில் இணைய முன் வந்தார். (இப்போது இந்த பிரபாகர் ரெட்டிதான் காங்கிரஸ் அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கிறார்)

ஆனால் இவரது வருகையை பரிதலா ரவி விரும்பவில்லை. இவரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்த்தார். இந்த எதிர்ப்பை அவர் என்.டி.ராமாராவிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போது ராமாராவ் அவரது புதிய மனைவி லட்சுமி சிவபார்வதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை. ஹைதராபாத்தில் என்.டி.ஆரை பார்த்து காலில் விழுந்து கட்சியில் சேர்ந்தார் பிரபாகர் ரெட்டி.

இதனைக் கேள்விப்பட்ட உடனேயே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ரவி. ஆனால் அப்போதும் அனந்தப்பூர் மாவட்டம் அவரது முழு கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. இதன் பின்பான சமரசப் பேச்சில் ரவியின் மீதான பாசத்தில் கட்டுப்பட்ட ராமாராவ், மீண்டும் ரவியை அழைத்து பேசி, சமாதானம் செய்து அவரையே எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்க வைத்து மீண்டும் எம்.எல்.ஏ.வாக்கிவிட்டார்.
இந்த நேரத்தில்தான் சந்திரபாபு நாயுடு, லட்சுமி சிவபார்வதிக்கு எதிராக உட்கட்சிக் கலகம் செய்து முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்களைக் கடத்திக் கொண்டு போய் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் தனக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த ராமாராவுக்கு தனது முழு ஆதரவையும் நீட்டினார் ரவி.

தனது அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கிருஷ்ணன் பக்கம்தான் என்று பகிரங்கமாக அறிவித்து என்.டி.ஆருக்கு தனது நன்றிக் கடனைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக என்.டி.ஆர். திடீரென்று மரணமடைந்துவிட.. கட்சியின் கடிவாளம் லட்சுமி சிவபார்வதியின் கைகளுக்குச் சென்றது..

ஏற்கெனவே சிவபார்வதியுடன் சண்டையில் இருந்த ரவி அனந்தப்பூர் மாவட்டத்தில் மட்டும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மாநிலத் தலைமைக்கு சவால் விட்டபடியே இருந்திருக்கிறார். அவருடைய அதிருப்தி சிவபார்வதியைவிடவும் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்கு தெரிய வர.. அன்போடு அழைப்பு வந்தது ரவிக்கு..

“அனந்தப்பூர் மாவட்டத்தில் வேறு எந்த நபரும் உங்களுக்கெதிராக கொம்பு சீவி விடப்பட மாட்டார்கள்..” என்று சந்திரபாபு நாயுடு உறுதிமொழியளிக்க அணி மாறினார் பரிதலா ரவி.

1996-ல் நடந்த ஆந்திர தேர்தலில் அதே பெனுகுண்டா தொகுதியில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதே ரமணா ரெட்டியைத் தோற்கடித்தார் பரிதலா ரவி. இதன் பின்பு அடுத்தச் சுற்று பழி வாங்குதல் பணி துவங்கியது..

ரவியின் கூலிப்படை டீம் இப்போது உயிரோடியிருக்கும் தலைவர்களைக் குறி வைத்தது. முதல் பலி ஓபுல் ரெட்டி. 1996-ம் ஆண்டு ஒரு நாள். ஓபுல் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்திற்கு வந்தவர் ஹோட்டலுக்கு விலைமாதுவை வரவழைத்து குஷியாக இருந்துள்ளார். இவரது வருகையை மோப்பம் பிடித்த ரவியின் டீம் பக்கா பிளானோடு ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளது.

ஓபுல் ரெட்டி 'வேலை'யை முடித்துவிட்டு ஹாயாக குளியல் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்த டீம், விலைமாதுவை வெளியேற்றிவிட்டு ஓபுல் ரெட்டிக்காக காத்திருக்கிறது. வெளியில் வந்த ஓபுல் ரெட்டியின் தொண்டையை அறுத்ததுடன் இல்லாமல் அவரது ஆணுறுப்பையும், விதைப்பையையும் அறுத்து காக்காய்க்கு வீசிவிட்டு பறந்தோடி விட்டது. இந்தக் கொலையை நக்ஸல் இயக்கம்தான் செய்தது என்றாலும் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டார்.

இவரது கொலையில் இரண்டுவிதமான செய்திகள் கிடைத்துள்ளன. இவரது வீட்டில்தான் இந்தக் கொலை நடந்ததாகவும் சொல்கிறார்கள். உண்மை எது என்று தெரியவில்லை.

இப்போது சூரியின் டர்ன்.. தனது ஆதரவாளர்களையும், தனக்கு நெருக்கமான உறவுக்காரருமாக இருந்த ஓபுல் ரெட்டியின் மரணத்திற்கு அடுத்து ரவி தன்னைத்தான் குறி வைத்திருக்கிறார் என்பது உணர்ந்து ரவிக்கு முன்பாக தான் முந்திக் கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் அதனைச் செயல்படுத்தியவிதம் இந்த இரண்டு குடும்பங்களின் வம்ச சண்டையை அகில இந்தியாவுக்கும் எடுத்துச் சென்றது..

19.11.1997 அன்று காலை 11.50 மணி. ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ராமாநாயுடுவின் சினி ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தன கார்களின் அணிவகுப்பு. அதில் நடுநாயகமாக வந்த காரில் நடிகர் மோகன்பாபுவுடன், பரிதலா ரவியும் இருந்தார்.

தான் தயாரித்த தனது தந்தை ராமுலுவின் வாழ்க்கை சரித திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதில் தனது தந்தையாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கும் மோகன்பாபுவுடன் பேசியபடியே ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ரவி.

ரவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஸ்டூடியோவில் இருந்து 25 அடி தூரத்தில் ஒரு பழைய பியட் கார் நின்று கொண்டிருந்தது.. எமனாக நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் அது வெடிக்கப்படும் சூழலில் தயாராய் இருந்தது.

எல்லாம் சரியாக இருந்திருந்தால் பரிதலா ரவியுடன் அன்றைக்கு மோகன்பாபுவும் சேர்ந்தே இறந்து போயிருப்பார். ஆனால் எங்கும், எதிலும் முந்திக் கொள்ளும் மன நிலையை உடைய பத்திரிகையாளர்கள் செய்த ஒரு சின்ன செயலால்தான் அன்றைக்கு ரவி லேசான காயங்களோடு தப்பித்துக் கொண்டார்.

ரவியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த தெலுங்கு E டிவியின் குழு வந்த வாகனம் திடீரென்று ரவியின் வாகனத்தை முந்திக் கொண்டு முன்னால் சென்றது.. இந்த பத்து செகண்ட்டுகள் வித்தியாசத்தில் ரிமோட் கண்ட்ரோல் அழுத்தப்பட பியட் கார் வெடித்த வெடிப்பில் E டிவியின் கார் சுக்கு நூறானது.. அதில் இருந்த 6 பணியாளர்களும் இறந்து போனார்கள். அப்பாவி மக்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மரணம். 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்
மோகன்பாபுவும், பரிதலா ரவியும் சிறிதளவு காயங்களுடன் தப்பித்தது கடவுள் புண்ணியம்தான்.. ஆந்திராவே பதைபதைத்தது.. இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட போலீஸ் மட்டும் இது சூரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனுக்குடன் போலீஸ் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதுடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றியத் துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிஐடி போலீஸார் வசம் சேர்ப்பித்தனர்.

இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் எல்லாவிதமான ரெட்டிகளும் சிக்கிக் கொண்டார்கள். போலீஸின் தேடுதல் வேட்டையில் சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூரி நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி கர்நாடக போலீஸில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றம்சாட்டப்பட்டு அதில் 14 பேர் மட்டுமே பிடிபட்டார்கள். மீதியிருக்கும் 7 பேர் இன்றுவரையிலும் தேடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் சூரிய நாராயண ரெட்டிதான் முதல் குற்றவாளி.

குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் இதனை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று மாற்றித் தீர்ப்பளித்து பரபரப்பாக்கியது.

ஆனாலும் இதற்காகவெல்லாம் சூரி தரப்பு பயந்துவிடவில்லை. இதற்குப் பின்னும் படுகொலைகள் தொடர்ந்தன. கோர்ட் குற்றவாளியில்லை என்று விடுவித்தாலும் நாங்கள் விடுவதில்லை என்று துப்பாக்கிகள் ராயலசீமா மாவட்டங்கள் முழுவதும் முழங்கின. இந்த முறையும் நக்ஸல் இயக்கம் ரவியின் முன்னே நின்று கொள்ள கொலைகள் விழத் தொடங்கின.

ஹைதராபாத்தில் கொத்தபள்ளி என்னுமிடத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த இருவரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பானுகோட்டா கிஷ்டப்பா, குண்டிமாடி ராமுலு, வெங்கடேசலு, கொண்டா ரெட்டி என்ற சூரியின் ஆதரவாளர்களை அடுத்தடுத்துப் போட்டுத் தள்ளியது ரவியின் தரப்பு.. இதில் போயா நாகராஜூ என்பவர் மட்டும் இரண்டு முறை நடத்திய தாக்குதலின்போதும் தப்பித்துக் கொண்டார். ஆயுசு கெட்டி போல..

சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு என்றாலும் ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராமல் ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே.. விடலாமா? அதுலேயும் எலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த ரவி தரப்பு, இப்போது குறி வைத்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும், பெனுகுண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமணா ரெட்டியை..

1999-ல் ஹைதராபாத்தில் இருந்த ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். கட்சி விஷயமாக பேசுவதற்காக அவர்தான் வரச் சொன்னார் என்றார்கள். நானா? லேடீஸையா? என்றபடியே சந்தேகத்தோடு எழுந்து வந்த ரமணா ரெட்டியை பார்த்த மாத்திரத்தில் பர்காவை விலக்கி கைகளில் இருந்த துப்பாக்கியால் சராமரியாகச் சுட்டுத் துளைத்ததில் ரவியின் பெரிய எதிரியின் உயிரும் உதிர்ந்து போனது.

1999 தேர்தலும் வந்தது. பரிதலா ரவி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். சிறையில் இருந்தபடியே சூரி நாராயண ரெட்டி தனித்துப் போட்டியிட்டார். உயிர் மேல் இருந்த பயம் காரணமாக காங்கிரஸின் முக்கியத் தலைகள் போட்டியிட முன் வராததால் ஒப்புக்குச் சப்பாணியாக பெல்லாம் சுப்ரமணியம் என்பவரை நிறுத்தி வைத்தது காங்கிரஸ். பரிதலா ரவி  70.82 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். சூரிக்கு டெபாஸிட்டே காலியானது.

அனந்தப்பூர் மாவட்டம் கனிம வளம் நிறைந்தது.. சுரங்கங்கள் நிறையவும் உள்ளன. குவாரிகள் துவங்கி காசு பார்க்க ஆரம்பித்த நேரத்தில் பரிதலா ரவியின் சொத்துக்களும் கூடத் துவங்கின. ரவிக்குத் தெரியாமல் எந்த அரசு கான்ட்ராக்டும் மாவட்டத்தில் யாருக்குமே கிடைக்காது. அவர் கண் ஜாடை காட்டினால்தான் மாவட்ட நிர்வாகமே நடக்கும் என்ற நிலைமையில் இதெல்லாம் சகஜம்தானே..

கர்நாடகாவிலும் அனந்தப்பூரை ஒட்டிய மாவட்டங்களிலும், ஊர்களிலும் நக்ஸல்கள் குரூப்பை வைத்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டார் ரவி. இந்த நேரத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு 300 கோடி இருக்கும் என்கிறார்கள்.

சிறைக்குள் இருந்தாலும் ரவியைப் போட்டுத் தள்ளும் முடிவில் மாற்றமில்லை சூரியிடம். ரவியின் வீட்டின் மீது குண்டு வீசித் தாக்குதல் தொடுக்கும் விதமாக ஒரு நடவடிக்கையையும் அப்போது சூரி செய்திருக்கிறார். இதுவும் காவல்துறையில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாவது குற்றவாளி யார் தெரியுமா? ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி.

ரவியைத்தான் போட முடியவில்லை. அவரது ஆட்களையாவது துப்பரவு செய்து அகற்றுவோம் என்ற நினைப்பில் ரவியின் ஆட்கள் மூவரை வெங்கடபுரம் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் சூரியின் ஆட்கள். இப்போதும் தெலுங்கு தேசம் ஆட்சிதான்.

அதேபோல் ரவியும் சூரியை சிறையிலேயே போட்டுத் தள்ளவும் செட்டப் ஆட்களை அனுப்பி வைத்து ஆழம் பார்த்திருக்கிறது. இதை போலீஸும், உளவுத்துறையும், சிறை நிர்வாகமும் கண்டறிந்து சூரியை மிகப் பாதுகாப்பான பகுதியில் வைத்து அடைத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஒருவேளை சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வரும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்து மிகப் பெரும் செக்யூரிட்டியோடுதான் சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அம்பிகா கதை, வசனத்தில் நடிக்கும் 'மிஸ் கேரளாவின்' தம்பி!

Indu Thambyமிஸ் கேரளா பட்டம் வென்றவரான மாடல் அழகி இந்து தம்பி, அந்தக் காலத்து ஹீரோயின் அம்பிகாவின் கதை, வசனத்தில் உருவாகும் புதிய மலையாளப் படத்தில் நாயகியாக அவதாரம் எடுக்கிறார்.

இந்த ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் வெற்றி பெற்றவர்தான் இந்து தம்பி. அப்படியே மலையாள முகம் இந்து தம்பிக்கு. இப்போது இவர் சினிமாவுக்கு வந்துள்ளார். அனபேலா என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் நாயர் என்பவர் கதை எழுதியுள்ளார். அர்ஜூன் நாயர் தயாரிக்கிறார். அம்பிகா வசனம் எழுதுகிறார். படத்தை இயக்குவதும் அம்பிகாதான்.

படம் முழுக்க புதுமுகங்கள்தானாம். தென் இந்திய மீடியா என்ற பெயரில் இப்படத்தை அம்பிகா உருவாக்குகிறார். அர்ஜூன் நாயரும், அம்பிகாவின் தம்பி என்பதால் இது அம்பிகாவின் சொந்தப் படமாக உருவாகிறது.

மலையாள முத்திரை இருந்தாலும், இந்து தம்பியை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மாதுரி தீட்சித் போலவே இருக்கிறது. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் திரிஷா போல தெரிகிறது. நயனதாராவின் சாயலையும் காண முடிகிறது. இப்படி பல கலவையாக இருக்கும் இந்து தம்பி, மிக விரைவிலேயே தென்னிந்திய திரையுலகைகக் கலக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு மலையாளத்தில் அறிமுகமானாலும் இந்து தம்பியின் உண்மையான இலக்கு தமிழாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஹீரோக்களே ரெடியாகிக்கோங்க!
English summary
Miss Kerala 2010 Indu Thamby forays into Cinema through Anabela, a Malayalam movie, penned by yesteryear Actress Ambica. Anabela is the directorial debut of Ambica and her brother Arjun Nair produces the movie.

13 புதுமுகங்களுடன் களமிறங்கும் செல்வா!

Naan Avan Illaiநான் அவனில்லை படத்துக்குப் பிறகு 13 புதுமுகங்களுடன் களமிறங்குகிறார் இயக்குநர் செல்வா.

நாங்க என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை நிகழ்காலத்தில் துவங்கி எண்பதுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 13 பேரில் 5 பேர் இந்தப் படத்தின் ஹீரோக்கள். நான்கு ஹீரோயின்கள், இரண்டு வில்லன்கள், இரண்டு காமெடியன்கள்.

இதுகுறித்து செல்வா கூறுகையில், "புதியவர்களை அறிமுகப்படுத்துவது எனக்குப் புதிதில்லை. அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து தொடர்கிறது. இப்போது அறிமுகமாகவிருக்கும் 13 பேருமே இதே துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது", என்கிறார்.

இந்தப் படம் செல்வாவின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Naan Avan Illai fame director Selva is going to introduce 13 new faces in his forthcoming film Naanga. Among these 13 faces, 4 new heroines, 5 heroes, 2 villains and 2 comedians and remember this is Selva"s 25th film. The story revolves around an alumni meeting of friends in a college, who travel back to their college da

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் : இலங்கை மின்சாரசபை!

 
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.மின்சாரசபை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மின்பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டப்பணம் மூலம் 12.5 மில்லியன் ரூபாய் மின்சாரசபைக்கு கிடைத்துள்ளது.

இதனால் மின்சாரசபைக்கு நாளொன்றுக்கு 6 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறான மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்டப்பணத் தொகையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை திடீர்சோதனைப் பிரிவின், 1987 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

JeganMohan Reddy:காங்கிரசை அழிப்பேன்: ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை என, ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, அக்கட்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தனது எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் தந்தை இறந்த போது, ஏராளமான கட்சி தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். அவர்களை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை துவங்கினேன். இதற்கு கட்சி மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும், யாத்திரையின் நோக்கத்தை வலியுறுத்துவதற்காக டில்லி சென்றேன்.

சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆந்திராவுக்கு திரும்பிய நான், யாத்திரையை தொடர்ந்து நடத்தினேன். இந்த விவகாரத்தில் தான், கட்சி மேலிடத்துக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. தொடர்ந்து என்னை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தன. என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற, நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக, என் குடும்பத்தினரையும் பிரிக்க முயற்சித்தனர். இதனால் நானே கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன்.என் பலம் என்ன என்பதை நிரூபித்து காட்டுவேன்.

இன்னும் 45 நாட்களுக்குள் புதிய கட்சியை துவங்குவேன். அந்த கட்சி, ஆந்திர மக்களை பெருமைப்படுத்தும் கட்சியாக இருக்கும். ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் என் கட்சி கொடி பறக்கும்.இன்னும் மூன்று ஆண்டுக்குள் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழித்து காட்டுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெ சொல்கிறார்

Jayalalithaசென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் ராசாவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த விவகாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயங்க மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதே போல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி.

இளைஞன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி கலந்து கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக ரூ. 45 லட்சம் தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை செய்த முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த திரைப்பட நிகழ்ச்சியை பயன்படுத்தினார் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை ஒரு புராணக் கதையுடன் ஒப்பிட்டு, இத்தனை கோடி ரூபாய் ஊழலை ராசா ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியாது என்ற வகையில் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

இது கலப்படம் இல்லாத உண்மை! கருணாநிதி, அவருடைய மகள் கனிமொழி மற்றும் சிலரும் இந்த சுரண்டலின் பங்குதாரர்கள் என்பதை தானே ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியைப் போலவே அவரது அறிக்கையும் வில்லங்கமாகவே உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக அச்சுறுத்துவது போல் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவை நெருக்கிப் பிடிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட தயங்க மாட்டேன் என்று எச்சரித்து இருக்கிறார் கருணாநிதி.

இது போன்று உண்மையை வெளியிடுவதை காங்கிரஸ் விரும்பாது என்பது தான் இதன் பொருள். வழக்கம் போல், கருணாநிதி கூட்டணிக் கட்சியை மிரட்டும் பாணி தான் இது.

மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலகியது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு முடிவல்ல. நாட்டிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த இமாலய ஊழல் நடைபெற்றதில் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் எவ்வளவு?. யார், யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது குறித்த உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது. நாட்டிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி விசாரணை நடைபெற வேண்டி இருக்கிறது. நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அந்த நீதி அனைவருக்கும் தெரியும்படி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரே வழி நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தான். இதைத் தான் எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

ஆனால், மத்திய அரசு இதை அமைக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசாங்கம் தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வராததன் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக நாடாளுமன்றம் நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதை எந்த அளவுக்கு எதிர்க்கிறதோ, அந்த அளவுக்கு இந்தப் பிரச்சனை நின்றுவிட வில்லை என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

உண்மையை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசார ணையைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு ஒப்புக் கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது.

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும், என்ற எனது கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து பதில் அளிக்கும் விதமாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இருந்து, பதவியை ராஜினாமா செய்தபோது, அவர்களை மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாரா? என்று ஒரு பொருத்தமற்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கருணாநிதி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் இது போன்ற சூழ்நிலை யாருக்கும் எழவேயில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதற்கிடையே, இந்த ஊழலுக்குப் பின்னால் அதிக நபர்கள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளதால், அவரே தானாக முன் வந்து உண்மையை ஒப்புக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். இதன்மூலம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய தர்மசங்கடத்தை தவிர்க்கலாம்.

முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் பட்டப் பகலில் பல பேர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்பாக மதுரையில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு, அதன் காரணமாக மூன்று அப்பாவி ஊழியர்கள் இறந்தனர். மதுரைக்கு அருகே ஒரு லாரி ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அனைத்து குற்றங்களுக்கும் மூளையாக செயல்பட்டவர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். அந்தக் குற்றவாளியை காப்பாற்றியவர் தானே கருணாநிதி?.

இல்லையெனில், மேற்படி வழக்குகள் அனைத்தும் தீர்க்கப்படாத வழக்குகளாக இன்னமும் காவல் துறை பதிவேடுகளில் ஏன் இருக்கின்றன?. ராசா மற்றும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் நடந்த இடம் தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியல்ல, டெல்லி என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும்.

புகார்தாரர்களையும், சாட்சிகளையும் பிறழ் சாட்சிகளாக மாற்றி, தன் சொல்படி கேட்க வைக்க முடியாது. இந்த செயலற்ற நிலை தான் கருணாநிதியை அறிக்கைகளை வெளியிடச் செய்திருக்கிறது. ஏனெனில், தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்குத் தெரியும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆந்திர காங். எம்எல்ஏக்களுக்கு ரோஜா சவால்

ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற காங்.எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட தயாரா என, நடிகை ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, ராஜசேகர ரெட்டி சுய மரியாதை மிகுந்தவர். இதேபோல் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும், சுயமரியாதை மிக்கவர். யாருக்குப் பணிந்து செல்ல மாட்டார். காங்கிரஸ் மேலிடம் கீழ்மட்ட தலைவர்களை அடிமைபோல் நடத்துகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவிய ஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து ஆந்திராவை சீர் குலைத்தது தான் காங்கிரசின் சாதனை.

கடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா?

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பெயரைச் சொல்லி ஆந்திர பொதுமக்களிடம் ஓட்டு கேட்க தைரியம் உள்ளதா? தற்போது மாநில, மாவட்ட, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு விலகி ஜெகன்மோகன் ரெட்டி பக்கம் வந்து விட்டார்கள்.

தேர்தலின் போது காங்கிரசுக்கு வாக்குசாவடி ஏஜெண்ட் நியமிக்க கூட ஆள் இல்லை என்பது தான் உண்மை. அடுத்த தேர்தலில் பீகாரில் ஏற்பட்ட நிலை தான் ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: 2001லிருந்தே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு-பாஜக வேடம்

Vajpayee டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மேலும் விரிவாக விசாரிக்கும் வகையில், கடந்த 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், என்ன நடந்தது என்பதையும் சேர்த்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்போது ராஜா செய்தது போல, அப்போதும், முதலில் வருவோருக்கே உரிமம் என்ற முறையைத்தான் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில்,

இந்த வழக்கில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மட்டும் பிரச்சனை எழவில்லை. மாறாக அதற்கும் மேலும் என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும். இந்த வழக்கின் விசாரணையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

இருப்பினும், பிரச்சனையின் ஆழத்தை மேலும் விரிவாக ஆராயும் வகையில், கடந்த 2001ம் ஆண்டு (பாஜக ஆட்சியில்) என்ன நடந்தது என்பதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை சிபிஐதான் விசாரித்து நடந்ததை வெளியே கொண்டு வர வேண்டும் என்றனர்.

மேலும் இந்த வழக்கில் தீர்ப்பையும் ஒத்தி வைத்தனர்.

நீதிபதிகளின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், 2001ம் ஆண்டு பாஜக ஆட்சியில் என்ன கொள்கையை தொலைத்தொடர்புத்துறை கடைப்பிடித்ததோ, அதையேதான் நானும் பின்பற்றினேன் என்று முன்னாள் ராசா தொடர்ந்து கூறி வருகிறார்.

பாஜகவின் 'உத்தமர் வேடம்' கலையும்?:

இந் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு ராசாவுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரும் பிரச்சனையாக்கி, 'உத்தமர் வேடம்' போட்டு வரும் பாஜகவுக்கு இது பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

2001ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது ஏலம் நடத்துவதற்குப் பதில், முதலில் வருவோருக்கு உரிமம் என்ற கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறையின் அமைச்சரான மறைந்த பிரமோத் மகாஜன் தான் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வி்ற்பதில் முக்கிய முடிவுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக அப்போதே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. (பிரமோத்தை சுட்டுக் கொன்ற அவரது அண்ணன் பிரவீன மகாஜனுக்கு ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் மாதம் ரூ. 5 லட்சம் வரை ஊதியம் தந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கு என்ன வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவில்லை).

மேலும் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையும் வகுக்கப்பட்டது. அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான லைசென்ஸ் கட்டணம், லாபத்தி்ன் அடிப்படையிலான கட்டணமாக மாற்றப்பட்டது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பலன் கிடைத்தது. ஆனால், நாட்டுக்கு பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டது.

மேலும் மகாஜன் அமைச்சராக இருந்தபோது தான் ரிலையன்ஸ் நிறுவனம் லைசென்ஸ் கட்டணத்தையே செலுத்துவதற்கு முன் நாடு முழுவதும் சேவையைத் தொடங்கவும் அனுமதி தரப்பட்டது.

பின்னர் மகாஜன் பதவி விலகி தொலைத் தொடர்பு அமைச்சரானார் அருண் ஷோரி. இதையடு்த்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அமைச்சரவையில் தயாநிதி மாறன் இந்தத் துறையின் அமைச்சரானார்.

அவரைத் தொடர்ந்தே ராசா தொலைத்தொடர்பு அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் 19வது நாளாக ஒத்திவைப்பு:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 19வது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும், வாரணாசி குண்டுவெடிப்பில் பலியான சிறுமிக்கும், தமிழக மழை வெள்ளத்திற்குப் பலியானவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிட நேரம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதையடுத்து இரு அவைகளிலும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் வழக்கம் போல ஜேபிசி விசாரணை தேவை என்ற கோஷத்துடன் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் குதித்ததால் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து முதலில் பிற்பகல் வரையிலும், பின்னர் நாள் முழுமைக்கும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் முடங்கி இன்றுடன் 19 நாட்களாகிறது. இதனால் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட ஒரு அலுவலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
SC today asked CBI to look into What happened in 2001 during the NDA regime in 2G Spectrum allocation. SC favours widening of the ambit of the ongoing probe into the 2G Spectrum case. It is noted that, during NDA period, first-come-first-served was the norm for Spectrum allocation.