சனி, 9 அக்டோபர், 2010

பொன்சேகா விவகாரம்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் தீர்ந்துவிடும் : பிரதமர் டி.எம். ஜயரட்ன

சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாகும். சிவில் சட்டத்தை மீறியது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையை மாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாதென பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று  சபையில் தெரிவித்தார். சரத் பொன்சேகா விடயத்தில் தவறான வழிகளைப் பின்பற்றாது ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினால் இந்தப் பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
ரவி கருணாநாயக்க எம்.பி முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது; இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமானதாகும். பாராளுமன்றத்தினுள் மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள் தொடர்பிலே சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. சாதாரண குடிமகனுக்குள்ள சட்டமே எம்.பி. தொடர்பில் உள்ளது. குற்றவியல் சட்டத்தை மீறும் எம்.பி ஒருவரை பாராளுமன்றத்தைத் தவிர வேறு எங்கு வைத்தும் கைது செய்ய முடியும். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதிருக்கவும் சட்டத்தில் இடமுண்டு. அந்த எம்.பி.யை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது.
மக்களின் கவனத்தை திருப்பவே ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் இந்த விடயத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதை விடுத்து தேங்காய் உடைப்பதால் எதுவித பயனும் ஏற்படாது.
பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கு பொதுமக்களின் பெருமளவு பணம் செலவாகிறது. ஒரு வசனத்தில் சாதிக்கக் கூடிய விடயத்தை ஏன் பெரிது படுத்துகிஅர்கள். மன்னிப்புக்கோரும்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்சேகாவின் மனைவியை கேட்க முடியும்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம்

கே. கே. எஸ். ரயில் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பம் : இந்திய உயர் ஸ்தானிகர்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் கூறினார்.யாழ். மாநகர சபையில் இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ்.
மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக் கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்க ளின் போக்குவரத்துச் சேவைகளை முன் னெடுக்கக் கூடியதான உதவிகளை இந் தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மன் னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமை த்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை - இந்திய நட்புறவின் சின்ன மாக இங்கே பல்வேறு உதவித் திட்டங் களை நடைமுறைப் படுத்தவுள்ளோம். மீள் குடியமர்ந்த மக்க ளின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

பழநியில் குட்டியுடன் கிணற்றில் விழுந்த யானை: 10 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்பு

பழநி அருகே, கிணற்றில் விழுந்த குட்டியானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையும் விழுந்தது. தத்தளித்த யானைகள், பத்து மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகளில், தற்போது வாழை, கொய்யா, கரும்பு சாகுபடி நடக்கிறது. வனப்பகுதியில் உள்ள யானைகள், அவ்வப்போது தோட்டத்திற்கு வந்து செல்வது வழக்கம். மூலக்கடை ராமசாமி தோட்டத்தில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, ஒன்பது யானைகள் கூட்டமாக வந்தன. பிற யானைகள் வனத்திற்குள் சென்றபின், ஒரு குட்டி ஆண் யானை, தாய் யானையுடன் விளையாடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் யானைக்குட்டி, கிணற்றில் தவறி விழுந்தது. காப்பாற்ற முயன்ற தாய் யானையும், கிணற்றுக்குள் விழுந்தது. 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால், வெளியேற முடியாமல் தத்தளித்தன. யானைகளின் பிளிறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பிற கிணறுகளில் மின்பம்ப் அமைத்து, பைப்-லைன் மூலம் கிணற்றில் தண்ணீர் நிரப்பப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, மண் அகற்றும் இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டில் 10 அடி ஆழம் வரை சரிவான பாதை அமைத்து, யானைகளை மீட்க முயற்சி நடந்தது.

மேலும் 20 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில், காலை 7 மணிக்கு குட்டியானை மட்டும் கிணற்றில் இருந்து வெளியேறியது. தாய் யானை முட்டித்தள்ளி இதற்கு உதவியது. தரைப்பகுதிக்கு வந்து துள்ளிக்குதித்த குட்டியானை, வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இருப்பினும் அதே வழியில் தாய் யானையால் ஏற முடியவில்லை. பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர், யானையின் வால்பகுதியில் கயிற்றை கிணற்றில் வீசி கோர்த்து இழுத்தனர். மிகுந்த சிரமத்துடன் காலை 8.45 மணிக்கு மீண்ட தாய் யானை, தரைக்கு வந்ததும் சந்தோஷத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது.

மாவட்ட வன அலுவலர் தங்கராஜ் கூறுகையில், "வனப்பகுதியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள், கிணறுகளை விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வனத்துறை சார்பில் ஒன்பது கி.மீ.,க்கு சூரிய மின்வேலியும், ஒரு கி.மீ.,க்கு அகழி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கான இடம் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை,'என்றார்.

முதலமைச்சர் கருணாநிதி : ஊசியினாலேயே அந்த ஊசியைக் கொடுத்த பெரியவரின் கண்ணைக் குத்தினார்

முதலமைச்சர் கருணாநிதி இன்று (8-10-2010) மத்திய ஜவுளித் துறையின் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர், ‘’இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த விழாவிலே கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். மகிழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம், இந்த விழா கைத்தறியையும் இணைத்து முன்னேற்றுகின்ற ஒரு திட்டத்தோடு நடைபெறுகின்ற விழா என்பதாலும், இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழகத்திலேதான் இந்தத் திட்டம் தொடங்கப்படுகின்றது என்பதாலும் ஏற்படுகின்ற மகிழ்ச்சியாகும்.
ஒருவர் எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டபோது, ஒரு பெரியவர் ஒரு ஊசியை எடுத்துக் கொடுத்து, “இந்தா, இந்த ஊசியை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்’’ என்று சொன்னார். அவர் அந்த ஊசியைப் பார்த்தார். ஒரு பக்கத்திலே ஒரு துவாரம் இருந்தது. இருந்தாலும், அந்த ஊசியைப் பயன்படுத்துகிற அறிவு இல்லாத காரணத்தினால், அந்த ஊசியினாலேயே அந்த ஊசியைக் கொடுத்த பெரியவரின் கண்ணைக் குத்தினார். அப்படி ஊசி அவருக்குப் பயன்பட்டது.

இப்படி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் நாட்டில். யார் ஊசி கொடுத்தாலும், கொடுத்தவருடைய கண்ணையே குத்துகின்ற ஆட்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். அப்படி ஊசி கொடுத்தவருடைய கண்ணையே குத்தியவன் அவன்.

இன்னொருவனிடத்திலே ஊசி கிடைத்தது. அவன் உற்று உற்றுப் பார்த்தான் ஊசியை. அந்த ஊசிக்கு ஒரு காது இருந்ததைப் பார்த்தான். அதிலே ஒரு நூலைக் கோர்த்து தைக்க ஆரம்பித்தான். எத்தனையோ உடைகளை தைத்தான். தைத்து, தைத்து அந்த ஒரு ஊசியால் அந்த ஊரிலேயே ஒரு பெரிய வியாபாரியாக ஆனான் என்பது பழைய கதை. (கைதட்டல்)
நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர். குறிப்பிட்டதைப் போலவும், நம்முடைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் எடுத்துக் காட்டியதைப் போலவும், இந்தியாவிலே விவசாயத்திற்கு அடுத்ததாக இருப்பது ஜவுளித் துறை. ஜவுளித் துறைக்கு அடிப்படையாக இருப்பது கைத்தறித் துறை. கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும், இந்தத் துறைதான் அடிப்படையாக உள்ள துறை என்பதை எவரும் மறுத்திட இயலாது.

அதனால்தான், கைத்தறியை வளர்க்க வேண்டும், கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு பெருக வேண்டும், இந்தியா முழுவதும் கைத்தறிக்கான சந்தை வளர வேண்டுமென்ற எண்ணத்தோடு எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள், கைத்தறித் துணிகளை மக்கள் வாங்குவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்த, அவரே முன்னின்று அவரும், எங்களைப் போன்ற கழகத்தினுடைய முன்னணியினரும் முன்னின்று; கைத்தறித் துணிகளைத் தோளிலும், தலையிலும் சுமந்து ஊர் ஊராக விற்று, அப்படி விற்ற காரணத்தால், கைத்தறித் துணிகளை வாங்க வேண்டுமென்ற உணர்வு நம்முடைய மக்களுக்கு ஏற்பட்டு, கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு வளர்ந்தது.

எப்படி கதரையே கட்டவேண்டும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு அன்றைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்த உறுதியை மேற்கொண்டு அவர்களும், இன்று வரை கதராடையை அவர்களுடைய உடைகளாக அமைத்திருக்கிறார்களோ, அதைப்போல, இங்கே வாசன் அவர்களைக்கூட பார்க்கிறீர்கள்.

வாசன் அவர்களுடைய தந்தையார் - என்னுடைய அருமை நண்பர் மறைந்த மூப்பனார் அவர்கள் கதராடையோடுதான் வருவார்; அதிலே அவர் அழகாகத் தோன்றுவார். ஏற்கெனவே வசீகரமான மூப்பனார் அவர்களை, கதராடையோடு தோன்றும்போது பார்த்தால், எனக்கே மேலும் மேலும் அவர்மீது பற்றும், பாசமும் ஏற்படும். ஏனென்றால், அவர்களுடைய இயக்கத்தில் எதை உடையாக அணியவேண்டுமென்று கருதுகிறார்களோ, அந்த உடையை அணிந்து வருவார் மூப்பனார் அவர்கள். அவருடைய செல்வன் நம்முடைய வாசன் அவர்களும், எப்போதும் அதே உடையில் வருகிறார்.

இங்கே பரிதி இளம்வழுதி சொன்னார். ஒரு கோரிக்கை வைத்தார். என்ன கோரிக்கை என்றால், நானும், நம்முடைய தயாநிதி மாறனும் நிறைவேற்ற வேண்டுமென்று கைத்தறி நெசவாளர்களுக்கென்று ஒரு கோரிக்கை வைத்தார்.

நான் அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். “தயவு செய்து இனிமேல் நீ தொடர்ந்து கைத்தறியையே கட்டு’’ என்ற ஒரு கோரிக்கையை (பலத்த சிரிப்பு) நான் அவருக்கு வைக்கிறேன். வாய்ச்சொல் மாத்திரம் போதாது. எதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமேயானால், செயல்படுத்த வேண்டுமேயானால், அதன்படி நாம் நடந்து காட்ட வேண்டும். கேட்டால் சொல்வார்.

“நான் வேட்டி கட்டினால்தானே கைத்தறியை உடுத்த முடியும். பழைய காலத்தில் சட்டசபையில் என்னுடைய வேட்டிக்கே ஆபத்து வந்த காரணத்தினால்தான், (சிரிப்பு)

நான் இந்த பேண்ட் போட ஆரம்பித்தேன்’’ என்று சொல்லக்கூடும். இப்போது அந்த ஆபத்து இல்லாத காலத்தில் கூட ஏன் அதையே கடைபிடிக்க வேண்டும். ஆக, ஆபத்து இல்லாத காலத்தில் கைத்தறி கட்டினால் பரவாயில்லை என்ற உறுதி, உடையிலே கூட என்ன உறுதி; மற்றோர் - அனைவரும் வியப்படைந்து பாராட்டுகின்ற, போற்றுகின்ற முறையிலே நான் இந்த விழாவில் நம்முடைய தோழர்கள் மாத்திரமல்ல.

தமிழர்கள் அனைவருமே, கைத்தறியாளர்களும் தமிழர்கள்தான்; அவர்களுடைய வாழ்வும் நம்முடைய வாழ்வுதான் - அந்த வாழ்வு சிறக்க அனைவரும் கைத்தறி ஆடையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு வாழ்வு அளிப்போம் என்ற உறுதியை இதுபோன்ற விழாக்களிலே மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு; மத்திய அரசின் மூலமாகப் போடப்பட்டுள்ள இந்தத் திட்டம் - அந்தத் திட்டத்திற்குத் துணையாக தமிழக அரசும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இந்தப் பயிற்சி பெறுகின்ற ஒவ்வொருவருக்கும், 2000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, இதிலே தமிழகம், மத்திய சர்க்கார் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், பிரித்துப் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கட்டும்; ஒன்றாக இருக்கும் நாம், ஒன்றாகவே பார்ப்போம் என்று கூறி இந்த அருமையான விழாவை ஏற்பாடு செய்த தம்பி தயாநிதி மாறனுக்கும், இதிலே கலந்து கொண்டவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து விடைபெறுகின்றேன், வணக்கம் !

கலர் கலரா கண்ணாடி போட்டு நடித்தால் பெரிய நடிகராகி விட முடியாது-திலகன்

கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. அப்படி செய்தால் அவர் பெரிய சூப்பர் ஸ்டாரா?. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் மலையாள நடிகர் திலகன்.

மலையாளத் திரையுலகின் மிகப் பெரிய கலைஞர் திலகன். நடிப்பில் அரை சத ஆண்டுகளைக் கடந்தவர். ஆனால் அவரை ஒதுக்கி ஓரம் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மலையாளத் திரையுலகம். இயக்குநர் [^] வினயனின் படத்தில் நடிக்கக் கூடாது என்று தாங்கள் போட்ட தடையை திலகன் மீறி நடிக்கப் போய் விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகனை தீண்டாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறது மலையாள நடிகர் சங்கமான அம்மா.

தன் மீதான இத்தனை நடவடிக்கை [^]களுக்கும் மம்முட்டிதான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் திலகன். அத்தோடு மட்டுமல்லாமல், மோகன்லால், திலீப் என அத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களும் எனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து நடிகர் சங்கம் ஒதுக்கி வைத்திருந்தால் தற்கொலை செய்வேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

தன்னை மலையாளப் படவுலகம் ஒதுக்கி வைத்து விட்டாலும் இன்னும் தனது லட்சியத்தில் குறைவில்லாமல் படு திடமாகவே இருக்கிறார் திலகன். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே?

உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும். அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இப்போது சொல்கிறேன்... கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி [^] சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.
ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள்.

கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.

கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். கூடவே என்னை "அம்மா'வில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள்.

சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள்.

தற்கொலை செய்வேன் என்று நான் கூறியது மிரட்டல் இல்லை. உண்மை. எனக்குள் இருக்கும் கலைஞன் தினமும் புதுப் புது வேஷம் தேடி ஏங்குகிறான். அந்தப் பசியை நான் போக்கா விட்டால் அவன் செத்து விடுவான். இந்தக் கலைஞன் செத்த பிறகு திலகன் என்ற வெற்று உடம்பு வாழ்ந்து என்ன பயன்?

நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்று பொறுமித் தள்ளி விட்டார் திலகன்.
பதிவு செய்தவர்: ஸ்டாலின்
பதிவு செய்தது: 08 Oct 2010 7:06 pm
ஒரு நல்ல நடிகர் திலனுக்கே இப்படி தடை போட்ருக்காங்க. இங்கே அசினுக்கு என்ன தடை செய்ய போகிறது நம்ம நடிகர் சங்கம்?

பதிவு செய்தவர்: முத்து
பதிவு செய்தது: 08 Oct 2010 6:55 pm
பாவம் ஒரு நல்ல நடிகனை இந்தளவுக்கு புலம்ப விடுவது தவறு. எனக்கென்னவோ திலகன் கலை கலை கண்ணாடி என்று சொல்லுவது நம்மூரு விஜய்யைத்தான் என்று தோனுகிறது!

எந்திரன் பற்றி அவதூறு... நாளிதழ்களுக்கு சன் நோட்டீஸ்

Rajinikanth and Aishwarya Rai
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, பிரபலமான தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம்.

இந்த நாளிதழ்கள் படம் பற்றிய கருத்தைச் சொல்லாமல், படத்தை தனிப்பட முறையில் தாக்கி வருவதாகவும், மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும்படி தூண்டும் விதத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சென்னை நகரில் இன்று வரை 42 அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன். ஆனால் அந்த ஆங்கில நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே அதாவது ஞாயிற்றுக்கிழமை கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது. இது பொறாமையால் வெளியிடப்பட்ட செய்தியே.

குறிப்பிட்ட அந்த தமிழ் நாளிதழ், படத்துக்கான மார்க்கெட்டிங் உள்ளிட்ட பலவற்றை குறை சொல்லியிருந்தது. உண்மையில் அனைத்தையும் சட்டப்படியும் திரையுலக விதிகளுக்கு உள்ளிட்டும்தான் நாங்கள் செய்திருக்கிறோம், என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இரு நாளிதழ்களும் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை நாட வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
பதிவு செய்தவர்: thruth
பதிவு செய்தது: 08 Oct 2010 6:49 pm
விசிட் savukku dot net

பதிவு செய்தவர்: ஈவிரா நாயக்கன்
பதிவு செய்தது: 08 Oct 2010 6:45 pm
கதையே இல்லாமல் ஒரு படம் எடுத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார்கள்...

பதிவு செய்தவர்: Latest
பதிவு செய்தது: 08 Oct 2010 6:38 pm
Latest news: Chandran - cancelled Night show (7-Oct) due inadequete audience, Baby Albert - Cancelledd Night show (7-Oct) due to inadequte audience)

பதிவு செய்தவர்: Unmai
பதிவு செய்தது: 08 Oct 2010 6:30 pm
check Oct 1st Dinakaran paper and Oct 8th Dinakaran paper (outcut chennai), 15 theateres reduced (Thiruthani - (3 -1), Kaanchi (5 -2), Chrompet (2 -1), Koyambedu (5-1), Kolathur (2-1)

பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 08 Oct 2010 6:24 pm
ரகு நீ வாய முடூ நீ பாநீத்

பதிவு செய்தவர்: Nijam
பதிவு செய்தது: 08 Oct 2010 6:19 pm
Enthiran released 4 screens in koyambadu rohini comples, now it is running only one screen, it is not even get house full (only 300 peoples watched for evening show) Enthiran was released in Vigneshwara Poonemelli, now Enthiran is gone , English moview is running (Enthiran Kirukkan) Enthiran released 2 theateres in Devi Karumari (Virugambakkam), now it is running one screen with less crowd Only 6 shows got house full in SSR Pankagam, other shows got less than 30% crowd

பதிவு செய்தவர்: ragu
பதிவு செய்தது: 08 Oct 2010 6:16 pm
படம் குப்பை என்று எல்லா பக்கம் இருந்தும் செய்திகள் வந்தாச்சு ,....கேக்கிறவன் கேனயனாக இருந்தால் ஒசாமா இந்திரன் படத்தை பார்த்தார் என்று சொல்வர்கலாம் ..இங்கே திருநெல்வேலியில் 01 அக்டோபர் 3 வது சோவே எம்ட்டியாக இருந்தது (ரத்னா & pvt )

பதிவு செய்தவர்: Unbelievable
பதிவு செய்தது: 08 Oct 2010 6:09 pm
Man. These many people with too many red chips??? They couldn't appreciate a different movie with latest technology. Well what else you can expect from us (tamilians (tamil nandu kathai theriyumaa)??

பதிவு செய்தவர்: மாயா
பதிவு செய்தது: 08 Oct 2010 6:03 pm
தமில்ஸ் ப்ளீஸ் வாட்ச் on you tube"Tamil Eelam Airlines lands in london airport.

பதிவு செய்தவர்: விசு
பதிவு செய்தது: 08 Oct 2010 5:51 pm
நண்பர்களே. ஒரு வேண்டுகோள். நாட்டில் எவ்வளவோ நடக்கிறது. எந்திரன் படம் ஓடாவிட்டால் கலாநிதி உங்களிடம் நழ்ட இடு கேட்கப்போவதில்லை. நன்றாக ஓடினால் உங்களிடம் லாபத்தை பங்கு போடபோவதும் இல்லை. பின்பு எதற்காக நாம் ஒருவரை ஒருவர் வசை பட வேண்டும். சிந்தியுங்கள்!!!!
பதிவு செய்தவர்: ரஜினி
பதிவு செய்தது: 08 Oct 2010 6:36 pm
GOOD விசு..
பதிவு செய்தவர்: verdict
பதிவு செய்தது: 08 Oct 2010 5:35 pm
endhiran may be above average in A center but below average in B & c centre..pls accept this verdict
பதிவு செய்தவர்: rajin fan
பதிவு செய்தது: 08 Oct 2010 5:38 pm
then how come boss (alias) baskaran still running houseful in two therates in rohini complex..why family audience going there ?
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 08 Oct 2010 5:59 pm
எந்திரன் running MORE THAN 40 THEATRES BUT BES IS RUNNING FEW THEATRES SO PLS DONT COMPARE மலை with ம்டு

பதிவு செய்தவர்: Truth
பதிவு செய்தது: 08 Oct 2010 5:30 pm
சன் டிவி ஏன் இப்படி சீப் விளம்பரம் செய்றாங்க என்று தெரியவில்லை .அவர்கள் ரஜினிஇன் இமேஜை கேடுக்குரர்கள் .Tickets are available in all theaters in all shows in Chennai.SUN Tv dont do cheap advertisement.In US, what they are saying is wrong.This movie is not a super hit movie and not in boxoffice list.So,the news paper news are true.
பதிவு செய்தவர்: raja
பதிவு செய்தது: 08 Oct 2010 5:47 pm
truth change your id to lies , ur not reading any media news nor watching news , endhiran is biggest hit.
பதிவு செய்தவர்: unmai
பதிவு செய்தது: 08 Oct 2010 5:57 pm
The Grand verdict is out.Endhiran/Robot's 7days collections are totalling >300Cr.Because of Tax hassles distributors/exhibitors are interested only in declaring 3/4th. that figure.Critical morons with red chip inside are dead.Long live Rajini & his fans.

பதிவு செய்தவர்: நிஜாம்
பதிவு செய்தது: 08 Oct 2010 5:28 pm
எந்த பொறம்போக்கு பேப்பர் அது .நாய்

பதிவு செய்தவர்: tamil
பதிவு செய்தது: 08 Oct 2010 5:28 pm
டை.....இந்த படம் உலகறிந்த மெகா ஹிட் படம்........ உங்களுக்கு ஏன் இந்த எரிசேல்....

பதிவு செய்தவர்: asd
பதிவு செய்தது: 08 Oct 2010 5:26 pm
மெகா ஹிட் படம்.......மெகா ஹிட் படம்.......மெகா ஹிட் படம்.......மெகா ஹிட் படம்.......மெகா ஹிட் படம்.......

பதிவு செய்தவர்: makkal
பதிவு செய்தது: 08 Oct 2010 5:25 pm
டை நாய்களா.....படம் மேக ஹிட்/////

பதிவு செய்தவர்: டபுள் unmai
பதிவு செய்தது: 08 Oct 2010 5:24 pm
50 % of the seat is still vaccant in Rohini thearte for 6:45 PM friday show. pls check ticket new . com
பதிவு செய்தவர்: Raja
பதிவு செய்தது: 08 Oct 2010 6:23 pm
Stupid not all the people will book in the net. they also go to the counters during the show.

பதிவு செய்தவர்: திரை
பதிவு செய்தது: 08 Oct 2010 5:21 pm
ரஜினியின் படங்களில் மூன்று நாளில் தியட்டர் காத்து வாங்க ஆரம்பித்தது எந்திரனுக்கு மட்டும் தான் இதற்க்கு காரணம் சன் டி.வி யின் வெறுப்பேத்தும் விளம்பரங்கள்தான்

பதிவு செய்தவர்: From Mumbai
பதிவு செய்தது: 08 Oct 2010 5:20 pm
The Grand verdict is out.Endhiran/Robot's 7days collections are totalling >300Cr.Because of Tax hassles distributors/exhibitors are interested only in declaring 3/4th. that figure.Critical morons with red chip inside are dead.Long live Rajini & his fans.

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 08 Oct 2010 5:12 pm
கமல் மற்றும் விஜய் ரசிகர்களே வயறு எரிந்து செத்து போகதிர்கள் எந்திரனின் வெற்றியை பார்த்து உங்கள் டப்பா நடிகர்களின் மொத்த படங்களின் வசூலை கூட்டினால் கூட எந்திரனின் வசூல் அருகே நெருங்க முடியாது . U JUST MIND IT . IF U WAN TO CHECK GO GOOGLE & SERACH ENTHIRAN BOX OFFICE COLLECTION
பதிவு செய்தவர்: ரகு
பதிவு செய்தது: 08 Oct 2010 6:15 pm
படம் குப்பை என்று எல்லா பக்கம் இருந்தும் செய்திகள் வந்தாச்சு ,....கேக்கிறவன் கேனயனாக இருந்தால் ஒசாமா இந்திரன் படத்தை பார்த்தார் என்று சொல்வர்கலாம் ..இங்கே திருநெல்வேலியில் 01 அக்டோபர் 3 வது சோவே எம்ட்டியாக இருந்தது (ரத்னா & pvt )

Asin:எனக்கு எதிராக கறுப்புக் கொடியா?-கொந்தளிக்கும் அசின்

இலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின்.

திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழு விரைவில் கூடி முடிவு எடுக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறியுள்ளார். இவராவது உறுதியாக அசின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் விஜய்யுடன் அசின் நடித்து வரும் காவலன் படப்பிடிப்பில் சில தினங்களுக்கு முன் திடீர் ரகளை ஏற்பட்டது. இலங்கை சென்றதற்கு கண்டனம் தெரிவித்து அசினுக்கு சிலர் கறுப்புக்கொடி காட்டினார்கள்.

இதுபற்றி அசினிடம் கேட்டபோது, ஆவேசப்பட்டார்.

"நான் இலங்கை சென்றது பற்றி பல தடவை விளக்கம் அளித்து விட்டேன். அதற்குப் பிறகும் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினால் என்ன அர்த்தம்? சரி, இந்த பிரச்சினையை மீண்டும் கிளப்ப நான் விரும்பவில்லை. கருத்து கூறுவதையும் தவிர்க்கிறேன். நானே பிரச்சினைகளை இழுத்துப்போட்டுக்கொள்ள விரும்பவில்லை," என்றார்.

கதாநாயகன் குளிரூட்டிய அறையில் பணநோட்டுகளில் புரண்டிரு க்க, ரசிகனோ மரத்தில் ஏறி பதாகை கட்டுவதிலும்

சினிமாவின் பிறழ்ச்சியும் இன்றைய ரசிகனும்!
முத்தமிழ் வடிவங்களெனப் போற்றப்படும் இயல், இசை, நாடகக் கலைகளெல்லாம் எமது ஆன்றோரால் வெறு மனே பொழுதுபோக்குக்காக போற்றிப் பேணப்பட்டவை அல்ல... அன்றைய மக்களின் உயிருடன் இரண்டறக் கலந்து விட்ட கலைகளாகவே அவை இருந்தன. முத்தமிழ் கலைகளில் தேர்ச்சி பெற்ற சான்றோர் அக்கலைகளையெல்லாம் தெய்வீகக் கலைகளாகவே பேணி வந்தனர்.
மனங்களை நெறிப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் அன்றைய தெய்வீகக் கலைகளெல்லாம் எமது இன்றைய சமூகத்தில் இறுதி மூச்சு விட்டுக் கொண்டி ருக்கின்றன. மறுபுறத்தில் நோக்குமிடத்து அக்கலைகள் பிறழ்ச் சியடைந்து செல்கின்றன. இன்னொரு தரப்பினர் தெய்வீகக் கலைகளை பணமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இயல், இசை, நாடகக் கலைகளின் ‘நதிமூலம்’ பாரத தேசமென் பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இலக்கியம், இசை, நாட கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அத்தனை கலை களையும் இந்திய தேசத்திடமிருந்துதான் நாம் பெற்றுக் கொண் டோம்.
கலைகளால் கிட்டியுள்ள பெரும்பேறு குறித்து நாமெல்லாம் களி ப்படையும் காலம் சிறிது சிறிதாக முடிவுக்கு வந்து கொண்டி ருப்பதாகவே தெரிகிறது.
தெய்வாம்சம் பொருந்திய எமது பாரம்பரியக் கலைகளை இன்றைய சினிமாவும் சின்னத்திரையும் படிப்படியாக விழுங்கிக் கொண்டி ருக்கின்றன. புதுமையென்பதன் பேரிலான இந்த கபZகரம் விரைவில் முழுமையடைந்து விடும் ஆபத்து எம்முன்னே உள் ளது. இதற்குச் சமாந்தரமான விதத்தில் இன்றைய தலைமுறை யினரின் ரசனையும் எங்கோ தறிகெட்டுச் சென்று கொண்டிரு க்கிறது.
சினிமாவென்பது சக்தி வாய்ந்ததொரு ஊடகம். சிக்கல் நிறைந்த கருப்பொருளை இலகு முறையில் பாமர மகனுக்கும் புரிய வைக்க முடிந்ததான ‘இலகு ஊடகம்’ என்று சினிமாவைக் கூற லாம். அக்காலத் திரைப்படங்கள் வாயிலாக பெரும் காவியங் களையே பாமர மக்களுக்கும் எடுத்தியம்ப முடிந்தது.
பெரும் இலக்கியங்களை மட்டுமன்றி சங்கீதம், நடனம் போன்ற அருங் கலைகளையும் மக்களின் காலடிக்கு எடுத்துச் சென்ற பெருமை சினிமாவுக்கே உண்டு. சினிமா சங்கீதம் கூட தனது பாதையை விட்டு விலகிச் சென்று நெடுங்காலமாகிவிட்டது. அதற்கு ஒப் பாக இன்றைய தலைமுறையினரின் ரசனையும் சித்தப் பிரமை க்குள்ளாகி விட்டதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் தனது அபிமான நடிகன் ஒருவனின் திரைப்படம் வெளியானதும் பித்துப் பிடித்த நிலைக்குள்ளாவதி லிருந்து இன்றைய ரசனையின் போக்கை நாம் அறிந்து கொள்ள முடியும். அறிவீனம், பாமரத்தனம், வெகுளித்தனம், பேதமை, முதிர்ச்சியீனம் போன்ற எந்த வரையறைக்குள் இத்த கைய ரசிகனை உள்ளடக்குவதென்பதுதான் புரியாமலுள்ளது.
கதாநாயகன் குளிரூட்டிய அறையில் பணநோட்டுகளில் புரண்டிரு க்க, அவனது ரசிகனோ மரத்தில் ஏறி பதாகை கட்டுவதிலும் திரையரங்கு வாசலில் வரிசையில் வாழ்நாளைக் கழிப்பதிலும் வாழ்வையே வீணடிக்கிறான்.
இவையெல்லாம் போதாதென்று தனது கதாநாயகனின் படவெற்றிக்காக மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்வதிலும் ஆளுயரப் படத்துக்கு பாலாபி ஷேகம் செய்வதிலும் காலத்தையும் பணத்தையும் பாழாக்கி பகுத்தறிவென்பதையே கேலிக்குள்ளாக்குகின்றான்.
சினிமாவின் இன்றைய பிறழ்வு தவிர்க்க முடியாதது. அதனை வெறும் பொழுது போக்குச் சாதனம் என்று மட்டுமே நாம் கொள்ள வேண்டிய காலம் உருவாகியுள்ளது. சினிமாவின் போக்கை தடுத்து நிறுத்தும் வல்லமை ரசிகனுக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் அப்பாவி ரசிகனை நம்பியே இன்றைய சினிமா உள்ளது.
அபிமான கதாநாயகனுக்கு அடிமைப்பட்டுப் போன ரசிகர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வது அவசியம். ‘திரையில் தென்படுவது நடிகனின் நிஜ முகமல்ல’. அவனும் ஆசாபாசங்களு க்கு ஆட்பட்டுப் போன நம்மைப் போன்றதொரு பிரகிருதி தான். அங்கும் கவலைகள், கற்பனைகள், ஏக்கங்கள் உண்டு. அதனால்தான் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று சினிமாவைக் குறிப்பிட்டார் எழுத்தாளர் சுஜாதா.
கல்வி, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் துரிதமாக முன்னே றிக் கொண்டிருக்கையில், வெண்திரையில் தோன்றும் பொய் முகத்துக்காக வாழ்நாளை விரயம் செய்வதானது பேதமையின் உச்சம்தான். இளம் தலைமுறையினர் தமது நெஞ்சில் கை வைத்துப் பார்க்கட்டும்! உங்கள் இதயம் எழுப்பும் ஒலி உங்கள் சுயகெளரவத்தை உரசிப் பார்க்கும் ஒலியாக இருக்கட்டும்!

அமைச்சர் கிருஷ்ணா வடக்கில் அபி. திட்டங்களுக்கு அடிக்கல்

வீடமைப்பு, ரயில் பாதை

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வடக்கில் அபி. திட்டங்களுக்கு அடிக்கல்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு த்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வடக்கில் இந்திய அரசின் உதவியினால் முன் னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் வீடமைப்புத் திட்டம், ரயில் பாதைகள் அமைக்கும் வேலைத்திட்ட ங்களுக்காக அடிக்கல் நாட்டவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். மடுவிலிருந்து தலை மன்னார் வரையும் ஓமந்தையிலிருந்து பளை வரையும் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, இந்திய அரசின் உதவியுடன் வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

கனடாவில் புகலிடம் கோரும் அகதிகள் தொடர்பில் கனேடிய புதிய சட்டவிதிகளை

கனடாவில் புகலிடம் கோரும் அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் புதிய சட்டவிதிகளை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. புகலிடம் கோரி சட்ட விரோத கப்பல்கள் அண்மைக் காலமாக கனடாவை நோக்கிப் பயணித்து வருகின்றன. இதனால் பல சட்டவிரோத செயல்களும் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகள் தொடர்பில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அவை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 492 பயணிகளுடன் எம்.வி சன் சீ கப்பல் கனடாவை வந்தடைந்தது. 2009 ஆம் ஆண்டு சட்ட விரோதமாகக் கனடாவுக்குச் சென்ற 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
கனடாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத சட்டத்துக்கமைய கனடா தடை செய்திருந்தது.
இலங்கை அகதிகளுடன் மற்றும் ஒரு கப்பல் கனடாவுக்குச் செல்ல இருப்பதாக கனேடிய இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ருத்ரகுமாரன் அவர்களது பெரு விருப்புகளுக்கு இசைவாகத் திருப்பப்பட்டது

நாங்கள் எதை எதிர்த்தோம்? ஏன் நிராகரித்தோம்? - மனம் திறக்கிறார்கள் ‘மக்கள் பிரதிநிதிகள்!’
அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம்.
எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும், எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும், எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெற நிகழ்வுகளை உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. தேசியத் தலைவர் அவர்களின் இருப்பை மறுதலிக்கும் கே.பி. குழுவினரின் கைகளில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தமது தரப்பின் கைகள் ஓங்க வேண்டும் என்ற காரணத்திற்காக, இதில் போட்டியிட முன்வந்த தமிழ் உணர்வாளர்களைப் புறக்கணிக்கவே முற்பட்டார்கள். ஆனால், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' புதிய பரீட்சார்த்தமான களமாக இருப்பதால், இதற்குப் போட்டியாக இன்னொன்று உருவாகாமல், இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் இந்தப் போர்க் களம் திசை மாறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் ஜனநாயக முறைமையில் தாம் இந்தத் தேர்தலில் பங்குபற்றுவதைத் தடுக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்து, இந்தத் தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பெற்றார்கள்.
கடந்த மே 02 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவு கே.பி. குழுவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. பிரான்சுக்கான 10 ஆசனங்களில் 5 இடங்களை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கைப்பற்றியிருந்தார்கள். இது திரு. வேலும்மயிலும் மனோகரன் தலைமையிலான கே.பி. குழுவினரின் மேலாதிக்கத்திற்கு சவாலாக அமைந்ததனால், தேர்தல் முடிவுகளை எவ்வாறேனும் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. மே 02 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவு 03 ஆம் திகதி அதிகாலை அறிவிக்கப்பட்டு, 05 ஆம் திகதி அதனை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும், அன்றைய தினம் சான்றிதழ்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தேர்தலின் முடிவுகளை மாற்றுவதற்கான மந்திராலோசனை நடாத்தப்பட்டு, 05 ஆம் திகதி அரங்கத்தில் வைத்து இரு தேர்தல் முடிவுகளைத் தேர்தல் மோசடிகள் காரணமாகத் தாம் நிராகரிப்பதாக அறிவித்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
நியாயமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டு, தமிழ்த் தேசிய உணர்வாளாகளின் பலம் குறைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஈழநாடு ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்கள் ஊடகவியலாளர் என்ற நிலையில் இந்தத் தேர்தலுடன் தொடர்புடைய ஏற்பாடாளர்கள், பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் எனப் பல தரப்பிடம் விசாரணைகளை மேற்கொண்டதில், இந்த மோசடி நாடகம் கே.பி. குழுவினரால் சோடிக்கப்பட்டது என்பது தெளிவாகப் புரிந்தது.
அனைவரிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அது எழுத்து வடிவில் அப்போதைய ஏற்பாட்டாளர் திரு. வி. ருத்ரகுமாரன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இது குறித்து தொலைபேசி மூலம் நேரடியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டது. 
இந்த இரு தேர்தல் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது. இது திரு.ருத்ரகுமாரன் அவர்கள்மீது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியது.
கே.பி. அவர்களால் தனது வெளிநாடுகளுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் பிரான்சில் உள்ள வேலும்மயிலும் மனோகரன் அவர்களே கட்டுப்படுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் திரு. மனோகரன் அவர்களே பணியாற்றுவது தமிழ்த் தேசிய உணர்வாளர்களை அச்சத்துள் தள்ளியது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.ரிவி.யில் திரு மனோகரன் வழங்கிய செவ்வியைப் பார்த்தவர்களுக்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களது இந்த அச்சத்திற்கான காரணம் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.

இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. இந்த அமர்வை அமெரிக்காவில் நடாத்துவதாகவும், பாரிசிலும் லண்டனிலும் காணொளித் தொடர்பாடல் மூலம் இணைப்புக்களை உருவாக்கிக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.
135 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில், இந்த அமர்வில் மொத்தம் 85 பிரதிநிதிகளே கலந்து கொண்டனர். இது அதிர்ச்சியான சந்தேக அலையை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் உருவாக்கியது. திட்டமிட்ட ரீதியில் கே.பி. குழுவினர் தமக்குச் சாதகமில்லாத இடங்களில் தெரிவுகளை நிராகரித்தும், முடிவுகளை அறிவிக்காமலும், தேர்தல்களை நடாத்தி முடிக்காமலும் மேற்கொண்டிருந்த சதி இந்த இடத்தில் அம்பலமானது.
அரசியல் யாப்பில் முன்வைக்கப்பட்டது போல் பிரதமர் ஒருவரும், பிரதிப் பிரதமர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களை ஒரே பிரதமர் கட்டுப்படுத்துவதும், அவர்களுக்காகச் செயலாற்றுவதும் முடியாத காரணம் என்பதால் முன்மொழியப்பட்ட இந்த மூன்று பிரதிப் பிரதமர்களையும் மூன்றாகப் பிரிக்கப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய பகுதி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பது என்ற இரு முடிவுகளையும் திரு. ருத்ரகுமாரன் அவர்கள் உடனடியாக நிராகரித்தார். ஒரு பிரதிப் பிரதமரை மட்டுமே, அதுவும் அவரைப் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்ற வாதம் அவரால் முன் வைக்கப்பட்டது. அத்துடன் 9 பேர் என நிர்ணயிக்கப்பட்ட மந்திரிகளையும் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்ற கருத்தும் அவரால் முன் வைக்கப்பட்டது.
இந்த வாதம், தமிழ்த் தேசிய உணர்வாளாகள் மத்தியில் புதிய அச்சங்களை உருவாக்கியது. இதனால், யாப்பின் பரிந்துரைப்படி மூன்று பிரதமரைத் தெரிவு செய்வது என்ற முடிவில் உறுதியாக நின்றனர். இந்த வாதப் பிரதிவாதம் முடிவுக்கு வராத நிலையில், இது குறித்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களது வாதம் இரண்டு மேலதிக வாக்குக்களால் வெற்றி பெற்றது.
ஆனால், இந்த அபாய நிலையை உணர்ந்து கொண்டு சுதபகரித்துக்கொண்ட கே.பி. குழுவினர் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், ஸ்கைப் மூலமாகவும் பல உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு தான, பேத, தண்டல் மிரட்டல்களால் அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பிரான்சில் நேரடியாகக் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் இந்த வாக்கெடுப்பில் சுயமாக முடிவெடுத்தது அவர்களது முடிவெடுக்கும் கட்டுப்பாட்டாளராகப் பிரசன்னமாகிய திரு. சுகிந்தன் அவர்கள் தனது மிரட்டல் பார்வையால் கட்டுக்குள் கொண்டவந்த காட்சியை நேரடியாகப் பார்க்க முடிந்தது. அத்துடன், லண்டனிலிருந்து பதவி ஆசை காட்டப்பட்டு வரவழைக்கப்பட்ட பெண் உறுப்பினர் திரு. சுகிந்தன் அவர்களது முற்றான கட்டுப்பாட்டில் இருந்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதற்காகவே, அவர் லண்டனில் நடைபெற்ற அமர்வில் கலந்து கொள்ள விடாமல் பாரிசுக்கு விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
இந்தக் களநிலை தமிழ்த் தேசிய உணர்வாளாகள் எதிர்பார்க்காதது. இதனால், அடுத்து வந்த அனைத்து வாக்கெடுப்புக்களும் திரு ருத்ரகுமாரன் அவர்களது பெரு விருப்புகளுக்கு இசைவாகத் திருப்பப்பட்டது அவதானிக்கப்பட்டது. இதே வேளை, பாரிஸ் அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்றும் அங்கு பிரசன்னமாகியிரந்த கே.பி. குழு ஆதரவாளரான உறுப்பினர் ஒருவர் மிரட்டல் விட்ட நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிலையில், பிரதிப் பிரதமர் மூவரையும் பிரதமரே தெரிவு செய்வார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அபாயத் தன்மை தமிழ்த் தேசிய உணர்வாளாகளால் சபைக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பிரதமரே மூன்று பிரதமர்களையும், மந்திரிசபையையும் அமைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பாராயிரந்தால் நாடு கடந்த தமிழீழ அரசு ஜே.ஆரின் எல்லைகளற்ற அதிகாரம் கொண்டவராகிவிடுவார். பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் எடுக்கும் எந்தத் தவறான முடிவையும் மாற்ற முடியாது போய்விடும் என்ற தமது அச்சத்தை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பதிவு செய்தார்கள்.
அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது. மூன்று பிரதி அமைச்சர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தால், அது பிரதமரின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடும் என்ற காரணம் கே.பி. குழு சார்பு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. திரு. ருத்ரகுமாரன் அவர்களே அவர்களுக்கான பிரதமராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்காக அந்த உறுப்பினாகள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற போதனை ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பரிதாபகர நிலையையும் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.
திரு. ருத்ரகுமாரனுடைய வேகம் நாங்கள் அறியாததல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஒன்றரை வருட காலத்தில், அந்தப் பாவப்பட்ட மக்களுக்காக அவர் எத்தனை துரும்புகளை எடுத்துப் போட்டார் என்பதும், தேர்தல் நடைபெற்று 5 மாதங்களில் எந்தத் தேர்தல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார் என்பதையும் நாங்கள் நேராகத் தரிசித்தவர்கள். அவரது இந்த வேகத்தை நத்தை கூட எட்டாது என்பது நாம் புரிந்து கொண்ட காட்சி.
திரு. ருத்ரகுமாரன் அவர்கள் தான் மட்டற்ற அதிகாரங்களைக் கொண்ட அதி உன்னத தலைவராக முனைவதைப் புரிந்து கொண்டாலும், அவரது செயல்திறன் கேள்விக்குறியானதே. அது மட்டுமல்லாமல், இதுவரை எந்தத் துரும்பையும் நகர்த்தாத நாடு கடந்த தமிழீழ அரசை இரண்டாவது அமர்வுகரை நகர்த்தி வருவதற்கு சுமார் 150,000.00 டொலர்கள் செலவிட்டதாகக் கணக்கும் வைத்துள்ளார். இதற்காக உறுப்பினர்கள் அனைவரும் தலா 1500.00 டொலர்கள் செலுத்த வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்தவித நகர்வையும் மேற்கொள்ளாத நாடு கடந்த தமிழீழ அரசின் ஆறு மாதங்களுக்கான செலவு ஒன்றரை இலட்சம் டொலர் என்றால் (இதில் நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் செலவழித்ததும், அவர்களது பயண, தங்குமிட, மண்டப, தொலைத்தொடர்பு போன்ற செலவுகள் உள்ளடக்கப்படவில்லை) திரு. ருத்ரகுமாரன் வேகங்கொள்ளப்போகும் எதிர்வரும் காலங்களில் இந்தச் செலவு எத்தனை மடங்குகளாக இருக்கும்? அதை யார் சுமப்பது? என்ற பல கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகும்.
அதி உன்னத பிரதமராக அதிகாரபீடத்தில் அமரும் ருத்ரகுமாரன் அவர்கள் இனிமேல் நடாத்தப்போகும் தர்பாரது செலவுகளும் கேள்விகளுக்கு அப்பாற்பட்தாகவே இருக்கும். அது வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுமா? அல்லது, தமிழீழ மக்களையும் மண்ணையும் மீட்பதற்காகத் துணிவோடு களமிறங்கிய மக்கள் பிரதிநிதிகள் மொட்டையடிக்கப்படப் போகிறார்களா? என்பது பல மில்லியன் டொலர்களுக்குரியதும், பல மில்லியன் கேள்விகளுக்கும் உரியது.

இந்த அதிகாரப் பகிர்வினை திரு. ருத்ரகுமாரனும், அவரைக் கடவுளாகக் காண்பதே தாம் பெற்ற பிறவியின் பயன் என கே.பி. குழுவினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட பரிதாபத்திற்குரிய உறுப்பினர்களும் நிராகரித்த நிலையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த அபாயகரமான கள நிலமையை முற்றாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். மூன்றாம் நாள் அமர்வின்போது தமிழ்த் தேசிய உணர்வாளர்களது கைகள் சபையில் ஓங்கும் நிலை ஏற்பட்டது.
தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் ஒரு நிகழ்ச்சிநிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு செல்வதைத் தடுத்து நிறுத்தும்படி நிலமையைப் புரிந்து கொள்ளக்கூடிய அமர்வில் பங்கேற்காத பலரைத் தொடர்பு கொண்டதனால் அவர்களுக்காக சபையில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். இதன்படி, என்ன காரணத்திற்காகவோ அவசரமாக அறிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய தேர்தல் முடிவின்படி தெரிவான நான்கு உறுப்பினர்கள் உட்பட்ட 6 பிரதிநிதிகளது வாக்களிக்கும் உரிமை பெறப்பட்டு, அது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சபாநாயகரால் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தமிழ்த் தேசிய உணர்வாளாகளை அதிர்ச்சிக்குள் தள்ளியது.
தமது அத்தனை முயற்சிகளும் நியாயமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டதனால் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசிய உணர்வு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அவர்களில் ஒருவர் இங்கிருந்த குண்டர்களால் தாக்கப்பட்டதாகவும், சிலரது தலையீட்டால் அவர்களது ஆயுத பிரயோக எத்தனிப்பு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சபையில் தெரிவித்துவிட்டு, அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.
தமிழ்த் தேசிய உணர்வாளர்களில் ஒருவர் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டு, நீதி கிடைக்காத நிலையில் சபையிலிருந்து வெளியேறியதை அடுத்து அமெரிக்காவின் அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.
இவர்கள் வெளியேறிய செய்தி பாரிஸ் அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணாவாளர்களது மன நிலையையும் பாதித்தது. ஏற்கனவே, விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கே.பி. குழு ஆதரவு உறுப்பினர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அங்கிருந்து அவர்களது தமிழ்த் தேசிய சிதைவுக் கருத்துக்களுக்கு எதிராக வாக்களிப்பதற்கு அச்சம் கொண்ட காரணத்தால் அவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். தமது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே, அவர்கள் விடுதலைப் புலிகளது பெயரையும் உச்சரித்தவிட்டு வெளியேறினார்கள்.

135 மொத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் யாப்பை 48 உறுப்பினாகளை சபையில் வைத்துக்கொண்டு நிறைவேற்றியதும், அதே போல் 48 உறுப்பினர்களால் பிரதமர், சபாநாயகர், பிரதிச் சபாநாயகர் ஆகியோரது தெரிவும், அதற்குப் பின்னரான நியமனங்களும் சட்டப்படியும், நியாயப்படியும், சம்பிரதாயப்படியும், ஒரு நாட்டுக்கான அரசியல் முறைமைப்படியும் செல்லுபடியற்றது என்பதே எமது நிலைப்பாடு.
இது சட்டம் பயின்ற அதி உன்னத தகைமையைக் கைப்பற்றுவதன் மூலம் எம்மையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள திரு. ருத்ரகுமாரன் அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும் அல்லது அவரது நகர்வுகளுக்குத் துணையாக நிற்கும் அறிஞர்களும் கல்விமான்களும் கற்றுக்கொடுப்பார்கள் என்று முழுமையாக நம்புகின்றோம்.
எமக்கான நீதியைத் தேடி நாங்கள் எமது மக்கள் மத்தியில் செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். சாத்தியமான அத்தனை வழிகளாலும் நாடு கடந்த தமிழீழ அரசை நேர் பாதையில் செல்ல நிர்ப்பந்திப்போம். சாத்வீகமான எமது இந்தப் போராட்டங்களும் தோல்விகாணும் பட்சத்தில், திலீபன் வழியில் போராடுவதற்கான ஆத்மீக பலத்தையும் எங்கள் மண்ணில் புதைந்துள்ள மாவீர மாணிக்கங்கள் எமக்கு அளித்துள்ளார்கள் என்ற உண்மைத் தகவலையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
எதிரியுடன் போராட வேண்டிய காலத்தில் நாங்கள் எமக்குள் மோதிக்கொள்ளும் அசிங்க நிலையை எம்மால் புரிந்து கொள்ள முடித்தாலும், எமது மக்களுக்கான இந்தப் போர்க்களமும் எதிரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று புதைந்துவிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.
பாரிஸ் நகர அமர்வில் கலந்துகொண்ட
தமிழ்த் தேசிய உணர்வாளர்களான
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
மக்கள் பிரதிநிதிகள்

யுத்தத்தின் பின் கிளிநொச்சியில் தினமும் நான்கு பேர் தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான தற்போதைய சூழலில் தினசரி நான்கிற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்வதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான நிலைக்கான பிரதான காரணமாக சமூகப் பின்னணியே காணப்படுகின்றது. குறிப்பாக விதவைகள், கணவன்மார்காணாமல் போய் தனிமையில் வாழும் பெண்கள் போன்றோரே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.பலர் தற்கொலை செய்கிறார்கள்.
சமூக பாதுகாப்பின்மை பொருளாதாரப் பிரச்சினைகளே இவர்களில் தற்கொலைக்கு மிக முக்கியமான காரணிகளாகக் காணப்படுகின்றன.இத்தகைய தற்கொலை முயற்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எம்மால் இயலுமான வரை மேற்கொண்டுள்ளோம்.
இதனைப் போலவே யுத்தத்தால் மனநோயாளிகளாக்கப்பட்டோர் மற்றும் பாடசாலை செல்லாத சிறார்களின் எண்ணிக்கையும் மாவட்டத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
யுத்தத்திற்கு முன்னர் சுமார் 300 பேராக இருந்த மனநோயாளிகளின் எண்ணிக்கை இறுதியுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளினால் 200 ஆகியுள்ளது.100 பேர் காணாமல் போயுள்ளனர். எஞ்சியவர்களுடன் சேர்ந்து தற்போது மாவட்டத்தில் 500 வரையான மனநோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிலும் பெண்கள்,சிறார்கள் போன்றோரே அதிகளவில் காணப்படுகின்றனர். இவர்களில் பலர் தமக்கு நெருக்கமான யாரையோ யுத்தத்தில் இழந்துள்ளனர். அதனோடு இடப்பெயர்வுகளின் போது ஏற்பட்ட தாக்கங்களும் இந்நிலைக்கு காரணமாகின்றது.
தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநோயாளிகளுக்கான விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை.ஆண்கள் விடுதியில் 5 கட்டில்களும் பெண்கள் விடுதியில் 5 கட்டில்களும் வைத்தியசாலைக் கட்டிடத்தின் 2 ஆம் தளத்தில் உள்ளன.இதனால் பலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர்.எனவேஇ தனியான விடுதியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு நோயாளியின் வீடுகளுக்கும் சென்று அழைத்து வந்தே சிகிச்சையளிக்கின்றோம். சிறுவர்கள் தொடர்பில் மாற்றம் ஏற்படுவதற்கு சில காலம் எடுக்கும்.காரணம் சிறார்கள் முகாம் வாழ்வைப் பழகிக் கொண்டுவிட்டார்கள்.
இந்நிலையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப இயைபாக்கமடைய சிறிது காலமெடுக்கும்.எனவே, எல்லோரும் ஒன்றிணைந்து இவற்றுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றார்.

சரத் பொன்சேகா சங்கடத்தில் வீழ்வதற்கு எதிர்க்கட்சிகளும் அமெ.தூதரகமுமே காரணம்:விமல் வீரவன்ச

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சங்கடத்தில் தள்ளியுள்ளனர். இவர்களது பேச்சினை இனியும் கேட்டுக் கொண்டிருக்காது அனோமா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதன் மூலமே தனது கணவரை விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
சரத் பொன்சேகா என்பவருக்கு செல்யூட் அடிக்கவும் செல்யூட் வாங்கவும் மாத்திரமே தெரியும். அவருக்கு அரசியல் தெரியாது. இருந்தும் யுத்தம் தொடர்பில் நன்கு தெரியும். ஆனாலும் அரசியல் தெரியாத ஒருவரை கொண்டுவந்து எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் இவ்வாறான சங்கடத்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளும் உதவி புரிந்தனர்.
சரத் பொன்சேகாவை நினைக்கும் போது எனக்கும் கவலையாக இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியினால் அதற்கு ஒப்புதல் அளிக்காதிருக்க முடியாது.
இராணுவ நீதிமன்றத்தின்மூலம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றாலோ அல்லது தனது கணவர் தனக்கு வேண்டும் என்றாலோ அனோமா பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வேண்டும். எதிர்க்கட்சியினரின் பேச்சினைக் கேட்டு மன்னிப்புக் கோராதிருப்பதில் பலன் ஏதும் கிட்டப்போவதில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது கணவர் விஜய குமாரதுங்க சிறையில் இருந்த சமயத்தில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் மன்னிப்பு வழங்குமாறு கோரியதையடுத்தே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அனோமாவுக்கு தனது கணவர் வேண்டுமென்றால் மன்னிப்புக் கோருவதைத் தவிர வேறு வழி கிடையாது. வீதி வீதியாக அலைவதில் நன்மையில்லை.
சரத் பொன்சேகா சிறையில் இருக்க வேண்டியவர் அல்ல. அவர் வெளியில் இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். ஆனாலும் அவர் வெளியில் வருவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. இதனாலேயே பொன்சேகா மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று அனோமா ஊடாக தூண்டி விடுகின்றனர். பொன்சேகாவின் குடும்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம்

மகளையும் மருமகனையும் கொலை செய்ய முயன்றார், சாதிப்பிரச்சனையா

ஈழத்தைச் சேர்ந்த குறைந்த சாதியுடைய இளைஞனை காதலித்த தனது மகளையும் அவருடைய காதலனையும் வானில் ஏற்றி சென்று தாக்கிய சம்பவமொன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது. தனது காதலுக்கு தந்தை விருப்பம் தெரிவிக்காமையினால் குறித்த மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அனிதா என்ற 16 வயதுடைய சிறுமியே 18 வயதுடைய தனது காதலனுடன் இவ்வாறு சென்றுள்ளார்.
இதனையடுத்து அனித்தாவின் அக்காவான ஜெனிதாவும், அவருடைய கணவன் சுந்தரலிங்கமும் வீட்டைவிட்டு வெளியேறியவர்களை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் கனேடிய பாடசாலை ஒன்றிற்கு அருகில் அவர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற 43 வயது தந்தையான செல்வநாயகம் செல்லத்துரை தனது இளைய மகளையும் அவருடைய காதலனையும் வானில் இழுத்துச் சென்று மரத்தில் மோதியுள்ளார். அதன் பின்னர் தனது மூத்த மகளின் கணவரையும் அவர் தாக்கியுள்ளார்.

 மகளின் காதலை ஏற்க முடியாத தந்தை மகள் மீதும் மருமகன் மீதும் தனது மினிவானால் மோதினார். தெய்வாதினமாக அவர்கள் உயிர் தப்பிவிட்டார்கள்
A Toronto dad admitted Thursday he used his minivan to run down his daughter, her boyfriend and his son-in-law because he disapproved of his daughter's boyfriend.
Selvanayagam Selladurai, 46, pleaded guilty to three counts of aggravated assault for the June 1, 2007, incident in the city's Scarborough neighbourhood.
He was initially charged with three counts of attempted murder and other related offences.
His daughter, Anitha Selvanayagam, 16, went missing from home for three days due to the dispute about the boyfriend.
Her older sister, Jenitha, searched for them and found her sibling, her brother-in-law Lenin Sandrasingam, 21,and her boyfriend Prashanna "Pram" Anadarajah, 18, in a strip mall, said Crown attorney Eadit Rokach.
She said the accused rejected his daughter's boyfriend because he came from a lower caste in their native Sri Lanka.
Jenitha phoned her father to arrange a reconciliation.
Instead of a peaceful reunion, the accused drove his van towards the boyfriend.
Selladurai drove straight at the trio, striking them and dragging his daughter and son-in-law for five metres under his mini-van. The son-in-law, Lenin, suffered a broken pelvis in two places while the daughter suffered a head cut and shoulder injury.
Court heard witnesses depicted the driver as having "put the pedal to the metal" as he steered towards them.
The minivan crashed into a fence.
Selladurai chased the boyfriend, who suffered a broken ankle. The teen tried to escape across the street to a high school, where he collapsed.
"I'll kill you. I'll kill you," Rokach quoted the accused as saying to the boyfriend in front of several witnesses.
A teacher held off the angry father from charging at the injured teen until paramedics arrived and they had to restrain Selladurai.
Police then arrived and arrested the now 46-year-old man.
Selladurai, who has been on bail for three years, will be sentenced on Nov. 1.
sam.pazzano@sunmedia.ca

எதிர்ப்பது போல் எதிர்த்து, கடைசியில் ஆதரித்து ,அணு உலை விபத்து இழப்பீடு மசோதா

நாடாளுமன்றம்  நாளும் ஆடும் மன்றம் ஆனது. துக்ளக் தர்பார் போல், ஒவ்வொரு நாளும் மத்திய அரசு, தான் முன்வைத்த மசோதாவில் மாற்றங்கள் செய்து வந்தது.

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா -2010 எனபது,  2009 ஆம் ஆண்டே முதலில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. பிறகு அந்த மசோதா உருமாறி மசோதா 2010  என்றானது.  இந்த மசோதா, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் நிலைக்குழு  விவாதத்திற்கு அனுப்பப்பட்டது.   அதன்பிறகு, நாடாளுமன்றஅமர்வில் வைக்கப்பட்டது.

மசோதா என்ற இந்தச் சட்ட முன்வரைவின் ஒவ்வொரு பிரிவாக சர்ச்சை எழுந்தது.  பா.ஜ.க. ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வந்தது. மத்திய அமைச்சரவையும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றங்களைச் செய்து கொண்டே வந்தது. எப்படியாவது இந்த இழப்பீடு மசோதாவை சட்டமாக்கிவிடவேண்டும் என்பதற்காக ஐ.மு.கூட்டணி ஆட்சி... எதிர்ப்புகளுக்கு அவசர அவசரமாக இணங்கி,   மாற்றங்களை  செய்தது. ஏன் இந்த அவசரம்? ஏன் இந்தச் சட்டம் நிறைவேற அப்படி ஒரு பிடிவாதம்?.

 இரண்டு மாதத்தில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபமாவின் வருகைக்கு முன்பே, இந்த அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை சட்டமாக்கிவிட, மன்மோகன் அரசு துடிக்கிறது என்கிறார்கள் எதிர்கட்சியினர்.

சென்ற ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில், அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற 123 ஒப்பந்தத்திற்கு வித்திடப்பட்டது.  இந்திய நாடாளுமன்றத்திற்கும், மத்திய அமைச்சரவைக்கும் அறிவிக்காமலேயே,  தலைமையமைச்சர் மன்மோகன் சிங், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் இணைந்து அதற்கு வித்திட்டார் என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது.

இந்தியாவிற்கு அதிகமான மின்சாரம் தேவை என்றும், அதை அணுசக்தி ஒப்பந்தம் மூலம் பெறவேண்டும் என்றும் மத்திய அரசு முடிவுசெய்தது. அதற்காக ‘யுரேனியம்’ என்ற எரிபொருளை அமெரிக்கா உட்பட அந்நிய நாடுகளிடமிருந்து வாங்குவதற்கு முடிவு செய்தது.  ஏறகனவே மும்பையில் உள்ள தாராபூர் அணு உலைக்கு, ‘யுரேனியம்’ கொடுத்து வந்த அமெரிக்கா, ‘அணு குண்டு வெடிப்பு சோதனைகளை’ இந்திய அரசு நடத்தியதால், எதிர்ப்பு தெரிவித்து யுரோனியம் விநியோகத்தை நிறுத்திவிட்டது.  என். எஸ்.ஜி. என்ற அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளும், இந்தியாவிற்கு எரிபொருள் கொடுக்க மறுத்து வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அமெரிக்க-இந்திய அணு சக்தி ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. 

123 ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ‘அமெரிக்க - இந்திய அணு சக்தி ஒப்பந்தம்’ கடும் விவாதங்களுக்குப் பிறகு அமெரிக்க செனட்டிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பே இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை அது ஏற்படுத்தியது.

‘ஆக்கத்திற்கான அணுசக்தி,’ ‘அழிவிற்கான அணுசக்தி’ என்று அணுசக்தியை பிரிக்கலாமென்றும்,  மின்சார உற்பத்திக்கு ஆக்கத்திற்கான  அணுசக்தியை உற்பத்தி செய்யத்தான் இந்த ஒப்பந்தம் என்றும் அமெரிக்கா கூறியது. ‘ஆமாம்’ என்று டெல்லியும் ஆமோதித்தது.

அந்த 123 ஒப்பந்தம் மூலம் அமெரிக்க கண்காணிப்பிற்கும், கட்டுப்பாட்டிற்கும் கீழ் இந்தியா அடிமையாக்கப்பட்டுவிடும் என்று குற்றம் சாட்டி இடது சாரிகள் அதை எதிர்த்தனர். அதற்காக அன்றைய ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை இடது சாரிகள் திரும்பப்பெற்றனர்.

இந்திய அணு அறிவியலாளர்கள் பலரும் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அது இந்திய அணு உலைகள் பற்றிய ரகசியங்களை அமெரிக்கா தெரிந்து கொள்ள வழிவகுக்கும் என்றனர். ‘யுரேனியத்தை மிக அதிக விலை கொடுத்து, அமெரிக்கா மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து தருவித்துதான்  இந்திய அணு உலைகளை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டிய நிர்பந்தமில்லை’ என்றும் அவர்கள் கூறினர். மேலும் அதற்கு மாற்றாக, இந்தியாவில் கிடைக்கும் “தோரியம்” என்ற எரிபொருளை வைத்தே, இந்திய அணு உலைகளை 20 ஆண்டுகளில் உருவாக்கி... இயக்க முடியும் என்று இந்திய அணு சக்தித்துறை ஒழுங்கு வாரியத்தின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் அடித்துக் கூறிவருகிறார்.

அமெரிக்க அரசுத்துறைச் செயலாளருக்கு, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர்-10ம் நாள், இந்தியத் தலைமையமைச்சர் வழிகாட்டலில் ஒரு கடிதத்தை இந்திய வெளிவிவகாரச்செயலாளர் எழுதினார். அதில், 10,000 மெகாவாட் மதிப்புள்ள ‘எல்.டபிள்யூ.ஆர்.’ என்ற லேசான நீர் உலைகளை வாங்கிக் கொள்கிறோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.

யாரைக்கேட்டு அப்படி வாக்குறுதிகளை மன்மோகன் கொடுத்தார்? இந்தியாவில் அணு அறிவியலாளர்கள், திட்டக்குழு, நிதியமைச்சர், வர்த்தக அமைச்சர், மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு, மன்மோகனின் வழிகாட்டலில் எப்படி இப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்க முடிகிறது?.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கிளப்பிய ‘ அமெரிக்க நலனுக்காக அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை அவரசப் படுத்தப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டிற்கு பதில் கூறிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப  அமைச்சர், “அமெரிக்கா மட்டுமின்றி பிரான்சு நாட்டிலிருந்தும் அணு உலைகளைப் பெறுகிறோம்” என்று கூறினார்.

பிரான்சு நாட்டு அதிபார் நிக்கோலஸ் சர்கோசியிடம், மன்மோகன் மற்றொரு வாக்குறுதியை கொடுத்துள்ளார். அணு சக்தி விநியோகிப்பவர்கள் குழு நாடுகளின் நிபந்தனைகளை, இந்திய நிலைக்கு இணங்க வைத்ததற்கு பிரதிபலனாக, பிரான்சு நாட்டு அணு உலைகளை இந்தியா வாங்கிக்கொள்ளும் என்ற வாக்குறுதியை பிரான்சுக்கு கொடுத்துள்ளார். அதுவும் இந்தியாவில் யாரையும் கலந்துகொண்டு கொடுக்கப்படவில்லை. மேற்கண்ட குற்றச்சாட்டுகளை அணு அறிவியலாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

இந்தியாவிற்கு மின்சாரம் அணுசக்தி மூலம் அதிகமாக உற்பத்தி செய்யவேண்டும் என்ற கருத்துள்ளவர்கள் கூட, இந்தியா தனது சொந்தக்காலில் நின்று, நமது நாட்டில் கிடைக்கும் “தோரியம்” எரிபொருளைக் கொண்டே, 2040 ஆம் ஆண்டிற்குள் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் எதற்காக மத்திய அரசு, வலியச்சென்று அந்நிய நாட்டு நிறுவனங்களிடம், நாட்டின் முக்கிய முதுகெலும்பை ஒப்படைக்கிறது?.

நாடாளுமன்றத்தில் நிலைக்குழு வைத்த சட்டமுன்வரைவு மீது ஒரு வார காலம்  சர்ச்சை  எழுந்தது. அதில் 17வது திருத்தத்தில் “இந்திய அரசின் நிறுவனமான அணு உலை இயக்குனர், விபத்து ஏற்பட்ட உடனே இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்; பிறகு வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தரிடம் அதை வேண்டிப் பெற்றுக்கொள்ளலாம்” என்று இருக்கிறது.

17 - ‘அ’ பிரிவில் “அத்தகைய பெற்றுக்கொள்ளுதலிலும், குறிப்பிட்ட அணு உலை இயக்குனருக்கும், வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தருக்கும் இடையே அதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்” என்று எழுதியுள்ளது.

17 - ‘ஆ’ பிரிவில்,“ வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தரின் பொருள்களினாலோ, கருவிகளினாலோ, அவற்றின்  குறைபாட்டாலோ, தரம் குறைந்த சேவையினாலோ, அவர்களது ஊழியராலோ விபத்து ஏற்பட்டிருந்தால் அந்த விநியோகத்தரிடம் இழப்பீடு பெறலாம்” என்று உள்ளது.

இதில் உள்ள வாய்ப்பை நீக்க, ‘அ’ பிரிவையும், ‘ஆ’ பிரிவையும் இணைத்து ‘அண்ட்’ என்ற ஆங்கிலச்சொல்லை நிலைக்குழுவில் கொண்டுவந்தனர்.

சி.பி.எம். உறுப்பினர் அதை நிலைக்குழுவிலேயே எதிர்த்த போது, பா.ஜ.க உட்பட  நிலைக்குழு உறுப்பினர்கள் அதை ஆதரித்து நி்றைவேற்றினர். ‘அண்ட்’ என்பது ‘ஆ’ பிரிவில் உள்ள வாய்ப்புகளை, ‘அ’ பிரிவில் உள்ளதை வைத்து கட்டுப்படுத்திவிடும். இதை ஊடகங்கள் அம்பலப்படுத்திய உடனே, பா.ஜ.க. எதிர்க்கத் தொடங்கியது.

அடுத்து ‘இ’ என்ற பிரிவு, “ விநியோகத்தரை, ‘ஒரு நபர்’ என்று கூறியிருந்த இடத்தில் ‘உள்நோக்கத்துடன் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டால்’ என்ற பொருள்பட இணைக்கப்பட்டது. அதாவது, வெளிநாட்டு விநியோகத்தர் ‘உள்நோக்கத்துடன்’ செயல்பட்டதாக  இயக்குனரால் நிரூபிக்க முடியாது என்பதால் ‘ஆ’ பிரிவு கொடுத்த வாய்ப்பின்படி,  வெளிநாட்டு விநியோகத்தரிடமிருந்து இழப்பீடு பெறமுடியாது.  இதுவும் ஊடகங்களில் வெளியானதால் பா.ஜ.க. மக்களவையில் எதிர்த்தது.  ஐ.மு.கூ.  ஏற்றுக்கொண்டு  இரண்டையும் நீக்கியது. அதற்கு பா.ஜ.க.ஆதரவு கொடுத்தது. அதனால் மசோதா நிறைவேறியது.

அமெரிக்க ‘வால்ஸ்ட்ரீட் பேப்பர்’ பாராட்டியது. ஐரோப்பிய நாட்டு அரசுகளை, அமெரிக்க தனியார் அணு உலை முதலாளிகள் போட்டியில் வெல்ல, இந்திய சந்தை உதவும் எனக் கூறி, மன்மோகனை பாராட்டியிருந்தார்கள்.

இந்திய ஆட்சியளர்களும் மசோதாவில், 2(1),  3(அ), மற்றும் 7(1) ஆகிய பிரிவுகளை ஆகஸ்ட்-20ல் திடீரென இணைத்து தனியார்துறை நுழைய வழி வகுத்தனர். ஃபிக்கி, சிஐஐ என்ற 2 இந்திய முதலாளிகள் அமைப்பும், வெளிநாட்டு விநியோகத்தர்களை ‘இழப்பீடு’ தராமல் தப்பிக்க வைக்க முயல்கின்றனர்.

மொத்தத்தில் அமெரிக்க ஏற்பாட்டில் எதிர்ப்பது போல் எதிர்த்து, கடைசியில் ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஒரு வார நாடகம் முடிந்தது.