hindutamil.in -மோகன் கணபதி : இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டம்) வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது.
அதன்படி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை அரசு ரத்து செய்கிறது. வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தாலோ தவிர, போதுமான காரணம் இல்லாததால் தடுப்புக் காவலில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகல்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர், சவுக்கு சங்கர், புழல் மத்திய சிறையின் கண்காணிப்பாளர், ஆலோசனைக் குழு தலைவர், காவல் துறைத் தலைவர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக