சனி, 2 பிப்ரவரி, 2019

டிவி விமர்சனங்களின் வீழ்ச்சியும் யூ டியூப்பின் எழுச்சியும்!

டிவி விமர்சனங்களின் வீழ்ச்சியும் யூ டியூப்பின் எழுச்சியும்!மின்னம்பலம் : தமிழ் சினிமா 365: பகுதி - 31 இராமானுஜம்
அறிவியல் மாற்றமும், வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் மனித வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றன. அறிவியலைப் பின்புலமாக கொண்டு இயங்கும் திரைப்பட துறை இதற்கு விதிவிலக்கு அல்லவே.
உலகமயமாக்கல் காரணமாக வெளிநாட்டுப் படங்கள் விரைவில் நம்மை வந்து அடைகின்றன. முன்பெல்லாம் DVD எங்கு கிடைக்கும் என தேடியலைந்தது நிகழ்ந்தது. ஆனால் இப்போதோ கோடம்பாக்கத்தில் இருந்த இடத்தில் இருந்தே வெளிநாட்டுப் படங்களை பார்த்ததையும், தேவைப்பட்டால் திருடுவதும் எளிதாக்கி உள்ளது அறிவியல் வளர்ச்சி.
அதே போன்றுதான் திரைப்படங்களுக்கான புரமோஷன், விமர்சனங்களின் வடிவம் மாறி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிலையங்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன் அரசு தொலைபேசியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

எவ்வளவு பணம் செலவு செய்தாலும் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமேதொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. தனியார் தொலைபேசி இந்தியாவிற்குள் தொடங்கப்பட்ட பின்பு முதலில் அறிமுகமாகி நடைமுறைக்கு வந்தது பேஜர். குறுஞ்செய்தி மூலம் ஒருவரை தொடர்பு கொள்ளும் வசதி இதில் இருந்தது. இதில் குறுஞ்செய்தி அனுப்பி படங்களை விளம்பரம் செய்தனர் தயாரிப்பாளர்கள். அதற்கு அடுத்த கட்டமாக மொபைல் புழக்கத்துக்கு வந்த போது படங்களை தியேட்டரில் வந்து பார்க்க முண்ணனி நடிகர்கள் பதிவு செய்யப்பட்ட ஆடியோ மூலம் மொபைல் பயன்படுத்துபவர்களிடம் பேசினார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களை இவ்வடிவங்கள் பாதிக்க செய்யவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையதளம் ,வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் வடிவில் சமூக வலைதளங்கள் உருவானது.
இங்கே கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லோருமே விமர்சகர்களே. தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்த மெனக்கெட்ட தயாரிப்பாளர்கள் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்தனர்.
தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விமர்சனங்கள் தாமதமாகவே வரும். சமூக வளைத் தளங்கள் சம்பவ இடத்தில் இருந்து செய்திகளை உடனுக்குடன் உலகம் முழுவதும் கொண்டு செல்லக் கூடியது.
தொலைக்காட்சி திரை விமர்சனங்கள் வெகுஜன தளங்களில் நம்பிக்கை இழக்க தொடங்கியது. தொலைக்காட்சி விமர்சனங்கள் வீழ்ச்சியடையத் தொடங்கிய சூழலை சமூக வலைத்தளங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன.
அதன் விளைவு திரைப்படத் துறை பற்றி பேசக் கூடிய யூ டியூப் கணக்குகள் வருடத்திற்குவெளியாகும் படங்களின் எண்ணிக்கையை விட அதிகம் இருக்கின்றன.
தயாரிப்பாளர்களும், நடிகர்களும்வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக செயல்பட தனிப்பட்ட முறையில் பணத்தை வாரியிறைத்தனர். இப்படியும் வருமானம் பார்க்கலாம் என்பதை சமூக வலைதள வாசிகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது தயாரிப்பாளர்கள் தான். கொடுக்க வேண்டியது போய் சேர்ந்தால் சமூக வலைத்தள வாசிகள் படங்களை வானளாவ புகழ்வார்கள். கொடுக்காத பட்சத்தில் அ ப்ப டத்தை கூறு போட்டு விமர்சனம் செய்ய தவறமாட்டார்கள். அப்படியொரு இடியாப்ப சிக்கலில் சார்லி.சாப்ளின் 2 சிக்கி கொண்டது..
இதனால் யூ டியூப்பில் திரைப்படங்கள் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளரும், இயக்குநருமா புகார் மனு கொடுத்தனர்.
இது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிவது போன்றது என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
சார்லி சாப்ளின் - 2 முதல் நாளே கண்டுகொள்ளப்படவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி படத்தை ஓட வைக்கும் முயற்சி என்கிறார் யூ டியூப்பில் விமர்சனம் செய்யும் விமர்சகர் ஒருவர். கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்கிறது பத்திரிகையாளர்கள் வட்டாரம்
சமூக வலைதளங்கள் - வசூல் தளங்களாகி வருகிறதா? அடுத்த கட்டுரையில்

கருத்துகள் இல்லை: