செவ்வாய், 29 ஜனவரி, 2019

இன்சூரன்ஸ் பணத்திற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்த ஆர் எஸ் எஸ் மற்றொரு உறுப்பினர் .

Image may contain: 1 person, smilingஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை நாடகம்: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்து நாடகமாடிய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்
கடந்த ஜனவரி 23 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலின் முகம் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தொடக்கத்தில் இந்த உடல் ஹிம்மத் படிதார் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரின் உடல் என்று கூறப்பட்டது.
ஹிம்மத்தின் தந்தை லக்ஷ்மிநாராயண் படிதார், அது தனது மகனின் உடல் என்று தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதி பாஜக வினர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆன நிலையில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர் நலமுடன் உயிருடன் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஹிம்மத் படிதார் உயிருடன் உள்ளதோடு மட்டுமல்லாமல் அவர், தான் இறந்துவிட்டதாக பிறரை நம்பவைக்க ஒருவரை கொலை செய்து முகத்தை சிதைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.


இவர் தனக்கு 10 லட்ச ரூபாய் கடன் தொகை இருந்ததாகவும் அதனை அவர் அடைக்க முடியாத நிலையில் அவரது காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இந்த நாடகத்தை நடத்தியுள்ளார் என்றும் காவல்துறை தங்களது விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
முதலில் இந்த கொலையை அப்பகுதியை சேர்ந்த மதன் மால்வியா என்ற மற்றொரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் தான் செய்திருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகித்தது. இதற்கு காரணம் இந்த உடல் கிடைத்த நாளில் இருந்து மதனையும் காணவில்லை. இதனிடையே பாஜகவினர் கடுமையான போராட்டங்களை நடத்திவர கண்டெடுக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது காவல்துறை. அதன் பின்னர் அந்த உடலில் டி.என்.ஏ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் கிடைத்த முடிவுகளின் படி இறந்த உடல் ஹிம்மத் படிதாரின் உடல் அல்ல என்று நிரூபணமானது. அத்துடன் அந்த உடல் இவ்வழக்கில் காவல்துறை கொலையாளியாக சந்தேகித்த மதன் மால்வியாவினுடையது என்று தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறை இதன் மீதான முழுக்கட்ட விசாரானையை முடிக்கி விட்டது. 2018 டிசம்பர் மாதம் ஹிம்மத் படிதார் தனக்கு காப்பீடு எடுத்தும் மேலும் பலரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பில் கடன் பெற்றுள்ளார். மேலும் தான் மரணமடைந்துவிட்டதாக நாடகம் ஒன்றை நடத்தி காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றிவிட முடிவு செய்துளார். ஜனவரி 22 ஆம் தேதி ஹிம்மத் படிதார் மதன் மால்வியாவை கொலை செய்து அவரது முகத்தை அடையாளம் தெரியாதவாறு எரித்து சேதப்படுத்தியுள்ளார். அத்துடன் இறந்த உடலின் அருகில் தனது இரு சக்கர வாகனத்தையும் அவர் நிறுத்தி வைத்துள்ளார். இவை அனைத்தும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் கொலைகளுக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சியை பாஜக குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களே தங்கள் அமைப்பினரை கொலை செய்துவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தனது கருத்தை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சர் பாலா பச்சன், “பாஜக வினர் தங்களது மோசமாக குற்றங்களுக்கு தாங்களே பலியாகி வருகின்றனர். முன்னதாக மந்த்சௌர் முனிசிபாலிட்டி தலைவர் பிரஹ்லத் பந்த்வார் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது பாஜக காங்கிரஸை குறை கூறியது. பின்னர் விசாரணையின் போது நிதி மோசடி தொடர்பாக பாஜகவை சேர்ந்தவரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.” என்று தெரிவித்துள்ளார்< மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் :

கருத்துகள் இல்லை: