m மாலைமலர்: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி
சித்தராமையா தவறாக நடந்துகொண்டதாக ஊடகங்கள் குறிப்பிடும் மைசூரு பெண், நான்
மேஜையை தட்டிப் பேசியதால் தான் அவர் கோபப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
பெங்களுரு:
மைசூருவில்
தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல்
மந்திரி அவமதித்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு கர்நாடக
மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சையில் தொடர்புடைய பெண்ணான ஜமாலா இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
‘முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கும் எனக்கும் இடையில் எந்த சச்சரவும் கிடையாது. அவர் இந்த மாநிலத்தின் மிக சிறந்த முதல் மந்திரியாக ஆட்சி செய்தவர். நான் சில குறைகளை தெரிவித்து மூர்க்கத்தனமாக பேசினேன்.
ஒரு முன்னாள் முதல் மந்திரியிடம் நான் அப்படி பேசியிருக்க கூடாது. மேஜையை தட்டியபடி நான் பேசிய முறையை கண்டுதான் அவர் கோபப்பட நேர்ந்தது’ என ஜமாலா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக