செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு! - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு! - பள்ளிகல்வித்துறை அறிவிப்புndtv: - பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8வது நாளாக நடந்து வருகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.


இந்நிலையில், ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது. 22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: