வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

மன்மோகன் சிங் : தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.

இது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து tamil.goodreturns.in - Keerthi : டெல்லி:மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். மின்துறை அமைச்சரான பியூஷ் கோயல் நிதித்துறையினை கூடுதல் பொறுப்பாக ஏற்று, இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த பட்ஜெட் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், ஊரக மக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசிற்கு நடத்தப்பட்ட சோதனையாகவே பார்க்கப்பட்டது.

தேர்தல் வரும் காலம் என்பதால் அனைத்து தரப்பு வாக்குகளையும் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை கொச்சைப்படுத்துவது போன்று சில அறிவிப்புகள் இருப்பதாக ராகுல் காந்தியும், காங்கிரசும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அதே நேரத்தில், இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமரும், சிறந்த பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் கடுமையாக கருத்துகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது :நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.
இது ஒரு தேர்தல் பட்ஜெட். விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்துள்ள சலுகைகள் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்

கருத்துகள் இல்லை: