tamil.news18.com: பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்!
ரயில்வே ஊழியராக இருந்த இவர்
தொழிற்சங்கம் மூலம் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். எமர்ஜென்சிக்கு எதிராக
நடந்த போராட்டங்களிலும் பங்கேற்று, அதன் பின்னர் நேரடி அரசியலில்
குதித்தார்.<>மறைந்த
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறையை கவனித்த
ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88 வயதில் இன்று வயோதிகம் சார்ந்த
உடல்நலக்குறைவால் காலமானார்.
< கர்நாடக மாநிலத்தில் கடந்த 1930-ம் ஆண்டு பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். ரயில்வே ஊழியராக இருந்த இவர் தொழிற்சங்கம் மூலம் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களிலும் பங்கேற்று, அதன் பின்னர் நேரடி அரசியலில் குதித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து முதன் முறையாக 1977-ம் ஆண்டில் எம்.பியாக தேர்வானார். பின்னர், 1989 முதல் 1990 வரை நடந்த ஐக்கிய ஜனதா ஆட்சியில் ரயில்வே அமைச்சாராக பெர்னாண்டஸ் பணியாற்றியுள்ளார்.
2000-ம் ஆண்டு மத்தியில் அமைந்த பாஜக தலைமையிலான அரசில் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 2004-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற அவர் டெல்லியில் வசித்து வந்தார்.
அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் தனது 88 வயதில் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக