வியாழன், 31 ஜனவரி, 2019

ஜனவரி 31, 1976 தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமான நாள்


Jerry Sundar  : ஜனவரி 31, 1976 : தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமான நாள் என கூறலாம்.
ஆம், இந்தியாவின் இருண்ட காலமான நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்ததாலோ, அல்லது மகோரா என்னும் சூழ்ச்சியின் உருவத்தின் செயலால் இந்திரா மேற்கொண்ட நடவடிக்கையோ, தலைவர் கலைஞரின் அரசு கலைக்கப்பட்டது.
திமுக.வில் இருந்து வெளியேறிய நாள் முதல் ஊழல் புகார் பட்டியலை ஆளுநர், பிரதமர், குடியரசு தலைவர் என்று எடுத்து சென்று அளித்தும் பயனில்லையே என்று விரக்தியில் இருந்தார் MGR.
1975ல் லோக் நாயகி ஜெயபிரகாஷ் நாராயணன் சென்னையில் கர்ஜிக்க இருப்பதை அறிந்த MGR ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்க அழைப்பு விடுத்து கடிதம் எழுத,
கூட்டத்தில் பேசிய ஜெயபிரகாஷ் நாராயணன்,
"ஊழல் குற்றச்சாட்டு சொல்வது எளிது, நிரூபிப்பது கடினம். குற்றச்சாட்டு சொல்வதால் மட்டுமே அவ்வரசு ஊழல் அரசாகி விடாது. கருணாநிதி சட்டமன்றத்தில் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறார். வேறு என்ன செய்ய வேண்டும" என்று கேட்க
விரக்தியின் உச்சத்திற்கே சென்றார் MGR.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு இரவோடு இரவாக நெருக்கடி நிலைக்கு வழிவகுக்க, செல்லும் இடமெல்லாம் அதை எதிர்த்து கடுமையாக விமர்சித்து கலைஞருக்கு இந்திரா தூது அனுப்புகிறார்.
ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருங்கள். ஓராண்டு ஆட்சியின் காலத்தை நீட்டிக்கிறேன் என்று.
கலைஞர் அதை மறுக்க, கோவை நகரில் லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையில் நெருக்கடிநிலை நிலை எதிர்த்து 1975 டிசம்பரில் திமுக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு(1972) MGR அளித்த அதே புகார் பட்டியலை திமுக மாநாடு முடிந்த அடுத்த தினமே, நாஞ்சில் மனோகரன் அனுப்புகிறார்.
1976ம் ஆண்டு ஜனவரி திங்கள் 31ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. இரவோடு இரவாக அனைத்து இரண்டாம் கட்ட தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.

அமைதி அமைதி அமைதி காத்து வாருங்கள். அண்ணனை காண செல்வோம்" என்று அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.
ஜனவரி 31, 1991
ஆட்சி பொறுப்பேற்ற(27 ஜனவரி 1989) சரியாக இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.
ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி இழந்தாலும் எந்த கரையும் இன்றி குற்றமில்லை என்று நிரூபித்த கலைஞருக்கு, மதில்மேல் பூனை தான் ஆட்சியதிகாரம் என்பதற்கு இதுவொரு சான்று.
வி.பி.சிங் பிரதமராக்கி தேசிய அளவில் இடஒதுக்கீட்டீல் புரட்சி கண்ட கலைஞருக்கு, சந்திரசேகர் அரசு கொடுத்த பரிசு ஆட்சி கலைப்பு.
1989 மார்ச் மாதம் முதல் ஆட்சி கலைப்புக்கு கோரிக்கை வைத்த ஜெயாவுக்கு சரியான வாய்ப்பு சந்திரசேகர் காலத்தில் கிடைத்தது எனலாம்.
மத்திய சந்திரசேகர் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த ஜெயாவின் நெருக்கடியை அடுத்து, ஆட்சிக்கு எதிராக அறிக்கை கேட்கிறார்கள்.
அப்போதைய தமிழக ஆளுநர் வங்கத்து சிங்கம் என்று கலைஞரால் அன்போடு அழைக்கப்பட்ட "சுர்ஜித் சிங் பர்னாலா",
ஆட்சிக்கு எதிராக அறிக்கை தர மறுக்கவே,
சுதந்திர இந்திய வரலாற்றில், அரசியல் சட்டப்பிரிவு 356ல் Otherwise முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இதற்கு காரணம் அப்போதைய மத்திய அமைச்சர் சு.சாமி.
1990 நவம்பரில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று எழுதிய ஒரு கோப்பு,
அதை வைத்தே ஆட்சியை கலைக்க மத்திய அரசு பரிந்துரைக்க,
குடியரசு தலைவர் வெங்கட்ராமன் ஆட்சியை கலைத்தார்.
ஈழத்திற்காக ஆட்சியையே திமுக இழந்த வரலாறு இன்றைய சிறுபிள்ளை அரசியல்வாதிகள் அறிய வாய்ப்பில்லை.
Jerry Sundar

கருத்துகள் இல்லை: