ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பத்ம விருதுகள் .. பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்க ஒரு விருது டிராமா

Nanda Kumaar : பத்மஸ்ரீ_விருதுகள்.. 2019ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் #பத்ம_ஸ்ரீ விருதுகளுக்கான பெயர் பட்டியலில் திரு. பங்காரு அடிகளாரின் பெயரும் இடம் பெற்று இருப்பது பலருக்கு கிண்டலும், கோவத்தையும் வரவழைத்து இருக்கிறது.
பட்டியலில் நாட்டின் நான்காவது உயரிய விருதான
பங்காரு அடிகளாருக்கு இந்த விருதை அளிப்பதை யாராலும் எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஆனால் அதே சமயம் இதுவரை இந்த விருதுகளை பெற்றவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா என பார்த்த போது கிடைத்த தகவலே இந்த பதிவு.
2010-2018 ஆண்டிற்கு உட்பட்ட ஒன்பது ஆண்டுகளில் மொத்தமாக இந்திய அளவில் இந்த விருதை பெற்றவர்கள் 726 பேர். அதில் தமிழகத்திற்கு என கணக்கில் வருவது 46 பேர்.
இந்த 46 பேரில் பார்ப்பனகள் தான் பெரும்பான்மையாக 50 விழுக்காட்டிற்கும் மேல். பிற மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் என பாதி, வெளிநாட்டவர்கள் சிலர், வெளிமாநிலத்தவர்கள் சிலர்.
ஆக உண்மையாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிலும் மக்களுக்கு நல்லது செய்தவர்கள் என பார்த்தா 10 பேர் வருவதே அரிது.
இப்படி எல்லாவற்றையும் உள்நோக்கம் கொண்டு பார்ப்பதா என்ற கேள்வி எழலாம். அது எனக்கும் எழுந்தது அதற்கு அந்த பரிசு பெற்றவர்களின் பதிலே சான்றாக அமைந்தது.
மொத்த விருதுகளில் கலைத்துறைக்கு தான் அதிகப்படியான விருதுகள் கிட்டத்தட்ட 25% இருக்கும் அதில் கூத்துப்பட்டறை சேர்ந்த ஒருவர், ஒரு நாட்டுப்புற பாடகி, இன்னுமொருவர் மக்களை கலையோடு தொடர்பு உடையவர் போக மீதம் இருக்கும் அனைவரும் கர்நாடக இசைக்கலைஞர்கள். அவர்களை தவிர்த்து மூன்று சினிமாத்துறையினர் இந்த பட்டியலில் உள்ளனர் அவர்கள் யார் என்றால் கேரளாவில் பிறந்து, கேரள மொழி திரைப்படங்களில் பெரும்பான்மையான படங்கள் பணியாற்றிய சந்தோஷ் சிவன், பிரியதர்சன், ஜெயராம் ஆகியோர் என்பது தான் கொடுமை.

விளையாட்டிற்கு 3 விருதுகள் அதில் மாரியப்பன் தங்கவேலு போக நரைன் கார்த்திகேயன் என்ற பார்ப்பனர் மற்றும் தீபிகா என்ற வெளிமாநிலத்துக்காரர்.
இங்கே சாதி எங்கே வந்தது என கேட்டால் தொழிலதிபரில் டி.வி.எஸ் ஒனர் வேணு சீனிவாசன், கல்வியாளர்கள் பட்டியலில் ஒய்.ஜீ. பார்த்தசாரதி அவர்களின் மனைவி. இவர்கள் என்ன இந்த மக்களுக்கும் மாநிலத்திற்கும் செய்தார்கள் என அவர்களுக்கே தெரியாது.
இதைப்போன்ற அரசு விருதுகள் எல்லாம் ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பெயரிலேயே கொடுக்கப்படுகிறது. எனவே இதை நினைத்து பெருமை படவோ அல்லது வருத்தப்படவோ அவசியம் இல்லை. மற்ற செய்திகளை போல இதையும் கடந்து போக வேண்டியது தான்

கருத்துகள் இல்லை: