வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ஒரு கார் ஓட்டுநரின் மனநிலையை சிதைத்து படுகொலை செய்திருக்கிறது போக்குவரத்து காவல்துறை!


தமிழ் மறவன் : கொலைகார போலீசு! ஒரு கார் ஓட்டுநரின் மனநிலையை சிதைத்து படுகொலை செய்திருக்கிறது போக்குவரத்து காவல்துறை!
இந்த தேசத்தில் தன்மானத்தோடு வாழவே முடியாதா?
தன் சொந்த தேசத்திலேயே தனித்து விடப்பட்டதாக உணரும் தருணம் எவ்வளவு கொடுமையானது.
நான்கு அல்லது ஐந்து மணிநேரங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் அதுவும் 250 அல்லது 300 ரூபாய் வாடகை வரும். உனவின்றி கிடைப்பதை உண்டு உறக்கம்மின்றி இப்படி 18 மணிநேரம் வரை அலைந்தால்தான் 1200லிருந்து 1500/- ரூ வரை வாடகை கிடைக்கும்.
இதில் ஓட்டுநரின் வருமானம் என்பது 350லிருந்து 400/- ரூ மட்டுமே கிடைக்கும் என்பதுதான் கொடுமை!
என்ன செய்ய?
முதலீடு போட்டு சிக்கிக் கொண்டோமே!
வேறு தொழில் தெரியாதே!
தங்களுக்கு கிடைக்கும் தினசரி சிறு வருமானத்தில்தான் அரசு இரட்டிப்பாக்கி கொள்ளையடிக்கும் Road tax, Insurance, FC, service, மேலும் உதிரிபாகங்கள் மாற்றுவது, பழுது பார்ப்பதற்கென செலவுகளை பார்க்க வேண்டும்.
மோடியின் உலகமகா சாதனையான எரிபொருள் விலையேற்றத்தையும் எதிர் கொள்ள வேண்டும்.

இப்படி எதிர் கொள்ளும் தன் குடும்ப, வண்டியின் தேவைகளுக்காக வாங்கப்படும் கந்து வட்டி கதை மிகக் கொடுமையானது!
அத்தனையும் எப்படியோ கம்பியின் மீது திறமையாய் நடக்கும் வித்தைகாரரைப் போல் பெருமூச்சு விட்டு சற்று மனம் ஓய்வடைய எண்ணுகையில் வண்டியின் மாத தவனைக்காக மார்வாடியின் ஆள் வந்து ரௌடித்தனம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா?
"பணம் கட்டிட்டு வண்டிய எடு" என்பான். ஒருமணி நேரம்கூட வாய்ப்பளிக்காத தூக்கு தண்டனைக்கு ஒப்பான நெருக்கடி!
இப்போது சொன்னதெல்லாம் கொஞ்சம்தான்...!
இவ்வளவு கொடுமைகளை எதிர் கொள்ளும் ஒரு மனிதரின் மனநிலையை சற்று கண்ணை மூடி எண்ணிப் பாருங்கள் தோழர்களே!
எங்கே தங்கள் வாகனத்தை நிறுத்தியிருந்தாலும் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு போலீசு ஆற்றும் கடமையை பல நேரங்களில் கவனித்திருப்பீர்கள்.
மாதத்தில் சுமார் 20 நாட்களே இவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட அந்த சொற்ப வருமானமும் கிட்டும்.
அந்த 20 நாள் வருமானத்திலும் குறைந்தபட்சம் எட்டுநாள் வருமானத்தை உறுதியாக போலீசு வழிப்பறி செய்துவிடும் நிலையை என்னவென்பது?
உழைக்கும் வர்க்க ஓட்டுநர்களின் நிலையோ...,
கொடுமை,
கொடுமை..!
அரசின் பகற்கொள்ளை, கந்து வட்டி, மார்வாரிகளின் வட்டிக்கு வட்டி குட்டி போட்டு வயிற்றில் அடிக்கும் சுரண்டல், யார்தான் நியாயம் கேட்பாரோ?
பலர் ஓட்டுநரின் படுகொலையை கோழையின் தற்கொலையாக பகடி செய்து சிறு புன்னகையோடு கடப்பதை என்னவென்பேன்.
அந்தோ... நாளை நீ என்பதை மறந்து விட்டாயோ!
தினம், தினம் செத்துப் பிழைத்தவன் இன்று ஒரேயடியாய் உறங்கச் சென்ற கொடுமையை கூட இந்த சமூகம் அமைதியாய் கடந்து போவதைவிட ஓர் பச்சைப் படுகொலை வேறெதுவுமில்லை.
கல்வியின்றி,
வேலையின்றி,
உணவின்றி,
கூலியின்றி,
மருத்துவமின்றி,
சொந்த மண்ணில் நாய்களை போல் செத்து மடியும் அத்தனையும் அரச பயங்கரவாத கொலைகளே!
அரசு பயங்கரவாத நெருக்கடிகளை இச்சமூகத்தின் ஒவ்வொரு உழைக்கும் மனிதரும் இனி நேரடியாக எதிர் கொள்ளும் நிலையை பார்ப்பனீயத்தின் கொடுங்கரங்கள் அரசு முகமூடிகளில் உள்நுழைத்து பலி கொள்வதை எம்மக்கள் அறியப்போவது எப்போது?
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை: