சனி, 2 பிப்ரவரி, 2019

150 கோடி முதலீட்டில் ஆந்திராவில் புதிய திருப்பதி கோயில் .. 25 ஏக்கரில் 5 நட்சத்திர வசதியோடு ?

பூமி பூஜைதிருப்பதி மாதிரிக் கோயில்எஸ்.கதிரேசன் - விகடன் : ஆந்திர மாநிலம் புதிய தலைநகரம் அமராவதியில் பெரும் பொருள்செலவில் உருவாகி வருகிறது திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களில் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திராவின் இந்தப் புதிய நகரில் புதிய கோயில் ஒன்றை மிகப்பிரமாண்டமாக  25 ஏக்கர் நிலப்பரப்பில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

இதற்கான பூமி பூஜை நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேங்கடேசப் பெருமாள் கோயில் பொதுமக்கள் பிரார்த்தனைக்குத் திறக்கப்படும்’’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.


இதைத் தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக சீனிவாச கல்யாண மகோத்ஸவமும்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், திருப்பதி சேவகர்கள், எனப் பல்லாயிரக்கணக்கான பேர்கள் கலந்து கொண்டனர். இதைத் திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்
vikatan.com

கருத்துகள் இல்லை: