ஞாயிறு, 27 ஜனவரி, 2019

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு போஸ்டர்;அதிர்ச்சியில் அதிமுக, பாஜக!!

SSnakkheeran.in - ராஜ்ப்ரியன் : சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைக்க மத்திய – மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையக்கப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருவாய்த்துறை முடித்துள்ளது.
இந்நிலையில் பாமக உட்பட சில விவசாய அமைப்புகள் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்துள்ள நீதிமன்றம், விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அதன்பின் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி இந்த 8 வழிச்சாலை செல்லவுள்ள மாவட்டங்களில் உள்ள நிலம் கையகப்படுத்தப்படும் தாலுக்காக்களில் தாசில்தார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த அதில் 80 சதவிதம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பே கிட்டுகிறது.
அதிகாரிகள் விவசாயிகளை மிரட்ட அவர்கள் மறியல் போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

இதற்கிடையே, நாடாளமன்ற பொதுத்தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் 5 மாவட்டங்கள், நூற்றுக்கும் அதிகமான கிராமங்களில் வாக்களிக்க மாட்டோம் என்கிற தலைப்பில், 8 வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் இவன் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் என்கிற பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.fy"> இதனை மத்திய – மாநில உளவுத்துறை போலிஸார் குறிப்பு எடுத்து மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த சாலையை ஆதரிப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு தான் என்பதால் அந்த கட்சி நிர்வாகிகளும் அதிர்ந்துப்போய் உள்ளனர். ஏற்கனவே பல காரணங்களால் மக்கள் அரசு மீது அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர். தற்போது இதுவேறா, இப்படியே போனால் மக்களிடம் ஓட்டு கேட்கவே போகமுடியாது போல என நொந்துப்போய் பேசுகின்றனர்.ify"> இந்த போஸ்டர் ஒட்டியது யார் என அதில் உள்ள கைபேசி எண்களை வைத்து விசாரிக்கிறது உளவுத்துறை போலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: