திங்கள், 28 ஜனவரி, 2019

பி.ஜெய்லுலாபுதீன்.. மீண்டும் தொலைக்காட்சிகளில் வரப்போகிறாராம் .. ருசிகண்ட பூனை

Mansoor Mohammed : மீண்டும் பி.ஜே தொலைகாட்சிகளில் வரபோகிறாராம் ..
பத்திரிக்கையாளர் sa sufiyan தகவல் தந்திருக்கிறார்..
ஆடிய கால்கள் சும்மா இருக்குமா ..
ஒரு சமுதாயத்தின் இளைஞர்களை மூளைச்சலவை செய்ய நிச்சயமாக திறமை இருக்கவேண்டும் எதை எப்படி செய்தால் அது எந்தளவு பலனை தருமென அறிந்து செயல்பட்டிருக்கவேண்டும் ஆனால் பாருங்கள் ஒழுக்கமின்மையும் அறமும் இல்லாது போனால் அந்த நபர் வலுவிழந்து அசிங்கபட்டு நாறிபோய்விடுவார் என்பதற்கு பி.ஜெய்லுலாபுதீன் சாட்சியாக நிற்கிறார் ..
நிறைய பேர் அவர் அனைத்தும் அறிந்திருந்ததாக நம்பினார்கள் எந்த கேள்விக்கும் விடையளிக்கும் ஆற்றல் உண்டென நம்பினார்கள் .. ஆனால் சில ஆய்ந்தறியும் திறனுடையோர் இவர் ஏமாற்றுகாரரென செப்பிக்கொண்டே இருந்தார்கள் .. எல்லாவற்றிக்கும் பதிலளிக்கும் வல்லவரென நம்பவைத்ததே ஒரு ஏமாற்று .. எல்லாம் அறிந்தவரென யாருமில்லை எல்லாம் எனக்கு தெரியுமென்பவன் மிக பெரிய அயோக்கியன் .. எந்த விடயத்திற்கும் நேரடியாக பதிலளிக்காமல் சுற்றிவளைத்து பேசுகிறவர் .. ஒன்று அவர் நம்மை மூளைச்சலவை செய்கிறார் அல்லது மழுப்புகிறார் அவர் சொல்லும் பதிலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக நம்மை தயாராக்குகிறார் அவ்வளவுதான் .. உன் அறிவுகொண்டு சிந்தி என்கிறவன் உன்னை நேர்வழிபடுத்த முனைகிறவன் மட்டும் சிறந்தவனாக முடியும்
ஆனால் தான் விரும்புகிறவற்றை திணிக்கிறவன் நிச்சயமாக மோசக்காரனாக தான் இருப்பான்..


..
ஒரு சமுதாயத்தின் போதகர்கள் (மதபோதகர்) அறிவின் நிழலில் கதைப்பவர்களாக என்றும் இருந்ததில்லை தான் சார்ந்த மதம் அல்லது கொள்கையை வலியுறுத்துபவர்களாகவே இருப்பார்கள் ஆனாலும் ஒழுக்கநெறி மனிதமாண்பில் அக்கறை கொண்டவர்களாக காணமுடியும் ஆனால் இப்போதெல்லாம் இவ்விரண்டும் (ஒழுக்கநெறி மனிதமாண்பு) சிறிதுமில்லாத புகழ் பணம் மீதான நாட்டம் கொண்டவர்களாக தன்னை பின்பற்றுகிற நம்புகிறவர்களை வழிகெடுக்கிற செயலை கொஞ்சமும் குற்றஉணர்ச்சியின்றி செய்கிறார்கள்
அறநெறியற்றவர்களாக வழிகேடர்களாகவே இருக்கிறார்கள் .. பி.ஜே எனும் தனிமனிதனின் செயல்பாடுகளோடு நமக்கு அக்கறையில்லை அவர் மீதான குற்றசாட்டென்பது அவருக்கும் அவரோடு சம்பந்தபட்டவருக்குமான தனிநபர் விடயம் அதனால் மட்டுமே அவரது செயல்பாடுகளை கண்டிக்கவில்லை மாறாக சமுதாய இளைஞர்களிடம் தன்னை தூய்மையானவன் நாலும் அறிந்தவன் நற்செய்தியை பரப்புகிறவன் என்பதைதான் எதிர்க்க வேண்டியிருக்கிறது .. எல்லோரையும் எதிர்கூட்டில் நிறுத்துகிற செயல் ஏற்புடையதல்ல 

இவர் சொல்லும் வழிமுறைகள் தான் இஸ்லாத்தின் உள்ளதென்பதும் இவர் மட்டுமே தூய இஸ்லாத்தின் வடிவத்தை அறியாமையில் இருந்த சமூதாயமக்களிடம் கொண்டு சேர்த்தவர் என்பதும் நகைப்பிற்குரியது .. நிறைய மார்க்கநெறியாளர்கள் அறிஞர்கள் அவர்களின் சொல் செயல் எல்லாம் தூய்மையாகவும் வெளிப்படையானதாகவும் அறம் சார்ந்ததாகவும் பிற சமூகமக்களின் நன் மதிப்பை பெற்றதாகவும் இருந்திருக்கிறது அவையெல்லாம் இவர் கூற்றுப்படி தவறானதாக சித்தரிக்கும் இழிசெயலும் தான் எல்லாம் அறிந்தவன் என்ற திமிரும் புதிய வழிதடத்தை உருவாக்கியவன் என்ற இறுமாப்பும் இவரை கேலிபொருளாக்கி நிறுத்தியது .. இஸ்லாமிய சட்டவிதிகளின் படியே இவர் தண்டிக்கபடவேண்டியவராக இருக்கிறார் ..
இவரின் செயலும் சொல்லும் இனி யாராலும் ஏற்கமுடியாததாக..அதைவிட சந்தேகம் கொள்ளகூடியதாக நகைப்பிற்குரியதாகவே இருக்கும் ..ஒழுக்கமின்மையும் அதை மறைக்க கூடுதல் பொய்யை திரும்ப திரும்ப சொல்வதிலும் இவர் காட்டிய முனைப்பு இன்று இவரை தொடர்ந்து தாக்குகிறது ..
..
அறமிலா செயல் துரத்தும் வீழித்தும்
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: