aanthaireporter.com: பல்வேறு வணிகர்கள், உணவு விடுதிகள், மக்கள் என சென்னையில் எந்த
மூலையில் பார்த்தாலும் அனைத்து தரப்பினரும் படிப்படியாக சுற்றுச்சூழலுக்கு
உகந்த பொருட்களுக்கு மாறத் தொடங்கி விட்ட நிலையில் பிஸ்கட், ஷாம்பூ,
பானங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை
விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மரத்திலான சமையல் உபகரணங்கள், பேப்பர் மற்றும் துணியிலான பைகள், ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவை பிளாஸ்டிக்கு மாற்றாக வலம் வரத் தொடங்கிவிட்டன.
இதனிடையே ஓரிரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அக்கடிதத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சம்பு கல்லோலிகர் வெளியிட்டு உள்ளார். இரண்டு மாநிலங்களுக்குள் மட்டும் தொழில் செய்தால் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் பதிவு செய்துகொள்ளும்படியும், இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொழில் செய்தால் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் பதிவு செய்துகொள்ளும்படியும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவர்கள் மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக