ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் வந்த ரயில் மூலம் இந்திய ரூபாய் 500க்கான கள்ள நோட்டுக்கள

அட்டாரி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் வந்த ரயில் மூலம் இந்திய ரூபாய் 500க்கான கள்ள நோட்டுக்கள் வந்தன. சர்வதேச ரயில்வே ஸ்டேஷனில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இது கண்டு பிடிக்கப்பட்டது. இந்திய -பாக்., எல்லையில் இருக்கும் அட்டாரி ( பஞ்சாப் மாநிலம் ) என்ற ரயில் வே ஸ்டஷேனில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது குறித்த விவரம் வருமாறு : அட்டாரிக்கு வந்த சரக்கு ரயிலில் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பஞ்சாப் மாநில கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. ஒரு இடத்தில் சரக்கு உள்ள ஒரு பகுதியில் குழி பறித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. ஒன்பதரை லட்சம் ஆகும். இவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுக்கள். மேலும் இதே இடத்தில் ஹெராயின் போதை பொருளும் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ .5 கோடி ஆகும்.
 
இது இரண்டாவது முறை: கூடுதல் கஸ்டம்ஸ் கமிஷனர் எஸ். எம்., அக்தர் இது குறித்து கூறுகையில்; கள்ளப்பணம் பிடிக்கப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த 10 ம் தேதியும் 9 லட்சத்திற்கான போலி ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டது. இது கவலை தரும் விஷயம் ஆகும் . இதனை யார் அனுப்பி வைக்கிறார்கள், யார் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது இன்னும் துப்பு துலக்கப்படவில்லை. தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்றார்.
இந்திய சந்தைக்குள் பாகிஸ்தான் பணத்தை அனுப்பி பொருளாதாரத்தை சீரழிக்க பயங்கரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற கோணத்திலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ஜே கணேசன் - Kumbakonam,இந்தியா
2010-08-22 10:24:27 IST
என்ன முட்டாள் கஸ்டம்ஸ் அதிகாரிகள். அதை அப்படியே கண்காணித்து யார் வந்து எடுகிறார்கள் என்பதை கண்காணித்து அந்த நபர்களை பிடித்து இருந்தால் பாராட்டலாம். இவ்வளுவு முக்கிய விஷயத்தை கோட்டை விட்டு முட்டாள் தனமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க என்ன யோகிதை உள்ளது இவனுகளுக்கு? முட்டாள்கள் என்றால் இதை விட கேவலமாக ஒருவனும் செயல் பட்டு இருக்கு மாட்டான்! இவனல்லாம் ஒரு அதிகாரி என்று சொல்லவே வெட்க படுகிறோம்! ஏர்போர்டில் துபாய் இலுருந்து வரும் ஏழை தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கும் இவனுகளுக்கு புத்தி எங்கிருந்து வரும்! கள்ள நோட்டு அடிக்கும் கும்பல் உஷாராகி இருக்கும்! இனிமேலே அனுப்புவான இப்படி?...
வெங்கி - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-22 10:16:44 IST
ஆட தெரியாதவள் முற்றம் கோணல் என்ற கதையை போல் அல்லவா உள்ளது நமது அதிகாரிகளின் கவலை...
Vijayaraaghavan - Sunnyvalecalifornia,யூ.எஸ்.ஏ
2010-08-22 10:04:02 IST
வெள்ள நிவாரணத்திற்கு சில நாட்கள் முன்பு இந்தியா கொடுத்த 5 மில்லியன் டாலர் பணத்தை உடனடியாக திருப்பி விட்டார்கள்

கருத்துகள் இல்லை: