நியூயார்க் நகரில் தீவிரவாதிகளால் விமானம் மூலம் மோதி தாக்கித் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் (உலக வர்த்தக மையம்) இருந்த இடத்தில், மசூதி கட்ட திட்டமிட்டிருப்பதை எதிர்த்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
இரட்டை கோபுரம் மீது தீவிரவாதிகள் விமானத்தை மோதி நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்தனர். இரட்டைக் கோபுரமும் தரைமட்டமாகிப் போனது.
இந்த இடத்தில் தற்போது மசூதி கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவை இஸ்லாமியப்படுத்துவதை எதிர்ப்போர் என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பினர் மன்ஹாட்டன் தெருக்களில் நீண்ட வரிசையில் நின்று கையில் அமெரிக்க கொடிகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.
இந்த அமைப்பினர் கூறுகையில், இங்கு மசூதி கட்ட விட மாட்டோம். இது எங்களது முகத்தில் துப்புவதைப் போல உள்ளது. இதைத் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். இங்கு மசூதி கட்டக்கூடாது. எங்களைப் பார்த்து அல் கொய்தாவினர் நிச்சயம் சிரிப்பார்கள்.
இந்த இடத்தை நாங்கள் போர் நினைவுச் சின்னமாக கருதுகிறோம். இது மயான பூமி. இங்கு வந்து மசூதியைக் கட்டுவதை பெரும் குற்றமாக கருதுகிறோம். இது எங்களை அவமானப்படுத்தும் செயல் என்றார்.
இதற்கிடையே, நியூஜெர்சியைச் சேர்ந்த இரண்டு அமெரிக்க ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோமாலியாவில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறி கைதாகியுள்ளனர். எகிப்து செல்வதற்காக ஜான் எப் கென்னடி விமான நிலையத்திற்கு வந்தபோது இவர்களை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இருவரும் அல் கொய்தா அமைப்பில் சேர திட்டமிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக