நாடு திரும்பிய செயலாளர் நாயகம் அவர்கள் தமது இந்திய விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும்,இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து மேலும் அதிகாரங்களை பெறுவதற்கு இந்திய அரசு முதற்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் வரை ஆதரவு தெரிவித்திருப்பது தமது நீண்ட கால கனவுகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்கள் அதை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தோடு இருப்பது மாபெரும் அங்கீகாரம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் போது அரசியலுரிமை பிரச்சினை மட்டுமன்றி மேலும் பல பயனுள்ள விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமாக்கப்பட்டுள்தாகவும் இது குறித்து அனைத்து மக்கள் சமூகத்திற்கும் தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது இந்திய விஐயத்தினை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்ய உதவியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
சேறு வீசினால் அது தன் மீது விழும்போது சந்தணமாக மாறும் என்றும் கற்களை வீசினால் அது பூக்களாக விழுந்து மணம் வீசும் என்றும் தனது இந்திய விஐயத்தின் போது ஆற்றாக்கொடுமையில் கிளப்பி விடப்பட்ட புரளிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்ததோடு புயல் மழையை எதிர்கொண்ட தமக்கு இப்போது கிளப்பப்படும் புரளிகள் யாவும் புழுதி மழை என்றும் நாடு திரும்பிய அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.
பிரபாகரனது முக்கியமான நிறைவேறாத ஆசைகளில் ஒன்றையாவது நிறைவேற்றலாம் என்ற நப்பாசையில் புலிக்கும்பல்கள் அலைவது புரிகிறது.
திருந்தவே மாட்டீர்களா? நீங்கள் சோறுதான் சாப்பிடுகிறீர்களா?
புலிக்கும்பல்களே வெளிநாட்டு வெங்காயங்களின் வீசி எறியும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு தப்பித் தவறியும் கூட தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டீர்களா ?
முதலில் உங்கள் நாட்டு அகதி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரி அனுமதி தடையை எடுங்கள்.
முகாம்களில் உள்ள மக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை கொடுங்கள்.
ஈழத்தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் போக்கை மாற்றுங்கள்.
எல்லாவற்றிக்கும் மேலாக கொலைகார புலிக்கும்பல்களின் ஏவல் பேய்களாக நடக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக