ஞாயிறு, 6 ஜூன், 2010

புலிகளே பொறுப்பு,வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு


வடக்கு மக்களின் அவல நிலைமைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியும் முக்கிய பொறுப்பாளி என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நிறுத்த வேண்டுமெனக்கோரி     தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்குப் புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என்பது உண்மை என்ற போதிலும் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் இலகுவானது.     தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாது தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டவேண்டும்.    வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு.   இரண்டு மாகாணங்களாகச் செயற்படுவதில் தவறில்லை.
இரண்டு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மக்களின் மீள்குடியேற்ற நடவ டிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: