நடிகர் திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நடிகர் திலகன் மலையாள படங்கள், டி.வி. தொடர்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல புதிய பட வாய்ப்புகளை இழந்தார். நடித்துக் கொண்டிருந்த புதிய படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையியில் திருவனந்தப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடித்துக் கொண்டிருக்கும்போது இறந்துவிட வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் எனது பட வாய்ப்புகளை பறித்து விட்டனர். கடந்த 7 மாதமாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாததால் வருமானம் இன்றி வறுமையில் வாழ்கிறேன்
எனது நடிப்பு தொழிலை செய்ய விடாமல் தடுப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நான் கண்ணீருடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டியுள்ளது.
பெட்டிக்குள் இருக்கும் சினிமாக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் அமைச்சர்கள் எனது விஷயத்தில் தலையிட மறுக்கிறார்கள்.
தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தராமல் மறுத்தால் ஸ்ரீநாத் போல நானும் தற்கொலை செய்ய வேண்டியதிருக்கும். அதற்கு மலையாள நடிகர் சங்கம்தான் பொறுப்பு என்று திலகன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக