மும்பை, பெங்களூர், கொல்லத்தில் மீண்டும் பன்றி காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) பரவியுள்ளது. இந்த நோய்க்கு கடந்த இரு வாரங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
கொல்லத்தில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷ்ணு, பிந்து, நசீம் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இக்காய்ச்சல் தாக்கி குண்டரை பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனையில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜூ கூறும்போது இக்காய்ச்சல் தாக்குதல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தால் மட்டும் குணப்படுத்த இயலும். பலர் தனியார் மருத்துவமனைக்கு போய் வி்ட்டு இங்கு வருகின்றனர் என்றார்.
கேரளாவில் பன்றி காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏராளமானோர் பரிசேதனைக்காக அரசு மருத்துவனைகளில் குவிந்து வருகின்றனர்.
மும்பையில்....:
அதே போல மகாராஷ்டிரத்திலும் ஸ்வைன் ப்ளூ பரவி வருகிறது. கடந்த 16 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பையில் 27 வயதான கர்ப்பிணியும், ஒரு வயது குழந்தையும், 25 வயது பெண்ணும் பலியாகியுள்ளனர்.
பெங்களூரி்ல்...
பெங்களூரி்ல் 58 வயதான பெண்ணும், உடுப்பியில் 30 வயது வாலிபரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு 1 மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஸ்வைன் ப்ளூ தாக்குதல் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை குறைந்துள்ளதால் இந்த நோய் தாக்குதல் அதிகரிப்பதாகத் தெரிகிறது.
[ Read All Comments ] [ Post Comments ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக