வெள்ளி, 11 ஜூன், 2010

சந்திக்க தயார் தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒரேயொரு தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா

கரும்புலிகளை கண்டு கூட அச்சப்படாத டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட்டமைப்பினரால்  ஏவிவிடும் கறுப்புச்   சட்டைகளை கண்டு ஒரு போதும் அஞ்சப்போதில்லை என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இந்திய விஐயத்தினை சகித்துக்கொள்ளாத கூட்டமைப்பினர் தமது     ஊதுகுழல் பத்திரிகையான உதயனில்    டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஐனாதிபதி அவர்கள் அதிக அதிகாரங்களை வழங்கி பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக காழ்ப்புணர்ச்சியில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இந்தியா சென்றிருக்கும் செயலாளர் நாயகம் அவர்களை கைது செய்யுமாறு கோரி கூட்டமைப்பினர்    தமிழக சட்டத்தரணிகள் சிலரோடு தொடர்பு கொண்டு பேசி வருவதாக அறியப்படுகின்றது.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிலர் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்தும் தமிழ் நாட்டிற்கு தகவல்களை அனுப்பி வருவதாக தமக்கு தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு சட்டத்தரணிகள் பலரும் நீதியுடன்தான் செயற்படுவார்கள் என்றும், இந்திய அரசியல் கட்சிகளும் இது குறித்து நீதியுடன் செயற்படுவார்கள் என்றும் தாம் நம்பவதாகவும் கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் கூட்டமைப்பினர்  ஊடகங்களில் காட்டி வரும் சல சலப்புகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்ததோடு எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சட்ட ரீதியாக எதையம் சந்திக்க தயார் என்று பகிரங்கமாகவே இந்திய ஊடகங்களுக்க கருத்து தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் பல தடவைகள் உத்தியோக பூர்வமாகவும்,      உத்தியோக பூர்வமற்ற ரீதியாகவும் தமிழ் நாடு ஈறாக புது டில்லிவரை சென்று அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து வந்திருந்த எமது செயலாளர் நாயகம் அவர்களுக்கு எந்தவித தடைகளும், ஆட்சேபனைகளும் இருந்ததில்லை.  அப்பொழுதுதெல்லாம் டக்ளஸ்      தேவானந்தாவை  கைதுசெய்யுமாறு கோரிக்கையை முன்வைக்காத கறுப்பு சட்டைகாரர்கள்   இப்பொழுது புதிதாக இந்த பிரச்சனையை திடீர் என்று  கையில் எடுத்ததன்  காரணம் என்ன என்றும்   ஐனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒரேயொரு தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா என்பதால் அதை கண்டு தொடை நடுங்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடே இன்று காட்டப்படும் சல சலப்பாகும் என்றும் மேலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-சந்திக்கு வந்தசெய்தி.

கருத்துகள் இல்லை: