பெடாவில் அமிதாப்பச்சன், ஜான் ஆபிரகாம் போன்ற பிரபல நடிகர்கள் விளம்பர தூதுவர்களாக உள்ளனர். தற்போது த்ரிஷாவும் இந்த அமைப்பில் சேர்ந்துள்ளார்.
திரிஷாவுக்கு இயற்கையாகவே விலங்குகள் மீது அலாதி பிரியமாம். குறிப்பாக நாய்கள் மீது மிகுந்த அன்பு காட்டுவார். செல்ல நாய் ஒன்றையும் வீட்டில் வளர்த்து வருகிறார்.
த்ரிஷாவின் விலங்கின பாசம் குறித்து அறிந்த பெடா அமைப்பினர் அவரை அணுகி விளம்பர தூதுவராக சம்மதம் கேட்டுள்ளனர். அவரும் உடனே ஒப்புக் கொண்டாராம். வெள்ளை ஆடையில் தேவதை போன்ற தோற்றத்தில் கையில் நாய்க்குட்டியுடன் தோன்றுவது போல் போஸ் கொடுத்து மிருக வதைக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளார் த்ரிஷா.
இந்த படங்களை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு இந்தியா முழுக்க விநியோகிக்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் நாய்க் குட்டிகளை தத்தெடுத்து வளர்க்கும்படியும், அவைகளிடம் குழந்தைகள் போல் அன்பு செலுத்தும் படியும் பிரசாரம் செய்யப் போகிறாராம் த்ரிஷா.
இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "எனக்கு மிருகங்கள் மீது கொள்ளை பிரியம். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். நான் தங்கி இந்த ஓட்டலுக்கு காரை ஓட்டி போய்க்கொண்டு இருந்தேன். அப்போது ரோட்டில் ஒரு நாய்குட்டி ஏதோ ஒரு வண்டியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
உடனடியாக காரை நிறுத்தி நாய்க்குட்டியை எடுத்து புளூகிராஸ் அமைப்புக்கு கொண்டு போனேன். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய் குட்டியை பிரிய மனமின்றி சென்னைக்கு எடுத்து வந்து விட்டேன். தற்போது அது என் வீட்டில் வளர்கிறது. ஆறு வயது ஆகியுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஒருவேளை 'பெடா' அமைப்பினர் என்னை அணுகியிருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நான் முழுமனதோடு ஏற்றுக் கொண்டேன்" என்றார்.
இதற்கான விளம்பர படப்பிடிப்பு நாளை மறுநாள் நடக்கிறது. இந்த ஷூட்டிங் முடிந்ததும், கமலின் 'மன்மத அம்பு'க்காக பிரான்ஸ் பறக்கிறார் த்ரிஷா!
பதிவு செய்தது: 08 Jun 2010 9:45 pm
PETA வின் மேல் இருந்த மதிப்பு குறைகிறது. சிக்கன் தான் பிடித்த உணவு என்று கூறும் த்ரிஷாவை எப்படி அவர்கள் அணுக முடியும்? சிக்கன் கொல்வது பரவாயில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக