கொழும்பில் நடந்துவரும் ஐ.ஐ.எஃப்.ஏ. சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விழாவில் கடைசியாக நடக்கின்ற விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளாமல் போனதால், இலங்கை சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பாலிவுட் ஆஸ்கர்ஸ் என்று வருணிக்கப்படுகின்ற இந்த விழாதான் இலங்கையில் இதுவரை நடந்ததிலேயே மிக பெரிய அளவில் மிகுந்த ஆடம்பராத்துடன் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது.
தனது யுத்த காலத்திலிருந்து வெளிவர இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சி உதவும் என்று இலங்கை நினைத்திருந்தாலும், இலங்கையில் இந்த நிகழ்வு நடப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதன் எதிரொலியாக சில பெரிய சினிமா நட்சத்திரங்கள் இந்த விழாவுக்கு வரவில்லை என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்திருக்கிறது.
இந்திய திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.
இந்தி திரைப்பட உலகின் இன்னொரு பெரிய நட்சத்திரமான ஷாருக்கானும் இந்த விழாவில் காணப்படவில்லை.
இலங்கை அரசாங்கம் இலங்கையில் தமிழர்களை நடத்தும் விதத்தைக் கண்டித்து இலங்கை அரசை எதிர்த்துவரும் தென்னிந்திய திரைப்பட உலகம், ஐ.ஐ.எஃப்.ஏ. விழா இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று குரல் எழுப்பியிருந்தது.
இந்த வேண்டுகோளை ஏற்று தென்னிந்திய நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவை ஏற்கனவே புறக்கணித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சக்திகள் தமது நாட்டின் மீது அசாதாரண அழுத்தங்களை திணித்துவருகிறது
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக, "ஐ.ஐ.எஃ.ஏ. விழா இப்படி புறக்கணிப்புகளுக்கு மத்தியில் நடத்தப்படுவது மணப்பெண் இல்லாமல் கல்யாணம் நடப்பது போல இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணப்படாமல் இருந்தால் இப்படியான கண்டனங்கள் தொடரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவுக்காக கொழும்பு வந்துள்ள மும்பை நடிகர்களில் அதிகம் பிரபலமானவரான சல்மான் கான் இந்தப் புறக்கணிப்பைக் கண்டித்துள்ளார்.
கொழும்பு விழாவில் கலந்துகொள்ளும் நடிகர்களின் படங்களைத் தாங்கள் புறக்கணிப்போம் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சம்மேளனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக