சனி, 12 ஜூன், 2010

ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடக்கின்ற ் கால்பந்தாட்ட உலகக்கோப்பைப் போட்டி

சிறுவர் சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கான வாத்தியக்காரர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் அதில் கலந்துகொண்டனர்.இந்த சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ள 6 ஆப்பிரிக்க அணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு ஆப்பிரிக்க மரத்தின் ஆறு கிளைகளாக அந்நாடுகளின் தேசியக் கொடிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடக்கின்ற இந்தக் கால்பந்தாட்ட உலகக்கோப்பைப் போட்டி நிச்சயம் வெற்றிகரமாக அமையும் என்று தென்னாப்பிரிக்கர்கள் பெருமான்மையானோர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக நூறு கோடி டாலர்கள் கணக்கில் செலவு செய்து, கண்ணைக் கவரும் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையங்கள், பிற கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டுள்ளன.
தலைவர்கள் கருத்து
“தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி ஒழிந்த அந்த நாளுக்குப் பின்னர் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான நாள் என்றால் அது இன்றைய தினம்தான்.” என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியுள்ளார்.
“இது வெறுமனே ஒரு விளையாட்டு போட்டி மட்டும் அல்ல. உலக மக்களை ஒருவரோடொருவர் தொடர்புபடுத்துவதற்கான ஓர் வழி இது.” என்று சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளேட்டர் கூறியுள்ளார்.
மண்டேலா வரவில்லை
இந்தக் கால்பந்துப் போட்டிகளின் துவக்க வைபவத்தில் தென்னாப்பிரிக்காவின் தேசியத் தலைவர் எல்சன் மண்டேலா கலந்துகொள்வார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் வியாழனன்று நடந்த ஒரு கார் விபத்தில் நெல்சன் மண்டேலாவின் பதிமூன்று வயது கொள்ளுப் பேத்தி ஸெனானி மண்டேலா உயிரிழந்ததை அடுத்து, அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
முதல் ஆட்டம்
போட்டிகளின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மெக்ஸிகோவை எதிர்த்து விளையாடியது. இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

கருத்துகள் இல்லை: