உலகில் முதலீடு செய்வதற்கு இலங்கையை மிகவும் பொருத்தமான நாடாகக் கருதுவதாக உலக வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேகமாக வளரும் பொருளாதாரம் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பான சூழல் காரணமாக உலக வர்த்தகர்கள் மேலும் மேலும் இலங்கையின் பால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஐஃபா விழாவை முன்னிட்டு நடைபெற்ற உலக வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பொன்றிலேயே அவர்கள் இக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக உலக வர்த்தக சமூகத்தினருக்கு எடுத்துரைத்தார். இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் விவசாயத்துறை, கைத்தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் காணப்படுவதாக உலக வர்த்தக சமூகத்தினருக்கு ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக