ஞாயிறு, 22 டிசம்பர், 2013

Rajasthan CM வசுந்தரா ராஜேயிடம் 46 துறைகள் ! இன்னொரு பெண் சர்வாதிகாரி?

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ், நல்வாழ்வு மற்றும் சுரங்கத் துறைகளை தனது அமைச்சரவை சகாக்களுக்கு சனிக்கிழமை ஒதுக்கியுள்ளார். இன்னும் அவரது கைவசம் 46 துறைகள் உள்ளன.
நல்வாழ்வுத் துறை ராஜேந்திர ராத்தோருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை குலாப் சந்த் கட்டாரியாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காளி சரணுக்கு கல்வித்துறையும், கைலாஷ் மெக்வாலுக்கு சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாநில நீர்வளத் துறை அமைச்சராக சன்வார் மல் ஜாத் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வசுந்தரா ராஜேயிடம் உள்துறை மற்றும் நிதி உள்ளிட்ட 46 துறைகள் உள்ளன.

ராஜஸ்தானில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர் கேபினட் அமைச்சர்களாக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனர். மேலும், தனி அமைச்சர்களாக 3 பேர் பதவி ஏற்றனர். அந்த 9 பேரில் கட்டாரியா மற்றும் ராத்தோர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. முதல்வர் வசுந்தரா ராஜேயின் முந்தைய அரசில் உள்துறை அமைச்சராக இருந்த கட்டாரியா மீது குஜராத் சொராபுதின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதேபோல் தாரா சிங் போலி என்கவுன்ட்டர் வழக்கில் ராத்தோரை கைது செய்து சிபிஐ சிறையில் அடைத்திருந்தது. இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்dinamani.com/

கருத்துகள் இல்லை: