வெள்ளி, 27 டிசம்பர், 2013

குஜராத்தில் இளம்பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்! விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு!

கடந்த 2009ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலமைச்சர் நரேந்திரமோடியின் பரிந்துரையின் பேரில் தான், அமித் ஷா உத்தரவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வலதுகரமாக இருந்து வருபவர் அமித்ஷா, தற்போது உ .பி. மாநில பா.ஜ.,வின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது அழுத்தத்தின் பேரில் பெண் ஒருவரை மாநில போலீசார் உளவு பார்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தொலைபேசி ஓட்டு கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டு, அவ்வாறு நடக்கவில்லை என பிரச்சனை முடிக்கப்பட்டது.
அமித்ஷா, போலீசார் சிலருக்கு இது தொடர்பாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும் கோப்ரா போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் அதன் பின்னணி குறித்து அறிய விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவையில் சட்டவிரோதமாக இந்த சம்பவம் நடந்ததா? தொலை தொடர்பு துறை சட்டத்திற்கு எதிரானது, ஒரு தனிப்பட்ட நபர் சுதந்திரம் பாதிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், இந்த குழுவில் உறுப்பினர்கள் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசிக்கப்படும். இந்த கமிஷன் 3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும் என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் எனத் தெரிகிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: