திங்கள், 23 டிசம்பர், 2013

விநாயக சதுர்த்தி அடாவடிகள்


பக்தர்களே இதுவா பக்தி - சிந்திப்பீர்! விநாயகர் சதுர்த்தி முடிந்து, மூன் றாம் நாள் பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கும் இந்து அமைப் பினர் இதை ஒரு சடங்காக வருடா வருடம் செய்கின்றனர். அந்த மூன்றாம் நாளில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை, துன்பங்களைப் பற்றியோ யாரும் கவலை கொள்வதாக தெரிய வில்லை.
11.9.2013 அன்று திருச்சி நகரத்தில் மட்டும் 844 பிள்ளையார்கள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டதாக பத் திரிகைச் செய்தி. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். அனைத்து வெளியூர் நகரப்பேருந்துகளும் அன்று மாலை 4 மணிக்கு மேல் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன. தூவாக்குடி, பாய்லர் போன்ற ஊர் களுக்கு செல்லும் பேருந்துகள் சத்திரத்திலிருந்து தில்லை நகர் மார்க்கமாக புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம் வழியாக பை-பாஸ் சாலையைக் கடந்து பழைய பால் பண்ணை வழியாகவும், லால்குடி, சமயபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகளும், பெரம் பலூர், அரியலூர், துறையூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வெளியூர் பேருந்துகளும் மாம்பழச்சாலை வரை தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். இந்த மார்கத்திலிருந்து பணிக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் துறை பணி செய்யும் ஆண் களும், பெண்களும் சத்திரத்திலிருந்து மாம்பழச்சாலை வரை காவிரி ஆறு வழியாக நடந்து சென்று மாம்பழச் சாலையில் பேருந்து ஏற வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் எவ்வளவு பெரிய கொடுமை இது. இப்படி பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்து, துன்பம் கொடுத்து ஏன் இப்படி செய்ய வேண்டும். இதுவா பக்தி? விநாயக சதுர்த்தி அடாவடிகள் 

நான் ஒரு கிறிஸ்டியனோ அல்லது முஸ்லிமோ அல்ல! நானும் ஒரு இந்து அன்று என் கண் முன்னால் பொது மக் களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் அனைத் தையும் கண்கூடாக காண நேர்ந்தது. நான்கு பக்கங்களிலிருந்தும் வாகனங் களில் சிலைகள் வந்துக் கொண் டிருந்தன. இரவு 8 மணிக்கு மழை கொட்ட ஆரம்பித்து மழை விடுவதற்கு இரவு 9.30 மணி ஆகிவிட்டது.
அந்த மழையிலும் ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக மாம்பழச்சாலை நோக்கி பணி முடிந்து, பேருந்துக்கு சென்று கொண்டிருந்தனர். இளம் பெண்கள் பலர்தம் துப்பட்டாவை தலையில் போட்டு நனைந்தபடி சென்று கொண்டிருந்தனர்.
எதிர்த் திசையிலி ருந்து அதாவது சிறீரங்கம், திருவானைக் கோவிலிலிருந்து வாகனத்தில் பிள்ளை யாரை சுமந்து வந்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், இளம் பெண்களை பார்த்து கூப்பாடு போடுவதும், ஆய்... ஊய்... என விசிலடித்தும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அத்தனை இளைஞர்களும் 20 வயது கொண்ட வாலிப வயதினர்.
இதைக்கண்ட பல இளம் பெண்கள் கூனி குறுகிப்போயினர். இவை அனைத் தையும் காவிரி பாலத்தின் முகப்பில் மேடை அமைத்து சிலைகளை வரவேற் றுக் கொண்டிருந்தனர். இந்து அமைப்பினர் அவர்களின் கண்களுக்கு இந்த அநியாயங்கள் தெரியாமலா போய் விட்டன? வெளியூர்களி லிருந்து தனியார் கம்பெனிகளுக்கு இளம் பெண்களை பணிக்கு அனுப்பும் பல ஏழை பெற்றோர் தன் பிள்ளைகள் இந்த கொட்டும் மழை யிலும் இன்னும் வீடு வந்து சேரவில் லையே என எப்படி கவலை கொண்டி ருப்பர்? இப்படி பொதுமக்களுக்கு பல சிரமங்களை கொடுத்துதான் பிள்ளை யார் சிலைகளை கரைக்க வேண்டுமா? பல இளைஞர்களும், இந்து அமைப் பினரும் சிந்திக்கவே மாட்டார்களா?
காவிரி பாலத்திற்கு கிழக்குப் பக்கம் அதே காவிரி ஆற்றில் பை-பாஸ் பாலம் ஒன்று உள்ளது. அங்கு இந்த சடங்கு களை செய்யலாமே! ஒரு தெருவில் ஒரு பிள்ளையார் சிலையை வைக்க வேண்டு மானால் 20 வயதிற்குட்பட்ட பல இளைஞர்கள் இரவு பகலாக வேலை செய்கின்றனர். தினம் சிலைக்கு பூஜை, அன்னதானம், துண்டறிக்கை, சுவ ரொட்டி விளம்பரம், கடைசி நாளன்று வாகன ஏற்பாடு. சீரியல்செட் பல்புகள், தாரை தப்பட்டை வழி நெடுகிலும் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம்! எங்கே போய் கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்?
ஒரு பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைக்க வேண்டுமானால் ஒவ்வொரு சிலைக்கும் குறைந்த பட்சம் ரூ. 15,000/- செலவாகும். (பூஜை, அன்னதானம், பிட்நோட்டிஸ், சுவரொட்டி, வாகன ஏற்பாடு, சீரியல் செட், தாரை  தப்பட்டை, சிலையின் விலை உட்பட)
இந்த வருடம் திருச்சி நகரத்தில் கரைக்கப்பட்ட சிலைகளின் எண் ணிக்கை 844 (மாவட்ட கணக்கு தனி) 844 00 15,000 = 1,26,60,000 (ஒரு கோடியே இருபத்தாறு லட்சத்து அறுபதாயிரம்) எந்த பிரயோஜனமும் இல்லாத, பயனற்ற ஒரு சடங்கின் மூலம் வேலையற்ற இளைஞர்களை பயன் படுத்தி, ஒரு கோடியே இருபத்தாறு லட்சம் ரூபாய் காவிரி ஆற்றில் கரைக்கப்படுவதை நினைக்கும்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் எந்த மய்யப்புள்ளியில் நாம் நின்று கொண் டிருக்கிறோம்? இதுவும் அல்லாமல் அன்று ஒரு நாள் அரசின் பங்காக காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுக்காப்புக்காக, அரசுப்பணம் வீண் விரயம். இந்து அமைப்பினரே, இளை ஞர்களே நீங்கள் வண்டிகளில் பிள்ளை யார் சிலைகளை சுமந்து வரவில்லை. பொதுமக்களின் பாவத்தை சுமந்து வருகிறீர்கள். சிலை கரையவில்லை எனில் தடி கொண்டு தாக்குகிறீர்களே இதுவா பக்தி? இந்த இளைஞர்கள் காணி நிலம் போன்றவர்கள், அவர்களை நல்ல முறையில் பக்குவப்படுத்தி, பயன்படுத் தப்  போவது யார்? எப்போது? சிந் திப்பீரா?
மிகுந்த மனவலியுடன்
- எஸ்.வடிவேல், திருவானைக்கோவில்

கருத்துகள் இல்லை: