ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பாலியல் புகார்: கேப்டன் டிவி செய்தி ஆசிரியர் தினேஷ்குமார் கைது


சென்னை: சக பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கேப்டன் டிவி செய்தி ஆசிரியர் எஸ். தினேஷ்குமார் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கேப்டன் டிவியில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மதுரவாயல் காவல்நிலையத்தில் நேற்று இரவு ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் செய்தி ஆசிரியர் தினேஷ்குமார் தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய மதுரவாயல் போலீசார் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தினேஷ்குமாரை கைது செய்தனர். பாலியல் புகார்: கேப்டன் டிவி செய்தி ஆசிரியர் தினேஷ்குமார் கைது! கேப்டன் டிவி மறுப்பு ஆனால் கேப்டன் டிவி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புகார் கொடுத்திருக்கும் பெண் தற்போது கேப்டன் டிவியில் பணியில் இல்லை என்றும் உள்நோக்கத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை ஒரு கொலைக் குற்றவாளி போல போலீசார் நடத்தியதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: