ஞாயிறு, 22 டிசம்பர், 2013

மதுரையில் தயாநிதி மாறனின் ஷோ ! சாதாரண உணவகத்தில் சாப்பாடு, மு.க.அழகிரியுடன் சந்திப்பு too late too little

திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மதுரை மாநகர் மாவட்ட 4ம் பகுதி திமுக சார்பாக ஆரப்பாளையம் பேருந்துநிலையம் அருகே சனிக்கிழமை தீர்மான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக அவர் மதியம் பெரியார் பேருந்துநிலையம் அருகே உள்ள சாதாரணமாக நடத்தப்பட்டு வரும் குமார் மெஸ் என்ற உணவகத்தில் சாப்பிட்டார். பின்னர் மாலை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது மு.க.அழகிரியுடன், அவரது மனைவி காந்தி அழகிரியும் தயாநிதி மாறனை வரவேற்றனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மதுரையில் தயாநிதி மாறனின் ஷோ படங்களை விரும்பினால் பார்க்கவும்
படங்கள்: அண்ணல்

கருத்துகள் இல்லை: