வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆம் ஆத்மி மீண்டும் தேர்தலை சந்திக்க தீர்மானம்?!அதுவரை காங்கிரஸ் மீது சவாரி !நன்கொடை விவகாரம்: எந்த விசாரணைக்கும் தயார்

டெல்லியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் பாஜ 31
இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. 31 இடங்களை பிடித்த பாஜ ஆட்சி அமைக்க மறுத்தது. இதனையடுத்து, 2வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் அழைப்பு விடுத்தார். அக்கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர சம்மதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கிறார். வரும் 28ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘நாங்கள் பொறுப்பேற்றதும் காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவோம்’ என்று கூறியிருந்தார். இது, காங்கிரசாரிடம்  அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் இதன்பின்பும், கெஜ்ரிவால் நேற்று ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், காங்கிரசை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, காங்கிரஸ் ஊழல்கள் குறித்து விசாரிப்போம் என்று கூறியிருக்கிறார். இதனால், காங்கிரசாரிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, மத்தியில் சரண்சிங், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமராக பதவி வகித்த காலத்தில், அந்த மைனாரிட்டி அரசுகளுக்கு வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், எந்த அரசையும் ஓராண்டு வரை நீடிக்க விடவில்லை. எல்லாமே 10 மாதங்களுக்குள்ளாக கவிழ்க்கப்பட்டன. அதே போல், ஜார்கண்டில் சிபுசோரன்,  மதுகோடா அரசுகளையும், உத்தரபிரதேசத்தில் முல£யம்சிங் அரசையும் குறுகிய காலத்தில் காங்கிரஸ் கைகழுவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருவதால், ஆம் ஆத்மி அரசு எத்தனை நாள் தாங்கும் என்பதே தலைநகரில் பரபரப்பான பேச்சாக உள்ளது. எனினும், உடனடியாக ஆட்சியை கவிழ்த்தால் மக்களவை தேர்தலில் கெட்டப் பெயர் ஏற்படும் என காங்கிரஸ் யோசிக்கும். அதன் காரணமாக, தேர்தல் வரை காங்கிரஸ் ஆதரவை விலக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 6 மாதம் வரை ஆம் ஆத்மி ஆட்சி நீடிக்கவும் வாய்ப்புள்ளது. -tamilmurasu.org

கருத்துகள் இல்லை: