திங்கள், 23 டிசம்பர், 2013

அனுஷ்காவுக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா

நான் ஈ’ படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட தெலுங்கு படம் 'பாகுபாலி'.
இதில் பிரபாஸ் நாயகனாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ராணா, சத்யராஜ், கோபிசந்த், ரம்யா கிருஷ்ணன் முதலானோரும் நடிக்கிறார்கள். படத்தில் பிரபாஸ் இரு வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே ஒரு வேடத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் பிரபாஸின் இரண்டாவது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளாராம். அவர், முக்கிய கேரக்டரான அவந்திகா என்ற இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. இப்போது அனுஷ்காவுடன் தமன்னாவும் போட்டிப் போட்டு நடிக்க இருப்பதால் அது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது

கருத்துகள் இல்லை: