வெள்ளி, 27 டிசம்பர், 2013

மோடி தப்பி விட்டார் ! நீதி செத்துவிட்டது ?மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா


அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி மத வெறியாட்ட வழக்கிலிருந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விடுவித்து அகமதாபாத் பெருநகர கோர்ட் பிறப்பித்த தீர்ப்பைக் கேட்டதும், இந்த வழக்கில் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் 74 வயதான ஜாகியா ஜாப்ரி கண்ணீர் விட்டு அழுதார். இவர் குல்பர்க் சொசைட்டி கலவரத்தின்போது உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஆவார். குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புபுலனாய்வுக் குழு கூறியதை எதிர்த்து அப்பீல் செய்து போராடி வந்தவர் ஜாகியா. மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா குல்பர்க் கலவரத்தில் ஜாகியாவின் கணவர் உள்பட மொத்தம் 68 பேர் இந்து மத வெறியர்களால் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். நேற்று தனது அப்பீல் மனுவை அகமதாபாத் கோர்ட் நிராகரித்து உத்தரவிட்டதைக்கேட்டு கதறி அழுது விட்டார்ஜாகியா. அதேசமயம், இந்தத் தீர்ப்புகுறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் சத்யமேவ ஜெயதே அதாவது வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக ஜாகியா தெரிவித்துள்ளார். கண்ணீருடன் காணப்பட்ட அவர் கூறுகையில், நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றார். ஜாகியாவின் மகன் தன்வீர் ஜாப்ரி கூறுகையில், இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. எங்கள் முன்பு நீண்டதொரு சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்று உணர்கிறோம் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: