வியாழன், 26 டிசம்பர், 2013

பீகாரில் மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை ! விரைவில் அவர்கள் சிரிக்கவும் தடை விதிக்கப்படும்?

பாட்னா: பீகாரில், கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத பெண்கள், மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.
அதில், 'திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது' என, தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று, பஞ்., தலைவர், அன்சாரி அறிவித்தார். அதில், ''தடையை மீறி, யாரேனும், மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால், அவர்கள், ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்,'' என, தெரிவித்தார் இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான அரசில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கும், பீம் சிங்கிடம் கேட்டபோது, ''இது போன்ற தடை விதிக்க, யாருக்கும் உரிமையில்லை. பாதிக்கப்பட்ட யாரேனும், புகார் கொடுத்தால், பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்,'' என்றார். பைத்தியக்காரத்தனமானது..... நல்ல வேளை திருநங்கைகளுக்கு இந்த தடை இல்லை , சந்தோசம் 

பீகாரில், இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது புதிதல்ல. சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு, பள்ளி மாணவர்கள், மொபைல் போன் பயன்படுத்த தடை என, பலவிதமான தடைகள், அம்மாநில கிராமங்களில் பிறப்பிக்கப்படுவது, வழக்கமானது தான். dinamalar.com 

கருத்துகள் இல்லை: