திங்கள், 23 டிசம்பர், 2013

கம்போடிய கலைக்கோயில்கள்- (பாகம்-1) உல­கி­லேயே மிகப் பெரிய இந்துக் கோயில் அங்­கோர்வாட்

கம்­போ­டியா போகிற விமானம் பறந்து கொண்­டி­ருந்­தது. பக்­கத்தில் ஒரு வெள்­ளைக்­காரன் கண்­களை  ஒரு கறுப்­புத்­து­ணி­யினால் கட்டி தூங்கிக் கொண்­டி­ருந்தான். எனக்குத் தூக்கம் வர­வில்லை. எப்­படித் தூக்கம் வரும்? கடந்த பல வருடங்­க­ளாக கைந­ழு­விப்­போன  ‘அங்­கோர்வாட்’ பயணம் இன்று கைகூ­டி­யதில் தூக்கம் எங்கே வரும்? கண்­களை மூடினால் மூடிய கண்­க­ளுக்­குள்ளே இரண்­டு­ நாட்­க­ளுக்கு முன் படித்­துப்­பார்த்த கம்­போ­டியா பற்­றிய புத்­த­கங்­களின் நினைவு வந்­தது. புதி­தாக ஒரு நாட்­டிற்குப்  போவ­தற்கு முன்னர்  அந்த நாட்டைப் பற்­றிய பல விப­ரங்­களைத் தெரிந்து கொண்டு போனாலே பய­ணத்தில் பாதி வெற்றி கிடைத்து விடும் என்று ஒரு சுற்­றுலா பயண எழுத்­தாளர் சொல்­லி­யி­ருக்­கிறார். ஆகவே புதி­தாகப் பயணம் போகிற ஒரு நாட்டைப் பற்­றிய விப­ரங்­களை  புத்­த­கங்கள், நூல­கங்கள், இணை­யத்­த­ளங்கள் மூலம் தேடி எடுத்­துப் ­ப­டிப்பேன். அவ்­வாறு படித்த ஒரு புத்­தகம் அது அவுஸ்­தி­ரே­லியா, மெல்பேர்ன் மொனாஸ் பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர்  டேவிட் சான்ட்லர் எழு­திய A History of Cambodia என்ற புத்­த­க­மாகும்.
 

தாய்­லாந்து, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடு­களின் எல்­லை­க­ளையும் தாய்­லாந்து  குடாக்­க­டலின் பழைய பெயர் சயாம் குடாக்­கடல், எல்­லை­யையும்   எல்­லை­க­ளாகக் கொண்ட  நாடு கம்­போ­டியா.   அது 1,81,040 சதுர கிலோ மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்­டது. மக்கள் தொகை 14,952,662 (2012ஆண்டு வரை) ஆகும்.
இவர்­களில் திரா­விட பெளத்­தர்கள் என அழைக்­கப்­படும் பெளத்­தர்கள் 86 வீத­மா­ன­வர்கள். ஏனை­ய­வர்­களில் சீனர் 3 வீதம், சாம் (Chaam) இனத்­தவர் 2 வீதம், இஸ்­லா­மியர் 2 வீதம், வியட்­நா­மியர் 5 வீதம் ஏனையோர் 2 வீதம். ஆதி­கால தமிழ் எழுத்தின் வரி வடி­வங்­களைப் போன்ற சமஸ்­கி­ருதம், பாளி   ஆகிய மொழிகள் கலந்து   எழுத்­து­களைக் கொண்ட கம்­போ­டி­யாவின்  ‘கெமர்’ (Khmer) என்ற மொழியே கம்­போ­டி­யாவின் தேசிய மொழி­யாகும். 1863 முதல் 1954வரை பிரான்ஸின் ஆட்­சியில் இருந்­ததால் பிரெஞ்சு மொழி இன்றும் அங்கு செல்­வாக்­காக இருக்­கி­றது.
முழுக்க முழுக்க விவ­சாய நாடான கம்­போ­டியா அரிசி முன்­னணி நாடு­களில் ஒன்­றாக இருந்த போதும் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பின்­தங்­கிய நாடு. வறுமைக் கோட்­டுக்குக் கீழே உள்­ள­வர்கள் அதி­க­மா­ன­வர்கள் வாழ்­கி­றார்கள். 1954 இல்  பிரான்­ஸி­ட­மி­ருந்து  சுதந்­திரம் பெற்ற கம்­போ­டியா அர­சியல் சண்­டையில் பல­வீ­ன­மா­கி­யது. பக்­கத்து நாடான வியட்நாமின் உள்­நாட்டு யுத்­தத்­தி­னாலும் நாட்­டுக்குள் மோதல்கள் உரு­வா­கின.
கம்­போ­டியா  சுதந்­திரம்   அடைந்த போது மன்னர் நொரோடொம் சிஹானுக் (Norodom Sihanouk) தலை­மையில்  முடி­யாட்சி மலர்ந்­தது. 1960இல் மன்னர் மர­ணத்தைத் தொடர்ந்து அவரின் மகன் கம்­போ­டி­யாவின் தலை­வ­னாக வந்தான். வியட்நாம் வடக்கு, தெற்கு எனப்­பி­ரிந்து யுத்தம் செய்ய கம்­போ­டி­யத் ­த­லைவர் வடக்கு கம்­யூனிஸ்ட் கெரில்­லாக்கள் தெற்கு வியட்­நா­மிற்கு கம்­போ­டியா வழி­யாக ஆயு­தங்கள் எடுத்து (கடத்திச் செல்ல) செல்ல உத­வினார்.
இது கம்­போ­டியா மக்­க­ளுக்கு பிடிக்­க­வில்லை. அமெ­ரிக்­கா­விற்கும் பிடிக்­க­வில்லை. 1967இல் கம்­போ­டி­யாவின் எல்­லைப்­பு­றங்­களில் பதுங்­கி­யி­ருக்கும் கெரில்­லாக்கள் மீது குண்டு வீசப் போவ­தா­கவும், இதனால் கம்­போ­டியா மக்களுக்குப்  பாதிப்பு ஏற்­ப­டு­மென அமெ­ரிக்கா எச்­ச­ரித்­தது. ஆனால்  இள­வ­ரசர் சிஹானுக்  அதனை காதில் போட்டுக்  கொள்­ளாமல் 1970இல் சீனா­வுக்குப் போய் சீனத் தலை­வர்­களைச் சந்­தித்தார்.
அச்­ச­மயம் கம்­போ­டி­யாவில் இரா­ணுவ புரட்சி நடந்து கம்­போ­டிய அரசின் தலைமைப் பொறுப்­பி­லி­ருந்து சிஹானுக் நீக்­கப்­பட்டார். இப்­பு­ரட்­சியின் பின்­ன­ணியில் இன்­னொரு இள­வ­ரசன் சிசோவத் சிறிக் மடாக் இருந்தான். ஆனால் இந்தப் புரட்சி அமெ­ரிக்க உள­வுப்­ப­டையின் உத­வி­யோடு நடந்­தது.
கம்­போ­டி­யாவில் ஆட்சி மாற்றம் வந்­ததும் அமெ­ரிக்கா ஆத­ரவு தென்வியட்­நா­முக்கு எதி­ராக சண்டை போடும் வட­வி­யட்நாம் கெரி­லாக்­களை நாட்டை விட்டுப் போகும்­படி உத்­த­ரவு இடப்­பட்­டது. ஆனால் கம்­யூ­னிஸ்­டு­க­ளுக்கு ஆத­ரவு பெரு­கி­யது. வடவியட்நாம் கம்­போ­டியா கம்­யூ­னிஸ்­டு­க­ளுக்கு ஆயுத உதவி செய்­தது. அதன் விளை­வாக கம்­பூஜா கம்­யூனிஸ்ட் கட்சி ஆயுதப் பயிற்சி கொடுத்து வீரர்­களை உரு­வாக்­கி­யது.
1973இல் CPK (Communist Party of Kmpucha) என அழைக்­கப்­படும். கம்­யூனிஸ்ட் கட்­சியின் ஆயுத வீரர்கள் வட வியட்­நாமின் ஆத­ர­வோடு கம்­போ­டி­யாவின் 60 சதவீத­மான நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்றி தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தார்கள். 1975இல் தலை­ந­கரை 115 நாட்கள் சுற்றி வளைத்துப் போரா­டி­னார்கள் அவர்கள். பிறகு தலை­நகர் அர­சியல் தலைமை சர­ண­டைய கம்­போ­டியா CPK இயக்­கத்தின் கைகளில் விழுந்­தது.
அதன் தலைமைப் பொறுப்பை ‘பொல்பெட்’ ஏற்றான். நாட்டைப் பொது­வு­டைமைச் சித்­தாந்­தத்தில் நடத்தப் போவ­தாகச் சொன்ன போதும் சர்­வா­தி­காரம் தலை­தூக்­கி­யது. அரசை விமர்­சித்­த­வர்கள், அர­சுக்கு எதிரா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்டுக் கொல்­லப்­பட்­டார்கள்.
இவ்­வாறு  கொல்­லப்­பட்­ட­வர்கள் தொகை (எவ­ராலும் நம்­ப­மு­டி­யாது. ஆனால்  நம்­பித்தான் ஆக வேண்டும்) இரு­பது இலட்சம் மக்கள் இவர்­களில் கம்­போ­டி­யாவில்  இருந்த சீனர்­களும் வியட்­நா­மி­யர்­களும், இஸ்­லா­மி­யர்­களும் அடங்­குவர்.
1981இல் வெளி­நாட்டில் இருந்த  இள­வ­ரசர் சிஹா­னுக்கு ஆத­ர­வோடு ஜன­நா­யகக் கம்­பூஜா என்ற கூட்­ட­ணியை உரு­வாக்கி நாட்­டுக்கு வெளியே ஒரு அரசை அமைத்­தன. இதனை ஐ.நா. அங்­கீ­க­ரித்­தது. சர்­வாதிகாரி பொல்பெட் ஆட்சி தடு­மா­றி­யது. பாரிஸ் நகரில் 1989இல் கம்­போ­டி­யா­விற்­கான சமா­தான மாநாடு நடந்­தது. கம்­போ­டி­யாவில் மக்கள் ஆட்சி கொண்டு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.
ஆனால் அது  1993இல் வெற்­றி­ய­டைந்­தது. நாடு கடந்து வாழ்ந்த இள­வரர் சிஹானுக் மறு­ப­டியும் கம்­போ­டி­யாவின் மன்­ன­னாக ஏற்­கப்­பட்­டாலும் அவரின் அதி­காரம் நாடா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கப்­பட்­டது. அதன் பிறகு நடந்த தேர்தல் மூலம்  1997இல் ஹன்சென் (Hunsen) என்­பவர்  பிர­த­ம­ராக வந்தார். ஆனால் அவர் முன்னாள் கம்­யூனிஸ்ட் இயக்கப் போராளி என்­பதால் கடந்த காலங்­களில் நடந்த மனித உரிமை மீறல்­க­ளையும், யுத்தக் குற்­றங்­க­ளையும் விசா­ரிக்கத் தயங்­கினார். ஆயினும் கம்­போ­டிய மக்கள் அவரை ஏற்­றுக்­கொண்­டனர்.
புத்­தக நினை­வு­களில் இருந்து என் எண்­ணங்­களை அறுத்துக் கொண்டு சிந்­தித்தேன். உலகில் இருக்­கிற ஜப்பான், பூட்டான் ஆகிய பெளத்த நாடு­க­ளைத்­த­விர ஏனைய பர்மா, இலங்கை, கம்­போ­டியா, வியட்நாம், சீனா, மங்­கோ­லியா, லாவோஸ், தாய்­லாந்து, வட­கொ­ரியா, தென்­கொ­ரியா ஆகிய பெளத்த நாடு­களில் இருக்­கிற மத அர­சியல் பொது மக்­களைப் பழி வாங்கும் (குறிப்­பாக சிறு­பான்மை மக்­களை) ஒன்­றாக இருப்­ப­தாக வர­லாறு கள் தெரி­விக்­கின்­றன.
மதத்தில் அர­சி­யலும், கட்­சியும் கலந்து விட்டால் அதற்கு முதலில் பலி­யா­வது பொது­மக்கள் தான். இந்தத் தரு­ணங்­களில் புத்த தர்­மத்தைக் கடைப்­பி­டிக்க வேண்­டிய பெளத்த மதத்­து­ற­விகள் மத அர­சி­யலைக் கையி­லெ­டுத்­தால் இனங்­க­ளுக்­கி­டையே பகை­மையே உரு­வாகும். நோபல் பரிசு பெற்ற தலாய்­லாமா பர்­மா­விலும் இலங்­கை­யிலும் பெளத்த துற­வி­களின் நட­வ­டிக்­கைகள் புத்த மதத்­திற்கு எதி­ரா­ன­வை­யென எச்­ச­ரித்­துள்­ளமை இதனை எண்­ணித்தான்.
உள்­நாட்டு  யுத்­தத்தில் இரு­பது இலட்சம்  மக்­களைப் பலி கொடுத்து இரத்­தக்­கறை படிந்த வர­லாறு கம்­போ­டி­யா­விற்கு இருந்த போதும் அது இன்று உலக மக்­களின் பார்­வையில் ஒரு முக்­கிய சுற்­றுலாத் தல­மாக இருப்­ப­தற்குப் பல நூற்றாண்­டு­க­ளுக்கு முன்னர் கட்­டப்­பட்ட ஆசி­யாவின் அதி­சயம் என கூறப்­படும்  ‘அங்­கோர்வாட்’ கோயில்­களே கார­ண­மாகும்.
அங்­கோர்வாட் இல்­லை­யென்றால் கம்­போ­டியா இல்லை வேறு என்ன இங்கே இருக்­கி­றது. பார்ப்­ப­தற்கு? என்று கம்­போ­டி­யர்­களே சொல்­கி­றார்கள். அது முற்­றிலும் உண்­மைதான். மீனாட்­சி­யம்மன் கோவில் இல்­லாத மது­ரையைக் கற்­பனை செய்ய முடி­யுமா?
மதுரை என்றால் மீனாட்சி, காஞ்சி என்றால் காமாட்சி. திருச்சி என்றால் மலைக்­கோட்டை, டில்லி என்றால்   தாஜ்­மஹால் கோலா­லம்பூர் என்றால்   இரட்டைக் கோபுரம் என்­பன தான் நெஞ்சில் தோன்றும். அதே­போன்று கம்­போ­டியா என்றால் உல­கி­லேயே மிகப் பெரிய இந்துக் கோயில் அங்­கோர்வாட் நினைவில் தோன்றும்.
அந்த அங்கோர்வாட் கோயி லோடு 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு சரித்திரம் பின்னிப்பிணைந்திருக்கிறது. அதனை முழுமையாக அறிந்து கொள்ள அங்கோர்வாட் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
(தொடரும்…)
மாத்தளைசோமு, அவுஸ்திரேலியா ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: