ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய பெண் தூதர் தேவயானி சட்டவிரோதமாக வீடு வாங்கினார்

ஜெய்பூர், மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய துணை தூதர் தேவயானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் உண்மையை மறைத்து ஆதர்ஷ் குடியிருப்பிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அவர் வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே மறுத்து உள்ளார். ஆதர்ஷ் குடியிருப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட வீட்டை சரியான விலை கொடுத்து தான் வாங்கினோம். இதனால் அந்த வீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார். ஆனால் தேவயானி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ள ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை மராட்டிய அரசு நிராகரித்து விட்டது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: