வியாழன், 26 டிசம்பர், 2013

இதயமாற்று சிகிச்சைக்குப்பின் 31 ஆண்டுகளாக வாழும் மனிதர்


லண்டன் மிடில்செக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் மெக்காபர்டி. இவருக்கு இதயகோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கடந்த 1982–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ந்தேதி அங்குள்ள ஹேர் பீல்டு ஆஸ்பத்திரியில் அவருக்கு இதய மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு 51 வயது.
அதன்பிறகு அவர் தவறாமல் உரிய மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டு வந்தார். இதனால் அவர் தற்போது 71 வயதில் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதன்மூலம் இதய மாற்று ஆபரேசன் செய்து கொண்ட பிறகு உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்து வரும் மனிதராக கின்னஸ் சாதனைக்கு ஜான் மெக்காபர்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த டோனி ஹியூமேன் என்பவர் இதய மாற்று ஆபரேசன் செய்து கொண்ட பிறகு 30 ஆண்டுகள் 11 மாதம் 10 நாட்கள் வாழ்ந்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது.
ஹியூமேன் கடந்த 2009–ம் ஆண்டு இறந்தார். இந்த நிலையில் இதய மாற்று ஆபரேசன் செய்து கொண்டு உலகிலேயே மிக நீண்ட காலம் வாழ்ந்து வரும் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் ஜான்மெக்கா பர்டிக்கு வழங்கப்பட்டது.
விருதுபெற்ற ஜான் மெக்காபர்டி கூறுகையில், ‘‘எனக்கு வழங்கப்பட்டுள்ள விருது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அனைத்து டாக்டர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது’’ என்றார் maalaimalar.com/

கருத்துகள் இல்லை: