ஞாயிறு, 21 நவம்பர், 2010

Bihar மீண்டும் நிதீஷ் குமார்-பாஜக கூட்டணியே வெற்றி பெறும்-கருத்துக் கணிப்பு

எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தயை கருத்துக் கணிப்பில், ஐக்கிய ஜனதாதளம் -பாஜக கூட்டணியே பீகார் சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.

சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய வாக்குப்ப திவில், இக்கூட்டணிக்கு 185 முதல் 201 சீட்கள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஏஜசி நீல்சன் எக்ஸிட் போலில், 150 சீட்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் இக்கூட்டணிக்கு 142 முதல் 154 சீட்கள் வரை கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் லாலு கூட்டணிக்கு 2வது இடம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி கிடைக்கும் எனவும் 3வது இடத்தையே அது பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மந்திரம் பீகாரில் இந்த முறை பலிக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: