ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

வெளிநாட்டு, இரட்டைக் குடியுரிமை கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக யாழ்ப்பாணம் செல்ல அனுமதியில்லை

சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டவர்கள் தரைவழியாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஏ-9 வீதி வழியாக பொதுமக்கள் மட்டுமே பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் - இரட்டைக் குடியுரிமை பெற்ற இலங்கையைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
வடபகுதிக்குச் செல்லும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: