BBC : இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளி காலை 05.51 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 15,96,496 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 95,506 பேர் உயிரிழந்துள்ளனர்.
3,54,006 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 4,62,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேர் இறந்துள்ளனர்;
ஸ்பெயினில் 15,447 பேர் இறந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் 7,978 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?
தமிழ்நாட்டில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 96 பேரில் 84 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள 12 பேரில் மூன்று பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள்.
8 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
மீதமுள்ள ஒருவர் மருத்துவர். தனியார் மருத்துமனையில் பணியாற்றிவந்த இவருக்கு நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. விரிவாகப் படிக்க: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?

நேற்றைய நிலவரம் - சில முக்கிய செய்தித் துளிகள்
- கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.
- கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.
- தமிழ்நாட்டில், வியாழன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு வியாழன் மாலை தெரிவித்துள்ளது.
- வியாழன் மாலை வரை அவர்களில் 477 பேர் குணமடைந்துள்ளனர், 169 பேர் இறந்துள்ளனர்.
- மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- சீனாவுக்கு பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக