சனி, 31 டிசம்பர், 2011

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2011


கடந்த 2002 தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பங்காற்றிய நபர்கள்/நிறுவனங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறேன்.
விருதுகளுக்கு நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகள்
  1. தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட‌‌ திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும்.
  2. திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை).
  3. விருதுகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அமைப்பின் நடுவர் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து விட்டால் அப்படம் விருதுகளின் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்ததாகப் பொருள் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்
ஆடுகளம் * காவலன் * சிறுத்தை * யுத்தம் செய் * தூங்காநகரம் * பயணம் * நடுநிசி நாய்கள் * குள்ளநரிக்கூட்டம் * நஞ்சுபுரம் * பொன்னர் – சங்கர் * கோ * வானம் * அழகர்சாமியின் குதிரை * ஆண்மை தவறேல் * ஆரண்ய காண்டம் * அவன் இவன் * நூற்றெண்பது * தேநீர் விடுதி * தெய்வத்திருமகள் * காஞ்சனா * போடிநாயக்கனூர் கணேசன் * போட்டா போட்டி 50-50 * ரௌத்திரம் * மங்காத்தா * எங்கேயும் எப்போதும் * வந்தான் வென்றான் * முரண் * வகை சூட வா * வேலூர் மாவட்டம் * சதுரங்கம் * 7-ஆம் அறிவு * வேலாயுதம் * தம்பி வெட்டோத்தி சுந்தரம் * வித்தகன் * மயக்கம் என்ன * போராளி * ஒஸ்தி * மம்பட்டியான் * மௌனகுரு * ராஜபாட்டை * ரா-1 * டர்ட்டி பிக்ச்சர் * (மொத்தம் – 42)

இந்தியாவில் தற்கொலைகள்: அதிர்ச்சியா, வளர்ச்சியா, சாபக்கேடா?

அக்டோபர் மாத கடைசி வாரம். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் விஜயகுமார் மதியம் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் தனது அறைக்கு வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த அவர், நான்கு மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் தங்கியிருந்தார். திரும்பி வந்தவர் யாருடனும் பேசாமல் சிறிது நேரம் அப்செட்டாக உட்கார்ந்திருக்கிறார்.
ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போவதாக உடன் தங்கியிருந்தவர்களிடம் சொல்லி விட்டு வெளியே போனவர், அருகில் இருந்த கடையில் கெரசின் வாங்கி, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெருவில் தன் மீதே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டிருக்கிறார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துப் போவதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது.
அவருக்கு வயது 19. எஞ்சினியரிங் 2-ம் ஆண்டு படிக்கிறார். அன்றைய கணக்கு தேர்வில் சரியாக எழுதவில்லை என்ற கவலையில் தனது உயிரை தானே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பக்கா வியாபாரிகளுக்கு பாரத ரத்னா பட்டமா?சினிமா நடிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும்

இவங்களுக்கு பாரத ரத்னாவா? மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "பணம் சம்பாதிப்பதையே, நோக்கமாகக் கொண்டு செயல்படும், சினிமா நடிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும், பாரதரத்னா விருதை வழங்கி, அவ்விருதை கேவலப்படுத்திவிடாதீர். இதனால், நம் கலாசாரத்திற்கும், நாகரிகத்திற்கும் பெருத்த தலைக்குனிவு தான் ஏற்படும்' என, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கடுமையாகக் குறை கூறியிருக்கிறார்.

பாரத ரத்னா விருது, இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு, தன்னைத் தியாகம்செய்தவர்களுக்குக் கவுரவம் அளிப்பதற்காக தரும் விருது. இதை, விருது பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தாலே, பளிச்செனத் தெரியும்... அம்பேத்கர், சர்.சி.வி.ராமன், நேரு, இந்திரா, ராஜிவ், இசைக்குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமி, அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, கட்டடக்கலை நிபுணர் விஸ்வேஸ்வரய்யா என, எத்தனையோ திறமைசாலிகள், பாரத ரத்னா விருது பெற்றனர். இவர்கள், கோடியாக சம்பாதித்து, குபேர வாழ்க்கை நடத்தியவர்கள் அல்ல; "டிவி' விளம்பரப் படங்களில் தோன்றி, தம்மை பிரபலமாக்கிக் கொண்டதும் இல்லை. ஸ்ரீமான் சச்சின் டெண்டுல்கர், பிறப்பாலேயே கோடீஸ்வரர் அல்ல; கிரிக்கெட் விளையாட்டில் சம்பாதித்து, கோடி கோடியாய் பணம் சேர்த்தவர். "பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி' என, விளம்பரம் செய்து கொண்டவர். இந்நாட்டுக்காக பெரிய தியாகம் ஏதும் செய்யவில்லை. உலக அழகி ஐஸ்வர்யாராயும், சினிமாவில் நடித்து, கோடி கோடியாய் சம்பாதித்தவர்; நாட்டுக்காக பெரிய தியாகம் ஏதும் செய்யவில்லை. தமிழக அரசு, தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும், தாராளமாக கலைமாமணி விருது வழங்குகிறது. அனுஷ்கா, தமன்னா போன்ற கவர்ச்சி நடிகைகளின் திறமைக்குத் தரப்பட்ட உன்னத விருது இது. பாரத ரத்னா, கலைமாமணி போல மிகச் சாதாரண விருது அல்ல. அதை அடைய முயற்சிப்பவர்களும், பெருமைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் தானே?

தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை : உம்மன்சாண்டிக்கு கலைஞர் பதில் கடிதம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., வலியுறத்தி வந்தது.
இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி தி.மு.க, தலைவர் கலைஞருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படவில்லை எனவும், தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு தி.மு.க., தலைவர் கலைஞர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மைதான். இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. பெரியாறு அணை உறுதியாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. புதிய அணை கட்ட கேரளா முயற்சிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ள கலைஞர், பெரியாறு அணை தொடர்பாக கேரளா தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.அமைதியை ஏற்படுத்த இரு மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

2011 - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 6 படைப்புகள்!

இந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வசூல் ரீதியாக பெரிய லாபம் இல்லாவிட்டாலும், தரமான படைப்புகள் என்ற முறையில் பார்த்தால் சில படங்கள் வெளியாகியுள்ளது ஆறுதலாக அமைந்துள்ளது. சொல்லப் போனால் இதுதான் உண்மையான லாபம்!
படைப்பின் தரத்துக்கும் வசூலுக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்தப் படங்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன.
தரமான படங்களைத் தந்திருந்தாலும், வணிகரீதியாக வெற்றி கிட்டாதபோது, இந்தப் படங்களை எடுத்த இயக்குநர்களின் நிலைதான் கேள்விக்குரியதாகிவிடுகிறது. வேங்கை, ஒஸ்தி போன்ற குப்பைப் படங்களுக்கும் பெரிய ஓபனிங் கொடுத்து காப்பாற்றிவிடும் ரசிகர்கள், இந்த மாதிரி தரமான படங்களை ஆதரிக்காமல் போவது, நல்ல படைப்பாளிகளை நம்பிக்கையிழக்க வைத்துவிடுகிறது. 2012லாவது இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும்.
சரி... எவை அந்த தரமான படங்கள் என்பதற்கான மிகச் சிறிய பட்டியல் இது:
1.வெங்காயம்
யாரப்பா இந்த துணிச்சலான இயக்குநர்? என்று கேட்க வைத்த படம் வெங்காயம். எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் மூட நம்பிக்கையின் உச்சி மண்டையில் சம்மட்டியால் அடிப்பது மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.

காமராஜர், கக்கன் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்


ரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார்.
உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?”
அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன்.
“காமராஜரின் சிறப்பே பெரியாரின் பாதிப்புதான். பெரியாரின் தாக்கம் இல்லேன்னா… கிராமப்புற பள்ளிக்கூடம் வந்திருக்காது. நம்ம கல்வி இன்னும் தள்ளிப் போயிருக்கும்.” என்று சொன்னேன்.
அதுக்கு பாலகிருஷ்ணன்,
“விட்டா நீங்க பெரியாரை காமராஜரை விட பெரிய தலைவர்ன்னு சொல்லுவிங்க போல.” என்றார்.
ஆனால் ‘காமராஜர்’ படம் வந்தபோது திரையில் பெரியார் இருந்தார். முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு.
காமராஜர் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த, கிராமப் புற பள்ளிக்கூடம் திட்டத்தை இருட்டடிப்பு செய்து, பார்ப்பனர்கள் திரும்ப, திரும்ப காமராஜரின் சிறப்பாக சொல்வது அவருடைய எளிமையை மட்டும்தான்.
காமராஜரை பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்வது அவர் மேல் கொண்ட அன்பினால் அல்ல. காமராஜரை – அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை மட்டம் தட்டுதற்கான ஒரு குறியீடாக பயன்படுத்துவதற்காகத்தான்.

இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!


Director Charan
சென்னை: ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மோகன், ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பால கிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான சரண் எனக்கு அறிமுகமானார்.
சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை பலமுறை நான் திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லை.

தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: கருணாநிதிக்கு உம்மன் சாண்டி கடிதம்

திருவனந்தபுரம், டிச.30: கேரள மாநிலத்தில் வாழும் தமிழர்களும், அவர்தம் சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை அவர் தமிழக முன்னாள் முதல்வரும், திமுத தலைவருமான மு.கருணாநிதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய கருணாநிதி, கேரளத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே உம்மன் சாண்டி கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். துரதிருஷ்டவசமாக கேரளத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் சில சக்திகளால் தமிழகத்தில் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன துணை தூதர்:இந்தியாவுடன் 99.99 சதவீதம் நட்பும், 0.1 சதவீதம் புரிந்துக் கொள்ளாமையும் உள்ளது

இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.

இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா - சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

முதல் பெண்ணியவாதி தந்தை பெரியார்

Dr.Shalini இன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள், நல்ல வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால் இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்து குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய் தான் இன்றைய பெண்கள் கொஞசமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது.
இப்படி பெண்களுக்காக போராடியவர்களில் பல பேர் பெண்கள், இவர்கள் தங்களுக்காக தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால் தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகதீவிரமாக பெண்களின் உரிமைக்காக் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் திரு ராமசாமி.
ஆனால் ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை....சாதாரண மனிதர்களை தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்க்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேக சிறப்பு பெயரால் தானே அழப்போம். இப்படி சிறப்பு பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புபெயரே நிரந்திரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மஹான் தான். இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்கு பிரசித்தமான அவரது சிறப்பு பெயர் தான் தந்தை பெரியார்.

Jeya: கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்தால்(தற்காலிகமாக) மன்னிப்பே கிடையாது

சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையில் இன்று கூடியது. சசிகலா நீக்கத்துக்கு பின் நடக்கும் முதல் முக்கிய கூட்டம் இது.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி 200 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 2500 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டது.
முதலில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை தற்காலிகமாக நடத்தப்பட்டது. அதன்பின் பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணு மின்நிலையம், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், லோக்பால் மசோதா, தமிழக சட்டம்ஒழுங்கு நிலை, ஆட்சியின் புது அறிவிப்புகள், சாதனைகள், புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என்று இதுவரை 17 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அது குறித்தும், அவருக்கு வேண்டியவர்கள், உதவி செய்கிறவர்கள் குறித்து விவரம் கேட்டு, அவர்களை மறைமுகமாக ஜெயலலிதா எச்சரித்தாக தெரிகிறது. அப்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீது தொடர்பு வைத்திருந்தால், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது தற்காலிகமாக என மறைமுக எச்சரித்துள்ளார் ஜெயலலிதா.

2011 ஆண்டு தமிழ் திரை வசூல் விபரம் மங்காத்த முன்னணியில்

2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது.
இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது.
ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!
ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.
இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.
1. மங்காத்தா
அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது.
ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம்.
2. காஞ்சனா
சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார்.

சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?

செயற்குழுக் கூட்டத்தில் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அ.திமு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு, இக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட, 3,400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அழைப்பிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் யாரும் எளிதில் உள்ளே நுழைந்து விடாத அளவுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை நிருபர்களுக்கு செய்தி சேகரிக்க, அங்கு அனுமதி இல்லை. கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே, நிருபர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா வந்ததும், முதலில் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் உட்பட, 160 மட்டுமே பங்கேற்கின்றனர்.

மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்

சென்னை : ""மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர்.

பள்ளி ஆசிரியையை கொலை செய்து கற்பழிக்க முயற்சி: இரண்டு கொலைகள் செய்த காமக்கொடூரன் கைது


பள்ளி ஆசிரியையை கொலை செய்து கற்பழிக்க முயற்சி:
இரண்டு கொலைகள் செய்த காமக்கொடூரன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மிட்டாப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்களும், மதியரசி (வயது 24) என்ற மகளும் உள்ளனர்
எம்.எஸ்.சி, பி.எட்., பட்டதாரியான மதியரசி ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பேருந்தில் வீட்டுக்கு கிளம்பிய மதியரசி, ஊர் நிறுத்தத்திலிருந்து இறங்கி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ம்தியரசியின் தலையில் தடியால் அடித்துள்ளான். பயத்தில் சத்தம் போட்டபடி அடிபட்ட மதியரசி மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்.
கிழே விழுந்த மதியரசி நினைவிழந்த பின்னரும் அந்த நபர் அவரது கை கால்களை ஒரு தடியால் அடித்து கொண்டிருந்தான், மதியரசியின் அலறல் சத்தம் கேட்டு பககத்து தோட்டங்களில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் சாலைக்கு ஓடிவந்து மதியரசியை காப்பாற்றியுள்ளார்கள்
பொதுமக்கள் ஒடிவருவதை பார்த்த அந்த அடையாளம் தெரியாத அந்த நபர், சாலையில் தப்பி ஓட முயன்றான்.

ந .முத்துக்குமார் சென்ற ஆண்டு அதிக பாடல்களை எழுதியுள்ளார்


Na Muthukumar
2011-ம் ஆண்டில் மிக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல கவிஞர், பாடலாசிரியர் நா முத்துக்குமார்.
தமிழ் சினிமாவில் வாலி, வைரமுத்துவுக்குப் பிறகு, நிலையான இடத்தைப் பிடித்த இளம் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார் நா முத்துக்குமார்.
இந்த 2011-ம் ஆண்டு மட்டும் அவர் பாடல் எழுதியுள்ள படங்களின் எண்ணிக்கை 38. இவற்றில் 12 படங்களின் முழுப் பாடல்களையும் முத்துக்குமாரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 98 பாடல்களைத் தந்துள்ளார் நா முத்துக்குமார்.

விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. கிண்டல்


Suba Veerapandian
சென்னை: நான் பதவிக்கு வந்தால் ஆறு மாதங்களில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக்குவேன், தமிழகத்தை என்றாரே ஜெயலலிதா. நின்றுவிட்டதா மின்வெட்டு?, என்று கேள்வி எழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்
தமிழகத்தில் பற்றி எரியும் மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, 'அணை - உலை - விலை விளக்கப் பொதுக்கூட்டம்’ எனத் தலைப்பில் சமீபத்தில் அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடத்தியது திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

பாரதிராஜா – கலைஞரா? தேவரா?


பாரதிராஜாவை திறமையான இயக்குநர் இல்லை என்பது போல் போன தங்கம் இதழில் நீங்கள் குறிப்பிட்டது ரொம்ப அதிகம்.
-என். மலைச்சாமி, திருப்பூர்.
‘திறமையான இயக்குநர் இல்லை’ என்று நான் குறிப்பிடவில்லை.
தமிழின் மிக அழகியலான, நேர்த்தியான முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படத்தின் நாயகன் எளிய சப்பானி. படத்தில் யாருக்கும் ஜாதிய அடையாளம் இல்லை. கிழக்கே போகும் ரயிலில் சவரத் தொழிலாளிதான் நாயகன். இவைகளை எல்லாம் பாரதிராஜா என்கிற கலைஞன் எடுத்த படங்கள்.
முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே இவைகள் எல்லாம் பாரதிராஜா என்கிற தேவர் எடுத்த படங்கள். முதல் மரியாதை திரைக்கதையும், காட்சி அமைப்பும் நவீனமாக, அழகியலோடு இருந்தாலும் அதன் ஜாதி உணர்வு இயக்குநரின் கலை நேர்த்தியை ஒரு குறுகிய வட்டத்தினுள் சொருகி விட்டது.
முதல் மரியாதையில், வடிவுக்கரசி சிவாஜிக்கு எதிராக தன் உறவினர்களை (தேவர்) அழைத்து விருந்து வைப்பார். உறவினர்கள் சிவாஜியை இழிவாக பேசும்போது, அருவாளை உருவி, ‘நான் தேவன்டா..’ என்று ஜாதி வீரம் பேசுவார். அப்போ விருந்து சாப்பிடுறவங்க யாரு சீனாக்காரய்களா?

வியாழன், 29 டிசம்பர், 2011

Facebook கீதையை எரிக்கச் சொல்வது குற்றமாம் - வழக்குப் பதிவாம்

பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறியுள்ள கீதையை எரிக்கச் சொல்வது குற்றமாம் - வழக்குப் பதிவாம்!
லக்னோ, டிச.29- பாவயோனி யில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதை கூறுவது குற்றமில் லையாம்; அப்படிக் கூறும் கீதையை எரிக்கச்  சொல்லுவதுதான் குற்ற மாம் - எரிக்கச் சொன்ன பெண் மீது வழக்குத் தொடுக்கப்பட் டுள்ளது.
பெண்களுக்கு எதிரானதாக இருப்பதால் பகவத் கீதையை எரிக்க வேண்டும் என்று மக்களைத் தூண்டியதுடன், இந்து கடவுள்கள், கடவுளச்சிகளுக்கு எதிராக அநாக ரிகமான கருத்துகளை வெளியிட் டார் என்ற குற்றச்சாற்றின் பேரில், Facebook (பேஸ்புக்) மற்றும் பஞ்சாப் நாளிதழ் ஆசிரியர் ஒருவர் மீது காவல்துறையினரால்  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது.

நடிகை பிரதியூசா கொலை வழக்கு: காதலருக்கான தண்டனை 2 ஆண்டாக குறைப்பு

ஹைதராபாத்: பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. ஆனால், அபராத தொகையை மட்டும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மனுநீதி, தவசி, உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரதியூஷா. இவர், கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஷம் அருந்திய நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிரதியூஷாவுடன் விஷம் அருந்தியதாக, அவருடைய காதலர் சித்தார்த்த ரெட்டியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸ் கட்டுப்பாடு விடிய விடிய கூடாது.

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டலுக்கு வருபவர்கள் நள்ளிரவு ஒரு மணிக்குள் வெளியேறி விட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, ஓட்டல்களுக்கும் பொதுமக்களுக்கும் சென்னைக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
விடிய விடிய கூடாது
சென்னையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக் கூடாது. ஓட்டல்களில் இருந்து நள்ளிரவு 1 மணிக்குள் அனைவரையும் வெளியேற்றிவிட வேண்டும். ஓட்டல்களுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் இளைஞர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
டிரைவிங் லைசென்ஸ் ரத்து
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மது அருந்தியவர்கள் டிரைவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். மீறினால் கைது செய்யப்படுவர். 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 31 இரவு முதல் விடிய விடிய சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் உள்ளது- இல. கணேசன்

சபாஷ் சரியான போட்டி யாரிடம் அதிக கறுப்பு பணம் உள்ளது? ரஜினியிடமா ? காங்கிரசாரிடமா?
 சென்னை: இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியினர்தான் அதிக கறுப்பு பணம் வைத்திருக்கின்றனர் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர்களுக்காக ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்தை இலவசமாக அளித்திருந்தார். இது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
’அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது’’ என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு 77 நிபந்தனைகள்-ஒரு வீரர் 4 காளைகளை மட்டுமே அடக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

- ஜல்லிக்கட்டு நடத்துவோர் ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.
- புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும்.
- 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது.
- ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது.
- கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும்
- போதை வஸ்துகளை காளைகளுக்கு கொடுக்கக் கூடாது
- காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
- மாடு பிடி வீரர்கள் மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது
- மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக் குழு இருக்க வேண்டும்
- வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும்
- போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
- குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும்

சென்னை, புதுவையை வேகமாக நெருங்கும் தானே புயல்-நாளை கரையைக் கடக்கிறது!

சென்னை: தானே புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயலானது, இரு நகரங்களிலிருந்தும் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
புயல் நெருங்கியதைத் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல்-'லேட்டஸ்ட்' எச்சரிக்கை:
இன்று மாலை 4. 30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் புயல் தகவல்:
மிகத் தீவிர புயலான தானே, இன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி வங்கக் கடலின் தென் மேற்கில், சென்னை மற்றும் புதுவையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழக கடல் பகுதியில், நாகைக்கும், சென்னைக்கும் இடையே, புதுச்சேரி அருகே நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும். புயல் கரையை நெருங்கும்போது அது பலவீனமடைந்து விடும்.

70 ஆயிரம் கோடி முதலீடு: பிரதமரிடம் முகேஷ் அம்பானி உறுதி


டெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளார்.
புது டெல்லியில் கடந்த வியாழக்கிழமை வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் செய்யப்போகும் முதலீடு குறித்த பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற முகேஷ் அம்பானி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், முதலீடுக்கு ஏற்றநாடாக இந்தியா சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளார். இந்த தகவலை அந்த கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதமர் வரவேற்பு
அம்பானியின் இந்த கருத்துக்கு பதிலளித்த பிரதமர், இதனை வரவேற்பதாகவும், மற்றவர்களும் இதனை பின்பற்றுவார்கள் எனவும் கூறியதாகவும் அந்த அரசு அதிகாரி கூறியுள்ளார். இதேபோல் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புவதாக ஏழு தொழில் அதிபர்கள் கூறியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ரத்தன் டாடா, என்.ஆர். நாராயணமூர்த்தி, பாரதிமிட்டல் போன்றவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்ற குறிப்பிடத்தகுந்த தொழிலதிபர்கள் ஆவர்.

உலகின் அதிக மைலேஜ் தரும் புதிய ஹைபிரிட் கார்: டொயோட்டோ அறிமுகம்

Toyota Prius C
உலகின் அதிக மைலேஜ் தரும் வகையிலான புதிய ஹைபிரிட் மாடல் ஹேட்ச்பேக் காரை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது.
இரட்டை எரிபொருளில் இயங்கும் ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
அந்த நிறுவனத்தின் பிரையஸ் ஹைபிரிட் கார் உலகின் அதிகம் விற்பனையாகும் காராக திகழ்கிறது. இந்த நிலையில், அக்வா என்ற பெயரில் புதிய ஹைபிரிட் காரை டொயோட்டோ ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பானில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அக்வா சர்வதேச சந்தையில் பிரையஸ் சி என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த புதிய கார் லிட்டருக்கு 35.4 கிமீ மைலேஜ் செல்லும் என டொயோட்டோ தெரிவித்துள்ளது

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் மூலமே, பிரேத பரிசோதனை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் மூலமே, பிரேத பரிசோதனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை தருவதிலும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய குற்றவியல் மற்றும் மருத்துவச் சட்டப்படி, பிரேத பரிசோதனை அறிக்கைப்படி தான், கேள்விக்கு உள்ளான ஒரு இறப்பு, இயற்கையானதா, விபத்தா, கொலையா, சதியா என்பது தெரிய வரும். அதன்படி தான், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சாதாரண ஊழியர்களே... : சில அரசு மருத்துவமனைகளில், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை டாக்டர்கள் இல்லாமல், உதவியாளர்கள் மற்றும் பிணவறை தொழிலாளர்கள் மூலம், பிரேத பரிசோதனை நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, கடந்த 16ம் தேதி புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரேத பரிசோதனை செய்யும் சில டாக்டர்கள், பணிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் போலியாக கையொப்பம் இடுவதாகவும், தாங்கள் இல்லாத பிரேத பரிசோதனைகளுக்கு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தருவதாகவும் கூறப்படுகிறது.

பெரியாறு அணை விவகாரம் மற்றொரு வாலிபர் தற்கொலை


சின்னமனூர் : முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரியாறு அணை பிரச்னை காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூரில் 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், சின்னமனூர்&கஸ்பாரோட்டை சேர்ந்த சின்னராஜ் மகன் ராமமூர்த்தி(36) கலந்து கொண்டார். இவர் விஷ விதைகளை சாப்பிட்ட பிறகே ஊர்வலத்தில் நடந்து வந்துள்ளார்.

சவூதிக்கு மருத்துவர்கள் தேவை : இந்தியாவிடம் கோரிக்கை

www. omcmanpower.com
எண்ணெய் வளமிக்க பணக்கார நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா நாட்டில் இருதய நோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெண் செவிலியர்கள் தேவையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவில் அத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டி அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.
அதன்பொருட்டு இந்திய அரசு, சவூதியில் இருதய சிறப்பு மருத்துவமனையில் பணியாற்ற 3 ஆண்டு பணியனுபவம் பெற்ற 55 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள், கன்சல்ட்டுகள், பி.எஸ்.சி நர்சிங் படித்த 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, மும்பை, காஷ்மீர், ஐதராபாத் போன்ற மாநகரங்களில் நேர்காணல் நடத்தப்படும்.

ஆர்.சுந்தர்ராஜன்:அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர்


ஆர்.சுந்தர்ராஜன்& எண்பதுகளில் வெள்ளி விழாப் படங்களைத் தந்த இயக்குநர். ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘ராஜாதிராஜா’, ‘குங்குமச்சிமிழ்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘நான் பாடும் பாடல்’ என்று மென்மையான கதை மூலம் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு கூட்டி வந்தவர்.
அப்படிப்பட்ட தரமான படைப்பாளியாக தலை நிமிர்ந்து நின்ற இயக்குநர் சுந்தர்ராஜன், இன்று முழுநேர கேட்டரிங் கலைஞராகிப் போனதுதான் பலரை விழி உயர்த்திப் பேச வைத்திருக்கிறது. இதை அவரிடமே கேட்டோம்.
பல வெற்றிப் படங்களை தந்த நீங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?
‘‘இப்ப சினிமா, ஹீரோக்கள் கையிலே போயிடுச்சு. அவங்க சினிமாவை வேற மாதிரி பாக்குறாங்க. அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர் வேணும்னு நெனைக்கிறதில்லே.

சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?

நட்பை சிதைத்த ஒரு குடும்பத்தின் கதைதிருத்துறைப்பூண்டியில் 'இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ - பிரபலம்!

சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலீஷ் மருந்துக் கடைகள் சொற்பமாகவே இருக்கும் என்பதால், இந்த அடைமொழி சந்திரசேகரன் பிள்ளைக்கு அடையாளம் ஆனது. இந்த மன்னார்குடி பாரதத்தின் பிரதான பாத்திரமான சசிகலாவின் தாத்தா அவர்!
சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று வந்த வாரிசுகளும், அவர்களது வாரிசுகளும்தான் கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க.வின்... அதன் மூலமாக தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக வலம் வந்தார்கள். பெரும் நெடுங்கதையின் முன்கதைச் சுருக்கம் இது!
1.பாசமலர் படலம்!
மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கச்சியாக திருத்துறைப்​பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்த சசிகலா, பங்குனி மாச மகா மாரியம்மன் கோயில் உற்சவத்தில் முழு உற்சாகத்தோடு வலம் வருவார்.

புதன், 28 டிசம்பர், 2011

அன்னாவின் சாயம் வெளுத்தது வெறும் 40 பேரே முதல்நாள் உண்ணாவிரதத்தில்

Anna Hazare
 மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.
மும்பை மைதானத்தில் முதல்நாள் இரவில் வெறும் 40 பேர் மட்டுமே இருந்ததாக மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இரண்டாம் நாளன்று பகலில் வந்த கூட்டம் வெறும் ஆயிரம் பேர் கூட இல்லை என்பதே உண்மை. இதில் பெரும்பாலானவர்கள், "உண்ணாவிரத கூட்டத்தில் நல்ல உணவு கிடைக்கும் என்றார்கள். அதான் பார்த்துவிட்டு, முடிந்தால் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தோம்," என கூறியுள்ளனர்.
இதனால்தான், நேற்று முழுவதும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் 3 நாட்களும் உண்ணாவிரதம் நடக்கும் என கூறி வந்த ஹஸாரேவும் அவர் கோஷ்டியினரும் இன்று பாதியில் முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர்.
சிறை நிரப்பும் போராட்டத்துக்கு 2 லட்சம் பேர் தயார் என்று ஹஸாரே கோஷ்டி கூறி வந்தது. ஆனால் உண்மையில் 2000 பேர் கூட இதற்கு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சசிகலா ஆதரவு பெற்ற அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்களில் அதிரடி ரெய்டு

மதுரை: சசிகலாவின் ஆதரவு பெற்ற அதிமுக அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்கள் கைப்பற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அதனையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அதிமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் சசிகலா ஆதரவாளர்கள் குறித்து உளவுப்பிரிவு ரகசியமாக கண்காணித்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் சசிகலாவின் ஆசிப் பெற்ற அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் பினாமிகளின் வீடுகள், தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் இரவு நேரங்களில் திடீர் சோதனை நடத்தியதாக கூறப்படுகின்றது.

Rajini Double acting முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மெளனம்... ஹஸாரே போராட்டத்துக்கு மட்டும் ரஜினி ஆதரவா?

தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல்லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓடி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத்துள்ளனர்.

சினிமா தவிர்த்து சமூக- அரசியல் ரீதியாக ரஜினியின் நடவடிக்கைகள் தொடர்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ரஜினி கருப்பு பணத்தில் கட்டிய ராகவேந்திர மண்டபத்தில் அன்ன ஹசாரே.EVKS இளங்கோவன் கிண்டல் கேலி

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில், ஊழலை ஒழிக்க ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கிறார்கள், என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 127வது ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்பட பல நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோஷங்களை முழங்கினார்கள்.

முடியல...' - உண்ணாவிரதத்தை இன்றே முடிப்பதாக அறிவித்தார் ஹஸாரே!


Anna Hazare
மும்பை: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதா குறித்த தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள அன்னா ஹஸாரே, மக்கள் ஆதரவு குறைந்ததாலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் இன்றே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
வலிமையான லோக்பால் மசோதா கோரி நேற்று பிற்பகல் மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் அன்னா ஹஸாரே.
கடந்த இரு முறையும் அவரது போராட்டத்துக்கும் உண்ணாவிரதத்துக்கும் கிடைத்ததைப் போன்ற மக்கள் ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை.

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கும் 5,000 பேர் கூட வரவில்லை!

மும்பை& டெல்லி: மும்பையில் அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும், டெல்லியில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் இந்த முறை மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு 50,000 பேர் வருவர், ஒரு லட்சம் பேர் வருவர் என்று கூறியது அன்னா தரப்பு. ஆனால், 5,000 பேர் கூட வரவில்லை.
இத்தனைக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று பகல் 12.30 மணிக்குத் தான் ஹசாரே தொடங்கினார். காலையிலேயே கூட்டம் கூடாத நிலையில், மாலை ஆக ஆக இருந்தவர்களும் கூட கலைந்து போய்விட்டனர்.
முன்னதாக, பாந்திராவில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து காலை 10 மணி அளவில் உண்ணாவிரத பந்தலுக்கு அன்னா ஹசாரே புறப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் தேசிய கொடியை பிடித்தபடி அவர் சென்றார். ஜூகு கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை அவர் செலுத்த சென்றபோது, சுமார் 20 பேர் கறுப்புக் கொடிகளுடன் நின்றிருந்தனர்.

சென்னையிலிருந்து 600 கி.மீ தொலைவில் 'தானே' புயல்- ஆயத்த நிலையில் கலெக்டர்கள்

சென்னை: தானே புயல் தற்போது சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.30ம்தேதி அதிகாலையில் இது கரையைக் கடக்கும் என்பதாலும், இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தானே புயல் வரும் வெள்ளிக்கிழமை காலை கடலூர் - நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை ஒட்டி அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வி- இது ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!

மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளுமே எதிராக உள்ளதும் அம்பலமாகிவிட்டது.
லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றால் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.
ஆனால், இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

அணை கட்டத் தேவையில்லை என்றதால் நீக்கப்பட்ட கேரள போராட்டக் குழுத் தலைவர்

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையில் எப்படியெல்லாம் கேரளத் தரப்பு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது என்பதற்கு அவ்வப்போது அவர்களது தரப்பிலிருந்தே உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முன்பு அட்வகேட் ஜெனரல் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மக்களுக்குப் பாதிப்பு வராது என்று கூறினார். அதேபோல முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறி அதனால் தனது பொறுப்பை இழந்துள்ளார் முல்லைப பெரியாறு அணை எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர்.முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம், புதிய அணை கட்டுவோம் என்ற முழக்கத்துடன் போராடுவதர்காக முல்லைப் பெரியாறு சமர சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இடுக்கி மாவட்டத்தில் போராடி வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சி.பி.ராய். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மகாகவி பாரதியின் பார்பன ஜாதி உணர்வு

dr-muthulakshmi_reddi1.jpg

பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட bகுறிப்பிடவில்லை. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் செலக்டிவ் அம்னீஷியாவோ?’ மகாகவி  பாரதியின் பார்பன ஜாதி உணர்வு ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.நிற்க.தொடர் கட்டுரையாக எழுதும்போது, ‘இந்துத்துவாஎன்று குறிப்பிட்டிருந்தேன்.இந்த இந்துத்துவாஎன்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லதுஎன்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், ‘இந்துத்துவாஎன்கிற வார்த்தையை இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.       

புதுவை, கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது வீடுகள் இடிந்து தரைமட்டம்


புதுச்சேரி : கடலூர், புதுவையில் கடல் கொந்தளிப்பு காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் விடிய, விடிய தூங்காமல் மீனவர்கள் விழித்திருந்தனர். சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் கடல் வழக்கத்தை விட கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சந்திரன், தம்பிகண்ணு, மூர்த்தி, பாலு, முத்துக்கண்ணு ஆகியோரது கூரை மற்றும் மாடி வீடுகள் இடிந்து தரைமட்டமானது. படகுகள், மீன் வலைகளும் சேதமடைந்தன.
இதனால் சந்திராயன் குப்பம், சின்னமுதலியார்சாவடி, காலாபட்டு மீனவர்கள், சுனாமி பீதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய விழித்திருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், ஆரோவில் பீச்சில் நேற்று முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக

மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக பரவிய தகவலால், சாமியார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து, மன்னார்குடிக்கு அழைத்து வரப்பட்டார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மூவாநல்லூரை சேர்ந்தவர் சேகர், 37. பெயின்டர் மற்றும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஆறு மாதம் முன், திடீரென வீட்டை விட்டு வெளியேறி, நிர்வாணக் கோலம் கொண்டு, மன்னார்குடியில் உள்ள, சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலில் தங்கிவிட்டார். "என் உடலில், சித்தர்களுக்கு உண்டான மாற்றங்கள் தோன்றியதால், நிர்வாண கோலத்துக்கு மாறிவிட்டேன்' எனக் கூறிய சேகர், யாரிடமும் பேசாமல் இருந்தாலும், தன்னை பார்க்கும் பக்தர்கள் சிலருக்கு மட்டும், அருள்வாக்கு மற்றும் குறி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவரை பற்றி, சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதால், திடீரென பிரபலமானார். இவரை பார்க்க வரும் பக்தர்கள், குறிப்பாக, அரசியல்வாதிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையறிந்த சசிகலாவின் தம்பி திவாகரன், 45 நாளுக்கு முன், நிர்வாண சாமியாரை காணச் சென்றார்.
அப்போது, நிர்வாண சாமியார், சில கொடூரமான வார்த்தைகளால் திட்டி, "இங்கேயும் நீ வந்துட்டாயா... இன்னும் மூன்று மாதத்தில், உன் பெயர், புகழ் அனைத்தும் போய்விடும்' என சாபமிட்டார்.

தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்

தலாய் லாமாவின் வாழ்வையும் திபெத்தின் சமகால வரலாற்றையும் ஒருங்கே அளிக்கும் ஜனனி ரமேஷ் எழுதிய தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும் எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. கிழக்கு பதிப்பகம். பக்கம் 192. விலை ரூ.115. புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.
‘தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம். சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. ஆனால், 1959ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது.’

இனி கேரளஅதிகாரிகள் வாயைத் திறக்கக் கூடாது’

கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு மேலாக போராட்டம், கடையடைப்பு, பேரணி, வன்முறை என கசிந்துகொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையின் விரிசல் ஒரு வழியாக சாத்வீக வழியில் அடைபட்டுக்கொண்டு இருக்கிறது.
‘அணை பலவீனமாகிவிட்டது, வேண்டும் புது அணை’ என கேரளாவும், ‘அணை பலமாகவே இருக்கிறது, தேவையில்லை புது அணை’ என தமிழகமும் வலியுறுத்திய நிலையில்தான் இந்தப் போராட்டம் தீப்பற்றி எழுந்தது. இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இதில் கேரள சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஏ.ஆர்.லட்சுமணன், மத்திய நீர் வளத்துறைச் செயலாளர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 23-ம் தேதி தொழில்நுட்ப வல்லுநர்களான சி.டி.தத்தேவும் டி.கே.மேத்தாவும் இடுக்கி அணை மற்றும் கொளமாவு, செருதோணி அணைகளையும் பரிசோதித்தனர். 24-ம் தேதி தேக்கடிக்கு வந்து முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.

Midas மதுபான ஆலை மூடலா?

முதல்வர் தான் எடுத்த முடிவில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். முதல்வருக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வந்த மதுபானத் தொழிற்சாலை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளி வர இருப்பதாகச் சொல்கிறார்கள்.’’
‘‘மதுபான ஆலையை விரிவாக்கம் செய்யப் போவதாகவும், புதுவையில் புதுத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போவதாகவும் சொன்னார்களே...’’
‘‘ஆனால் இப்போது வரும் தகவல்கள் வேறு மாதிரி உள்ளது. மதுபான ஆலையை மூடிவிடலாமா என்று ஆலோசித்து வருவதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்’’ என்று சொன்ன வம்பானந்தா,

செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழக அரசின் கல்வித் திட்டம் இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’


முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற போராட்டங்களை ‘தமிழன்’ என்ற அடையாளாத்தோடு தமிழர்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும்போது, ஜாதி ரீதியான பிரிவினையோடு, தமிழக அரசால் பார்ப்பனரல்லாத குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மிக குறிப்பாக தாழ்த்தப்பட்ட தமிழர்ளுக்கு எதிராக ‘கல்வியில் சீர்திருத்தம்’ என்ற பெயரில் பார்ப்பன ஆப்பு சொருகப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:

சசிகலாவின் பெங்களூரு வழக்கில், பாஸ்கரனின் ஆந்திரா ஸ்பெஷல் டீல்!


Viruvirupu

சசிகலா உறவினர்கள் பலரும் கட்டம் கட்டப்பட்டு பட்டியல் வெளியானபோது, அதிலிருந்த ஒரு பெயர் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முன்பு ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்த பாஸ்கரன்தான் அவர். ஆச்சரியத்துக்கு காரணம், பாஸ்கரன் கார்டன் விவகாரங்களில் இருந்து சமீபகாலமாக ஒதுங்கியே இருந்தார். அவரது அரசியல் தலையீடுகளும் அதிகமாக இல்லை.
அப்படியிருந்தும் ஏன் அவருக்கும் வெட்டு விழுந்தது?
நாம் விசாரித்தவரை, பாஸ்கரன் மீது கார்டனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம், லோக்கல் விவகாரம் அல்ல. தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவை மட்டும் காப்பாற்றும் முயற்சிகளில் வெளி மாநிலம் ஒன்றில் வைத்து ஏதோ டீலிங் செய்கிறார் என்ற தகவல் கார்டனுக்கு கிடைத்த காரணத்தால்தான் இவர் கட்டம் கட்டப்பட்டார் என்கிறார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, முன்னாள் நீதிபதி ஒருவரை வெளி மாநில சட்ட நிபுணர் ஒருவர் மூலம் அணுகியதாக ஒரு கதை சசிகலா வெளியேற்றத்துக்கு முன்னரே கசிந்திருந்தது. குறிப்பிட்ட வழக்கில் சொத்து சேர்த்ததற்கு ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டாலும், அவை ஜெயலலிதாவின் சொத்துக்கள்தான் என்றும், அவற்றைப் பெறுவதற்கு சசிகலா எந்த அரசுப் பதவியிலும் இருந்திருக்கவில்லை என்றும் கேஸை திசை திருப்ப முடியுமா என்று ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?

தி.நகர் ரங்கநாதன் தெரு : அங்காடிகளுக்கு சீல் ! அதிகாரவர்க்கத்துக்கு ...?தி.நகர் ரங்கநாதன் தெரு : அங்காடிகளுக்கு சீல் ! அதிகாரவர்க்கத்துக்கு ...?       தமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும்  மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும்  குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.
சென்னையில் கட்டப்படும் புதிய கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகிய இரண்டு அமைப்புகள் உள்ளன.
இவ்விரு அமைப்புகளும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், உரிய காற்றோட்டத்துடனும், தீவிபத்திலிருந்து மக்களைக் காக்கவும் விதிமுறைகளை வகுத்துள்ளன. வணிக வளாகங்களுக்குத் தரை தளத்தில் வாகன நிறுத்தம், கடைக்கு முன் 40 அடி அகலம் வரை சாலை, போதிய இடைவெளியுடன் படிக்கட்டுகள், 2 தளங்களுக்கு மேற்பட்டிருப்பின் கட்டாயமாக தீ அணைப்பு கருவிகள், அவசர காலத்தில் வெளியேறும் வாயில்கள், இரு கட்டடங்களுக்கிடையே 5 முதல் 11 அடி வரை இடைவெளி ஆகியவை இருக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளன.
ஆனால் பெரும்பாலான வணிக வளாகங்கள் இவ்விதிகளை மயிரளவும் மதிப்பதில்லை. சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெரு, இதற்கு தகுந்த சாட்சி. நெருக்கமாக எழுந்து நிற்கும் கட்டிடங்கள் அடைத்து நிற்கும் அத்தெருவில் தீவிபத்து ஏற்பட்டால் உயிர் தப்புதல் மிகவும் கடினம். தீயணைப்பு வண்டிகளே நுழையமுடியாத அத்தெருவிலுள்ள சரவணா ஸ்டோரில் இரண்டாண்டுக்கு முன் நடந்த தீவிபத்தில்  அக்கடை ஊழியர்கள் இருவர் இறந்துள்ளனர்.
எவ்வாறு விதிமுறைகளை மதிக்காமல் கட்டபட்ட கும்பகோணம் பள்ளி யின் தீவிபத்து 96 குழந்தைகளைக் கொன்றதோ, அதைவிட மோசமான  நிலைமையில்தான் ரங்கநாதன் தெரு உள்ளது. இத்தெருவில் எழும்பியிருக்கும் கட்டுமானங்களில் நடந்துள்ள விதிமீறல்கள் தெளிவாகத் தெரிந்தபோதும்,  இக்கடைகளுக்கு சீல் வைப்பதாக மாநகராட்சி மிரட்டுவது,  ஒப்புக்கு சில கடைகளின் சிறுபகுதிகளை  இடிப்பது, வியாபாரிகள் நீதிமன்றத் தடை பெற்று பழைய நிலையே தொடர்வது என  இந்த நாடகம் தொடர்ந்து கொண்டுள்ளது.

ஜெ.வுடன் சமரசத்திற்கு கடுமையாக முயலும் சசிகலா- சந்திரபாபுநாயுடு உதவியை நாடினார்!


Jayalalitha, Chandrababu Naidu and Sasikala
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பு கடுமையாக முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு அதிமுகவை விட்டு வெளியேற்றினார். மேலும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசி குடும்பம் வெளியேற்றப்பட்டது. தற்போது அங்கு தங்கியிருப்பது சசிகலாவின் அண்ணி இளவரசி மட்டுமே.
வெளியேற்றப்பட்ட சசிகலா தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது. நீக்கம் தொடர்பாக இதுவரை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருமே கருத்து தெரிவிக்காமல் பலத்த அமைதி காத்து வருகின்றனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இப்படி அத்தனை பேரும் மொத்தமாக மெளனம் காக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் சைலன்ட்டாக ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா குடும்பத்தினர் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ன.

லோக்பால் தேவையில்லை,தேர்தல் கமிஷனர் குரேஷி

புதுடில்லி: "தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு சரியில்லை எனில், அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் உரிமை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் மூலம், வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் நடைமுறை தேவையில்லை' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது: எம்.எல்.ஏ., - எம்.பி., போன்ற மக்கள் பிரதிநிதிகளை, அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை எனில், உடனடியாக பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என, ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறைக்கு சரியாக வராது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் உரிமை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மூலமாக வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக புதிதாக ஒரு நடைமுறை தேவையில்லை.

ஹசாரே போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு:மண்டபத்தில் இலவசமாக நடத்த அனுமதி


ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை கிளை சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று (27.12.2011) முதல் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் போராட்டம் 29 ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

உ.பி. தேர்தலுக்குப் பின் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல்- மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பதவி- காங். திட்ட


டெல்லி: நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தலை நடத்த காங்கிரஸ் ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிந்த பினனர், அதன் முடிவைப் பொறுத்து காங்கிரஸ் தனது காயை நகர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவராக ஆக்கவும் அது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உ.பி. சட்டசபையின் ஆயுள் காலம் 2012ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதிதான் முடிவடைகிறது. ஆனால் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியைக் கேட்கிறார்கள் இந்த கணக்காளர்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் உ.பியில் காங்கிரஸுக்கு வெறும் 20 சீட்களே கிடைத்தன. இந்த முறை அதை விட குறைவாகப் பெற்றால் காங்கிரஸின் கதி அதோ கதியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை விட கூடுதலாகப் பெறுவதற்காகவே ராகுல் காந்தியை வைத்து ஏகப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அதன் முடிவை வைத்து இடைத் தேர்தலுக்கு தயாராவது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருப்பததாக சந்தேகிக்கப்படுகிறது.
- மேலும், இரண்டு முக்கியமான முடிவுகளை படு வேகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு என்ற ஒரு முடிவு மற்றும் உணவுப் பாதுகாப்பு சட்டம். இந்த இரண்டுமே காங்கிரஸுக்கு உதவும் என்பது அக்கட்சியின் கணக்காக கருதப்படுகிறது.

நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?


Sasikala
சென்னை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை முதல்வர் பதவியில் அமர்த்த சசிகலா குரூப் முயற்சி செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இன்னொரு அமைச்சரான எஸ்.பி.வேலுமணியும் சசிகலா குரூப்பின் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா வெளியேற்ற சலசலப்பு தற்போது அடங்கி விட்டாலும் கூட அந்த தரப்பு செய்த செயல்கள் குறித்த செய்திகள் ஆங்காங்கே தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்து முதல்வராக யாரை நியமிப்பது என்ற ஆலோசனையில் சசிகலா குரூப் இறங்கியது, அதற்காக ஜோசியம் பார்த்தது, 2 அமைச்சர்களின் பெயர்களைக் காட்டி அவர்களில் யாரை அமைச்சராக்கலாம் என ஆலோசனை கேட்டது என்பது பழைய செய்தியாகும். தற்போது அந்த 2 அமைச்சர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

ஈழத் தமிழர்கள் பலருக்கு பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை?


 http://mathimaran.wordpress.com/
தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இந்திய தேசியத்தை எதிர்ப்பதை விட திராவிடத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?
-ரவிச்சந்திரன், வெண்ணிறைபந்தல்.
தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் பலர் காங்கிரஸ் மனோபாவம் நிறைந்தவர்களாகவும்; காந்தி, காமராஜ், ராஜாஜி, கருப்பையா மூப்பனார் போன்று இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த தலைவர்களை தங்கள் வழி காட்டிகளாக கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த காங்கிரஸ் மனோபாவம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்களைவிட ஆபத்தானவர்கள்.
இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்களில் பலர், பார்ப்பனிய ஆதரவு, சுயஜாதி வெறி, தலித் விரோதம், இந்திய தேசியம் பேசிய ஜாதித் தலைவர்களை முன்னிறுத்துவது, பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை புறக்கணிப்பது, திராவிட இயக்க எதிர்ப்பு, இட ஒதுக்கிடு எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு, பால்தாக்ரே, மோடி, வேதாந்தி போன்ற இந்து மதவெறியர்களை ஆதரிப்பது இதுதான் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் பேரில் முன்னிலைப்படுத்துகிற அரசியல்.
அதனால்தான், இன்று தமிழ்த் தேசியவாதிகளின் மத்தியில், ஜாதி ஒழிப்பு குறித்தும், பெரியார், அம்பேத்கர் குறித்தும் பேசுவதே தமிழர்களை பிரிப்பதற்கான சதி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பலருக்கு பிரபாகரனைத் தவிர; இந்து மதத்தையும், ஜாதியையும் எதிர்க்கும் பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை என்பதும் தமிழ்த் தேசியவாதிகளின் இந்த மனோபாவத்துக்கு ஒரு சிறப்புக் காரணம்.

ஆழம் பார்க்க தமிழகம் வந்த பிரதமர்,விஜயகாந்தை ஏன் பார்க்கவில்லை?

பிரதமர் தனது இரண்டுநாள் தமிழகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று டில்லி திரும்பினார். சமீப நாட்களில் மத்திய அரசுக்கு எதிரான போக்கு அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் இருந்த காரணத்தால், ஆழம் பார்க்கும் விதத்தில் பிரதமரின் தமிழக விஜயம் திட்டமிடப்பட்டது என்பதை ஊகிப்பதில் சிரமம் ஏதுமில்லை.
மாலை 6.45 மணிக்கு சென்னை வந்திறங்கிய பிரதமரை, கவர்னர் ரோசய்யாவும், முதல்வர் ஜெயலலிதாவும், விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் ஒன்றாக நின்று வரவேற்றனர். மு.க.அழகிரியும் விமான நிலையம் வந்திருந்தார். அமைச்சரவைக் கூட்டங்களில் அழகிரியின் தலை தென்படுவதில்லை. அட்லீஸ்ட் சென்னை ஏர்போர்ட்டிலாவது அவரது தரிசனம் கிட்டியதே என்று பிரதமர் அகமகிழ்ந்திருக்கலாம்)
வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் பலத்த பாதுகாப்புடன் ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். 

அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கம்பெனிகள் இனி தாக்குப் பிடிக்க முடியுமா?

இந்தியாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு சலுகை வழங்காமல், அரசு முற்றிலும் புறக்கணிப்பதால், பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்க்கஸ் கலை சாகசம் நிறைந்தது; உயிரைப் பணயம் வைப்பது. அந்தரத்தில் பார் விளையாட்டு, மரண கூண்டுக்குள் பைக் ரேஸ், சிங்கம், புலி, கருஞ்சிறுத்தை என, கொடிய விலங்குகளை சாட்டையின் ஒரு சொடுக்கில் ஆட்டுவிக்கும் சாகசங்கள், பார்வையாளர்களை, "சீட்'டின் நுனிக்கு வரவைக்கும்.
இந்தியாவில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், நியூ கிராண்ட், அப்போலோ, நேஷனல், கேமல், மகாராஜா, வீனஸ் என, மிகப்பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கோலோச்சின.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய படையை நிறுத்த பரிசீலனை


சென்னை : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்ளுவது குறித்து பரிசீலிப்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.   முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கடந்த சில நாளாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
குமுளி எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து பஸ்கள் உட்பட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போது ஓரளவு நிலைமை சீராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.