மின்னம்பலம் :மார்டன் மொட்டைக் கடிதாசியாகக் கருதப்பட்ட சரஹா அப்ளிகேஷன், ப்ளேஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
சரஹா செயலியில் யார் நமக்குச் செய்தி அனுப்பியது என்ற தகவலை வெளியிடாது, அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டுமே நம்மால் படிக்க முடியும் என்ற வசதிகொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெண்களுக்கு அதிக தொந்தரவு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சரஹா செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர்களில் இருந்து நீக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் கொலின்ஸ் என்பவர் வலைதளத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சரஹா செயலியை நீக்கக் கோரியிருந்தார். சரஹா செயலி மிகவும் தொந்தரவு அளிப்பதை ஒப்புக்கொண்ட 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இதற்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் இச்செயலியை நீக்கியது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இரு பெரிய நிறுவனங்கள் தங்கள் செயலியை நீக்கியது துரதிஷ்டவசமானது என்று சரஹா செயலியின் தலைமை நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக