சனி, 10 மார்ச், 2018

அன்புமணி : எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் ... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில்

Shyamsundar  Oneindia Tamil சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் என்று அன்புமணி ராம்தாஸ் பேட்டி அளித்துள்ளார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. 
அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூட்டத்தின் முடிவில் கூறியுள்ளது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் பற்றி தீர்ப்பில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் என்று அன்புமணி ராம்தாஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் ''நான் மட்டும் இல்லை என்னுடன் சேர்ந்த மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சூழ்ச்சி செய்கிறார்கள்.'' என்றுள்ளார். மேலும் ''கர்நாடக தேர்தலுக்காக காவிரி பிரச்சனையில் அரசியல் செய்கிறார்கள்.மார்ச் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரிய போராட்டம் நடக்கும்.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: