Shankar A : சிஸ்டம் சரியில்ல சார்.
03.08.2000 அன்று சிபிஐ மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், டெலி டேட்டா என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனையில், அந்நிறுவனம், சட்டவிரோதமான டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தி, சர்வதேச அழைப்புகளை உள்ளுர் அழைப்புகள் போல மாற்றி, பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கான இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்படுகிறது.
சிபிஐ இது குறித்து RC 35A/2000ல் வழக்கு பதிவு செய்கிறது. அந்த மோசடி நிறுவனத்தில் ஒரு இயக்குநராக இருந்தவர் நடராஜன் மகாலிங்கம். ஒரு நிறுவனம் சட்டவிரோத தொழில் செய்து, அந்த நிறுவனத்தில் இயக்குநராக இருந்து ஒருவர் ஊதியம் பெற்றாலே, அந்த குற்றத்தில் அவர் பங்குதாரர்தான். ஆனால் சிபிஐ அதிகாரிகள் நடராஜன் மகாலிங்கத்தின் பெயரை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டு விடுகிறார்கள். அப்போது சிபிஐ அதிகாரிகளுக்கு 7 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து, தன் பெயரை சேர்க்காமல் நடராஜன் மகாலிங்கம் பார்த்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த இந்த வழக்கு தண்டனையில் முடிகிறது.
இந்த நடராஜன் மகாலிங்கம் வேறு யாருமல்ல. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கான முக்கிய தூணாக தற்போது, ரஜினி மன்றத்தின் மாநில தலைவராக உள்ள ராஜு மகாலிங்கம்தான் இந்த நடராஜன் மகாலிங்கம்.
நடராஜன் மகாலிங்கத்தை வீட்டில் அழைக்கும் செல்லப் பெயர் ராஜு.
சிபிஐ வழக்கில் சிக்கியது முதல், தன்னை ராஜு மகாலிங்கம் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினார் நடராஜன் என்கிற ராஜு. பின்னாளில், திமுக முதல் குடும்பத்தின் உதவியோடும், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உதவியோடும் மிக உயர்ந்த வளர்ச்சியை எட்டுகிறார் ராஜு மகாலிங்கம்.
தற்போதும் ராஜு மகாலிங்கத்தின் பெயர் பாஸ்போர்ட்டில் நடராஜன் மகாலிங்கம் என்றுதான் உள்ளது.
மீசை வைச்சா நடராஜன் மகாலிங்கம். மீசையை எடுத்தா ராஜு மகாலிங்கம்.
சிஸ்டம்தான் சரியில்லன்னு பாத்தா, சிஸ்டம் இஞ்சினியரும் சரியில்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக