ஞாயிறு, 4 மார்ச், 2018

இந்திராணி போரா முன்னிலையில் நடந்த கார்த்திக் சிதம்பரம் விசாரணை முடிவு ..

இந்திராணி முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை முடிந்தது
மாலைமலர் :ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் மும்பை பைகுல்லா சிறையில் விசாரணை முடிவடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடெல்லி: இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற்று தருவதில் கார்த்தி சிதம்பரம் இடைத்தரகராக செயல்பட்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


; தற்போது விசாரணைக் காவலில் இருக்கும் கார்த்தியை சி.பி.ஐ அதிகாரிகள் இன்று மும்பைக்கு அழைத்து வந்தனர். கொலை வழக்கில் பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் தனித்தனியே விசாரிக்கப்படுவார் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.& இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி முன் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மும்பை பைகுல்லா சிறையில் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளதாகவும், ஆனால் சி.பி.ஐ.யின் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கார்த்தி சிதம்பரம் மவுனம் சாதித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

; விசாரணை முடிந்து பைகுல்லா சிறையில் இருந்து வெளியில் வந்த கார்த்தி சிதம்பரம் அங்கிருந்த செய்தியார்களிடம் கூறுகையில், ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. அரசியல் நோக்கத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்திராணி முகர்ஜி முன்னர் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: